ZingTruyen.Xyz

என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)

30.என்னை மறந்தாயோ கண்ணம்மா

Nivethamagathi

நாட்கள் அதன்பாட்டிற்கு நகர,

சண்முகம் கல்லூரி விடுதிக்கு சென்றிருந்தான்..

தேவா குடும்பத்தோடு மும்பையில் செட்டிலாகியிருந்தான்..பெற்ற மகளை சொந்தம் கொள்ள முடியாது என்கிற நிதர்சனம் தெரிந்த பின்பும் வருத்தம் மட்டும்  ஆறாவடுவாய் இருவருக்கும் இருக்க தங்கள் வாழ்வை வாழத் துவங்கினர்.. அவர்கள் மகள் சொந்தம் கொண்டாட முடியாத இடத்தில் அல்லவா இருக்கிறாள்..

குழந்தையை தூக்கி கொடுத்துவிட்டு சென்றதால் தாயாக ராஜியோ, குழந்தைக்கு தகப்பன் என்ற உரிமையை சரியான நேரத்தில் கொடுக்காததால்  தந்தையாக தேவாவோ,

தங்களது கடைமையைச் செய்யவில்லை..

ஆதலால் அவர்களால் வருத்தம் மட்டுமே அடைய முடியும் சொந்தம் கொண்டாட முடியாது என்பதை ஏற்றுக் கொண்டனர்.

மற்றபடி அவனுக்கு தனது மனைவி மகனோடு நேரம் கழிக்கவே நேரம் போதாமல் இருந்தது..விட்டால் இருபத்தி நான்கு மணி நேரம் போதாது என அடுத்த நாளின் மணித்துளிகளையும் கடன் வாங்கி விடுவான் போலும்..

முற்பகுதியில் வாழாத வாழ்வனைத்தையும் பிற்பகுதியில் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருந்தான் அவன்..

ராஜிக்கும் இழந்த அவனது கணவன் கிடைத்துவிட்டான் வேறென்ன சொல்ல..

தன்னால் தன் குடும்பம் பட்ட கஷ்டத்தை நினைத்து வருந்தாத நாளில்லையே அவள்..

ஆனால் இன்று, தான் கணவனென தேர்ந்தெடுத்தவன் நல்லவன்தான் என்ற சந்தோசமே அவள் மனதை நிறைத்திருந்தது..

அதுவும் அவன் தன்னோடு சேர்த்து தீரனையும் ஏற்றுக் கொண்டது..அவனை தன் மகனென்று ஊருக்கு உரைத்து தங்களுக்கென அடையாளம் கொடுத்தது..

மனைவி சொல்லே மந்திரம் என்பதைப் போல அவள் கண்ணால் சொன்ன வேலையை தலையால் செய்து முடிப்பது..என ஒவ்வொன்றிலும் அவளையே பிரதானப்படுத்தி அவளை தன் கண்ணிமைக்குள் வைத்து தாங்கினான் அவள் கண்ணாளன்...

தீரனுக்கும் அப்படித்தான்.. தந்தை.. அதுவும் தோழனைப் போல.. தனக்காய் ஒவ்வொன்றாய் பார்த்து பார்த்து செய்ய,

சில சமயங்களில் அவனோடு அடம்பிடிக்க,

இருவரும் ஒன்றாய் விளையாட, ராஜியை வம்பிழுக்க,

சமையல் செய்கிறேன் என்ற பெயரில் கிச்சனை அலங்கோலம் செய்ய,

செல்ல தவறுகள் செய்து பழியை தீரன்மீது போட்டு அவனை தோப்புக்கரணம் போடச் செய்ய,

ராஜிக்காக கவிதை சொல்கிறேன் என்ற பெயரில் வீட்டையே குப்பைத் தொட்டியாக்க,

தீரனுக்கு படிப்பு சொல்லித் தருகிறேன் எனக் கூறி இருவரும் மொட்டைமாடியில் நின்று ஆட்டம் போட,

என வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் வீணாக்காது அனுபவித்துக் கொண்டிருந்தனர் தேவா குடும்பத்தினர்.

மகனாக தீரனும் மனைவியாக ராஜியும் தேவாவின் வரண்ட பக்கங்களை பசுமையாய் மாற்றுவதில் மும்மரமாக இருந்தனர்.. அவன் தங்களுக்காக அவன்சுயத்தை விட்டு அத்தனையும் செய்யும்போது இவர்கள் மட்டும் விட்டுவிடுவார்களா என்ன?

💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

விசாகன் ரோகிணி கல்யாண வேலையும் ஆரம்பமானது.. இன்னும் ஒரு மாதத்தில்  புகளூரில் திருமணம் என முடிவு செய்திருக்க அதற்காக வாசுவும் உதயனும் ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருந்தனர்.. ஆனால் மணமக்களோ ?..

💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

ஞாயிற்றுக்கிழமை..

அழைப்பு மணி அடிக்க தூக்கக் கலக்கத்தில் எழுந்து வந்து கதவைத் திறந்தவளின் தூக்கம் இருந்த இடம் தெரியாது காணாமல் போனது..

எதிரே தன் பல்வரிசை அழகாய்த் தெரிய, சிரித்த முகமாய் நின்றிருந்தான் உதயன்..

நெற்றியில் வைத்திருந்த ஸ்டிக்கர் பொட்டு கன்னத்தில் மச்சமாய் மாறியிருக்க,

தூங்கப் போகும் போது போட்ட கொண்டையில் பாதி முடி கழண்டு கீழே தொங்கி தூக்கணாங் குருவிக் கூட்டை நினைவு படுத்த..,

கண்ணின் மை இறங்கி கருவளையம் போல தோன்ற, மொத்தத்தில்

பிசாசுக்கு ஒன்றுவிட்ட தங்கச்சியாய் காட்சியளிக்கும் காதலியை கண்களுக்குள் நிரப்பிக் கொண்டான் அவன்..

அவன் பார்வையின் அர்த்தம் புரிந்தவள் வெட்கப்படுகிறேன் என்ற பெயரில் தலையை முடியை சரி செய்ய, அப்போதுதான் அவளின் கோலம் விளங்க பதறியடித்துக் கொண்டு குளியலறைக்குள்ளே புகுந்து கொண்டாள்..

பதினைந்து நிமிடத்தில் தன்னைத் திட்டிக் கொண்டே வெளியே வந்தவளை மணமணக்கும் காபி வாசனை வரவேற்றது..

ஹாலில் கலைந்து கிடந்த புத்தகங்களும் சில முக்கிய ஆவணங்களும் அழகாய் அடுக்கப் பட்டிருக்க, டீபாயில் புதிதாய் ஆர்க்கிட் பூங்கொத்தும் முளைத்திருந்தது..

" இஇஇஇ நைட் கொஞ்சம் வொர்க் ..அதான் இப்படி..இல்லைன்னா எப்பவும் நீட்டாதான் இருக்கும் "

என கெஞ்சலாய் உரைத்தபடி காபியினைப் பருக ஆரம்பிக்க,

அவன் பார்வையோ உள்ளறை நாற்காலியில் மடிக்காது போட்டு வைத்திருந்த துவைத்த துணிகளின் மீது அர்த்தமாய் விழுந்தது..

' அய்யோ ' என்றவள் அந்த அறைக் கதவை சாத்திவிட்டு கம்யூட்டர் டேபிளில் மேல் வைத்திருந்த அவளது நொருக்குத் தீனியை உரிய இடத்தில் எடுத்து வைத்துவிட்டு வர, இவன் மெலிதாக புன்னகைத்தான்..

நல்லவேளை சமைக்கிறேன் என்ற பெயரில் அவள் கிச்சனை அலங்கோலப் படுத்தவில்லை.. அதுவரை அவள் மதிப்பு கொஞ்சம் தப்பித்தது..

" என்ன உத்தீ..நீ வரேன்னு முன்னாடியே சொல்லியிருந்தா எதும் சமைச்சாச்சும் வெச்சிருப்பனே..இப்போ பாரு வீட்டுல மாவும் இல்ல.. வெறும் ரவை மட்டுந்தான் இருக்கு "

அவள் அப்பாவியாக கிச்சனை நோட்டம் விட்டுக் கொண்டு சொல்லும்போதே, அவனுக்கு ரவாப் பாயச நினைவு வந்து தாக்க, குபீரென சிரித்து விட்டான்..

இதற்கும் வந்ததிலிருந்து அவன் வாயையே திறக்கவில்லை.. அவனோ

அவள்மீது கேலிப் பார்வை மட்டுமே பார்த்திருக்க, இவளோ சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டிருக்கிறாள்..

அவள்கூற்று அவளுக்கே கொஞ்சம் நாணத்தை வர வைத்திருந்தது..

" போ உத்தீ..என்னை ரொம்ப கிண்டல் பண்ற" அவன் நெஞ்சில் செல்ல அடிகளை இடிகளாய் இடிக்க, அவன் சிரிப்புச் சத்தம் அதிகமானது.. அதில் சற்று செல்லக் கோபம் கொண்டவள் அவனிடமிருந்து விலக நினைக்க, அவள் கரம் பற்றியவன் அவளை அமர வைத்து " என்னாச்சு உத்தீ..ஏன் கோபம் " என கொஞ்சம் கேலியை விடுத்து அமைதியாக கேட்க,

" உனக்கு நான் தகுதியானவளா உத்தீ..

பாரு எனக்கு இந்த சின்ன வீட்டை கூட நீட்டா வெச்சிக்க தெரியல.. சமைக்கத் தெரியல..நேரமா எழத் தெரியல.. உன்னை எப்படி பார்த்துக்குவேன்..ஈஸ்வரியம்மா.. வாசு அங்கிள் அப்பத்தான்னு மத்தவங்க தேவைய நான் எப்படி பார்த்து பார்த்து செய்வேன்.. எனக்கு யாரும் இதுக்கு முன்னாடி இதெல்லாம் சொல்லித் தரவே இல்லையே "

கற்பனைக் குதிரை மெதுவாக தன் ஓட்டத்தை துவங்கியிருந்தது.. ஆனால் என்ன..முன்பு தனக்குள்ளே புலம்பிக் கொண்டிருந்தவள் தன்னவனிடம் புலம்பும் வகையில் முன்னேறிக் கொண்டிருக்கிறாள் அவ்வளவு தான்..

" அவுங்களுக்கு  எனக்கு ஒன்னுமே தெரியலன்னு தெரிஞ்சா..அவுங்க எல்லோரும் என்ன நினைப்பாங்க ..தம்பையன் இவள கட்டிட்டு ரொம்ப கஷ்டப் படறான்னு வருத்தப் படுவாங்கள்ள"

தான் கலங்கும்போது ஆறுதல் சொல்லும் அதிமேதாவியா தன்முன் முட்டாள்த் தனமாய் பேசிக் கொண்டிருப்பது என அவளை உற்றுப் பார்த்தவன்

" அவுங்க ஒன்னும் வேலைக்கு ஆளெடுக்கல புரியுதா.. என்கூட சுக துக்கத்துல ஒன்னா சேர்ந்து ஒருத்தருக்கொருத்தர் உறுதுணையா வாழனும்னு தான் ஆசைப் படுவாங்களே தவிர, துணிய மடிச்சு வைக்க தெரியலன்னு வருத்தப்பட இல்ல "

சற்று கோபமாய் வந்து விழுந்தன அவன் வார்த்தைகள்..

அவன் கூற்றில் அவள் அமைதியாகிட,

" உத்தீ "

காதலாய் ஒலித்தது அவனது குரல்..

" ம்ம்.. "

" எங்காச்சும் வெளிய போலாமா"

"ம்ம்"

நிமிர்ந்து பார்க்கவில்லை அவள்..

சமாதனப்படுத்தவும் நினைக்கவில்லை அவன்..

சாப்பிடாது கூட அவனுடன் கிளம்பி வந்தவள் அவன் கோவிலுக்கு அழைத்து வந்திருப்பதைப் பார்த்துத் திகைத்தாள்..

" வா " என்று உரிமையுடன் கைப்பிடித்து அழைத்துச் சென்றவனை நினைத்து தனக்காக தன்னவன் இருக்கிறான் என்ற சந்தோசத்தில் அவன் கைக்கோர்த்து உள்ளே சென்றாள்..

இருவருக்கும் கடவுள் பக்தியென்று பெரியதாக ஒன்றும் இல்லை..

இருந்தும் மனநிம்மதிக்காக இறைவனை தியானித்தவர்கள் அடுத்து ஈஸ்வரி இல்லத்திற்குச் சென்றனர்..

அவள் கேள்வியாய் அவனை நோக்க,

" இங்க தான் உத்தீ உன்னை பர்ஸ்ட் டைம் பார்த்தேன்.. ரெண்டு  பசங்கள அடிச்சிட்டு இருந்த..

எதுக்குன்னு தெரிஞ்சிக்கத் தான் உங்கிட்ட பேச வந்தேன். அப்போதான் டொனேசன் கொடுக்கறேன்னு பேர்ல இங்க வந்து பொண்ணுங்கள தவறா நோட்டம் விட்டு போறதையும் பின்னாடி ஆள்வெச்சு கடத்த நினைச்சதையும் நீ கண்டுபிடிச்சு  அவுங்கள அடிச்சது தெரிஞ்சது.. உன்னோட புத்திசாலித்தனம்..தைரியம் பார்த்து நானே அசந்து போயிட்டேன்.. அதுல இருந்துதான் நான் நம்ம எல்லா இல்லத்துக்கும் காவல அதிகப் படுத்தினேன்..

அடுத்து உன்னைப் பார்க்கும் போதெல்லாம் எதாவது ஒரு விதத்துல என்னை உன்பக்கம் இழுத்துட்டே இருந்த.. எந்த இடத்துல உன்னை விரும்ப ஆரம்பிச்சேன்னு தெரியல.. ஆனா எனக்குள்ள ஆழமா புகுந்துட்ட..

உன்னை பார்த்தாலே எம்மனசு எவ்ளோ கஷ்டத்துல இருந்தாலும் நார்மல் ஆகிடும்.. உங்கூட வாழ்க்கை முழுசும்

இதே சந்தோசத்தோட வாழனும்னு ஆசைப்படறேன்..என்னை கல்யாணம் பண்ணிக்கிறீயா உத்தீ"

அவன் ஆசையாக பேசிக் கொண்டிருக்க, இவள்தான் வானில் பறந்து கொண்டிருக்கிறாளே, பின்னர் எப்படி அவனுக்கு பதிலளிக்க, தோளை குளுக்கிய குலுக்கலில் நினைவுக்கு வந்தவள் அவனைப் பார்க்க, அவனோ அவள் விரலில் அழகிய மோதிரத்தை அணிவித்துக் கொண்டிருந்தான்...


வாசு உதயனின் திருமணத்திற்கு என்றோ ஒப்புதல் அளித்திருக்க, உதயோ முதன்முதலாக அவளைச் சந்தித்த நாளில்தான் அதனை இவளிடம் தெரிவிக்க வேண்டும் என காத்திருந்து இந்த விசயத்தைச் சொன்னான்..

அன்று பாதுகாப்பிற்கு அணிகலன் அணிவிக்கும் போதும் மோதிரமோ கழுத்தணியோ அணிவிக்கும் துணிவு அவனுக்கில்லை.. ஆனால் இன்று தனிமையில் அவள் வாடுவதை அறிந்த பிறகும் அமைதியாக இருக்க அவன் நினைக்கவில்லை.. வாசுவிடம் வம்படியாக பேசியே சம்மதம் வாங்கியிருந்தான்..

தன் பேரனுக்காய் பருவதம் போட்ட திட்டம் நன்றாகத் தான் வேலை செய்திருந்தது

இந்த உலகத்தில், இந்த நொடியில் மிகவும் சந்தோசமான மனிதர் என்றால் அது உத்ரா தான்..
தன் மனம் நினைத்ததை அறிந்து அதனை  நிறைவேற்றும் ஆற்றல் கொண்டவனை கரம் பிடிக்கப் போகிறாளே.
.தனிமனுசியாய் வாழ்ந்தவளுக்கு ஒரு பெரிய குடும்பத்தையே பரிசளிக்கப் போகிறானே அவன்..

அவன் விழியில் தெரிக்கும் காதல் மழையில் நனைந்து போனவள் மீண்டு வர நினைக்காதவளாய் அவன் நெஞ்சிலே தஞ்சம் புகுந்து கொண்டாள்..

ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ..?ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ?

சொல்லத் துடிக்கும் வார்த்தை கிரங்கும்,..

தொண்டைக் குழியில் ஊசி இறங்கும்...

இலை வடிவில் இதயம் இருக்கும்

லை வடிவில் அதுவும் கனக்கும்.


சிரித்து சிரித்து சிறையிலே,

சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும்.

நிலம், நீர், காற்றிலே மின்சாரங்கள் பிறந்திடும்.

காதல் தரும் மின்சாரமோ பிரபஞ்சத்தைக் கடந்திடும்

.

நிஜமாய் நீ என்னைத் தீண்டினால்…நிஜமாய் நீ என்னைத் தீண்டினால்...

பனியாய் பனியாய் உறைகிறேன்.

ஒளியாய் நீ என்னைத் தீண்டினால்,

நுரையாய் உன்னுள் கரைகிறேன்.

காதல் வந்தாலே வந்தாலே,ஏனோ உலறல்கள் தானோ?

அதிசயமாய் அவசரமாய் மொழித் தொலைந்தால் பொருளென்னவோ?அதிசயமாய் அவசரமாய் மொழித் தொலைந்தால் பொருளென்னவோ?

வெள்ளித் தரைப் போலவே என் இதயம் இருந்தது.
மெல்ல வந்த உன் விரல் காதல் என்று எழுதுது.

ஒரு நாள் காதல் என் வாசலில்…ஒரு நாள் காதல் என் வாசலில்,வரவா? வரவா? கேட்டது.
மறுநாள் காதல் என் வீட்டுக்குள்,
அடிமை சாசனம் மீட்டுது.
அதுவோ? அது இதுவோ? இது எதுவோ?அதுவே நாம் அறியோமே.

ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ?

அவசரமாய் அவசரமாய் மொழித் தொலைந்தால் பொருளென்னவோ?

சொல்லத் துடிக்கும் வார்த்தை கிரங்கும்,

தொண்டைக் குழியில் ஊசி இறங்கும்,

இலை வடிவில் இதயம் இருக்கும்,

மலை வடிவில் அதுவும் கனக்கும்.

சிரித்து சிரித்து சிறையிலே,

சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும்...

💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

பிரபலாமான உணவு விடுதியில் தன் முன்னே இருப்பவர்களைப் பார்த்து வயிறெறிந்து கொண்டிருந்தான் விசாகன்..

இத்தோடு இரண்டு பேமிலி பேக் ஐஸ்கீரிமை காலி செய்துவிட்டு மூன்றாவதையும் முடித்தே தீருவோம் என்கிற நோக்கில் சண்முகனும் நதியாவும் அதிவேகத்தில் அதனை உள்ளே இறக்கிக் கொண்டிருக்க, ரோகிணியோ அவர்கள் சாப்பிடும் அழகை இரசித்துக் கொண்டிருந்தாள்..

தான் ஜெயிப்பதற்கு யோசனை கூறுகிறேன் என்று கூறிய சண்முகனை நம்பி மற்ற உறுப்பினர்களையும் அழைக்க, உதயனோ தனக்கு வேலை இருப்பதாக கலன்று கொண்டான்..

நதியாவையும் ரோகிணியையும் கோவிலுக்கு கிளம்பிப் போவதாக சொல்லித்தான் இங்கே வரச் சொன்னது.. ஆனால் இங்கே வந்த பின் சண்முகப்பிரியன் ஐஸ்கீரிம் பிரியனாக மாறிப் போக,' ஆக மொத்தம் தனக்கு யாரும் உதவக்கூடாது என்கிற எண்ணத்தில் இருக்கிறார்கள் ' என்பதை தெரிந்து கொண்டு தலையில் அடித்துக் கொள்ளாத குறைதான் விசாகனுக்கு....

விசாகன் பாஹீயிடம் சம்மதம் வாங்கலாம் என்றால்,

பாஹீயிடம் கேட்டால் வாசுவைக் கைக்காட்ட, வாசுவோ பாஹீயிடம் கைக்காட்ட, அவர்களிடம் கெஞ்சியும் கொஞ்சியும் குட்டிக் கரணம் போட்டும் அவர்கள்  அசையாது இருக்க,

வாசு பாஹீயின்மீது கடுப்பாகிப் போனான் அவன்..

சரி தனது முயற்சியிலிருந்து விடுபட்டு விடலாம் என்று பார்த்தாலோ அவன் ஏஞ்சலோ சோர்ந்துவிடுகிறாள்.. அவளுக்காகவாது தான் ஜெயித்தே ஆக வேண்டும் என்று அவன் நினைக்க, கூட இருக்கும் அப்ரசண்டிகள் அதற்கும் ஒத்துவர மாட்டேன் என்கின்றனர்.. ஹூம்.. திருமண நாள் நெருங்கும் வேளை, கனவுலகில் இருக்க வேண்டிய இவர்கள், ஒரே வீட்டில் இருந்துகொண்டே இப்படி  திருட்டுத் தனமாய் சந்திக்க வேண்டிய நிலைமை..

அங்கே உறவினர் முன்னர் இவளுடன் பேச நினைத்தால் ரோகிணியோ புள்ளி மானுக்கு தங்கச்சி போல இவனைக் கண்டதும் துள்ளி  ஓடி ஒளிந்து கொள்ள, ஏதோ சண்முகனைக் காண கூட்டிச் செல்கிறேன் என்று கூறிய பின்தான் வீட்டை விட்டு காலடியே எடுத்து வைத்தாள்..

சண்முகனின் பெயரைச் சொல்லியாது இவளிடம் நேரம் செலவளிக்கலாம் என்று நினைத்தால் அவளோ இந்தப் பாசமலர்களை கண்டு களித்துக் கொண்டிருக்கிறாள் இந்தப் பேதை என அவனுக்கும் சிறு கோபம்..

அவர்கள் சாப்பிடுவதையே  விழிவிரித்து பார்த்திருக்கும் அழகில் சற்று மயங்கியவன் ' ஏஞ்சல் ' என்றழைக்கப் போய் சுற்றுப்புறம் அறிந்து தன்னை திடப்படுத்திக் கொண்டான்..

அன்று அவன் சொல்லிய ஏஞ்சலுக்கும் இன்று சொல்லிய ஏஞ்சலுக்கும் ஏக வித்தியாசம்..

அன்று அது பாசத்தின் அடைமொழி..

இன்று இது காதலின் புதுமொழி..

அத்தை மகளாய் தொடங்கி உறவு கொள்ள நினைத்தவனை இன்று அவள் சுபாவத்தால் அவனது அடிமையாக்கி வைத்திருக்கிறாள் இந்த இராவணிண் சீதா தேவி..

தவறு..

குணத்தில் அவனும் இராமன் தானே..

தன் இருபத்தியேழு வருடங்களை அவளுக்காகத் தானே சேமித்து வைத்திருக்கிறான்..

ஆக, அவள் இராமனின் சீதை தானே..

முன்பு அனைவர் முன்னிலையிலும் எந்தத் தயக்கமுமின்றி பேசிப் பழகியவன் திருமணத்தேதி குறித்த பின்னர், ரோகிணியைப் போல அவனும் வெட்கம் கொள்கிறான் அவள் முன்னால்..
அதற்குப் பெயர் தான்

கல்யாணக் கலையோ என்னவோ?

அந்த விசயம் அவளுக்குத் தெரிய வருமோ?

அதற்குத் தான் வாய்ப்பே இல்லையே..

கூச்சம் மறைத்து அவன் ஒரு அடி எடுத்து வைத்தால், பத்து அடி பின் வைத்து சிட்டாய் பறந்து விடுகிறாளே அவனது பச்சைக் கிளி..

அதுவும் நல்லதுக்குத் தான்..

ஆண்மகனின் கெத்து போய்விடும் அல்லவா..

" ஏன் வேணும்னா நீயும் எடுத்து சாப்பிட வேண்டியது தான" முயன்று பேசினான் அவள் எதுவும் சாப்பிடாமல் இருப்பதைப் பார்த்து,

அவளோ அப்பாவியாக " அப்பா வாரத்துல ஒரு டைம்தான் ஐஸ்கிரீம் சாப்பிடனும்னு சொல்லி இருக்காங்க.. நான் நேத்தே சாப்பிட்டேன்" என்றாள் முகத்தைச் சுருக்கி..

அவள் பதிலில் அவள் தந்தை மேல் வைத்திருந்த மரியாதை தெரிந்தது..

" ஏன் உங்கப்பாவுக்கு இங்க  சாப்பிடறது தெரியவா போகுது..பரவால சாப்பிடு "

அவள் ஆசையாய் பார்வையால் வருடும் ஐஸ்கிரீமை

அவள்புறம்  நகர்த்தி வைக்க,

" நான் தான் வரும்போதே அப்பாகிட்ட சொல்லிட்டு தான வந்தேன்...எனக்கு கூலா சாப்பிட்டா கோல்ட் வந்துடும். என் வாய்ஸ் கொஞ்சம் மாறுனாலே அப்பா கண்டுபிடிச்சிடுவாரு..எனக்கு வேணாம்"

சதிகாரி அந்த அய்யனாரிடமே மாட்டி விட்டாளே என நொந்து கொண்டு

" என்னனுமா சொல்லிட்டு வந்த " எனக் கேட்க,

" நீங்கதான் கோயிலுக்கு கிளம்பி வரச்சொன்னத"

அவள் பதிலில் ஒருபுறம் அவள்மேல் இரக்கப்பட்டாலும் மறுபுறம் அங்கிருக்கும் சுவற்றில் நங்கு நங்கென்று கொட்டிக் கொள்ளலாம் போலிருந்தது.. காலையில் வாசு இது தெரிந்துதான் தன்னை அவனோடு வேண்டும் என்றே வெளியே செல்ல அழைத்தார் என்று இப்போது புாிந்துபோனது அவனுக்கு..

இவளை ரோகிணி வாசுதேவனிலிருந்து ரோகிணி விசாகனாக மாற்ற முடியுமா இவனால்..

எதற்கெடுத்தாலும் அவள் வாயில் அப்பா அப்பா என வாசுவின் திருநாமமே ஒலித்துக் கொண்டிருக்க அவரை விட்டு பிரிந்து இவளால் இருக்க முடியுமா என தனக்குள்ளே கேட்டுக் கொண்டான்..

கட்டிக் கொடுத்தால் கடமை முடிந்ததென நினைக்கும் வாசுவிடம் இவன் என்னவென்று பேசி ஜெயிக்க..

அவன் அவளை கோபமாக பார்க்க முயற்சிக்க, சண்முகன் அப்போதுதான் மூன்றாவது டப்பாவை காலி செய்துவிட்டு பெருத்த ஏப்பம் ஒன்றை விடுத்தான்.. அதனால் பார்வை அவன்புறமாக  திரும்ப, அந்தக் கொலைவெறி பார்வையில்

பயந்தவன்

"தியா தங்கச்சி  "

" சொல்லுண்ணே "

" நாம ஏதும் தப்பு பண்ணலையே.."

" இல்லையேண்ணே"

" அப்ரோ எதுக்கு உங்கண்ணே நம்மள இந்த மொரை மொறைக்குது... "

" அதானே எனக்கும் தெரியல " என்றவள் அடுத்த ஐஸ்கிரீமை ஆர்டர் பண்ண முயற்சிக்க, பொங்கி எழுந்துவிட்டான் விசாகன்..

வாசுவின் மீது இருந்த கோபம் தொடங்கி அப்படியே உதயனிடத்தில் பயணித்து கடைசியாக

வந்ததிலிருந்து இவர்கள் சாப்பிட்ட ஐஸ்கீரிம் வரை அவர்கள் இருவரையும் தாழித்து எடுத்தவன் மூச்சு வாங்கியபடி ஓய்வெடுக்க, அதன் பின்னரே மயான அமைதி அங்கு நிலவியது..

" இப்போ என்ன நடந்துச்சுன்னு அவன திட்டறீங்க.. சின்னப் பசங்க ஐஸ்கீரிம் சாப்பிட்டது ஒரு குத்தமா.. சும்மா உங்க ரோசத்த குழந்தைங்க கிட்ட காட்டாதீங்க "

பூனைக்குட்டி போல பம்மிக் கொண்டிருந்தவள் புலியென சீற, சண்முகனுக்கு சொல்லவா வேண்டும்..

வரும்காலத்தில் ரோகிணிதாசனாக மாறி இருக்கப் போகின்ற விசாகனை எண்ணி மனதிற்குள் சிரித்தவன்

" ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகின்றது "

நக்கலாக அவன் பாட, பல்லைக் கடித்தான் விசு..

அவன் கோபம் கண்டு அடுத்த நொடி,

" டேய் என்னடா..என் முன்னாடியே அவர கிண்டல் பண்ற.. நீ தான்டா அவர வரச் சொல்லிட்டு திண்ணுக்கிட்டே இருந்த.. எவ்ளோ பெரிய மனுசன் அவர் வேலைய விட்டுட்டு நமக்காக வந்தா அவர மதிக்காம கேலி பண்ணுவியோ "

அவனுக்கான அவள் பேச்சில் கோபம் மறைந்து பனிச்சாரல் வீசியது தலைவனுக்கு.. 
இந்த முறை ஏளனப் பார்வையை சண்முகனை நோக்கி வீச,

" நீயாப் பேசியது என் ஸ்டாரு..

நீயாப் பேசியது "

என நெஞ்சில் குத்திக் கொள்ள ஒரே நேரத்தில் முதுகிலும் மூன்று அடி பரிசாக அளிக்கப்பட்டது அவனது ஓவர் ஆக்டிங்கால்..

" அடச்சீ.. என்ன உங்களுக்கு அய்யனார உங்களோடயே வெச்சிக்கனும் அதுக்கு ஐடியா வேணும் அவ்ளோ தான.."

மூவரும் பள்ளிச் செல்லும் மழலைகள் போல் ஒன்றாக தலையாட்ட, அதில் தீவரமாக யோசித்தவன்,

திடீரென

" ஸ்டாரு.. உனக்கு இலண்டனா.. வாசிங்டன்னா..கனடாவா இல்ல நியூசிலாந்தா"

" எதுக்குடா லூசுப் பயலே "

" இங்கப் பாருங்க வாத்தியாரே..நான்

ஸ்டார்கிட்ட தான் கேட்டுட்டு இருக்க.. நீ சொல்லு.. "

அவள் புரியாது விழிக்கவும், அவன் காதுக்குள் " ஏண்ணே.. ஹனிமூனுக்கான்னே கேக்கற " எனக் கேட்ட நதியாவை நங்கு நங்கென்று கொட்டியவன் " ஆளையும் வயசையும் பாரு " என முறைத்தவன் இவர்களும் சரியான தத்தி என்பதைப் புரிந்து கொண்டு

" இங்கப் பாருங்க.. நீ அய்யனார்கிட்ட முடிவா சொல்லிரு..இவரோட பிசினஸ நாங்க வெளிநாட்டுல போய் விரிவு படுத்தப் போறோம்.. அங்கதான் செட்டில் ஆகப் போறோம்னு தைரியமா சொல்லு" என்றான்.

" அப்படி சொன்னா "

"மக்கு மக்கு.. அப்படி சொன்னா.. பொண்ண நேர்ல அடிக்கடி பார்க்க முடியாதுன்னு ப்பீல் பண்ணி நீங்க எங்கேயும் போக வேணாம் எங்கூடயே இருங்கன்னு சொல்லுவாரு "

சண்முகன் சொல்லச் சொல்ல காணொளியாக வாசு கெஞ்சும் காட்சி விசாகனது மனக்கண்ணில் ஓடிக் கொண்டிருந்தது.. கூடவே பாஹீயின் காளி முகமும் தெரிய, அவரிடம்  ரோகிணியை வைத்து பிளாக்மெயில் செய்ததால் செமத்தையாக அவன் அடி வாங்கும் காட்சியும் வந்து போக, குப்பென்று வேர்த்தது அவனுக்கு..

ரோகிணி சந்தோசமாய் அவன் பேச்சைக் கேட்க, அவனோ

சண்முகனை உன்ன கொலைப் பண்ண போறேன் என்கிற ரீதியில் பார்த்திருந்தான்..

" என்னப்பா இப்படி மொரைக்கிறீங்க..

என் பிரண்ட்ஸ்லா இன்னைக்கு படத்துக்கு கூப்டாங்க.. சரி என்னோட லீகல் அட்வைஸ்லாம் உங்களுக்கு தேவைப்படுமேங்கற காரணத்தால மட்டுந்தான் இங்க வந்தேன்..மத்தபடி எனக்கென்ன தலையெழுத்தா..என்னோட பொன்னான நேரத்தை உங்களோட வீணடிக்க.. "

அவன் தன்பாட்டிற்கு பேசிக் கொண்டே போக, அவனை மீண்டும் அடிக்க கையை ஓங்கியவன், அவன் பின்னே உதயன் உத்ரா கைக்கோர்த்த வண்ணம் வருவதைப் பார்த்து அப்படியே ஏந்திய கையை அந்தரத்திலே வைத்துக் கொண்டு அவர்களையே பார்த்தான்..

அவர்களும் சரியாக அவர்களது எதர்ப்புறம் வந்தமர, இவர்களை கண்டுகொள்வதைப் போல ஆனது..

காலையில் எவ்வளவு கெஞ்சியிருப்பான் விசாகன்..

முக்கிய வேலையென்று இதனைத் தான் சொல்லியிருக்கிறானா படுபாவி என மனதில் அவனை திட்டித் தீர்த்தவன் அவர்களை நோக்கி புன்னகைக்க, அடுத்த நொடியே சண்முகன் உத்ராவும் சேர்ந்து கொண்டு பாசமலர் படம் ஓட்ட ஆரம்பித்தனர்...

" லவ்வர் பாய்"

" தேவதை "

" தேவதை "

" லவ்வர்பாய்"

" அடச்சீ ஒழுங்கா பேசுங்க"

" உங்களுக்கென்ன வாத்தியாரே.. நாங்க இப்படித்தான் பேசுவோம்." என்றவன் உத்ராவை தன்னருகே அமர்த்திக் கொள்ள, இங்கே உதயனுக்கோ ஜிவுஜுவு என ஏறியது..

விசாகன்

" என்னடா இதான் உன் இம்பார்ட்ன்ட் மேட்டரா"

தவறு செய்து மாட்டிக்கொள்ளும் குழந்தை போல முகத்தை வைத்துக் கொண்டு

ஆம் என அவன் தலையசைக்க, அவனை அடிக்க கையோங்கியவன் கை 

மறுபடியும் அந்தரத்தில் நின்றது..

வாசலில் பளபளக்கும் புதிய புல்லட்டில் கருப்புச் சட்டை கூலிங் கிளாஸ் சகிதமாய் வாசு வர, அவர் பின்னால் அமர்ந்திருந்த பாஹீயின் முகம் மட்டும் தெளிவாகத் தெரிந்தது..

' அப்போ இப்பவும் நாமதான் அவுட்டா ' என நினைத்துக் கொண்டவன்,

அனைவரையும் தெறித்து ஓடச் சொல்ல, அவர்களோ புரியாது அவனை படுத்தி எடுத்து அசராமல் அப்படியே அமர்ந்திருக்க, அதற்குள் வாசுவும் பாஹீயும்  அவர்கள் அருகே வந்திருந்தனர்.. விசாகனும் உதயனும் இன்று தங்கள் இணையை சந்திக்க வாசுவிடம் கலர்கலராய் விட்டு வந்த ரீல்கள் வரிசைகட்டி அவர்களைப் பார்த்து இளிக்க,
அப்போதைக்கு மெனு கார்டை வைத்து தங்கள் முகத்தை மறைத்துக் கொள்ள மட்டுமே அவர்களால் முடிந்தது..

அந்தோ பரிதாபம்..பழக்க தோசத்தில் ஈஸ்வரியை கண்டதும் எழுந்து நின்ற உத்ராவையும், தந்தையைக் கண்டதும்
பாசத்தில் எழுந்து நிற்கும் ரோகிணியையும் வைத்துக் கொண்டு இவர்கள் எப்படி தப்பிக்க..

( மன்னிக்கவும் மக்களே.. நீண்ட நாட்கள் காத்திருக்க வைத்ததற்கு..
பல வேலைகள் வரிசைக்கட்டி வந்ததால் தாமதமாகிவிட்டது.. இதையும் தூக்க கலக்கத்தில்தான் பதிவிடுகிறேன்..பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.. எழுத எழுத நீண்டு கொண்டே போகிறது கதை.. முடிந்தளவுக்கு அடுத்த அத்தியாத்திலாவது முடிக்கப் பார்க்கிறேன்.. அவசரத்தில் எழுதினால் நன்றாகவும் இருக்காது...அதனால் அடுத்த பதிவும் தாமதம் ஆகலாம்.. 🐯🙃🙃😇..)

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz