என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)
28.என்னை மறந்தாயோ கண்ணம்மா
ஆள் மாறி ஆடை மாறி ஏன் சுபாவம் மாறிப் போயினும் அவன் உலகை அந்தக் கோள விழிக்குள் அடக்கியாளும் வித்தையை மட்டும் மறவாது வைத்திருந்தாள் போலும்.. அவள் முகபாவமும் உடல் வாகும் வேறு எதனையோ காட்ட, அவளது கண்கள் மட்டும் அவனை தன்னை விட்டு பிரித்திடா வண்ணம் அவனை தன் வசப்படுத்திக் கொண்டிருந்தது.. அதில் என்ன சிறு மாற்றமென்றால் முன்னர் அவனை காண நாணி பதற்றத்தில் உருளும் கோள விழிகள் இன்று கோபத்தில் முரைத்துவாறு சுழன்று கொண்டிருந்தது..
தேவா ராஜி தீரன் மூவரும் இப்போது மும்பையை நோக்கி தொடர்வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தனர்.. அவன் நினைத்தால் விமானத்தையே அவளுக்கு பரிசாக அளிக்க முடியும்..ஆனால் அவளின் சிறு கடைக்கண் பார்வைக்காக இத்தனை வருடங்கள் தான் மறந்து போயிருந்த இரயில்வண்டியில் பயணித்துக் கொண்டிருக்கிறான்.. புத்தகம் படிப்பது போல தன்னைக் காட்டிக் கொண்டாலும் விடாது அவளையே பார்த்திருக்கும் அவனது பார்வையில் கோபம் கொண்டு தான் அவனை முரைத்துக் கொண்டிருந்தாள்..
உண்மையில் ராஜியின் நிலை என்ன?
அவள் தேவாவைப் பற்றி என்ன நினைக்கிறாள்..
ராஜியின் காதல் வீட்டிற்கு தெரிந்த பின்பும், தேவாவைப் பற்றிய எந்த தகவலும் தெரியாத போதும், தன்னை வீட்டிலுள்ளவர்கள் திட்டி அடித்த போதும் அவன் திரும்பி வருவான் இல்லையென்றால் அவனை அவனது வீட்டினர் வற்புறுத்தி அடைத்து சித்திரவதை செய்து தன்னை சந்திக்க விடாது தடுத்திருப்பார்கள் என்று தான் நினைத்திருந்தாலே ஒழிய அவன் தன்னை ஏமாற்றி விட்டான்..அவன் காதல் பொய் என்று என்றுமே நினைத்ததில்லை..
அவள் காதலித்தது தான் தன் குடும்பத்தின் அவல நிலைக்கு காரணமே என்று வருந்தினாலே ஒழிய தேவாவை காதலித்தது தவறு என்று எண்ணவில்லை.. அவள் அவனை எவ்வளவு தூரம் நேசித்திருந்தால் தன் தாய் தகப்பனுக்கு கூட தெரியாது அவனை திருமணம் செய்திருக்க சம்மதித்து இருப்பாள். அனைத்துமே அவன்மீது அவள் கொண்ட காதலினால் தானே.. அப்படியெனில் அவன் நடத்தையும் அவள் காதலிற்கு காரணம் தானே..
ஆனால் இவையனைத்தும் தனது தந்தையும் தமையனும் இறக்கும் வரை மட்டுமே.. தனது தமக்கையின் வாழ்வும் தன் காதலால் வீணானதே என நினைக்கும் போது அவன்மேல் தான் கொண்ட காதலையும் மனதிலிருந்து அடியோடு துடைத்தெறிந்து விட்டாள்..
வாழ்வு வெறுத்து தற்கொலை முயற்சியினை மேற்கொள்ளும் போதும் மருத்துவர் கூறிய ஆலோசனையும் நல்வார்த்தையும் அவள் தன்னம்பிக்கையை கூட்ட, யாருக்கும் எந்த பாதிப்பும் வரக்கூடாது என்று தான் தான் யாரென்று தெரியாத இடத்திற்கு யாருக்கும் பாராமாக இல்லாமல் தனியாக சென்று, தான் கற்ற கல்வியை வைத்து பள்ளி ஆசிரியையாய் தன் தேவைகளை பூர்த்தி செய்து தன் வாழ்க்கையை
நடத்தினாள்.. பெற்ற குழந்தையின் பிரிவு வாழ்வில் வெறுமைத் தாக்க, கடவுள் தந்த வரமாய் குப்பைத் தொட்டியில் தான் கண்டெடுத்த பிஞ்சு மொட்டை தன் சொந்தமாக்கிக் கொண்டாள்.. அன்று தன் மகளை வளர்க்க இல்லாது போன தைரியத்தை அந்த ஐந்து வருட வெறுமை அவளுக்கு அப்போது தந்திருந்தது..
அவன் மட்டும் இல்லையேல் இன்று அவள் வாழ்வு நதியாக இல்லாது ஏதாவதொரு குட்டையாய் தேங்கி நின்றிருக்கும்..
அவனது பதினெட்டாவது பிறந்தநாளில் தான் தனது வாழ்க்கையை பற்றி அவனிடம் பூடகமாய் அவனிடம் கூறியிருந்தாள்...
பூர்ணிமா கடந்த வாரம் அவளைத் தொடர்பு கொண்டு பாஹீயின் நிலையையும் தேவாவின் வரவைப் பற்றியும் கூறாது இருந்தால் அவளுக்கு
தேவா உயிருடன் இருக்கிறான் என்ற உண்மையே தெரியாதுதான் போயிருக்கும்..
தன் வாழ்வு இங்கு சிதைந்து போயிருக்க, அவனோ தி கிரேட் கே.எஸ்.ஆராக உலகை வலம் வந்து கொண்டிருக்கிறான் என்ற உண்மையை அவளால் கிரகித்துக் கொள்ள முடியவில்லை..
தான் உயிருடன் இருக்கின்ற விசயம் தெரிந்தாலாவது பாஹீயின் மனநிலையில் மாற்றம் ஏற்படும் என்ற பூர்ணிமாவின் அறிவுரையின்படி தாயகம் வந்து சேர்ந்தவளுக்கு பேரதிர்ச்சியாக தனது காதல் கணவன் அனைத்து குற்றங்களையும் பழிகளையும் தானே ஏற்று நிராயுதபாணியாக நின்றிருப்பதைக் கண்டாள்..அவளைக் கண்டதும் அவன் கண்ணில் தெரியும் காதல் தற்போதும் குறையாது முன்பை விட பல மடங்கு பெருகியிருப்பதைக் கண்டு மனம் சறுக்கினாலும் அந்த காதல் பார்வையால் தன் வாழ்வில் பட்டது போதும் என்று தன்னை சுதாரித்துக் கொண்டு பாஹீயைக் கண்டதும் திரும்பிவிட்டாள்..
அவனது சட்டையைப் பிடித்து கேள்வி கேட்க வேண்டும்.. அவனைத் தண்டிக்க வேண்டும் என்றெல்லாம் அவள் நினைக்கவே இல்லை.. இனி தன்னை தொந்தரவு செய்யாது தன் மகனுடன் தன்னை நிம்மதியாக வாழ விட்டாலே போதும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தாள்..
அவன் பார்வையில் அவன்புறம் நியாயம் இருப்பது போல அவனுக்கு தோன்றினாலும் அவளதுபுறம் இழப்புகள் அதிகமல்லவா.. இருபத்தி மூன்று வருடங்களுக்கு முன்பு கேட்க வேண்டிய மன்னிப்பை காலம் போன கடைசியில் அவன் இன்று கேட்டால் மன்னிப்பதற்கு என்ன பழைய ராஜியா?...
ஆனால் இதில் அவன் தவறு என்ன இருக்கிறது.. தான் உயிரோடு இருப்பது தெரிந்திருந்தால் அவன் என்னை அப்படியே விட்டிருப்பானா.. நிச்சயமாக என்றாவது ஒருநாள் தன்னை தேடி வந்திருப்பானே.. அவன் ஏமாற்றவில்லை..ஏமாற்றப் பட்டிருக்கிறான்.. தன்னை தொலைத்த பின் தன் நினைவாகத் தானே இன்னொரு வாழ்வைத் தொடங்காமல் கே எஸ்.ஆர் என்ற பெயரில் கூட தன்னைச் சேர்த்து வாழ்ந்து கொண்டிருக்கிறான்.. தவறு செய்யாத மனிதர்கள் இருக்கிறார்களா என்ன?
தன்னோடு தன் குழந்தையும் இறந்த செய்தி அறிந்தவுடன் அவன் எவ்வளவு துடித்திருப்பான்..
பூமியில் நரகத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவனை இன்னும் தண்டிக்க வேண்டுமா..அவன் பாவம் இல்லையா..அவனுக்கு என்று தற்போது யார் இருக்கிறார்கள்.. ஏன் அவனது கையால் மாங்கல்யம் வாங்கியிருக்கும் மனைவி நானில்லையா..
அவனை மன்னித்து ஏற்றுக் கொள் என்று ஒரு மனம் வலியுறுத்த, அவன் செய்த பாவத்திற்கு தண்டனை அனுபவிக்க வேண்டும் என இன்னொரு மனம் சொன்னது.. அவளது முடிவை திசை திருப்பும் வகையில் அவன்வேறு அவளை முழுங்கும் பார்வை பார்த்துக் கொண்டு நிற்கிறான்.. இவனை ஏற்றுக் கொண்டால் தன் மகனின் வாழ்க்கை என்னாவது..
உண்மையை கூறியபின்பும் தன்னிடம் முகம் சுழிக்காது தன்னை தாயாக ஏற்றுக் கொண்டவனின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்குவதா..
தன் மடிமீது தலை வைத்து தூங்கும் அந்த வளர்ந்த குழந்தையின் தலையை கோதியவள் அவன் நெற்றியில் முத்தம் வைத்துவிட்டு நிமிரும்போதுதான் தன்னையே வைத்த கண் வாங்காது பார்க்கும் தேவாவைக் கண்டு முரைத்தது..
ஏனோ அவள் மடியில் தலை வைத்து தூங்க வேண்டும் என்ற ஏக்கமும் கூடவே பிறந்தது..
அவன் பார்வையை காண சகியாது கண்ணை மூடிக் கொண்டவள் தூங்க முயற்சிக்க,
" ராஜி " என்ற அவனது குரல் அவள் செவியில் விழுந்தது..
அவள் கண்களைத் திறக்கவில்லை..
" என்னை மன்னிக்காட்டியும் பரவாலை.. நாலு அடி அடிச்சு..எம்மூஞ்சில காரித் துப்பிருமா.. என்னை யாரோ மாதிரி பார்க்காத ராஜி.. "
அவள் முன்னே மண்டியிட்டு அமர்ந்துவிட்டான்..
" எம்பையன் தூங்கறான்..கொஞ்சம் வேறப் பக்கம் போய் பேசுங்க.வீனா என் பையனையும் என்னையும் தொல்லை பண்ணாதீங்க"
கண்ணைத் திறவாது அவள் பேச,
" உம்பையன் எனக்கும் பையனில்லையா ராஜி.. அவனை என்னுயுரா பார்த்துக்க மாட்டேனா.. "
அந்த ஒரு வார்த்தை போதாதா அவளுக்கு..
" இப்படி பேசி பேசி தான அந்த அப்பாவி ராஜி மனச கொன்னீங்க "
அவளது ஒவ்வொரு வார்த்தையும் அவனை சுட்டது..
" ராஜி.. என்னடா நான் உன்னை ஏமாத்தனும்னு நினைக்கவே இல்லடா.."
" போதும் உங்களப்பத்தி நீங்க எந்த விளக்கமும் சொல்ல வேணா.. அதை கேட்கற நிலமைலயும் நானில்ல.. "
அதன்பின்பு அவனது எந்த கேள்விக்கும் அவளிடம் பதிலில்லை.. சிறிது நேரத்தில் தீரனும் எழுந்துவிட, அவனது கோபப் பார்வைகூட பிடித்துப் போனது தேவாவிற்கு..
தாங்கள் என்னமோ பருவ வயது காதலர்கள் போலவும் அவன் என்னவோ காதலியின் தந்தையைப் போலவும் நினைத்துக் கொண்டு ராஜியை தேவாவிடத்தில் இருந்து மறைப்பதுமாக இருக்க அந்த இறுக்கமான சூழ்நிலையிலும் புன்னகை பூத்தது அவன் உதட்டில்..
கே.எஸ்.ஆரது புகைப்படத்தை பார்க்காவிடினும் அவனது பெயர் மும்பையின் பட்டித் தொட்டிகளிலும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கும்.. அந்த புகழ்பெற்ற கோடீஸ்வரன் தான் தன் தாயின் கணவன் எனத் தெரிந்தும்
தாயின் கண்ணீருக்கு காரணமானவனைத் தண்டித்தே ஆக வேண்டும் என நினைத்துக் கொண்டுதான் வந்தான்..ஆனால் அவரோ தன் தாயின் முன்னால் சிறு குழந்தை போல கெஞ்சி அடம்பிடிக்கவும் அதற்கு பதிலாக ராஜியின் கண்ணில் வழிந்த கண்ணீரும் உண்மையை எடுத்துரைக்க அமைதியாகி விட்டான்..
தாங்கள் வரும்போதே ராஜி அங்கு என்ன நடந்தாலும் தன்னை விட்டு பிரிய நினைக்காது தன்னுடனிருக்க வேண்டும் என்று சொல்லித் தான் அழைத்து வந்தாள்.. ராஜியை விடுத்து அவனாலும் இருக்க முடியாதே..
தன் ராஜிக்கு அவர் ஏற்ற துணை தானா என்றுதான் அவனும் சோதித்துக் கொண்டிருக்கிறான்.. இவனை ஜெயித்தால்தான் தேவா ராஜியை நெருங்க முடியும்.. பார்ப்போம் என்ன ஆகுமென்று..
💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
அங்கே ரோகிணியின் வாடிய முகத்தைப் பார்த்ததும் தந்தையாக கோபமுற்ற வாசு விசாகனைத் தேடி அவனது அறைக்குச் சென்றான்..
அங்கு ஏற்கனவே உதயனும் விசாகனும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் கிட்டத்தட்ட சட்டையை பிடித்து சண்டை போடாத குறையாக கத்திக் கொண்டிருந்தனர்..
" என் தங்கச்சிக்கு என்னடா குறை..அவள வேண்டான்னு சொல்ற "
உதயனது குரல் அந்த அறை முழுதும் எதிரொலித்தது..
" இது என் வாழ்க்கை நான்தான் முடிவெடுக்கனும்.. அவள எனக்கு பிடிக்கல..அவ்ளோதான் "
விசாகனும் விட்டோத்தியாக பதில் சொல்ல, உதயன் அவனை அடிக்க கையினை ஓங்கி விட்டான்..
ஓங்கிய கையை அவனை அடிக்க விடாது பிடித்துக் கொண்ட வாசு, இருவரையும் முரைத்துப் பார்க்க, முதன்முறை இருவரும் நடுங்கித் தான் போயினர்..
" தயா..என்னதிது..சின்னப் பசங்க மாதிரி "
உதயனைக் கேட்டாலும் பார்வை விசாகனை நோக்கியே இருந்தது..
" அப்பா.. அது.. "
உதயன் கூறத் தயங்க,
" எனக்கு ரோகிணிய கல்யாணம் பண்ண பிடிக்கல.. எங்க கல்யாணத்த நிறுத்திடுங்க "
விசாகன் தைரியமாகவே சொன்னான்..
அவன் குரலிலுள்ள உறுதி வாசுவை அசைத்துப் பார்த்தது.. தன் மகளின் சிரித்த முகம் நினைவு வர, ஒரு தந்தையாக ஆட்டம் கண்டு போனான் வாசு..
பெண்ணை பெற்றவனாய் மருமகனிடம் இறங்கிப் போய் " எதுனால விச்சு என் பொண்ண உனக்கு பிடிக்கல..உங்கிட்ட கேட்டுத்தானே முடிவு செஞ்சோம் "
சற்றுமுன் கோபத்துடன் பேசியவன் தன்மையாக பேசினான்..
" அப்பா விடுங்கப்பா..இவன்கிட்ட கெஞ்சிக்கிட்டு.. இவன் இல்லைனா நம்ப பாப்பாவுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்காதா "
உதயனும் விச்சுவின் இந்த பதிலிலும் தந்தையின் கலங்கிய முகத்திலும் கோபம் கொண்டு அதட்டிப் பேசினான்..
" தயா " என உதயனை அடக்கியவன்
" ஏன் விச்சு என் மகள பிடிக்கல "
அவன் மீண்டும் அதே கேள்வியையே கேட்க,
" அவ உங்க மக இல்லைங்கற காரணத்துனால தான் பிடிக்கல.. அவ தேவாவோட பொண்ணு..எங்க அம்மா அப்பா சாகறதுக்கு காரணமா இருந்தவனுக்கு அடைக்கலம் கொடுத்தவனோட பொண்ணு."
என்றான் விட்டோத்தியாக..
அவன் பதிலில் கோபம் கொண்ட வாசு " ரோகிணி என் மக..அவளுக்கும் அந்த தேவாக்கும் எந்த சம்பந்ததும் இல்ல..அவள பெத்தவங்களே எங்கிட்ட ஒப்படைச்சிட்டு போகும்போது.. உனக்கென்னடா பிரச்சினை.. "
இந்த முறை வாசு விசாகனின் சட்டையைப் பிடித்திருந்தான்..
" வளர்த்துனவங்கள விட பெத்தவங்களுக்கு தான் உரிமை அதிகம்..மாமா.. என்னதான் இருந்தாலும் என் அப்பா இடத்தை உங்களால நிரப்ப முடியுமா "
அவன் குரலில் அவ்வளவு வலி..
அந்த கேள்வியில் விசாகன் சட்டையை பிடித்திருந்த வாசு தன் கையை எடுத்துக் கொண்டான்..
அவன் என்றுமே உதயன் வேறு..விசாகன் வேறு என்று பிரித்துப் பார்த்ததே இல்லையே..எந்த இடத்தில் அவனைத் தவிக்க விட்டோம்.. எந்த இடத்தில் இவன் அன்பு பொய்த்துப் போனது என யோசிக்கத் துவங்கினான்.. மனம் முழுதும் அத்துனை வலி..
தன் கண்ணசைவில் அனைத்தையும் புரிந்து கொள்பவன் தன்னை வேறு யாரோபோல் காயப்படுத்துவதைத் தாங்காது
" எனக்கு நீ தயா பாப்பா மூணு பேரும் ஒண்ணு தான்டா.விச்சுக் கண்ணா.. அப்போ உம்மேல எனக்கு எந்த உரிமையும் இல்லையாடா ... " எனக் கேட்க,
அவனை அலட்சியப் பார்வை பார்த்தவன் " எம்மேல உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு..எனக்குத்தான் உங்க மேல தான் எந்த உரிமையும் இல்லை.." என்றவன் தனது மேசையில் வைத்திருந்த பத்திரங்களை தூக்கி அவன் முன் எரிந்துவிட்டுச் சென்றான்..
சென்றமுறை சொத்துக்காக வீட்டோட மாப்பிள்ளையாக இருக்கிறான் என்று மரகதம் போல் மீண்டும் வேறுயாரும் பேசாது இருக்க, உதயன் ரோகிணியைத் தவிர்த்து விசாகன் நதியாவின் மீதே மாணிக்கத்தின் அனைத்து சொத்துக்களும் பதிவாகியிருந்தது...ரோகிணியை கூட வாசுவின் சொந்த மகளாக கருதி அவளது பெயரில் எந்த சொத்துக்களும் இல்லை.
ஆனால் விசாகனை மட்டும் சுந்தரின் மகன் என்றுதானே பிரித்துப் பார்த்து விட்டார் ..இதுதான் விசாகனுக்கு கோபம்..
அதுவும் விசாகனின் திருமணம் முடித்தபின் பாஹீயும் வாசுவும் பருவதத்தோடு பெரியகுளம் சென்று விடுவார்களாம்.. உதயன் வேண்டும் என்றால் எங்கு வேண்டும் என்றாலும் தங்கிக் கொள்ளலாமா..ஏன் என்று கேட்டால் தன்மானமாம்..தகர டப்பாவாம்..ஏற்கனவே பட்டது போதுமாம்..இந்த காரணத்துக்காகத் தான் பாஹீயும் வாசுவும் இவ்வாறு முடிவெடுத்திருக்கிறார்களாம்..
இதனை ராஜூவின் மூலம் அறிந்ததிலிருந்து தான் அவனது ஒட்டுமொத்த கோபமும் வாசுவின் மீது பாய்ந்தது..ஆனால் அதில் ரோகிணியின் பங்கு?
தோட்டத்தில் கோபமாக அமர்ந்திருந்த விசாகன் ரோகிணியின் கொலுசொலியில் திரும்பினான்...
அவள் வந்ததும் " எங்கப்பாவ என்ன சொன்னீங்க..அவர் முகமே வாடியிருக்கு" என்று தந்தைக்கு வரிந்து கட்டிக் கொண்டு பேசினாள்..
அவன் பேசாது இருக்கவும் " கேட்கறேன்ல..பதில் சொல்ல முடியுமா..முடியாதா? " என இடுப்பில் கை வைத்து மிரட்டவும்,
" ஹான்... உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு "
அவன் சிரித்துக் கொண்டு சொல்ல,
கோபமாய் அவனருகில் வந்தவன் அவளால் எவ்வளவு முடியுமோ அந்தளவு நறுக்கு நறுக்கென்று கிள்ளி வைக்க ஆரம்பித்தாள்..
அவன் வலியில் துள்ள ஆரம்பிக்க,
" நீங்க சொன்னிங்கனு தான சோகமா இருக்கற மாதிரி நடிச்சேன்..இப்போ அவரையே சோகப்படுத்திட்டீங்க "
அவள் கிள்ளிக் கொண்டே சொன்னாள்..
" ஐயோ..ஐயோ..சீதா தேவி மேடம்.. விடுடீ..வலிக்குது.. கத்துக் கொடுத்துவங்க கிட்டயே வித்தைய காட்டக் கூடாதுடி "
இந்த முறை அவள் கைகளை சிறைப் படுத்திக் கொண்டவன்
" நான் அவ்ளோ போர்ஸ்ஸா பேசலைன்னா அவரு அங்கேயும் நீ இங்கேயும் பிரிஞ்சுதான் இருக்கனும் பரவாலையா.." என்க,
..
" அந்த ஒரு காரணத்துக்காக தான் நீங்க சொல்றதெல்லாம் கேட்டுட்டு இருக்கேன்.. எங்கப்பாவுக்கு மட்டும் நான் நடிச்சது தெரிஞ்சது என்னை என்ன நினைப்பாரு "
" என்ன நினைப்பாரு.. மருமகனோட டிரெயினிங்க்ல பச்சை மண்ண கூட சிலையா மாத்திட்டான்னு தான் நினைப்பாரு.. மொரட்டு முட்டாள் மாமனாரு.. "
அவனிடமிருந்து கைகளை உதறியவள் அவன் வயிற்றில் குத்தி
" எங்கப்பாவ மரியாதையா பேசுங்கனு எத்தனை தடவை சொல்றது " என அவள் வழக்கம் போல சளித்துக் கொள்ள அங்கே மீண்டும் சமாதனக் கொடி பறக்க விடப்பட்டது..
அப்படியே மொட்டை மாடிக்கு வந்தால் அங்கே..
" அப்ரோ என்னாச்சா.. நானும் அவனும் சண்டை போடற மாதிரி நடிச்சத அப்பா நம்பிட்டாரு " என உதயன் உத்ராவிடம் போனில் நடந்ததைச் சொல்லிக் கொண்டிருந்தான்..
" அங்கிள் கண்டுபிடிக்காம இருப்பாரா..உத்தீ"
" ச்சேச்ச..எங்க பர்மான்ஸ் அந்த மாதிரி.. அதே மாதிரி தான் சண்முகனும் நான் சொன்னது போல நம்ம கல்யாண விசயத்துக்கு தூண்டில் போட்டுட்டான்.. சப்பா..அவன்கிட்ட வேலை ஆகனும்னா, ஒன்னு செய்யாதன்னு சொன்னா அப்படியே செய்வான்னு ரோகிணி சொன்னது சரியாத்தான் இருக்கு.. "
" அடப்பாவி..அப்போ என்னை வீட்லருந்து அனுப்புனது நீயா உத்தீ "
அவள் குரலில் ஏக கோபம்..
" அதிலென்ன சந்தேகம்... எங்க அப்பத்தாவும் நானும் பேசி வெச்சுதான் உன்னை வெளிய அனுப்பனோம்.." சிரித்துக் கொண்டே பதில் சொன்னான்..
" பாவிகளா..உங்களப்போயி அங்கிள் ரொம்ப நல்ல பசங்கனு நம்பிக்கிட்டு இருக்காரே "
" ஹலோ.. அவர்லாம் அந்தக் காலத்துல இதைவிட நிறைய பண்ணியிருக்கார்னு அப்பத்தா எங்கிட்ட சொல்லிட்டு தான் இந்த ஐடியாவே சொன்னாங்க.. என்னை விட அப்பத்தாதான் உன்னை மருமகளாக்கிக்கனும்னு துடியா துடிக்கறாங்க தெரியுமா "
" எல்லா பிரச்சனையும் தீர்ந்த பிறகும் அப்பா இங்க யார்கிட்டயும் ஒட்டாம இருக்கறத பார்க்க கஷ்டமா இருக்கு உத்தீ.. நான் பார்த்தவரை பாட்டியோ மாமாவோ அந்தளவுக்கு கெட்டவங்க இல்ல..ஆனா அப்பா விசயத்துல அவுங்க ஆரம்பத்துல இருந்தே நம்பிக்கை இல்லாம இருந்துருக்காங்க..அதான் அவருக்கு கோபம்.. சீக்கிரமா அப்பா மனசு மாறி எல்லோரும் ஒன்னா ஒரே வீட்டுல இருக்கனும்னு ஆசையா இருக்கு உத்தீ "
" நான் ஒன்னு சொல்லவா உத்தீ.."
" ம் "
" மாற வேண்டியது அங்கிள் இல்ல.. உங்க பாட்டியும் மாமாவும் தான்.. அவுங்க ராஜி ஆண்டிகிட்டயும் வாசு அங்கிள் கிட்டயும் ப்ரோபரா மன்னிப்பு கேட்டாலே போதும் உத்தீ..ஏன்னா தேவா சாராகட்டும் ரகுபதியா ஆகட்டும் அவுங்க வெளியாளுங்க.. அவுங்கள பத்தி தெரிஞ்சிக்காம தப்பா நினைச்சிட்டாங்க..ஆனா இவுங்க உங்க குடும்பம் இல்லையா..அப்போ வாசு அங்கிள் கோபம் நியாயம் தான..அவரோட நடத்தைய தப்பா பேசுனது அவர கொன்னதுக்கு சமம்.. சாதாரண மன்னிப்புங்கற வார்த்தை எப்போதும் ஈடுசெய்ய முடியாது உத்தீ..செயல்ல தான் அதை காட்டனும்
. ..
" உங்கிட்ட பேசன பிறகு தான் மனசு ரொம்ப தெளிவா இருக்கு உத்தீ.. எப்படி இப்படிலா யோசிக்கிற"
அவன் புகழ்ந்ததும் " ஓ..அதுவா..நார்மலாவே பொண்ணுங்க மனசு ஏடாகூடமா எடக்கு மடக்கா தான் யோசிக்கும்..அதான் நீ சொன்னதும் அதுல என்ன குத்தம் சொல்லலாம்னு யோசிச்சேன்..பதில் கிடைச்சது"
"ம்ம்.. ஆமா உன் ஆபிஸ்ல ஒன்னும் பிரச்சினை இல்லையே "
"ம்ஹூஹூம்..தேவா சார் என்னை புல் இன்சார்ஜா மாத்திவிட்டு எஸ்கேப் ஆகிட்டாரு..எனக்கு வொர்க் லோட் அதிகமாயிட்டு..பாவம் மனுசன் எப்படித்தான் இத்தனை வருசம் ஓயாம இப்படி வேலை செஞ்சாரோ.. "
" ம்ம் "
" ஏய்..நான் உயிரக் கொடுத்து பேசிட்டு இருக்கேன்.. நீ சும்மா டாபிக் சேன்ஜ் பண்ணிவிட்டு ம் கொட்டுறியா.. "
" "
" ஹேய்..என்னப்பா பதிலே காணோம் "
" எனக்கு இப்பவே உன்னை பார்க்கனும் போல இருக்கு உத்தீ "
அவன் குரலில் என்றும் இழையாத பரிதவிப்பு..
" என்ன திடீர்னு "
அவளும் கடமையிலிருந்து காதல் இராகத்தில் கேட்க,
" சும்மா தான்.. எங்க அப்பத்தா பேச்சை கேட்டு உன்னை அனுப்பி வெச்சிட்டேன்..ஆனா அது தப்போன்னு தோனுது உத்தீ.. நீ மட்டும் அங்க தனியா இருக்க ரொம்ப கஷ்டமா இருக்கும்ல "
" நான் தான் சீக்கிரமா உங்கிட்ட வரப் போறனே.. எனக்கு என்ன கவலை உத்தீ.. "
அவன் காதல் வார்த்தை பேசுவது என்பது அரிதிலும் அரிது.. அவனே பேசிகிறான் என்றால் இவளுக்கு சொல்லவா வேண்டும்..
" உத்தீ ❤ "
" உத்தீ 💜 "
இருவரும் பேசாது சில நொடி மௌனங்களாய் கடக்க,
" வேணும்னா பைக் எடுத்துட்டு போய் உங்காள பார்த்து வாங்களே சார் " என்று அவனுக்கு பின்னால் கேட்ட குரலில் காதலின் மோன நிலை கலைந்து குப்பென்று வியர்த்தது..
சண்முகன் வாசுவின் குரலில் கூற அங்கே பயந்து திரும்பியவன் அவனை வெட்டவா குத்தவா என்பது போல பார்க்க,
" என்னடா தூங்காம என்ன இங்க பண்ணிட்டு இருக்க"
" ஓ ..அதுவா.. தூக்கம் வரல..அதான் காத்து வாங்க தோட்டத்து பக்கம் போனா..அங்க ஸ்டார் ஸ்கொய்ட் தொல்லை..சரி மாடிக்கு வந்தா உத்தீ ஸ்கொயட் தொல்லை.. அதான் கொஞ்சம் ப்பீலீங்கு "
" இந்த வயசுல உனக்கு என்னடா ப்பீலிங்கு "
பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு " நான் மட்டும்தான இங்க சிங்கிளா சுத்தறேன்..எனக்கும் ஒரு ஜோடி.. "
வாக்கியத்தை முடிக்கும் முன்பே
" சண்முகா ஜோடி ஜோடியா சுத்தறத பார்க்க ஆசையாதான் இருக்கும்..ஆனா அதுக்கான வயசு உனக்கு இல்லை புரியுதா.. நீ படிச்சி நல்ல டாக்டரா வரப் போற..மனச அலைபாய விடாத..ஜாலியா பிரண்ட்ஸோட என்ஜாய் பண்ணு தப்பில்ல..ஆனா மத்தவங்க ஜோடியா இருக்கறத பார்த்து தானும் அப்படியே இருக்கனும்னு நினைக்கற வயசு உனக்கு இல்லை.. புரியுதா..
காதல் என்கிற உணர்வு உனக்கு எப்ப வருமோ அப்போ அதை தடுக்க வேணா..ஆனா அதுக்காக நீயே வாலண்டியரா எந்த படுகுழிலயும் விழுந்துடாத.
.எதுக்குடா சம்பந்தம் இல்லாம பேசறேன்னு நினைக்க வேண்டா.. நீ இப்போ காலேஜ் ஜாயின் பண்ண போற.பல தரப்பட்ட ஸ்டூடண்ட்ஸ சந்திப்ப...அவுங்க உன் கேரக்டரையே திசை திருப்ப நிறைய வாய்ப்பிருக்கு..அப்பவும் நீ உறுதியா இருக்கனும்.சரியா.. எங்கப்பா உன்மேல நிறைய நம்பிக்கை வெச்சிருக்காங்க..புரியுதா
..உன் கவனம் முழுதும் படிப்புல தான் இருக்கனும்.. அதுக்கா உன்னோட குறும்புத் தனத்தை விட்டுக் கொடுக்க சொல்லல.. அதுதான் உன்னோட பிளஸ்ஸே..
ஆனா நல்லது எது கெட்டது எதுன்னு நல்லா புரிஞ்சிட்டு நடந்துக்கனும் புரியுதா.."
அவன் வாயை அதற்குப்பின் திறக்கவில்லை..
' இவருக்கு லவ்வர் பாய், அய்யனார் ஜெராக்ஸ்னு பேர் வைச்சது தப்பே இல்ல.. அங்கிள் மாறியே அட்வைஸ் பண்ணி கொல்றானே'
என அவனது போனில் இவர்கள் சம்பாசனையை கேட்டுக் கொண்டிருந்த உத்ரா உதயனை நினைத்து திட்டிவிட்டு போனை வைத்தாள்..
💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
வாசுவிற்கு வீட்டோட மாப்பிள்ளையாக இருந்த அந்த ஐந்து வருடங்கள் கண்ணில் நிலையோடின.. அவனுக்குத் தெரிந்து அவன் ஊர் பெண்களிடம் வம்பிழுத்ததில்லை..சரக்கு சாராயம் என்ற கெட்ட பழக்கமும் இருந்ததில்லை.. தனது சம்பாத்தியத்தில் பருவதத்திற்கு கொடுத்தது போக மீதி அனைத்தையும் மரகதத்திடம் வீட்டு செலவுக்கென்று கொடுத்து விடுவான்.. ஆனாலும் நேரடியாக சொல்லாவிடினும் மறைமுகமாக அவன் காதினில் அவனைப் பற்றிய குத்தல் பேச்சுக்கள், தவறான விசயங்கள் என வந்து விழுந்தவண்ணம் தான் இருந்தன..
சாட்சிகள் ஆயிரம் இருக்கட்டும்.. உடனிருந்து பழகிபார்ப்பவர்களுக்கு உண்மை எதுவென்று தெரிய வேண்டாமா?
ஒரு குடும்பத்தில் நம்பிக்கை என்று இல்லாது போனால் இப்படித்தான் இவர்கள் வாழ்வைப் போல அனைத்துமே சிதைந்து போகும்..
அவர்கள் உறுதியாக வாசுவின் பக்கத்தில் நின்றிருந்தால் இந்த இருபத்தி மூன்று வருடங்கள் வீணாகி இருக்காதே..
விசாகனுக்கும் உதயனுக்கும் வேண்டும் என்றால் வாசு வரட்டு கௌரவத்திற்காக
ஒன்றாக வாழ்வதை தவிர்க்கிறான் என்பது போல தோன்றும்.. அதற்காக
அன்று அவர்கள் செய்த குற்றத்திற்கு இப்போது அவன் தண்டிக்கவில்லை..மீண்டும் இதுபோல எந்த பிரச்சனையும் வரக் கூடாது என்று தான் ஒதுங்கப் பார்க்கிறான்..
எலி வளையானாலும் தனி வளை வேண்டும் அல்லவா..
என்ன இருந்தாலும் அவன் சம்பாதித்த சொத்து என்றால் அது பெரிய குளத்தில் உள்ள ஐந்து ஏக்கர் நிலம் மட்டுந்தானே..
தன் சொத்தில் மனைவியுடன் வாழ்வதுதானே அந்தப் பழைமைவாதிக்கு சந்தோசம்..
அது அவர்களது பையன்களுக்கு பிடிக்கவில்லையே..
வாசு ஆசைப்பட்ட இந்த விசயம் மகளின் திருமண வாழ்விற்கு தடையாக வந்தமைய, சோகமாய் பாஹீயின்
மடியில் தலை வைத்துப் படுத்தான்.. அவனுக்கும் தன் பிள்ளைகளோடு ஒன்றாக வாழ வேண்டும் என்றுதான் ஆசை.. ஆனால் அவனுக்கும் தன்மானம் என ஒன்று இருக்கிறதல்லவா..
பருவதத்தினை பார்த்துக் கொள்ளும் பொறுப்பும் மகனாய் இவனுக்கு இருக்கிறது தானே.. ஊர் ஆயிரம் பேசும்தான்..அதற்காக ஒன்றும் இந்த முடிவெடிக்கவில்லை.. ஆனால் தனது சொந்த வீட்டில் இருப்பதற்கு எதுவும் ஈடாகாதே..
" வாசு.. என்னாச்சுபா.. "
" உன் முகமேன் இப்படி வாடியிருக்கு "
" நான் பசங்ககிட்ட ஓர வஞ்சனை காட்டறனாடீ..உங்கிட்ட சொல்லிட்டு தான பத்திரம் ரெடி பண்ண சொன்னேன்..என்ன இருந்தாலும் சுந்தரும் ராஜூவுக்கும் தானடி எல்லா சொத்தும் போகனும்.. உன்னை கல்யாணம் பண்ணப்பவே உன் சொத்து எதுவும் நமக்கு வேணாம்னு தானடி முடிவு பண்ணோம்.. என்னதான் பாசம் இருந்தாலும் முறைன்னு ஒன்னு இருக்குல்லடி.. அது ஏன் விச்சுக்கு புரிய மாட்டீங்குது "
வலியோடு வந்தன அவன் வார்த்தைகள்..
அவனது சுருட்டை முடிக்குள் விரலை விட்டு தலைக்கு மசாஜ் செய்தவள்
" வாசு.. நீ வருத்தப்பட இதுல ஒன்னுமில்ல.. நீ எடுத்த முடிவு சரி தான்.. உண்மையா நம்ம ஓட்டு விட்டுல இருந்தப்போ இருந்த சந்தோசம் அந்த மாளிகைல நமக்கு கிடைக்கல... அது இப்போ அவுங்களுக்கு புரியாது.. நம்ம வயசு வரும்போது அவனுங்க புரிஞ்சிப்பாங்க வாசு.. "
" ஆனா பாப்பாவ "
" அந்த படவா ராஸ்கல நான் பார்த்துக்கறேன்.. அவன எப்படி மிரட்டுனா அடங்குவான்னு எனக்குத் தெரியும் "
பாஹீயின் கூற்றில் மனம் தெளிந்தவன் சற்று புன்னகைக்க,
" பேரு தான் பெத்த பேரு.. ஆனா அந்த பொடிப் பையனுங்களுக்கு போய் பயப்படற" அவன் மூக்கை பிடித்து செல்லமாக கிள்ளினாள்.. அவனும் சிரித்துக் கொண்டான்..
மனைவி
அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்.. அந்த வரம் அவனுக்கு எளிதில் கிடைக்கவில்லையே.. பல தியாகங்களும் தவங்களையும் கடந்த பின்பு தானே இந்த சந்தோச நிலையை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்..
💜💜💜💜
நம்பிக்கை....
அதுவெறும் வார்த்தையில்லை..
அது ஆக்கவும் செய்யும்..
அழிக்கவும் செய்யும்..
தேவா ரகுபதியின் மீது வைத்த நம்பிக்கை அவன் வாழ்வோடு பலரையும் நாசம் செய்ததும் உண்மைதானே..
கண்மூடித் தனமான நம்பிக்கையும் தவறு..
அதற்காக யாரையும் நம்பாது இருப்பதும் தவறு..பாஹீயின் குடும்பத்தினரது வாசுவின் மீதான நம்பிக்கையில்லா தன்மை உறவுகளுக்குள் விரிசல் ஏற்படுத்தியது..
உண்மையில் உறவுகளுக்குள் நம்பிக்கை என்பது இன்றியமையாதது.. எந்த உறவிற்கும் அடிப்படை நம்பிக்கை மட்டுந்தான்..அது இல்லையேல் அவ்வுறுவு நிலைக்காது..
நம்பிக்கை அதானே எல்லாம்..
அதுசரி..இங்கே
கடைசியில் வெல்ல போவது விசாகன் அணியா.. வாசுவின் அணியா என்று அடுத்த அத்தியாயத்தில் காண்போம்..
தாமதத்திற்கு மன்னிக்கவும் மக்களே..
💜💜❤❤🙏🙏 இந்த எபி ஓவர்
ஓவர் அட்வைஸ் மழையா போயிடிச்சா.. 😊😊.. பரவாலை..நெக்ஸ்ட் அப்டேட்ல எல்லோரையும் ஆக்சன் களத்துல இறக்கிடுவோம்..
Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz