என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)
3.என்னை மறந்தாயோ கண்ணம்மா
அவன் உயிருக்கு எந்த ஆபத்தும் வராது என்று தான் போட்ட திட்டத்தால் அவனது உயிர் தன் கண் முன்னாலே சென்று கொண்டிருப்பதைக் காண முடியாமல் துடித்துப் போனாள் உத்ரா.. நல்லவன் என்று வேசம் போட்டு அப்பாவிப் பெண்களை ஏமாற்றி நாடு கடத்தும் எத்தனை செய்திகளை அவள் படித்து கொதித்திருப்பாள்.. அதில் தானும் ஒருத்தியாக மாறி விடுவோமோ என்கிற பயத்தில்தானே இந்த செயலை செய்தாள்..
தப்பிக்க தான் நினைக்கும்போது சரியெனப் பட்டது.. தற்போது பெருந்தவறாக தெரிந்தது.
அவனை முதன்முறை தங்களது ஆசிரமத்தில் பார்த்த போது, அவனது தாயின் மிரட்டலுக்கு தலையாட்டும் பொம்மையாக அவன் நின்ற கோலம்
கண் முன் வந்து போனது.. தனது தாயின் ஆணையை நிறைவேற்றுவதில் தான் அவனுக்கு எத்தனை ஆனந்தம். அவர் சொன்னதை செய்து முடித்த போது அவரின் ஒற்றை பாராட்டலுக்கு உலகையே வென்றது போல புன்னகைத்தானே.. அந்த சிரிப்பை இனி பார்க்க முடியாதா.. அய்யோ நான் ஒரு கொலைகாரியா.. என ஒரு நொடியில் என்ன என்னவோ நினைத்துவிட்டாள்.
கதவு திறக்கும் சத்தத்தில் பதறி எழுந்தவள் உள்ளே நுழைந்த தேவாவை கண்டு ஒரு நொடி திகைத்து பின்" அங்கிள்.. ப்ளீஸ் ஹாஸ்.பிடல் போகனும்.. இவருக்கு..நான் "
என பேச்சு வராமல் திக்க, நிலைமையை உணர்ந்தவன் உதயனைத் தூக்கிக் கொண்டு போய் தனது ஜீப்பில் ஏற்றி விட்டு உத்ராவையும் மறக்காமல் கூட்டிக் கொண்டு மருத்துவமனையை நோக்கி தன் வண்டியை மின்னல் வேகத்தில் செலுத்தினான்..
" அங்கிள் சாரி.. அங்கிள்.. தெரியாம தப்பு பண்ணிட்டேன்.. அவர காப்பாத்திடலாம் தான.. " என புலம்பியபடியே வந்தவளிடம் அவன் ஒரு வார்த்தை கூட உதிர்க்கவில்லை.. திரும்பித் திரும்பி உதயனையே பார்த்துக் கொண்டு வேகமாக வண்டியை ஓட்டினான்.
அங்கு அதே நேரம் ஈஸ்வரி இல்லத்தில் ..
தனது தந்தை இந்நேரம் தான் அவர் சட்டைப் பையில் வைத்த கைக்கடிகாரத்தை ( அதனை உத்ராதான் ரோகிணிக்கு பரிசளித்திருந்தாள்)
வைத்து உத்ராவை மீட்டிருப்பார்.. விரைந்து தன்னையும் இங்கிருந்து கூட்டிச் சென்றிடுவார் என நினைத்து சற்று தைரியமாக இருந்தாள். அவளை கதவோரம் நின்று இரண்டு ஜீவன்கள் பாசமாக பார்த்துக் கொண்டிருந்தன..
அதில் ஒருவர் மரகதம். என்னதான் தேவா தங்கள் குடும்பத்தை சிதைத்தவர் என்றாலும் ரோகிணி தன் மகள் வழி பேத்தி அல்லவா.. இந்த வீட்டில் உதயனுக்கும் விசாகனுக்கும் இருக்கும் உரிமை இவளுக்கும் இருக்கிறது தானே..
அவளை வாஞ்சையுடன் பார்த்தவர் நாகராஜனின் மகள் நதியாவை அழைத்து அவளுக்குத் தேவையான உடையையும் உணவையும் எடுத்து வரச் சொன்னார்..
அதேநேரம் விசாகனும் கையில் தட்டுடன் உள்ளே நுழைந்தான்.. நாகராஜனும் யாருக்கும் தெரியாது என்று நினைத்து அவரும் தனது அக்கா மகளிற்கு உணவினை எடுத்து வந்தார்.
மரகதம், விசாகன் மற்றும் நாகராஜன் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். வீட்டில் பல ஆண்டுகளுக்குப் பிறகு உயிர்ப்புடன் சிரித்தனர் தாயும் மகனும்.. மரகதம் விசாகனை கேலியாகப் பார்க்க, அதில் அசடு வழிந்தவன் தலையை திருப்பிக் கொள்ள, அப்போதுதான் ரோகிணியை நதியாவும் சிந்தாமணியும் சமாதனப்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தான்..
அவள் முகம் பாறையை விழுங்கியது போல உம்மென்றே இருந்தது..
" அக்கா.. என் பேரு நதியா..எல்லோரும் செல்லமா தியான்னு கூப்டுவாங்க.. நீங்க நதின்னு கூட கூப்படிலாம்.நான் டென்த் படிக்கிறேன்கா " என தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டவள் " நீங்க நேத்துல இருந்து எதுமே சாப்பிடல.. இந்த ஜூஸ மட்டும் குடிங்கக்கா ப்ளீஸ் " என கெஞ்ச, இதுவரை அமைதியாக இருந்தவள் நதியாவைப் பார்த்தாள்.. அவள் முகத்தில் கள்ளம் கபடம் ஏதுமில்லை.. தான் இதையாவது அருந்த வேண்டும் என்ற ஏக்கம் மட்டுமே இருந்தது..
அந்த குழந்தை முகத்தை பார்த்ததும் சாந்தம் வந்து ஒட்டிக் கொள்ள மனமும் கொஞ்சம் இளகி அவளைப் பார்த்து சிரித்தாள்..
" ஐஐஐ.. அக்கா என்னைப் பார்த்து சிரிச்சிட்டாங்க " என கூச்சலிட்டவள் " அப்டியே இதை கொஞ்சம் மட்டும் குடிக்கா
" என டம்ளரை வாயில் வைத்து திணித்து விட்டாள்.. அதனை குடிக்கத் துவங்கும் போதுதான் அவளின் வயிறு எவ்வளவு பசியினைத் தாங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அவளால் உணர முடிந்தது..
பாதி குடித்துக் கொண்டிருக்கும் போது டம்ளரை பின்னிழுத்த நதியா " அக்கா நீங்க காலைல பிரஸ் பண்ணவே இல்லையே " என முகத்தை அஷ்ட கோணலாக்க ரோகிணி திறுதிறுவென்று விழித்தாள்.
பின் அவளே சமாதனமாகி
" பரவாலை நான்ல பிரேக்பாஸ்ட்க்கு பூரி செஞ்சாங்கனா பிரஸ் பண்ணாம கூட சாப்டுவேனே.. இது ஜூஸ் தான.. " என மீதியிருந்த ஜூஸையும் குடிக்க வைத்து விட்டாள்.
நதியாவின் கேள்வியால் உதயன் சற்று உரக்க சிரித்துவிட, அவனைப் பார்த்த ரோகிணிக்கு நேற்று இரவு அவன் மிரட்டியது நினைவுக்கு வந்தது..
அவளிடம் " உனக்கு ரெண்டே ரெண்டு ஆப்சன் தரேன் ரோகிணி..உனக்கு உன் பிரண்ட் வேணுமா..
இல்லை அப்பா வேணுமான்னு நீதான் டிசைட் பண்ணனும்.. " என்றவன் " ஓரு வேளை நீ நான் சொல்றதா கேட்டா அவரை போலிஸ்ல மட்டும் புடிச்சிக் கொடுத்து உயிரோட விட்டறேன் " என்றான்
அவள் எதுக்கும் அசைந்து கொடுக்காமல் இருக்க, கோபத்தில் தேவா செய்த குற்றங்களைக் கூறி " அவன் எங்கத்தைக்கு பண்ண துரோகத்துக்கும் என் அம்மா அப்பா மாமா தாத்தான்னு எல்லோரயும் கொன்னதுக்கும்
அவன தினந்தினம் அனுஅனுவா டார்ச்சர் பண்ணி சாகடிக்கனும்னு என மனசு துடிக்குது..ச்சே அதெல்லாம் உனக்கு புரியாது. உன் உடம்புலயும் அந்தாளு இரத்தம்தான ஓடுது..அப்போ அவன மாறி தான இருப்ப " என அவளை ஓங்கி அறைந்தவன்,
நேற்று உத்ரா அந்தரத்தில் தொங்கிய புகைப்படத்தைக் காட்டி அவள் தந்தையிடம் தான் சொன்னது போல நடக்கவில்லை என்றால் அவளைக் கொன்றுவிடுவேன்
என்று மிரட்டியதை நினைத்துப் பார்த்தாள்.
கோபம் அழையா விருந்தாளியாய் வந்து விட இதுவரை இருந்த இனிமையான சூழல் மறைந்தது..
அவளின் அருகே அமர்ந்த பாட்டி
" அப்டியே உங்கம்மா மாதிரியே இருக்கடா..
இந்த கோலப்பொடிலாம் இல்லைன்னா நான் உன்னை வந்தவுடனே கண்டுபிடிச்சிருப்பேன். டேய் ராஜூ அந்தக் கண்ணப் பாரேன். அப்டியே நம்ம ராஜி மாறியே இருக்குல்ல " என நெட்டி முறிக்க,
தானும் அருகே அமர்ந்து " ஆமாம்மா.. நம்ம ராஜிக்கா மறுபிறப்பு எடுத்த மாதிரியே இருக்கு.. போன தடவை என் அக்காவ இழந்த மாதிரி இந்த தடவை நான் இழக்க விரும்பல..இவ நம்ப வீட்டு இளவரசிம்மா.." எனக் கொஞ்சியதில் அவள் உருகித்தான் போனாள்..
" அந்தப் படுபாவி என் அக்காவோடு அவ வயித்துல இருக்குற குழந்தையும் செத்து போயிடிச்சுனு பொய்யல்ல சொல்லிட்டான்.. அந்தப் பொம்பளப் பொறுக்கி நல்லாவே இருக்க மாட்டான் " என தேவாவிற்கு சாபம் கொடுக்க அவரை தீயென சுட்டெறித்தவள்
சிம்மக் குரலில்
" யாரப் பார்த்து என்ன வார்த்தை சொல்றீங்க..அவர் என்னோட அப்பா.. எனக்கு மட்டும் இல்ல எங்க ஊருக்கே ஒழுக்கத்த சொல்லிக் கொடுத்தவர். நானும் வந்ததுல்ல இருந்து பார்த்துட்டே இருக்கேன்.. அவர கொலைகாரன்.துரோகி பொறுக்கின்னு என்னென்னமோ சொல்றீங்க.. அவரப் பத்தி தெரிஞ்சக்கனும்னா எங்கூர் பெரியகுளத்துக்கு வந்து விசாரிச்சுப் பாத்துட்டு பேசுங்க... அவர் மனசுல எங்கம்மாவ தவிர வேற யாரையும் நினைச்சுக் கூட பார்த்ததில்ல.. அவர கட்டிக்க இதுவரை எத்தனை பேர் மாப்பிள்ளை கேட்டு வந்துருக்காங்க தெரியுமா.. ஆனா அதைலா ஒதறி தள்ளிட்டு நானே உலகம்னு வாழ்ந்திட்டு இருக்குறவர்.. அவரப் பத்தி பேச யாருக்குமே தகுதி கிடையாது..
நான் ஆசைப்பட்டேனு ஒரு காரணத்துக்காக என்னை இந்த ஊர்ல இருக்குற காலேஜ்ல படிக்க சம்மதிச்சு, இத்தனை வருசம் எங்கூரு விட்டு வெளியவே வராதவரு எனக்காக என்னைப பார்க்கறதுக்கு மட்டுந்தான் வந்தாரு.. நீங்க ஆயிரம் பேர் வந்து சொன்னாலும் அவர என்னால வெறுக்க முடியாது.. என்னை கூட்டிப் போக திரும்பியும் கண்டிப்பா வருவாரு.. " என தன் தந்தை மீது வைத்துள்ள நம்பிக்கையில் பெருமிதத்துடன் கூறியதும் வாசலில் ஏதோவொன்று நொறுங்கி உடையும் சத்தம் கேட்டது.
சத்தம் கேட்டு அனைவரும் வெளியே வர ஒரு பைத்தியத்தைப் போல அங்குள்ள அனைத்துப் பொருட்களையும் உடைத்துக் கொண்டிருந்தார் பாஹேஸ்வரி..
" உங்க எல்லோருக்கும் அந்த துரோகியோட பொண்ணுதான் பெருசா போயிடுச்சுல.. எல்லோரும் அவளையும் அவங்கப்பனையுமே தூக்கி வெச்சு கொஞ்சுங்க " என்றவரைப் பார்க்கும் போது அந்த அகங்கார பாஹேஸ்வரி மீண்டும் வந்து விட்டார் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. ..அந்த தேவாவின் வருகையால் இப்போது பல வருடங்கள் கழித்து மீண்டும் பழைய பாஹேஸ்வரியாய் மாறி விட்டார் ஈஸ்வரி.. முகத்தில் இருக்கும் சாந்தம் மறைந்து வெறுப்பு வந்து தொற்றிக் கொண்டது..
ரோகிணி அவரை இன்றுதான் முதன்முதலில் தெளிவாக பார்க்கிறாள்.. ஆனால் அவருக்கு அவள்மேல் அவ்வளவு வெறுப்பு..
" விசுக்கண்ணா.. அந்தப் பொண்ணு நம்ம வீட்ல ஒரு நிமிசம் கூட இருக்க கூடாது.. அவள அடிச்சி.. வேணா வேணா அவள நீ தொட்டாக்கூட அசிங்கம்.. அவள மிரட்டி வெளியே தொறத்திடு " என விசாகனின் முகத்தைப் பற்றி குழந்தை போல கெஞ்ச ஆரம்பித்தவர் மீண்டும் ஆத்திரங் கொண்டு
" இல்ல இவள என் கையால நானே கொல்லனும் " என்று கீழே கடந்த உடைந்த கண்ணாடித் துண்டை எடுத்துக் கொண்டு ரோகிணையை நெருங்க, அவளுக்கு அரணாய் மரகதமும் நாகராஜனும் முன்னே வந்து நின்றனர்..விசாகனுக்கு நடப்பது எதுவும் புரியவில்லை..தன் அத்தையா இப்படி என்று அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
" அக்கா அவ நம்ம ராஜிக்கா பொண்ணுக்கா" என நாகராஜன் கெஞ்ச, அவரது கெஞ்சலை அவர் பொருட்படுத்தியதாக தெரியவில்லை.
ரோகிணியைத் தாக்க கையோங்கியவரின் கையிலிருந்த கண்ணாடியை தட்டி விட்டு அவரை ஓங்கி அறைந்தார் தேவா..
" எம் பொண்ணு மேல கைய வெச்சா கொன்னுடுவேன்டி உன்னை " என மிரட்டி
ரோகிணியை தன் கைக்குள் வைத்துக் கொண்டு " என் பொண்ண கொல்ல நினைச்சயே..அங்க உன் பையன் உயிருக்கு போராடிட்டு ஹாஸ்பிடல்ல இருக்கான்.. போய் அவனப் பார்த்துக்க " என்று கூறிவிட்டு தன் மகளை அழைத்துச் சென்றுவிட்டார் தேவா..
அரை மணிநேர தீவிர சிகிச்கைக்குப் பின்னர் மருத்துவர் உதயன் நலமாக இருக்கிறான்..உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதை அறிந்த பின்னரே தேவா உத்ராவை அவ்விடத்தில் விட்டு ஈஸ்வரி இல்லம் விரைந்தார்.
மருத்துவரிடம் கெஞ்சிக் கூத்தாடி அவனை பார்க்க அனுமது பெற்று உள்ளே சென்றவள் அவன் கால்மாட்டில் அமர்ந்து கொண்டு " என்னை மன்னிச்சிடுங்க உதயன்.. நான் தெரிஞ்சே தப்பு பண்ணிட்டேன். சாரி " என மனமுறுகி கேட்க, அவன் மெல்லியதாய் புன்னகைத்தான்..
" இல்லை நீங்க என்னை ஈசியா மன்னிச்சிட்டா என் மனசாட்சியே அதை ஏத்துக்காது.. என்னை அடிங்க.. இல்லைனா ஜெயில்ல போடுங்க " எனக் கெஞ்ச அவன் புன்னகை பெரிதானது.
" சும்மா.. அந்த மாயக் கண்ணனாட்டம் எல்லாத்துக்கும் சிரிச்சே மலுப்பாதீங்க.. கொஞ்சமாச்சும் கோபப்படுங்க.. " என்றவள் " உங்கப்பா மட்டும் சரியான சமயத்துல வரலைனா இந்நேரம் உங்க நிலைமை " எனும்போதுதான் அவன் தாய் கணவனை இழந்து கைம்பெண்ணாய் வலம் வருவது நினைவில் வந்தது.. அப்படியெனில் உருவத்தில் இவனைப் போலவே இருக்கும் அவர் யார்.. அவர் உதயனின் தந்தை என்றுதானே அவள் நினைத்துக் கொண்டாள்.. தங்கள் மகனுக்கு விசம் அளித்து விட்டேன் என்று தானே அவரிடம் மன்னிப்புக் கேட்டேன்..என்ற குழப்பத்தில் அவனைப் பார்க்க , அவள் உலறிய கூற்றைக் கேட்டு அவனும் குழம்பியது போல்தான் காட்சியளித்தான்.
தேவாவின் ஜீப் பெரியகுளத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது..
அவரையே பார்த்துக் கொண்டிருந்த ரோகிணி " அந்த ஓவியத்துல இருக்குறதுதான் உங்க மனைவின்னா..அப்போ நான் உங்க சொந்த பொண்ணு கிடையாதாப்பா.. " என தன் மண்டைக்குள் குழப்பிக் கொண்டிருந்ததை கேட்டு வைக்க வண்டியை திடீர்முடக்கம் கொடுத்து நிறுத்தினார் தேவா..
" உங்கப் பேர் வாசுதேவன் தானப்பா.. ஏம்பா எல்லோரும் உங்கள தேவான்னு மட்டும் இங்க சொல்றாங்க.. உங்களுக்கு ஒரு பையன் கூட இருக்கார்தானப்பா.. " என்றவள் அவர் முகம் நோக்கி
" அந்த வீட்ல உங்கள சின்ன வயசுல பார்த்த மாதிரியே ஒரு அண்ணாவோட போட்டோ பார்த்தேன்பா.. ஏம்பா அம்மாவுக்கு என்னை புடிக்கல.. என்னாலயும் என்னோட அம்மாவாலதான் நீங்க அவுங்கள பிரிஞ்சு இருக்கறீங்களா.. அப்போ எனக்கு அப்பா அம்மான்னு ரெண்டு பேருமே இல்லையாப்பா..நான் வேணும்னா எங்கயாச்சும் போயிடவா" என மெல்லிய குரலில் அழாமல் கூறியவளின் வாயினை விரல வைத்து பேச விடாமல் தடுத்தவர்
" பாப்பா.. இதுக்கு மேல எதும் பேசாதம்மா.. நம்ம உலகத்துல நீயும் நானும் மட்டுந்தான்..வேற யாரும் வேணா " என்று கூறி வண்டியை ஓட்ட துவங்கினார்.
" அப்பா அண்.ணா..ஹாஸ்பிடல்னு" அவள் இழுக்க, " ஈஸ்வரியோட பையன் ஆபத்தான கட்டத்த தாண்டிட்டான்..போதுமா.."
" ஆனா உத்ரா.. அவ எங்கப்பா..
உத்ராவ அவுங்க எதுவும் பண்ணிட்டா "
" அவுங்க நம்ம ரெண்டு பேர் விசயத்துல தான் பத்ரகாளி..மத்தபடி அவுங்க சாந்த சொரூபணிதான் "
" ஏன் அப்படி "
" அதெல்லாம் அப்படித்தான் பாப்பா.. சரி வா..இந்த ஹோட்டல்ல பிரசப் ஆயிட்டு சாப்பிடலாம் " என அவளை பேச்சை மாற்றி உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார் தேவா என்றழைக்கப்பட்ட உதயனின் தந்தையான வாசுதேவன்.
Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz