ZingTruyen.Xyz

என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)

4.என்னை மறந்தாயோ கண்ணம்மா

Nivethamagathi

உதயனிற்கு என்னவானதோ என்று பயந்து அவன் குடும்பத்தவர்கள் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.  வீரியம் குறைந்த மருந்து சிறதளவே சேர்க்கப்பட்டதால் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை.. வெறும் மயக்கம் மட்டுமே என மருத்துவர்கள் கூறிவிட்ட நிலையில் உதயன் இருந்த அறையை நோக்கி விரைந்தனர்.


ஈஸ்வரியின் மனம் இன்னதென்று பிரித்தறியா சூழலில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது.

தனது தாயையும் தோழனையும் கண்டு படுத்திருந்த உதயன், எழுந்து  தன் கேள்விகளுக்கு விடை அறிந்திடும் பொருட்டு " அம்மா இவுங்க என்னை மாதிரியே ஒருத்தர்தான் என்னை இங்க கூட்டிட்டு வந்து சேர்த்தாங்கனு சொல்றாங்கம்மா..யாரும்மா அவரு " என்று அருகில் நின்றிருந்த உத்ராவைக் காட்டி, கேள்வியை கேட்டு விட்டான் பட்டென்று..

" விசாகா சொல்லுடா..யார்டா அவுங்க " என்று வந்தது அவன் தந்தைதானா  என உணர்ச்சி வசப்பட்டு மீண்டும் கேட்க, அங்கே மௌனமே ஆட்சி செய்தது..பதிலறியா கேள்விக்கு விசாகன் மட்டும் என்ன சொல்வான்.

உதயன் தாயை இறைஞ்சும் வண்ணம் பார்க்க, அவரோ பதில் சொல்ல முடியாமல் தலைையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டார்.

அங்கே அசாத்திய மௌனம் ஆட்சி செய்ய அதை கலைக்கும் விதமாக

" அவருதான் உங்கப்பா..வாசுதேவ மூர்த்தி.. " என்று இருபத்து மூன்று வருடம் மூடி வைத்த உண்மையை போட்டு உடைத்தார் மரகதம்..

அதைக் கேட்ட ஈஸ்வரி " அம்மா " என்று அலற,  " என்னால முடியல பாஹீ.. அவர் யாருங்கற கேள்விக்கு பதில் சொல்லாம இருந்தா அது  கடைசில எங்க வந்து நிக்கும் தெரியுமா.. உன்னோட நடத்தைல.. போதும் என் பொண்ணு புருசன் குத்துக்கல்லாட்டம் இருந்தும் இத்தனை வருசம் மூலியா இருந்தது.
பெத்த தகப்பன் உயிரோட இருந்தும் அந்தாள தண்டிக்கறனு தகப்பன் வாடையே காட்டாம
இந்தப் பிள்ளைய வளர்த்தது போதும்." என்றவர்

.. "இவனுக்கு இதுக்கு மேல எந்தக் கொடுமை நடக்கனும். பாவி பாவி.. உன்னைலா அப்பவே அடிச்சு வளத்திருந்தா இந்த நிலைமைல வந்து நிறுத்திருப்பியா.. " என  பாஹீயை மரகதம் முதுகில் அடித்துக் கொண்டே இருக்க அதனைத் தடுக்கும் தைரியம் யாருக்குமில்லை..

கணவன் இருக்க அவன் முன்னே விதவைப் பட்டம்.. எவ்வளவு பெரிய அபத்தம்..இந்த  உண்மையை முன்னரே அறிந்திருந்த மரகதம், நாகராஜனைத் தவிர, மற்றவர் அனைவருக்கும் அதனை ஜீரணிக்கவே முடியவில்லை. ஊரே தாயென போற்றி வணங்கும் இவரா இப்படி என இவர்களுக்கு சம்பந்தமே இல்லாத உத்ரா கூட அதிர்ந்து விட்டாள். அவர்கள் குடும்ப விசயம் பேசத் துவங்கும் போதே வெளியே சென்றுவிடத் துணிந்த அவளை விசாகன் பிடித்து வைத்திருந்தான்.

உதயன் இந்த உண்மையை ஏற்க முடியாது திணறிக் கொண்டிருக்க, தன் தாயை உதறிவிட்டு " டேய் உதயாக் கண்ணா.. அவுங்களாம் சொல்ற மாதிரி எதுமே இல்லடா.. உங்கப்பா செத்து போய் பல வருசம் ஆச்சுடா.. அது உன் அப்பா இல்ல.. அந்தப் பொண்ணு ரோகிணியோட அப்பா..

உங்கப்பா மாதிரி நீயும் என்னை விட்டு போயிடாதடா " எனக் கெஞ்சியவர் தனது இடக்கையால் விசாகனைப் பற்றி " விசுக் கண்ணா.  நீயும் நான் சொல்றத நம்புடா.. நீங்க ரெண்டு பேரு தான் என் உலகமே.. உங்களுக்காக மட்டுந்தான் நான் உயிர் வாழ்ந்துட்டு இருக்கேன். அவன் என் வாசு இல்ல
" என பிதற்ற ஆரம்பித்தார். அந்த பிதற்றல்கள் சிறிது நேரத்திலே கோபமாக மாறியது..

ஆத்திரத்தில் விசாகனின் சட்டையைப் பற்றி உலுக்கி அதனைக் கிழித்து" அவன் என்னோட வாசு இல்ல.. அவன் ராஜியோட தேவா.. அவளோட காதலன்.. என் புருசன் இல்ல" என்று கத்தி கூச்சலிட ஆரம்பித்தார். அவரைப் பார்க்க கிட்டத்தட்ட ஒரு பைத்தியம் போலத்தான் இருந்தது.

அவர் கூறுவதைக் கேட்டு அவனுக்கு எதுவோ ஒன்று புரிந்தது உதயனுக்கு.

ஆனால் யாரையும் அதட்டி பேசத் தெரியாத தன் அன்னையின் இந்த தோற்றத்தைக் காண அவனால் சகித்துக் கொள்ள இயலவில்லை.  அவர் கேட்டால் இவ்வுலகத்தையே காலடியில் கொண்டுவந்து வைக்க தானும் தன் தோழனும் இருக்க, அவரோ தங்களிடம் எதையுமே பகிராமல் மனதினுள் இத்தனையயையும் பூட்டி வைத்துக் கொண்டு இவ்வளவு சிரமப்படும் அளவிற்கு அவரைத் தள்ளியது எது என குழம்பிப் போய் அவரைப் பார்த்திருந்தான்.

அந்நேரம் விசாகன்  செவிலியரிடம் கண்ணசைக்க, அவரும் மயக்க ஊசியினை செலுத்தி பாஹீயை மயக்கமடையச் செய்து கட்டிலில் கிடத்தினார்.

" நர்ஸ் சீப் டாக்டருக்கு இன்பார்ம் பண்ணுங்க.... யாரும் பதறாம கொஞ்சம் வெளிய வாங்க" என்றவன் அவர்களை வெளியே அழைத்து வந்தான்.

அவன் வெளியே வந்ததும் அவனைச் சூழ்ந்து ஆளாளுக்கு கேள்வியினை கேட்க துவங்கினர்..

"விசாகா.. என் அம்மாக்கு என்னாச்சுடா . நீ நடந்துக்கறத பார்த்தா அவுங்களோட பிரச்னை உனக்கு முன்னமே தெரியும் போல.. எதுக்குடா இந்த விளையாட்டு.. உண்மைய சொல்லு " என உதயன் கேட்க,

பதிலளிக்கத் துவங்கினான் விசாகன்.

பாஹீ அத்தைக்கு இந்த பிரச்சனை இப்போ தொடங்குனது கிடையாது.. எப்போ அவர் தன்னோட அடையாளமான கோபத்தை விடுத்து சாந்தமா மாறுனாங்களோ அப்போது இருந்தே அவுங்க மனசளவுள்ள தன்னை கட்டுப்படுத்திக்க ரொம்ப சிரமப் பட்டிருக்காங்க.. தியானத்தாலையோ யோகாவாலக் கூட அவுங்க மனச அமைதிப் படுத்த முடியலை.. வெளிய அவுங்க அமைதியா இருந்தாலும் உள்ளுக்குள்ள தனக்குள்ள தினந்தினம் ஒரு பூகம்பத்தையே சந்திச்சிட்டு இருந்திருக்காங்க.

மன அழுத்தத்தால ரொம்ப பாதிக்கபட்டு அதை நம்மக்கிட்ட வெளிக்காட்டாம நடிச்சிட்டு இருந்தாங்க..  அவருக்கு உயிரானவங்கள இறந்ததாலதான்
அவுங்க அமைதியா எப்பவும்
எதையோ பறி கொடுத்த மாதிரி
இருக்காங்கனு நாம நினைச்சிட்டு இருந்தோம்.. அதுதான் உண்மையும் கூட, ஆனால் அது மட்டுமே உண்மை கிடையாது..

கிட்டத்தட்ட அவுங்க நிம்மதியா தூங்கி பல வருசங்கள் இருக்கும். தூக்கம் வரதுக்கு தூக்க மாத்திரை எடுத்துட்டு இருக்காங்க.. அதுனால அவுங்களும் தூங்கறாங்க தான்.. ஆனா அப்பவும் அவுங்களுக்கான நிம்மதியான தூக்கம், ஓய்வு கிடைச்சதான்னா அது இல்லைன்னு தான் நான் சொல்லுவேன்.

இதையே நான் நாலு மாசம் முன்னாடி தான் கண்டுபிடிச்சேன். மிட்நைட்ல அவுங்க ரூம் பால்கனி ஊஞ்சல்ல உக்கார்ந்து வானத்தையே விரைச்சுப் பார்த்துட்டு இருக்கறத பல தடவை பார்த்திருக்கேன். அந்த பார்வைல வலியா..வேதனையா..கோபமான்னு பிரிச்சுப் பார்க்க முடியாத உணர்வ பார்த்தேன்.  உங்களுக்கு தெரியாம அத்தைய மன்த்லி செக்கப்க்கு கூட்டிட்டு வந்து சைக்காட்டிஸ்ட் டாக்டர் கிட்ட கன்சல்ட் பண்ணேன்..அப்போ டாக்டர் கேட்ட அத்தனை கேள்விக்கும் அவுங்க சொன்ன ஒரே பதில் அந்த தேவாவையும் அவன் பொண்ணையும் கொல்லனும்.. வாசு எங்கிட்ட வரணும்.. அது மட்டுந்தான்.. அதை மட்டுந்தான் மனசுக்குள்ள இத்தனை வருசமும் ஜெபிச்சிட்டு இருந்திருக்காங்க..
அவுங்க ஆள் மனச படிக்க முயற்சிப்ப கூட இதே பதில் மட்டுந்தான் கிடைச்சுது..

அவுங்க மனசுல தேவாவ கொல்லனும்னு வெறி ஊறி போயிருக்கு.. அந்த ஆசை நிறைவேறுனாதான் அவுங்களால நிம்மதியா தூங்க முடியும்னு சொன்னாங்க.. ஆனா அத்தையோட ஆசைக்காக அடுத்தவுங்கள கொல்றது, அவுங்க எவ்வளவு கெட்டவனா இருந்தாலும் அது பெரிய அபத்தமா தெரிஞ்சது..

வேற வழி இல்லையான்னு டாக்டர்கிட்ட கேட்ட போதுதான்

டாக்டர், அவுங்க சரியாகனும்னா குறைஞ்சது அவுங்க மனசுக்குள்ள அடக்கி வெச்சுருக்க ஆத்திரத்தயாச்சும் வெளிப்படுத்தனும்னு சொன்னாங்க..
ஆனா அது அவ்வளவு சுலபமா இல்ல..வலி அதிகமாயிட்டே போன ஒரு கட்டத்துல அது மரத்து போயிடும்..அந்த மாதிரி அவுங்க தன்னோட கோபத்தோட உச்சக்கட்ட நிலைய எப்பவோ தாண்டி இருந்தாங்க.. அதான் நாம என்ன தப்பு செஞ்சாலும் பொறுமையாவே நம்மள சமாளிச்சு வளர்த்திருக்காங்க..அவுங்க கோபப்படணும்னா கூட அந்த தேவாதான் வேணும்.. ஆனா அவன பத்தி ஒரு தகவலும் எனக்கு கிடைக்கல..

பாட்டிகிட்ட  விசாரிச்சா, ஏதோ பெரிய சத்தியம் அது இதுன்னு மழிப்பிட்டாங்க..
சரியா அந்த சமயத்துல தான் மருது அண்ணா தேவாவ பார்த்தேன்னு சித்தப்பாகிட்ட பேசிட்டு இருந்தாரு.. அவர்கிட்ட   கேட்டாலும் அவன் ஒரு கொலைகாரங்கிறத தவிர, மத்த

உண்மைய சொல்ல மறுத்துட்டாங்க.. அது எந்த அளவுக்கு உண்மைன்னு எனக்கு தெரியல. ஆனா அதைக் கேட்டதுக்கு பிறகு தான் என் ஆள் மனசுல எங்கப்பா அம்மாவ தேவா கொன்ன காட்சி நியாபகம் வந்துச்சு.. 

அதான் அவன எப்படியாச்சும் கண்டுபிடிச்சு சட்டத்துக்கு முன்ன நிறுத்தனும்னு ஆசைப்பட்டு,

என்னோட சொந்த முயற்சியில அவர் பொண்ண கண்டுபிடிச்சு கூட்டிட்டு வந்தேன்.

அதை அத்தைக்கிட்ட சொல்லும்போது அவுங்க முகத்துல மாறுதல் தெரிஞ்சுது.. ஆனா அவுங்க அப்பவும் கோபப்படல..ஆனா அந்த மாறுதல்கான பதில் ரோகிணியோட சாப்பாட்டுல விசத்தை கலக்குனதுல தெரிஞ்சது.. அந்த சாப்பாட்டுல இருந்த கருவேப்பிலை நீல நிறமா  மாறி இருந்தத வெச்சே நான் உசாராகிட்டேன். அதான் அவ அந்த சாப்பாட தட்டிவிட்டதும் அவ பட்டினியா கிடந்தாலும் பரவாலைன்னு மறுபடியும் சாப்பாடு கொடுக்கல.. அதை கலந்தது யாருன்னு கிச்சன்ல இருந்த சிசிடிவி கேமிரா வெச்சு கண்டுபிடிச்சும், தேவாவ பிடிக்கனும் என்ற ஒரு காரணத்துக்காக அமைதியாக இருந்துட்டேன்.

" என்று சொல்லும்போது இதுவரை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த

மரகதம் " என் மக கொலை பண்ற அளவுக்கு கொடுமைக்காரியா மாறிட்டாளா" என கதற ஆரம்பித்தார்.

சிந்தாமணி அவரை அமைதி்ப்படுத்த,

பின் தொடர்ந்தவன் " ஆனா ரோகிணிய காப்பாத்த அவ அப்பா தேவா வருவான்னு பார்த்தா நம்ம உதயனை அசப்புல உரிச்சு வெச்ச மாதிரி ஒருத்தன் தேவான்னு வந்து நிக்கறார்.. அவர பார்த்த அத்தை, அவர கொல்ல நினைப்பாங்கனு எதிர்பார்த்தேன்.. ஆனா அவுங்க அவர ஏதோ பொக்கிசத்தப் பார்க்குற மாதிரி அசந்துபோய் பார்த்தாங்க..

ஆனா அதெல்லாம் அவர் ரோகிணிய எங்கனு கேட்கற வரை மட்டுந்தான்.. எங்க என் பொண்ணுன்னு கேட்ட அடுத்த நொடி, அவுங்க முகத்துல அத்தனை வன்மம்...அத்தைக்கிட்ட ஏதோ சரியில்லன்னு மனசுக்குப் பட்டது அதான் நான் அவசரப்படக் கூடாதுன்னு அமைதியா இருந்துட்டேன்.

அடுத்து,

நான் சொன்ன மாதிரி ரோகிணி சொல்லிட்டு போனாலும் அதை அவர் நம்பலன்னு தேவாவோட பார்வையே காட்டிக் கொடுத்திடுச்சு.. நான் துப்பாக்கிய அவர் நெத்தியில வெச்சப்பக் கூட அதுக்கு பயப்படாம ஏதோ கொசு அடிக்கற மாதிரி தள்ளி விட்டுட்டு  என் கன்னத்தை தட்டிக் கொடுத்து என்னைப் பார்த்து சிரிச்சிட்டு போனாரு.. என்னால அவர தடுக்க கூட முடியல..ஏதோ மந்திரத்துக்கு கட்டுப் பட்டவன் போல அப்படியே நின்னுட்டு இருந்தேன்.

அடுத்து அத்தை நான் நினைச்ச மாதிரியே ரோகிணி மேல கோபப்பட ஆரம்பிச்சாங்க.. அது என்னோட வெற்றியோட முதல்படி.

அவுங்களோட கோபத்துக்கு கண்டிப்பா ஒரு உயிரையாச்சும் பறிக்கற வெறி இருக்கு..

தேவா ஒருவேளை அவர் கோபப்படும் நேரம் வராம இருந்திருந்தா அங்க எத்தனை பேர் தடுத்திருந்தாலும் ரோகிணிய யாராலும் காப்பாத்தியிருக்க முடியாது.. ஏன்னா அவரோட கோபத்துக்கு காரணமும் தேவாதான்.
அதுக்கான மருந்தும் வாசுவாகிய தேவாதான். அந்த வகையில தேவாவ பாராட்டியே ஆகனும். ஆனா நான் எதிர்பார்க்காத ஒன்னு உதயன் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆனது..  என்னோட அத்தனை

கவனமும் உதயனைப் பற்றியே இருந்ததால தேவாவ மிஸ் பண்ணிட்டேன்.. ம்ச்.பரவால
கெட்டதுலயும் ஒரு நல்லது மாதிரி அத்தையே ஹாஸ்பிடல் வர மாதிரி ஆயிடுச்சு..  " என சொல்லி முடித்தான்.

 

" என் அக்கா குணமாக என்னதான்பா வழி" என நாகராஜன் கேட்க,

" இதுக்கு ஒரே வழி தேவா மட்டுந்தான்.." என்று கூறியபடியே வந்து சேர்ந்தான் ரஞ்சித்.. பாஹீக்கு சிகிச்சை அளி்க்கும் மருத்துவர். விசாகனின் நெருங்கிய நண்பன்.

அவனைக் கண்டதும் " எங்கத்தை இப்போ எப்படி இருக்காங்க ரஞ்சித் " என விசாகன் கேட்க,

வருத்தம் அடங்கிய குரலில் " அவுங்க நிலைமை இப்போ கொஞ்சம் கஷ்டம்தான்டா.. தெளிவா சொல்னும்னா கிட்டத்தட்ட சைக்கோ ஸ்டேஜ்க்கு போற நிலைல இருக்காங்க..நீ சொன்னதுலாம் வெச்சுப் பார்க்கும் போது அவுங்க சரியாகனும்னா அது வாசுவாலயோ இல்லை தேவாவாலையோ மட்டுந்தான் முடியும்..

அவரத் தவிர வேற யாராலயும் உங்க அத்தைய காப்பாத்த முடியாது " என்கவும்

" அந்தக் கொலைகாரப் பாவி அதுக்கு சம்மதிக்க மாட்டானய்யா.. வேற மருத்துவம் எதுமிருந்தா பாருங்க " என மரகதம் தன் பெற்ற மகளை நினைத்து ரஞ்சித்திடம் கெஞ்ச,

உதயன் " நான் அவர கூட்டிட்டு வரேன் " என்றான் உறுதியான குரலில்..

" நீ நினைக்கற மாதிரி அவ்ளோ ஈசியான விசயம் கிடையாது உதயா.. அவன் அழுத்தக்காரன்.. உங்கம்மாவுக்கு இந்த நிலைமைன்னு தெரிஞ்சா சந்தோசப்படுவானே தவிர இங்க சத்தியமா வர மாட்டான்" என்று மரகதம் பாட்டி கூற
தயன்

" என் உயிரே போனாலும் பரவால அந்தாள இங்க கூட்டிட்டு வந்து எங்கம்மா இத்தனை வருசம் அனுபவிச்ச வலிக்கும் கஷ்டத்துக்கும் பிராய்ச்சித்தமா அவுங்க கால்ல விழுக வைப்பேன்.. இது எங்கம்மா மேல நான் வெச்சிருக்க பாசத்து மேல ஆணை " என்றவன் கோபமாய் அங்கிருந்து வெளியே சென்றான். அவனைப் பார்க்க, தேவாவும் பாஹீயும் சேர்ந்த கலவைப்  போல தெரிந்தது..ஈஸ்வரியின் வளர்ப்பால் என்றும் சாந்தமாகவே இருந்தாலும் அவன் உடலில் ஓடுவது தேவா பாஹீயின் இரத்தம் அல்லவா.. தேவாவின் வீரமும் பாஹீயின் கோபமும் அவனுக்கும் இருக்கும் தானே..

உதயன் செல்ல, அவன்பின்னே உத்ராவும் தானும் வருவதாக கூறிக் கொண்டே பின்னால் போக, விசாகனும் இரஞ்சித்திடமும் தனது சித்தப்பாவிடமும் கூறிக் கொண்டு அவர்களைத் தொடர்ந்தான்.. 


உதயன், விசாகன் மற்றும் உத்ரா மூவரும் பெரியகுளத்தை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடங்கினர்..
தங்கள் வாழ்வில் போடப்பட்ட கண்ணுக்குத் தெரியாத முடிச்சுகளை அவிழ்பதற்கு..
💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

இஇஇஇஇ கதை ரொம்ப குழப்பமா போகுதா.. அடுத்த பதிவில்  எல்லா கேள்விக்கும் பதில் கிடைக்கும்னு நம்புங்கப்பா..கதை இப்போதான தொடங்கியிருக்கு..போகப்போக எல்லா சிக்கல்களும் முடிவு்ககு வந்திடும்..
அப்டியே இந்தக் கதைய பத்தி உங்க கருத்தையும் தெரிவிங்கப்பா.. கதை ரொம்ப வேகமா போற மாதிரி இருக்குதுன்னு நினைக்கிறீங்களா..

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz