ZingTruyen.Xyz

என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)

2.என்னை மறந்தாயோ கண்ணம்மா

Nivethamagathi

இரவு உணவை உண்டு விட்டு தனதறைக்கு செல்ல எத்தனிக்கும் போது சமையல் வேலை செய்யும் வாணி அவனருகே தயங்கிய வண்ணம் வந்து நின்றாள்.

" என்னக்கா எதும் வேணுமா " எனத் தன்மையாக கேட்க,

" விசுத் தம்பி.. சாயங்காலம் நீங்க கூட்டி வந்த பொண்ணு சாப்பிடாம அழுதுகிட்டே இருக்கு தம்பி.. அம்மா அந்தப் பொண்ண சாப்பிட வைக்கறது என் பொறுப்புன்னு சொல்லிட்டாங்க.. ஆனா அது கேட்க மாட்டிங்குது.. அம்மாக்கு தெரிஞ்சா என்னதான் திட்டுவாங்க தம்பி"

" வாணிக்கா..நான் பார்த்துக்குறேன்.. நீங்க சாப்பாட மட்டும் கொண்டு வந்து கொடுங்க" என்றவன் ரோகிணியை அடைத்து வைத்திருக்கும் அறைக்குச் சென்றான்.

அந்த அறையில் மின்விசிறியைக் கூட இயக்காது சன்னல்களும் அடைக்கப்பட்டு  காற்றோட்டமே இல்லாது இருந்தது.. அறையின் மூலையில் சுவற்றில் சாய்ந்தவாறு கண்கள் மூடி அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர் வந்த வண்ணம் இருந்தது.. அவள் தேம்பக் கூட இல்லை.. ஆனால் கண்ணீர் நிற்காமல் வந்து கொண்டே இருந்தது.

ரோகிணி..

அதிர்ந்து பேசத் தெரியாதவள்.

அதட்டி பேசினாலே அழுதுவிடும் இரகம்.

தேவாவின் பெண்ணா இவள் என்று இந்த இரண்டு மாதத்தில் பலமுறை எண்ணி  வியந்துள்ளான்.

இளகிய மனம் கொண்டவளை தனது சுயநலத்திற்காக காயப்படுத்துவது வருத்தமாக இருந்தாலும் அவள் தந்தைக்கு பாடம் புகட்ட இவளை வறுத்தித்தான் ஆக வேண்டும் என்பதால் பேச்சுக் கொடுத்தான்.

" ரோகிணி..".

அவன் குரலைக் கேட்டதும் அவளது உடல் ஒரு நொடி அதிர்ந்து நடுங்கியது.

" நாங்க கெட்டவங்க கிடையாது.. உங்க அப்பா உனக்கு நல்லவரா இருக்கலாம்.. ஆனா அவர் பல கொலைகள் பண்ணியிருக்காரு.. அதுக்கான ஆதாரங்கள் கிடைச்சா கண்டிப்பா தூக்கு தண்டனை கூட அவருக்கு கிடைக்க வாய்ப்பிருக்கு..அவர பிடிக்கத்தான் உன்னை கடத்த வேண்டியதா போயிடிச்சு.நாங்க சொல்றத கேட்டா உன் பிரண்ட்யும் உன்னையும் விட்டறோம்..

அவரோட தண்டனைய குறைக்க சொல்லி கேட்கறோம்.. நாங்க சொல்றத கேட்கறீயா" என்றவன் அத்துடன் அவர் செய்த குற்றங்களைப் பற்றிக் கூறினான்..

" எங்க ஆளுங்க அவரப் பார்த்த உடனே கொல்ல தயாரா இருக்காங்க.. ஆனா நாங்க வேணா" என்று சொல்லும் போதே இதுவரை அழுது கொண்டிருந்தவளின் உதட்டில் வெற்றுப் புன்னகை உதயமானது.. அது எங்கப்பாவை உங்களால் வெட்ட முடியுமா என்று ஏளனமாக கேட்டது போல அவனுக்குத் தோன்றியது..

கோபத்தில் அவளை அடிக்க கையோங்கிவன் வாணி கதவைத் திறக்கும் சத்தம் கேட்டு கையை கீழே போட்டான்.. உணவுத் தட்டை வாங்கியவன் அவரை போக சொல்லி விட்டு " இந்தா சாப்பிடு " என தட்டை அவளருகே கொண்டு சென்றான்..

அவன் நின்றவாறு தட்டை தரையில் அமர்ந்தவளிடம் நீட்டி
"தட்டை வாங்கு "என்று அவன் அதட்டியதையும் பொருட்படுத்தாமல் அவள் அமைதியாக இருக்க, இதுவரை அவன் கட்டிக் காத்த பொறுமை காற்றில் பறந்தது..

" உம்மனசுல மகாராணின்னு நினைப்போ.. " என அதட்டியவன் அவள் கைப்பிடித்து எழுந்து நிற்க வைத்து தட்டைக் கையில் கொடுக்க, அந்தத் தட்டை தட்டி விட்டவள்
" எங்கப்பா கண்டிப்பா கெட்டவரா இருக்க மாட்டாங்க.. அவர நீங்க வெறுக்கறீங்கனா அப்போ நீங்க தான் கெட்டவங்க.. எங்கப்பாவோட விரோதி வீட்டுல பச்சத்தண்ணீ கூட நான் குடிக்க மாட்டேன்..உன் வீரத்தைலாம் நாளைக்கு என்னை கூட்டுட்டு போக வருவாரே எங்கப்பா அவர் கி்ட்ட காட்டு.. இப்போ இங்கிருந்து போ..எங்கப்பாவ பத்தி தப்பா சொன்னவன் எவனோட கருணையும் எனக்கு வேணா.. " என்று பத்ரகாளியாய் முழங்கியவள் அமைதியாக மீண்டும் தரையில் அமர்ந்து கொண்டாள்.

இந்தப் பெண்ணையா தான் சாது என்று நினைத்தோம் என தன்னையே திட்டிக் கொண்டவன் தனது முழுக்கோபத்தையும் அவளிடம் காட்டும் விதத்தில் காட்டி  தனக்கு தேவையான பதில் வந்த பின்னரே அந்த அறையை விட்டுச் சென்றான்


💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

தனது அலுவலக பணியை முடித்து விட்டு வேகவேகமாக தோட்டத்திற்கு வந்து சேர்ந்த உதயன் கதவைத் தட்ட, அது திறக்கப்படவில்லை.. இவ்வாறு நடக்கும் என்பதை அவன் யூகித்துதான் வைத்திருந்தான். அங்கிருக்கும் நபர்கள் யாருக்கும் தெரியாத இன்னொரு கதவு பின்புறம் இருந்ததால் அதன்வழி சென்றுவிடலாம் என பின்கட்டை நெருங்க.. அங்கே வீட்டின் பின்புற சன்னல் வழியாக கயிற்றைக் கட்டி வெளியே குதித்து பாதி உயரத்தில் தூரி போல ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தாள் உத்ரா.. கொஞ்சம் தவறி கீழே விழுந்தாலும் கீழே கொட்டியிருக்கும் கண்ணாடி சில்லுகள் மேனியை நாறு நாறாக கிழித்துவிடும்..

அவள் செய்கையால் தலையிலடித்துக் கொண்டவன்  அறக்கப்பறக்க மாடியேறி கயிற்றைப் பிடித்து இழுத்து அவளை மேலே தூக்கினான்..

பயத்தில் அரண்டு போயிருந்தவளை இன்னும் சோதிக்காமல் " ஏங்க .உங்க கி்ட்ட சொல்லிட்டுதான போனேன்..தப்பிக்க எந்த முயற்சியும் எடுக்காதீங்கனு.. நான் இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு வந்திருந்தா உங்க நிலைமை என்ன.. நீங்க இந்த வீட்டுக்குள்ள இருக்குற வரைதான் உங்களுக்குப் பாதுகாப்பு.. இந்த தோட்டத்த சுத்தி பத்து கிலோ மீட்டருக்கு எந்த ஆள் நடமாட்டமும் வாகன வசதியும் இருக்காது.. நைட் நேரத்துல தனியா போயி எதாச்சும் ஆகிருந்தா " என அதட்ட

' ஹான்..அதான் ஆள் நடமாட்டம் இல்லைன்னு சொல்லிட்டீங்களே அப்ரோ எந்த ஆபத்து வரப் போகுது' என முணுமுணக்க, அந்த முனகல் அவன் காதில் நன்றாக கேட்டது.

அவளைத் திட்டக் கூடாது என்று பல்லைக் கடித்தவன் மேசையில் இருந்த தனது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான்.

அடுத்த நாள் காலை பல திருப்பத்தை தருவதற்காக அழகாக விடிந்தது..

தனக்குத் தேவையான காபி கலந்து கொள்ள வந்த உத்ரா நாற்காலியில் அமர்ந்தவாறு உறங்கிக் கொண்டிருந்த உதயனுக்கும் கலந்திவிட்டு அவனை தட்டி எழுப்பினாள்..

தூக்கம் கலைந்த எழுந்தவன் உத்ராவின் செயலை ஆச்சர்யத்தோடு பார்க்கவும்,

" கவலைப்படாதீங்க உதயன் சார்..விசம்லாம் கலக்கல..தைரியமா குடிங்க..நீங்க ஏதோ இக்கட்டான சூழ்நிலையிலதான் இப்படி நடந்துக்கறீங்கனு தெரியுது.. அதான் உங்கள கஷ்டப்படுத்த விரும்பல " என்றவள் காபியை நீட்ட, உத்ரா தன்னை தவறாக நினைக்கவில்லை என்பதை அறிந்து உற்சாகத்துடன் முகம் கழுவி வந்து காபியைக் குடித்தான்.

அதனை குடித்து முடிப்பதற்கு முன்னரே அவளை எதற்காக கடத்தியிருக்கிறோம் என்பதையும் கூறி அவளிடம் மன்னிப்பை வேண்டினான்..

அவன் அதை குடித்து முடிக்கும் வரை அவளும் குடிப்பது போல நடித்துக் கொண்டிருந்தவள் அவன்கூறும் உண்மையை கண்டு அதிர்ந்து போனாள்.. அவசரப்பட்டு காபியில் அங்கே மறைத்து வைத்திருந்த பூச்சி மருந்தை கலந்ததை எண்ணி நொருங்கிப் போனாள். அவனை மருத்துவமனைக்கு கூட்டி செல்லும் போது தான் தப்பித்து விடலாம் என்று எண்ணி அவள் போட்ட திட்டம் அவன் உயிரினை எடுக்கப் போகிறது.

உதயனிற்கு கண்கள் சுழன்று, நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கீழே விழுந்தான். கதவைத் திறந்து வெளியே இருப்பவர்களை உதவிக்கு அழைக்கலாம் என்றால் கதவு வெளிப்புறமாக அடைக்கப்பட்டிருந்தது.. அவள் கத்தி அழைத்தும் யாரும் உதவிக்கு வரவில்லை.. பயந்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தநேரம் கதவு திறக்கப்பட்டது.

💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

ஈஸ்வரி இல்லத்தில்,
அனைவரும் காலை உணவுக்காக உணவு மேசையில் வீற்றிருந்தனர்.

தனதறையில் இருந்து ஈஸ்வரி வந்ததும் மரியாதை நிமத்தமாக மரகதத்தைத் தவிர மற்றவர்கள் எழுந்து நின்று வணக்கம் செலுத்திய பின்னர் உணவுண்ண தொடங்கினர்..

யாரும் பேசாமல் உணவினை உண்ட பின் அவர் அவர்கள் வேலையைப் பார்க்க சென்றுவிட, ஈஸ்வரி விசாகனை நோக்கி " உதயன் எதாச்சும் போன் பண்ணானா விசு.. கால் பண்ணா ரீச் ஆகல.. மனசு வேற கஷ்டமா இருக்கு.. வீட்டுக்கு தேவையான காவல் போட்டாச்சுதான.. இந்தத் தடவை எந்த உயிர் போகறதையும் தாங்குற சக்தி எனக்கு இல்லை " என தாழ்ந்த குரலில் கூற, அவன் பதிலளிக்கும் முன்னமே நாகராஜ்,

" அக்கா இந்த முறை அவன் உயிரோட இந்த இடத்தை விட்டு போக முடியாது.. காவலுக்கு  பலமான ஆள ரெடி பண்ணிட்டேன் " எனும்போது ஈஸ்வரியின் முகத்தில் தெரியும் ரௌத்திரம் கண்டு நடுங்கிப் போனார் நாகராஜன். அந்த ஒரு நொடி

இருபத்தியொரு வருடங்களுக்கு முன்பிருந்த பாஹேஷ்வரி வந்து போனார்.

இதனை விசாகன் கவனித்தாலும் அதனைக் காட்டிக் கொள்ளாமல்

" அத்தை உதயன் இருக்குற ஏரியால சிக்னல் வீக்.. அதான் கால் ரீச் ஆகல.." என்றவன் நம்ம வீட்டுக்கு புல் செக்கியூரிட்டி கொடுத்துருக்கேன்.. அதை மீறி ஒரு ஈ எறும்பு கூட உள்ள வர முடியாது எனும் போதே வாசலில் காவலுக்கு நிறுத்தியிருந்த அடியாள் ஒருவன் பறந்து வந்து விசாகனின் காலடியில் விழுந்தான்.

அவன் உடலில் எந்தக்  காயமும் இல்லை..ஆனால் மூர்ச்சையுற்றிருந்தான்.

அடியாளின் நிலையை வைத்தே வந்தது தேவாதான் என்பதை அறிந்தனர் ஈஸ்வரியும் நாகராஜனும். விசாகன் என்ன நடந்தது என்று புரியாமல் வாசல் வந்து பார்க்க, அங்கு அவன் காவலாளிகள் அத்தனை பேரும் மயங்கி கீழே கடந்தனர்.

வாசற்கதவுக்கு நேராக தூக்கி மடித்துக் கட்டப்பட்ட வேட்டி சட்டையில் ஒற்றைக் கையில் வீச்சருவாளை வைத்துக் கொண்டு ருத்ரமூர்த்தியாக நின்றிருந்தான் தேவா..தேவாவை விசாகனும் இன்றுதான் நேரில் பார்க்கிறான்.. நாப்பதுகளின் பின்னிறுதியில், கண்கள் செஞ்சாற்றைப் பூசியது போல அந்த கதிரவனுக்கு போட்டியாக இருக்க,

கையில் அருவாளுடன்  சீறும் வேங்கையினைப் போல நின்றிருந்தவனைப் பார்க்க அவனது குல  தெய்வம் கருப்பணனை நேரில் பார்ப்பதைப் போல இருந்தது..

" பாஹேஸ்வரி " என்ற தேவாவின் கத்தலில்

சர்வமும் அடங்கி போனது அனைவருக்கும்..

" எங்க என் மக.. இந்தப் பாவப்பட்ட வீட்டுல அவ நிழல் கூட படக்கூடாதுன்னு தான அவ பொறக்கும் முன்னாடியே ராஜியும் நானும் இந்த வீட்டை விட்டு போனாம்.. எந்த தைரியத்துல அவள இங்க  அழைச்சிட்டு வந்தீங்க" என உறும, பாஹேஸ்வரியின் கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் தரையில் பட்டுத் தெறித்தது.

நாகராஜனும் உணர்ச்சிவயப் பட்டவராய் " அப்போ அந்தப் பொண்ணு என் அக்கா மகளா? " என வினவ,

அவன் பேச்சை மதிக்காது "நான் இங்க எந்த உறவும் கொண்டாட வரல. என் பொண்ணை வரச் சொல்லு"

என நின்ற இடத்திலிருந்தே உரைக்க, ஈஸ்வரி கண்ணசைக்க, வாணி ரோகிணியை அழைத்து வந்தார்.

நேற்று பூசிய சாயங்கள் இன்னும் முகத்திலிருந்து அகற்றப்படாமல் அழுது வீங்கி புனையா ஓவியம் போல ஓடி வரும் மகளைக் கண்டு மனம் கசந்தவர் அவளை வாரி அணைத்து நெஞ்சில் தாங்கி
" உன் அப்பா  வந்துட்டேன்டா.. பயப்படாத
" என ஆறுதல் கூறியவன்
" உன்னை அடிச்சாங்களாடா " என கேட்கவும் அதுவரை தன் தந்தையைக் கண்ட மோன நிலையில் இருந்தவள் அவரைத் தள்ளிவிட்டு
" நீ ஒரு கொலைகாரன்.. உன் முகத்துல முழிக்கறதே பாவம்.. நான் இனி இங்கதான் இருப்பேன்.. மரியாதையா இங்க இருந்து போயிரு " என்றவள் நிற்காமல் மறுபடியும் தானிருந்த அறைக்குள் சென்று விட்டாள்.

இதுவரை நடப்பதை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த விசாகனின் முகம் தன் திட்டம் சரியாக நடக்கிறது என்பதால் புன்னகையால் விரிந்தது..

ஊரையே எதிர்க்கும் மாவீரனாக இருந்தாலும் தன் மகளிடம் அவன் கோழை தானே..தான் உயிர் வாழ காரணமாக இருக்கும் ஒற்றை உயிரும் தன்னை புறக்கணித்துச் செல்வதை தாங்க முடியாது
பார்த்திருந்தான் தேவா..
அந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட விசாகன் தேவாவின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான்.

💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
சர்பிரைஸ் என்னனு புரிஞ்சிடுச்சா மக்களே 😍



Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz