என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)
29.என்னை மறந்தாயோ கண்ணம்மா
சண்முகத்தைக் கூட்டிக் கொண்டு வாசுவும் உதயனும் கலந்தாய்வுக்கு சென்றிருக்க, இங்கே பாஹீ விசாகனை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்..
" அந்த மனுசன் நீங்க என்ன சொன்னாலும் கேட்பாருன்னு..அவரோட பாசத்தை அசைச்சுப் பார்க்க முடிவெடுத்திட்டீங்க..அப்படிதான..
என்னடா தெரியும் அவரப் பத்தி..
வேலைக் காரன் வேலைக் காரன்னு என் காது படவே எத்தனை முறை அவமானப் படுத்திருப்பாங்க தெரியுமா அவர.. இப்போ அவர்மேல தப்பு இல்லைன்னு தெரிஞ்ச பிறகு மன்னிப்பு கேட்டா எல்லாம் சரியாகிடுமா..
உனக்கென்ன பிரச்சனை.. சொத்து சரிசமமா பிரிக்கனும் அதான..
பிரிச்சிக் கொடுங்க..ஆனா அதுக்கு பிறகு எங்க வீட்டுப் பக்கம் யாரும் வரக் கூடாது அவ்ளோதான்..புரிஞ்சுதா..
ரோகிணிய வெச்சு பிளாக்மெயில் பண்ணியாமே.. இதை அவர் வேணா உங்க மேல கண் மூடித் தனமா நம்பிக்கை வெச்சிருக்கறதால நம்பலாம்..ஆனா நான் நம்ப மாட்டேன்.. "
பெண் சிங்கமாய் அவர் முழங்கிக் கொண்டிருக்க தலை குனிந்து நின்று கொண்டிருந்தான் விச்சு..
" நான் ரோகிணிய தூக்கி வளர்க்காம இருந்துருக்கலாம்.. ஆனா ஒரு அம்மாவா அவ மனச புரிஞ்சிக்க முடியும்.. அவருக்குத் தான் தன் பொண்ணு சின்னதா முகம் சுளுச்சாலும் அது பெரிசா தெரியும்..எனக்கு அப்படி இல்ல..தன்னை பிடிக்கலன்னு கல்யாண மாப்பிள்ளை சொல்றான்னா அவ எந்தளவுக்கு துடிச்சிருக்கனும்னு எனக்குத் தெரியும் " என்றதும் புசுபுசுவென்று கோபத்தோடு ரோகிணியை அவன் பார்க்க, அவள் அவனைப் பார்த்து கேவலமாய் இளித்து வைத்தாள்..
" இப்போ சொல்லுடா..இந்த சொத்து விசயத்தை தவிர, வாசு உனக்கும் உதயாவுக்கும் என்ன வேறுபாடு காட்டுனாருன்னு " கைக்கட்டி அவர் கேட்ட விதத்தில் உள்ளுக்குள் பயப்பந்து உருண்டு விழுந்தது..
சிந்தாமணி " அண்ணி விசு தெரியாம அப்படி நடந்துட்டான்..விட்ருங்களேன் " எனக் கெஞ்ச ,
" நான் அதுக்கு சொல்லல சிந்து.. முன்னதான் என் கணவருக்கு ஆதரவா இருக்க வேண்டிய நேரத்துல பைத்தியமா இருந்துட்டேன்.. ஆனா இனி அப்படி இருக்க மாட்டேன்..என்னால அவர்பட்ட கஷ்டங்கள்..அவமானங்கள் எல்லாமே போதும்...இனி அவர் தலைகுனிஞ்சி நிக்கறத பார்த்துட்டு இருந்தா அவர் மனைவிங்கற வார்த்தைக்கு அர்த்தமே இல்ல " என்று விசாகனைப் பார்க்க, அவன் நின்ற இடம் காலியாக இருந்தது..
அவன்தான் சிந்து கெஞ்சும்போதே காலில் விழுந்து விட்டானே..
அவனை தூக்கி விட்டவள் அவன் நெற்றியில் முத்தம் வைத்து " நீ அவர்மேல இருக்கற பாசத்தாலதான் டிராமா பண்ணேனு தெரியும்டா..ஆனா அவரும் பாவம் தானே..நீ புத்திசாலிப் பையன் புரிஞ்சுக்குவ தானே " அவனும் பூம் பூம் மாடென தலையாட்டினான்..
மரகதமும் ராஜூவும் அங்கிருக்க,
" இங்கப் பாருங்க.. யாரையும் குத்தம் சொல்ற அளவுக்கு நானும் தியாகி கிடையாது..நானும் நிறைய தப்பு பண்ணியிருக்கேன்..அதுனால யாரும் யாருகிட்டயும் மன்னிப்பு கேட்க வேணா..சாட்சியும் சந்தர்ப்பமும் எதிரா அமைஞ்சதால தான் எல்லோரும் தவறான முடிவ எடுக்க வேண்டியதா போயிடிச்சுனு எனக்கும் புரியுது.. ஆனா அதுக்காக என்னையும் என் கணவரையும் இதுக்கு மேல வற்புறுத்தாதீங்க..ஏதும் பண்டிகை விசேசம்னா எப்பவும்போல ஒன்னா இருக்கலாம்..கொண்டாடலாம்..ஆனா எல்லோரும் ஒரே வீட்ல இருக்கறன்னு சொல்றது நிஜத்துல ஒத்து வராது..
.நானும் சுயநலவாதியா இருக்கேனு நினைச்சாலும் பரவாலை..இதுதான் என் கணவருக்கு நான் கொடுக்கற மரியாதை..என்னை யாரும் கோவிச்சிக்க வேண்டாம்.." எனும்போது வாசுவும் உதயனும் சண்முகத்தோடு உள்ளே வந்தனர்..
அவள் மனைவியாய் பேசிட, இவன் கணவனாய் பேச ஆரம்பித்தான்..
" இல்ல பாஹீ.. உண்மையா நாமதான் அவுங்களுக்கு கடமை பட்ருக்கோம்.. அத்தைக்கு ஆரம்பத்துல இருந்தே என்னை பிடிக்காது காரணம்..நான் வேலைக் காரன்ங்கறது தான்.. அது அவுங்களோட சுபாவம்..இதுல அவுங்க தப்பு இல்லையே..ஆனா ராஜூ..
ராஜூ இடத்துல ரகுபதி மாறி ஆள் இருந்தா என்ன ஆகிருக்கும்..
ஆண் துணை இல்லாத உங்க அத்தனை பேரையும் வெளிய துரத்திட்டு மொத்த சொத்துக்களையும் அனுபவிச்சிருப்பான்..ஆனா அவர் அப்படி பண்ணலயே..
விச்சுவுக்கும் தயாவுக்கும் ஒரு கார்டியனா இருந்து உங்க சொத்துக்களையும் அவர்தான பராமறிச்சிட்டு வந்தாரு..அவர் இல்லைனா நீ மட்டும் தனியா என்ன பண்ணியிருக்க முடியும்..
அவர் உங்களையும் பார்த்துக்கிட்டு அவரோட மனைவி பிள்ளைன்னு எல்லாத்தையும் சரிசமமாதான பார்த்துக்கிட்டு இருந்தாரு..
சிந்தாமணி தங்கச்சி மட்டும் கொஞ்சம் கெட்டவங்களா இருந்திருந்தாங்கனா
இப்படி நாத்தனார் குடும்பத்தை வீட்டுல தங்க வைக்க சம்மதிச்சிருப்பாங்களா..
எல்லாருமே நல்லவங்க தான் பாஹீ..
தேவையான இடத்துல அமைதியா இருக்கறப்பவும்..தேவையே இல்லாத சமயத்துல வாயைக் கொடுத்து புண்ணாக்கிக்கிறதுல தான் எல்லாமே தப்பா போயிடுது..
அப்படி பார்த்தா
நான் மட்டும் அப்போ ஊர் வம்புக்கு போகாம அமைதியா இருந்துருந்தா எந்தப் பிரச்சனையும் இல்லாம போயிருக்கும்ல.. அந்த மாறிதான்..
எல்லாமே பார்க்கற பார்வைல தான் இருக்குது.. இதைப் புரிஞ்சிக்கவே எனக்கு இத்தனை வருசம் ஆயிடுச்சு..இதை நீயும் புாிஞ்சிக்கமா " என்று அவனது நீண்ட உரையை முடிக்க,
அங்கே சண்முகனும் விசாகனும் தூங்கி வழிந்தனர்..
" அப்பா அப்போ நீங்க இங்க இருக்க சம்மதிக்கிறீங்களா " உதயன் அப்பாவியாய் கேட்டு வைக்க,
" நான் அவுங்க மேல தப்பில்லன்னு தான சொன்னேனே ஒழிய இங்க தங்குவேன்னு சொல்லவே இல்லையே..என் பொண்டாட்டி என்ன சொல்றாளோ.அததான நான் கேட்க முடியும்.. எனக்கு எது நன்மையோ அதை மட்டுந்தான் அவ செய்வா..பாஹீ மேல எனக்கு நம்பிக்கை இருக்கு..நல்ல முடிவாதான் எடுப்பா.." என வாசு பாஹீயிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டுச் செல்ல,
விசாகன் தான் ' மாமாவ கூட சமாளிச்சிடலாம் .ஆனா அத்தைய.. ஹூஹூம்.. பார்வையே பயங்கரமா இருக்கே.. ஹூம்..
எங்கூட இருக்கறதாவது உருப்படியா இருக்கா.. ஒன்னு பயந்து சாகுது..இன்னொன்னு நேர்மைன்னு பேசியே சாவடிக்குது..கடைசியா ரெண்டும் பேசியே கொல்லுது..இதுங்கள வெச்சு நான் எப்படி ஜெயிக்க.. பகவானே ' என மண்டைக்குள் ரோகிணி..உதயன்.. நதியா சண்முகனை வறுத்தெடுத்தவன்
தன்னை ஏளனமாய் பார்க்கும் தனது அணியினரையும் பொருட்படுத்தாது
அடுத்த பிளானிற்கும் தயாரானான்..
மும்பை:
ஒரு நடுத்தர வர்க்கத்தின் அடுக்குமாடி குடியிருப்பின் நுழைவு வாயிலில் அந்த ஜீவனின் கால்களே அவனை நோக்கி ' உன்னோடு நானிருக்க, இன்னும் எவ்வளவு நேரம் வலியைத் தாங்குவேனோ..எப்போது உடைந்து விடுவேனோ ' என்று கேள்வி கேட்கும் வகையில் நின்றே தன் பொழுதைக் கழித்துக் கொண்டு இருந்தான் தேவா..
பள்ளி செல்லும் மழலைச் செல்வம் தொடங்கி கூர்க்கா வரை அவனை பாவமாகப் பார்த்துச் செல்ல, அவனுக்கு சொந்தமான இரண்டு ஜீவன்கள் கண்டும் காணாது தங்கள் பணிகளைச் செய்து கொண்டிருந்தனர்..
அவனது உடையும் முகத்தில் இருக்கும் கம்பீரம் மட்டுமே அவனை இதுவரை பைத்தியக்காரன் என்ற பட்டத்தை அவன் வாங்காது பார்த்துக் கொண்டது.. இல்லையேல் என்றோ அவன் கேலி பொருளாக மாறியிருப்பான் அந்தத் தெருவில் உள்ளோருக்கு..
ராஜியைப் பற்றி அரைகுறையாக தெரிந்தவர்கள் விவாகரத்து வாங்கிய இத்தனை வருடங்கள் கழித்து தன் பிள்ளையையும் மனைவியையும் அழைத்துச் செல்ல ராஜியின் கணவர் வந்திருக்கிறார் என்றுதான் நினைத்துக் கொண்டனர்.
காலையில் ராஜி பணி புரியும் தனியார் பள்ளியில் காவல் காப்பவன் மதியத்திலிருந்து தீரனின் கல்லூரிக்குச் சென்று விடுவான்..இரவிலிருந்து காலை வரை குடியிருப்பின் காவலாளிக்கே ஓய்வு கொடுக்கும் வகையில் நின்றே சளித்து விடுவான்.. அவனை யார் கேள்வி கேட்க முடியும்.. ராஜி பணி புரியும் பள்ளியும் தீரனது கல்லூரியையும் அவன் மும்பை வந்த நாளே வாங்கிவிட்டானே..
அன்றும் அப்படித்தான் இரவு நுழைவாயிலில் நின்று கொண்டிருந்தான்.. தீடிரென கருக்கிய வானம் அடைமழை போல வெளுத்து வாங்கத் துவங்கியது..
ராஜி மாத்திரை வீரியத்தில் தூங்கியிருக்க, தீரன் மட்டுமே முழித்திருந்தான்..
கூர்க்கா தேவாவை அழைத்தும் கொட்டும் மழையில் பல்லைக் கடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான்..எங்கே ராஜி மனமாறி தன்னை அழைத்து விடுவாளோ என்கிற நட்பாசையில் அசையாது நின்றிருந்தான்.
வருண பகவானும் வாயு பகவானும் போட்டி போட்டிக் கொண்டு அவனை சோதித்தனர்.. ஆனால் அவனது மனையாளோ ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறாள் என அவனுக்கு எப்படித் தெரியும்..
பொறுத்துப் பொறுத்து பார்த்த தீரன் இரண்டு குடையோடு வெளியே வந்தான்..
அவன் முரைத்த முரைப்பில், தானே இன்னொரு குடையை வாங்கிக் கொள்ள,
"உள்ள வாங்க " என்ற மந்திர வார்த்தைக்கு கட்டுண்டவனாய் வீட்டிற்குள் வந்தான் முதன்முறையாக..
சிரித்த முகத்தோடு இருந்த ராஜி தீரனின் புகைப்படங்களே சுவரெங்கும் நிறைந்திருந்தன.. அதனையே விழி அகற்றாது பார்த்துக் கொண்டிருக்க,
அவன்மேல் ஒரு துண்டு பறந்து வந்து விழுந்தது..
" வாஸ் ரூம் அந்தப் பக்கம்.. டிரெஸ் எடுத்து வெச்சிருக்கேன்.. "
கடுகடுவென முகத்தை வைத்துக் கொண்டு அவன் சொல்ல, தேவாவிற்கோ ' சீக்கிரம் தலைய துவட்டுங்க.. சளி பிடிச்சிக்கும்.. ஈரத்துணிய மாத்துங்க.. அப்போதான் காய்ச்சல் வராது ' என்று அக்கரையை மறைத்து கூறியதைப் போல இருந்தது..
குளிருக்கு இதமாக தீரன் போட்டு வைத்திருந்த சுடுதண்ணீரில் குளித்து வந்தவன் அவன் எடுத்த வைத்த தீரனது தொளதொள இரவு உடையை அணிந்து வந்தான்.. வேகமாக அவன் பெருமூச்சு விட்டாலே உடை கிழிந்துவிடும் அளவிற்கு அவனது முறுக்கேறிய உடம்பில் இறுக்கமாக பொருந்தியிருந்தது அந்த உடை..
அதனைக் கூட சகித்துக் கொண்டிருப்பான் அவன்..ஆனால்
மிக்கி மவுஸ் போட்டிருந்த அந்த கிளிப்பச்சை நிற மேல் சட்டையும் பிங்க் கலர் பேண்டையும் தான் அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை.. கண்ணாடியில் அவனைப் பார்த்து அவனே சிரித்து விட்டுத் தான் வெளியே வந்தான்.. பாவிமகன் இன்று கல்லூரியில் அவனைத் தன்மகன்
என்று கல்லூரி முதல்வரிடம் கூறியதற்கு இப்படி பழி வாங்கிவிட்டான் போலும்..
அவனது கோபத்தில் சிறுபிள்ளைத் தனமே மேலோங்கியிருந்தது.. தேவாவை பார்த்து எழும் சிரிப்பை அடக்கியவன், உணவு மேசையின் நாற்காலியை வேகமாக இழுக்க, அதனை புரிந்து கொண்டவன் சாப்பிட அமர்ந்தான்..
தட்டில் சுடச்சுட மேகி நூடுல்ஸ் அள்ளி வைக்கப்பட்டது..
ஆண்பையன் தனக்குத் தெரிந்த சமையலை அவன் குளிப்பதற்குள் செய்து வைத்திருந்தான்.. இதில் என்ன கலந்து வைத்திருக்கானோ என பயந்து சாப்பிட ஆரம்பித்தவனுக்கு பசியின் அருமையும் உணவின் சுவையும் தெரிய வேகவேகமாக விழுங்க ஆரம்பித்தான்..
சாதாரண மேகி கூட இவ்வளவு சுவையாக இருக்குமோ என்பதை இன்றுதான் தெரிந்து கொண்டான் அவன்..
அவன் சாப்பிட்ட வேகத்தை வைத்தே அவனது பசியை புரிந்து கொண்டவன் வேகமாக இரண்டு ஆம்லெட்கள் செய்து அதனையும் தேவாவின் தட்டில் வைத்தான். வயிரோடு மனதும் நிறைந்தது தேவாவிற்கு..
இத்தனை வருடங்களில்
அவனுக்கு சேவகம் செய்ய ஆயிரம் பேர் இருந்தாலும்
அவன் பசியறிந்து உணவினைப் பரிமாறி உணவுண்ண வைத்தவன் தீரன் மட்டுமே.. பேரும் புகழையும் வைத்து என்ன செய்ய? தனக்காய் காத்திருக்கும் ஒரு உறவு வேண்டாமா?
கண்ணில் அவனையே அறியாமல் பூத்தது கண்ணீர் மொட்டு..
இரண்டு படுக்கையறைகள் கொண்ட அந்த வீட்டில் ராஜி ஒரு அறையில் படுத்திருக்க, தேவாவிற்கு தனதறையைக் கொடுத்தான் தீரன்...
" இதெல்லாம் பார்த்து உங்கள ஏத்துக்கிட்டேனு நினைக்க வேணாம்..ஏதோ மழைல நனையறீங்களேன்னு தான் பாவம் பார்த்தேன்.. நீங்க காலைல அம்மா எழறதுக்குள்ள வெளிய போயிருக்கனும் "
என்றவன் முகத்தை போர்வையால் மூடி படுத்துக் கொண்டான்..
அவனது அருகே படுத்த தேவாவிற்கு அவனை நினைத்து பூரிப்பாக இருந்தது.. அவன் நினைத்தால் ஹாலில் உள்ள சிறிய ஸோபாவில் இவனைப் படுக்கச் சொல்லியிருக்க முடியும்..ஆனால் அது அசௌகரியமாக
இருக்கும் என்ற காரணத்தால்தான் தனதறையை கொடுத்திருக்கிறான் என நினைத்துக் கொண்டான்.
ராஜி தனியாக பிள்ளையை வளர்த்தும் அவனை தீரனாக, ஒழுக்க சீலனாக வளர்த்திருக்கிறாள் என்று அவனது கல்லூரி முதல்வரிடமிருந்து தெரிந்து கொண்டவன் குணத்திலும் சிறந்தவனாக இருக்கிறான் என்பதைத் தானே கண்கூடாக பார்த்து தெரிந்து கொண்டான்.. ஆழ்ந்து உறங்கும் தீரனையே பார்த்துக் கொண்டிருந்தவனின் மீது தூக்கத்தில் கையையும் காலையும் போட்டவன் ஆழ்ந்து தூங்க, தேவாவிற்கு போரில் வெற்றி பெற்ற மகிழ்ச்சி.. நீண்ட நாட்களுக்குப் பிறகு நிம்மதியாக துயில் கொண்டான்..
அதிகாலையில் தூக்கம் கலைந்து எழுந்த ராஜி மழை வந்திருப்பதை உணர, பதறியடித்துக் கொண்டு சன்னல் வழியாக வாயிலைப் பார்க்க, தேவா எப்பொழுதும் நின்றிருக்கும் இடம் காலியாக இருந்ததைப் பார்த்து நிம்மதியடைந்தாளா பயம் கொண்டாளா என்று தெரியவில்லை..
மனம் எதையோ உறுத்த தீரனுக்கு பூஸ்ட் கலக்கிக் கொண்டு அவனது அறைக்குள் நுழைய, அவள் கண்டது தேவாவின் மீது குப்புறப் படுத்துத் தூங்கும் தீரனைத் தான்.. ஏனோ அந்தக் காட்சியில் அவளது மன உறுத்தல் மறைந்தது..
அவர்களை எழுப்பாது சமையல் வேலையை ஆரம்பிக்க, ஏழு மணிக்கு எழுந்த இருவரும் பதறியடித்துக் கொண்டு வெளியே வர, ஹாலில் அவர்களுக்காகவே காத்திருந்தது போல, அமர்ந்திருந்தாள் ராஜி..
தலைகுனிந்து இருவரும் நிற்க, அவர்கள் நிற்கும் நிலையை கண்டு சத்தியமாகத் திட்ட தோன்றவில்லை அவளுக்கு.. தேவாவை கோட் சூட்டிலும் பார்மல் டிரெஸ்ஸிலும் பார்த்திருந்த ராஜிக்கு இந்த இரவு உடை சிரிப்பை வரவைத்திருந்தது..
சுவர்க் கடிகாரத்தை பார்த்தவள் " இன்னும் பத்து நிமிசத்துல குளிச்சு கிளம்பி வந்திருக்கனும் " என்க, அலறி அடித்துக் கொண்டு ஆளுக்கொரு குளியலைறைக்குள் புகுந்து கொண்டனர்..
இரவு துவைத்துப் போட்டிருந்த தேவாவின் உடை நல்லவேளை காய்ந்திருந்ததால் ஏனோ இன்று தப்பித்திருந்தான்.
பத்தே நிமிடத்தில் தேவா வர, அவனுக்குப் பின்னே ஐந்து நிமிடங்கள் கழித்து ஆடி அசைந்தே தீரன் வந்து சேர்ந்தான்.. ஐந்து நிமிட தாமதத்திற்கு அவன் ஐம்பது நிமிட தோப்புக் கரணம் போட்ட பின்னரே ராஜியின் அருகே வந்து நின்றான்.. தவறு செய்யும்போதே தண்டனைகள் கொடுக்கப் பட்டால் தானே அடுத்த தடவை சரியாக நடந்து கொள்வான் என்ற ராஜியின் தண்டனையை பார்த்த பின்னர், தான் செய்த குற்றத்திற்கு எத்தனை மணி நேரம் அவன் தோப்புக் கரணம் போட.. மலைப்பாய் போனது அவனுக்கு..
" எத்தனை நாளா நடக்குது இந்த திருட்டுத் தனம்"
கேள்வி தீரனிடம் இருக்க பார்வை தேவாவிடம் இருந்தது..
" மாம் "
" ஷட்டப் தீரா.. யாரக் கேட்டு அவர உள்ள விட்ட.. அக்கம் பக்கத்துல இருக்கவங்க என்ன நினைப்பாங்க.. "
"மாம் சாரி மாம் ..அவர பார்க்க பாவமா இருந்துச்சு.. "
தலை குனிந்து கொண்டான் அவன்..
அடுத்து தேவாவைப் பார்த்தவள்
" உங்களுக்கு நான் என்னனு சொல்லி புரிய வைக்கறது..எதுக்கு இங்க இருந்து கஷ்டப்படுறீங்க.. சரி கண்டுக்காம இருந்தா போயிருவீங்கனு நினைச்சா இப்போ இந்த சின்னப் பையன கூட்டு சேர்ந்துட்டு நாடகமாடிட்டு இருக்கிங்க.. எனக்குனு இருக்கறது அவன் ஒருத்தன் தான்.. அவனையும் எங்கிட்டருந்து பிரிக்க பார்க்கறீங்க.. " கோபமாய் ஆரம்பித்து அழுகையாய் முடித்தாள்..
" மாம் " என தீரன் ராஜியை அணைத்துக் கொள்ள, தேவாவோ விக்கினாற் போல நின்று கொண்டிருந்தான்..
" ராஜி..நான் உங்கள்ள ஒருத்தனா இருக்க ஆசைப்பட்டேன்தான்..ஆனா உங்களப் பிரிக்க நினைக்கவே இல்ல ராஜி..என்னால உங்களுக்குள்ள சண்டை வேணா.. நான் கிளம்பிடறேன் . எனக்கும் குடும்பத்துக்கும் ராசியே இல்லை..கடைசி வரை நான் தனியா இருக்கனும்னு கடவுள் நினைச்சிட்டார் போல.. நீ இருக்கற இந்த வீட்ல தங்குன இந்த ஒரு நாளே போதும் என் ஆயுசுக்கும் " என்றவன் அவ்வீட்டை விட்டு வெளியே சென்றான்..
மனம் வலித்தது ராஜிக்கு..
அவனைப் பார்க்க பாவமாக இருந்தது..
தண்டனை அவர்கள் செய்த தவறுக்கு தருவதில்லை.. செய்த தவறினைப் புரிந்து மனம் திருந்துவதற்குத் தான்..
மனதாற திருந்திய அவனுக்கு தண்டனைதான் எதற்கு..
அவளை எது தடுக்கிறது..
தீரன்மீது கொண்ட பாசமா?
இல்லையே..
அவர்கள் இருவரையும் பார்த்த பிறகு, அவர்களது நெருக்கத்தையும் புரிதலையும் பார்த்த பிறகு,
அவர்கள் என்றும் சேர்ந்திருந்தால் எவ்வளவு ஆனந்தமாக இருக்கும் என்றல்லவா யோசித்துக் கொண்டிருந்தாள்..
நொடிப் பொழுதில் கிளம்பி விட்டானே அவன்..
இனி அவ்வளவு தானா..அவன் முயற்சி..
தீரன் கூறும் சமாதனப் பேச்சுகளை காதில் வாங்காதவள் பள்ளிக்கு
செல்ல தயாராகி வெளியே வர, வாயிலில் அதே இடத்தில் அதே எதிர்ப்பார்ப்போடு அதே காதலோடு நின்று கொண்டிருந்தான் தேவா..
நான் ஒதுங்கித்தான் போகிறேன்..
மொத்தமாய் விலகியில்லை என சொல்லாமல் சொல்லிவிட்டான்.
அவள் நடக்க, அவனும் பின்னே நடந்து வந்தான்.. திடீரென அவள் திரும்ப,ஒரு நொடி ஸ்தம்பித்தவன் அவனும் அவளைப் போல பின்னாடி திரும்பி நிற்க, அவர்களைப் பின் தொடர்ந்து வந்த தீரன் தான் தலையலடித்துக் கொண்டான்...
மூவரும் நேர்க்கோட்டில் நின்றிருக்க, ராஜிதான் எட்டிப் பார்த்து தீரனையும் முரைத்தாள்.. அவனும் 'ப்ளீஸ் மாம்' எனக் கெஞ்ச, மனம் இளகி சிரித்து விட்டாள் அவள்..
அவனும் சந்தோசமாக தேவாவைப் பார்க்க தேவாவோ ராஜியின் மீதுள்ள பயத்தில் கண்களை மூடி நின்றிருந்தான்..
( ஏங்க தேவா சார்..பர்ஸ்ட் இருபது அப்டேட்டா உனக்கு கொடுத்த பில்டெப் என்ன..நீ பண்ணிக்கிட்டு இருக்கிறது என்ன.. அவனவன் வொய்ப் வந்தா பொட்டி பாம்பா அடங்கிட்டீங்கனா நான் என்ன பண்ணறது )
இனி என்னப்பா அவுங்களுக்குள்ள சமாதானம் ஆயிடுச்சு.. இனி அவனாச்சு..அவன் பொண்டாட்டி ஆச்சு.. அவன் புள்ளையாச்சு.. தேவா இத்தனை வருசம் ஆசைப்பட்ட குடும்பமாயிடுச்சு..
ராஜி சமாதானம் ஆன அந்தன்னைக்கே மிஸ்டர் அன்ட் மிஸ்ஸஸ் கே.எஸ்.ஆர் வித் தெயர் சன் மிஸ்டர் தீரன் என்ற வாசகமும் அவர்களின் புகைப்படமே இந்தியாவின் அனைத்து செய்தித் தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டிருந்தது..
ராஜிக்கு அன்று கொடுக்கப்படாத மனைவி என்ற அந்தஸ்தை இன்று உலகறியச் செய்து விட்டான் தேவா.. ..
(அடுத்த பகுதியில் விசாகன் ரோகிணி திருமணம்..எல்லாரும் மறக்காம வந்துடுங்க..மொய் விருந்துதான் மறக்காம துட்டு எடுத்துட்டு வாங்க)
முடிந்தளவு எல்லோரும் பத்திரமா இருங்கப்பா..வருமுன் காப்பதே சிறந்தது.. உங்க முன்னாடி யாரும் மாஸ்க் போடாம இருந்தா போட சொல்லுங்க.. அடிக்கடி கை கழுவுங்க..
ஹாஸ்பிடல்க்கு தேவைனா மட்டும் போங்க..அங்கையும் 200 % ரொம்ப முன்னெச்சிரிக்கையா இருங்க..அங்கதான் ஈசியா பரவும்..
Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz