ZingTruyen.Xyz

என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)

27.என்னை மறந்தாயோ கண்ணம்மா

Nivethamagathi

அரை மயக்கத்திலிருந்து தெளிந்த பாஹீ தன்முன்னே தனது நிலையை எடுத்துக் கூறிக் கொண்டிருந்த தேவாவை ஆழ்ந்து நோக்கினார்.. அவன் பேசியதும் அவர் காதில் விழுந்து கொண்டுதான் இருந்தது..

பாஹீயைக் கோபப்படுத்த தேவா என்கிற ஒரு வார்த்தை போதும் என்ற நிலையில் தேவாவே முன்னிருந்தால் அவரின் நிலையை சொல்ல வேண்டுமா என்ன.. கொலைகளை இவன் செய்யாது இருந்திருக்கலாம்  ஆனால் அதனை மறைத்தது இவனது குற்றம்தானே.. அன்றே அவன் ரகுபதியை சிறைக்கு அனுப்பியிருந்தால் இத்தனை வருட பிரிவும் அவமானங்களாவது இல்லாமல் இருந்திருக்குமே.. ராஜியும் மனவிரக்தியோடு இறந்திருக்க வாய்ப்பில்லையே..

இவ்வாறு மயக்கத்தில் இருந்தபோது கூட வேலை செய்த மூளை, தேவாவை நேரில் கண்டதும் சண்டித்தனம் புரிந்து அனைத்திற்கும் இவன் ஒருவனே காரணம் என்று குற்றம் சுமத்த, ஆங்காரக் கோபம் கொண்டு தேவாவின் கழுத்தை தன் இரு கைகளால் நெருக்கிப் பிடித்தார்..

தேவா தடுக்காது அப்படியே இருக்க, ஒரு கட்டத்தில் மூச்சு விட சிரமப்பட்டு கண்கள் சொறுக ஆரம்பித்தது.. ரஞ்சித் சத்தம் கேட்டு வந்து தடுத்தும் அவரை தடுக்க முடியாது போக, வாசுவையும் பூர்ணிமா மேடமையும் அழைக்க விரைந்தான்..

அவர்களும் பதறியடித்துக் கொண்டு உள்ளே நுழைய, பாஹீ என்ன நினைத்தாரோ தேவாவை உதறித் தள்ளிவிட்டு வாசுவின் நெஞ்சில் தஞ்சம் புகுந்தார்..ரஞ்சித் தேவாவை தாங்கிக் கொண்டான்..

" வாசு..என்னால அவன கொல்ல முடியல வாசு.. என் கையால..நான் எப்படி.. ஒரு..உயிர..என்னால முடியலையே வாசு.. "

வாசுவின் நெஞ்சில் தலைவைத்து கதற ஆரம்பித்தார்..

" என்னால முடியல வாசு.. அவன கொல்ல முடியலையே.எனக்கு என்னமோ தலை பாரமா இருக்க மாதிரியே இருக்கு வாசு. "

பாஹீ பிதற்றிக் கொண்டே இருந்தார்..

வெளியே கரடுமுரடாய் தெரியும் பாஹீக்குள்ளே தான் தாய்மையின் மருஉருவமாய் ஈஸ்வரியும் குடியிருக்கிறார்.. அவரால் வாழ்ந்தவர்கள் தான் கோடி..வீழ்ந்தவர் யாருமில்லையே..

" ஒன்னுமில்லை..பாஹீ..அமைதியா இரு.. "

வாசு அவள் முதுகை ஆதரவாக தடவிக் கொடுக்க, கொஞ்சம் அமைதியானார்..

" பாஹேஸ்வரி மேடம்.. இங்க கொஞ்சம் பாருங்க... நீங்க நல்லா இருக்கிங்க.. உங்களுக்கு ஒன்னும் இல்ல.. நீ புல்லா ரெக்குவர் ஆகப் போறிங்க..ரிலாக்ஸ்.. " என்று கூறியபடியே, பாஹீயின் கையில் மருந்தினை பூர்ணிமா செலுத்த,

" வாசு.. பயமா இருக்கு " என்றபடியே மீண்டும் மயக்கத்திற்கே சென்றார்..

" வாசு பயப்படாதீங்க.. அவுங்க முழிச்சிருந்தா அவுங்க கண்டதையும் யோசிச்சு ரொம்ப டென்சன் ஆகிடுவாங்க..அதான் கொஞ்சம் நார்மல் ஆகட்டும் " என்றவர்

" டாக்டர் நீங்க ஆப்ரேசன் தியேட்டர ரெடி பண்ணுங்க.. " என்று ரஞ்சித்திடம் கூறினார்..அவனும் பாஹீயை அறுவை சிகிச்சை கூடத்திற்கு கூட்டிச் செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்தான்..

அனைவரையும் மீண்டும் பதற்றம் வந்து தொற்றிக் கொள்ள கடவுளை வேண்டியபடியே இருந்தனர்...இரண்டு மணி நேர சிகிச்சைக்குப் பின் பூர்ணிமா சிரித்த முகத்தோடு வந்தபின் தான் அனைவரும் சீராக சுவாசிக்க ஆரம்பித்தனர்..

உத்ராவும் ரஞ்சித்தும் பாஹீ மயக்கம் தெளிய இன்னும் ஐந்து மணி நேரங்கள் ஆகும் என்று கூறி அனைவரையும் கட்டாயப்படுத்தி பழரசத்தை குடிக்க வைத்தனர்.. அனைவரும் ஒன்றாய் ஒரு புறம் அமர்ந்திருக்க, தேவா மட்டும் தனித்து அமர்ந்திருந்தார் தூரத்தில் பருவதத்தின் தோளில் சாய்ந்து அமர்ந்திருந்த ரோகிணியைப் பார்த்தவாரே..

ராஜியின் முட்டைக் கண்களும் ராஜியின் மாநிறமும் அப்படியே வாய்க்கப் பெற்றிருக்க, மூக்கு மட்டும் தேவாவினது போல இருந்த ரோகிணியை கண்களுக்குள் நிரப்பிக் கொண்டிருந்தான் தேவா.. ஆனால் இனி

அவளை சொந்தம் கொண்டாட கூடாது என உள்ளுக்குள் உறுதி கொண்டான்.

உத்ரா " சார்.. இந்தாங்க டீ குடிங்க..தொண்டைக்கு இதமா இருக்கும் " என்று தேநீரை நீட்டினாள்..

அவன் மறுக்க " எடுத்துக்கோங்க சார்.. நான் இன்னும் அங்க இருக்கவுங்களுக்கும் கொடுக்கனும் " என வற்புறுத்தி கையில் திணித்துவிட்டு சென்றாள்.. விசுவாசிகள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் போலும் என நினைத்துக் கொண்டான்.

அவள் கொடுத்துச் சென்ற டம்ளரையே பார்த்திருக்க, அவனருகே வந்தமர்ந்தான் வாசு...

இருவரும் பேசிக் கொள்ளவில்லை.அதனால் அவ்விடம் அசௌகரியமாக சூழல் நிலவியது.. வாழ்க்கைத் துணையை பிரிந்து வாழ்ந்தால் எவ்வளவு வலிக்கும் என்பதை தெரியாதவனல்ல வாசு..அதனை அனுபவித்தவனும் கூட..

பாஹீ குணமடையப் போகிறார் என்கிற செய்தியே அவனை புத்துணர்ச்சியாக்கி இருக்க, அனைத்தையும் பழைய கருப்புச் சட்டைக் காதல் காரனாய் யோசிக்கத் துவங்கினான்..

" டீ ஆறிடப் போகுது..குடிங்க தேவா"

சொல் பேச்சு கேட்கும் பிள்ளையாய் மறுக்காது குடித்தான் அவன்..

" நீங்க பண்ண தப்புக்கு இதுவரை அனுபவிச்ச தண்டனையே போதும் தேவா..மனச தளரவிடாதீங்க... நான் உங்க அளவுக்கு படிக்காதவன் தான்.. பணங்காசு இல்லாதவன் தான்.. ஆனா நான் கெட்டவன் கிடையாது..இந்த உண்மைய நீங்க புரிஞ்சிருந்தாலே எந்த பிரச்சினையும் இல்லாம போயிருந்திருக்கும்.. சரி விடுங்க..பழசு எதுக்கு..இனிமேவாச்சும் உங்க வாழ்க்கைய சந்தோசமா வாழுங்க தேவா "

அவனை மரியாதை பொங்க பார்த்த தேவா,

" என்னை மன்னிக்கறது உங்களோட பரந்த மனப்பான்மைய காட்டுது வாசு தேவரே..ஆனா குறுகிய மனம் படைச்ச எனக்கு அதெல்லாம் புரியாம போயிடுச்சு. பணம் காசு..படிப்பு அதெல்லாம் இருந்தும்  நான் இப்போ ஒத்தைல தான் நிக்கறேன்..ஆனா உங்களுக்கு அப்படியில்ல.. உங்க மேல பாசமும் மரியாதையும் நம்பிக்கையும் வெச்சிருக்க பல உறவுகள் இருக்கு.. ஆனா என் மக..

மன்னிச்சிடுங்க..ரோகிணிக்கு அப்பாவ இருக்கற தகுதிய கடவுள் எனக்கு கொடுக்கல.. நான் நல்ல கணவனாவும் இல்ல..நல்ல தகப்பனாவும் இல்ல"

அவன் வருத்தம் அவன் குரலில் தெரிந்தது..

" ஒரு தகப்பானாவும் கணவனாவும் ஜெயித்துக் காட்ட உங்களுக்கு இன்னும் காலம் இருக்கு தேவா "

தேவா புரியாது வாசுவின் கூற்றை திரும்பத் திரும்ப நினைவு கூற,

" உங்கள அப்பாவ என்னால ஜெயிக்க வைக்க முடியாது..ஏன்னா என் பொண்ண யாருக்கும்..அது யாரா இருந்தாலும் ( ராஜியாக இருந்தாலும் ) விட்டுக் கொடுக்க மாட்டேன்.. ஆனா ஒரு கணவனா நீங்க ஜெயிக்க நான் துணையா இருப்பேன்.."

விடுகதைப் புதிர் போல வாசு பேச,

" வாசுதேவரே.. நான் உங்க அளவுக்கு புத்தி சாலி இல்ல..தயவுசெஞ்சு புரியும்படி பேசுங்க ...நல்ல கணவனா..என் ராஜி இல்லாம..என்னால " என்று யோசித்தவனுக்கு மூளையில் மின்னல் வெட்ட,

" ,அப்போ என் ராஜி..." எனக் கேட்க, வாசுவும் ஆமாம் என புன்னகைத்தான்..

தேவாவின் ஒவ்வொரு அணுவிலும் பட்டாம்பூச்சி பறப்பது போல புல்லரித்தது..சந்தோசத்தில் வாசுவைக் கட்டிக் கொண்டவன் " நிஜமாவா..எங்க இருக்கா..நான் போய் கூட்டி வந்துடுவா.. என் ராஜி..ராஜி..நிஜமாத்தான் சொல்றீங்களா..ராஜி வரப் போறாளா.. என் ராஜி உயிரோட இருக்கா.. எனக்கு அதுபோதும்.. " என ஆனந்தக் கண்ணீர் வடிக்க, அவன் துடிப்பைக் கண்டு வாசுவே ஒரு நொடி அதிசயத்துப் போனார்..

பின்பு வாசுவே அவனிடம் அனைத்தையும் கூற, மறுபடியும் குற்றவுணர்வு வந்து தாக்கிக் கொண்டது.. தன்னால் தானே அந்த தற்கொலை முயற்சி என வருந்தியவன்

அவள் உயரோடு திரும்பி வந்ததே போதும் என நிம்மதியடைந்தான்..

இரண்டு நாட்களுக்குப் பின்..

மருத்துவமனையிலிருந்து பாஹீ இல்லம் திரும்பியிருந்தார்..

டாக்டர் பூர்ணிமா அனைவரிடமும் விடைபெற்று தாயகம் சென்றார்..

பாஹீயை இன்னும் ஒரு மாதம் நன்றாக

ஓய்வெடுக்கச் சொல்லியிருக்க, தன்னறையே கதியென கிடந்தார்..

வாசு அவரை அருகிலிருந்து பார்த்துக் கொள்ள, ரஞ்சித்தும் அவ்வப்போது வந்து பார்த்துக் கொள்வதாக உறுதியளித்துச் சென்றான்..

விசாகனும் உதயனும் இத்தனை நாட்கள் கடப்பில் போட்ட அலுவலக வேலைகளை செய்து கொண்டிருக்க, உத்ரா தனது பணிக்கு சென்றிருந்தாள்..

பருவதமும் மரகதமும் தங்களது இத்தனை வருட கதைகளை ஆராய்ந்து எதையோ பேசிய வண்ணம் பொழுதைக் கழித்தனர்..

ரோகிணியோ பாஹீயின் அறையே கதியென கிடந்தாள்.. எங்கே புதிதாய் வந்த தாய் தந்தையினர் தன்னை அவர்களுடன் கூட்டிச் சென்றுவிடுவார்களோ என்கிற பயத்தில் இருந்தவளை ராஜியின் செயல் நிம்மதியினை அளித்தது..

ஆம் அடுத்த நாள் மருத்துவமனை வந்து சேர்ந்த ராஜி முற்றிலும் மாறிப் போய்தான் வந்தாள்.. அத்தோடு அவள் தனியாக வரவில்லை.. வரும்போதே தன்னுடைய பதினெட்டு வயது வளர்ப்பு மகன் தீரனையும் கூட்டிக் கொண்டுதான் வந்தாள்..

பெண்மையின் மென்மை மாறிப் போய் பார்வையிலும் நடையிலுமே திண்மையைக் காட்டி, நான் முன்போல கோழையாகவே திரும்பவில்லை..என்பதை சொல்லாது சொல்லினாள்..

நேரடியாக வாசுவிடம் வந்து மன்னிப்புக் கேட்டவர் விசாகனையும் உதயனையும் வாஞ்சையாய் பார்த்து நலம் விசாரித்தார்.

ரோகிணியைப் பார்க்கும்போது மட்டும் எவ்வளவு தடுத்தும் கண்ணீர் வந்து அவர் மனதைக் காட்டிக் கொடுக்க, சிரமப்பட்டு அதனை மறைத்தவர் புன்னகையோடு அவளைக் கடந்து சென்றார்..

எந்த உரிமையில் அவளைக் கட்டியணைக்க முடியும்..பெற்றதைத் தவிர அவளுக்கு நான் ஒன்றும் செய்யவில்லையே.. என் மகளாய் வளர்ந்தால் தந்தை யாரென்றே தெரியாதவள் என்கிற கலங்கத்துடனே வாழ வேண்டும் என்பதால் அவளை வாசுவிடம் தாரவார்த்துச் சென்றவள்தான் உன் தாய் என்று எப்படி மகளிடம் சொல்லுவாள்.. என் மகளை என்னிடமிருந்து பிரித்துவிடாதே என்ற வாசுவின் பார்வைக்கு பதிலளிப்பதாய் தன் மகளென்ற உரிமையை வாசுவிற்கும் பாஹீக்குமே விட்டுக் கொடுத்துவிட்டார் ராஜி..

தீரனின் உண்மையான பெற்றோர் வந்து அவனிடம் உரிமை கோரினால் வளர்த்த அவரின் மனம் எவ்வளவு பாடுபடுமோ அதேபோல்தானே வாசுவிற்கும் இருக்கும் என்பதை புரியாதவர் அல்ல..

ஒன்றுமே நடவாது போல தேவாவிடம் கூட யாரோ ஒருவனைப் போல நலம் விசாரித்தவள் மறந்தும் மரகதம் ராஜூவிடம் பேசவில்லை..

பாஹீ கூட தான் சுயநினைவு மறந்த நிலையில்தான் ராஜியை சந்தேகித்தார்..ஆனால் மரகதமும் ராஜூவும் சாட்சிகளை நம்பி, அவளை உயிருடன் அல்லவா கொன்று விட்டனர்..

அவர்களை மன்னிக்க காயம்பட்ட பெண்ணின் இதயம் சம்மதிக்கவில்லை..

மரகதம் பெற்ற மகளிடம் மன்னிப்பினைக் கேட்க, அவளோ மன்னிக்கும் நிலையில் இல்லை.. பாஹீயை பார்த்தபின்னர் தீரனைக் கூட்டிக் கொண்டு கிளம்ப எத்தனிக்க,அனைவரும் அவரைத் தடுக்கப் பார்க்க அவர் யார் பேச்சையும் கேட்பதாக இல்லை..

வந்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் புறப்பட்டுவிட்டார்..

தேவாவும் அவளுடனே கிளம்பிவிட்டான்..

அவள் இறந்து விட்டாள் என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு புதையலாய் மீண்டும் அவள் கிடைக்க இழந்துவிட முட்டாளா அவன்.. அவள் ஏசினாலும் பேசினாலும் காரியே துப்பினாலும் ரோசம் வரப் போவதில்லை அவனுக்கு..ரோட் சைட் ரோமியாவாகி தன் காதலினைத் திரும்பப் பெறும் முயற்சியில் இறங்கி விட்டான்.. இனி அவன் உயிர் அவன் கூட்டை விட்டு பிரியும்வரை விடாமுயற்சியுடன் அவள் மனதை

மாற்றுவதிலே தன் முழுக் கவனத்தையும் செலுத்தப் போகின்றான்..

சண்முகனும்  இன்னும் இரண்டு நாளில் கலந்தாய்வில் கலந்து கொள்ள இருப்பதால் வாசுவும் விசாகனும் அவனை அங்கேயே தங்க வைத்திருந்தனர்...

இந்த இரண்டு நாளில் சண்முகனும் நதியாவும் நண்பர்களாகியிருந்தனர்.. அவர்கள் இருவரும்தான் அனைவரையும் சகஜநிலைக்கு கொண்டுவருவதற்கு பெரும்பாடு பட்டனர்..

வாசு பாஹிக்கான உணவை எடுத்துக் கொண்டு உள்ளே செல்ல, பாஹீயும் அவனுக்காகத் தான் காத்திருந்தது போல புன்னகைத்தாள்..

" என்னடி.. சிரிப்பெல்லாம் ஒரு தினுசா இருக்கு.."

" இல்ல வாசு.. நான் கோபப்படும்போதுலாம் ஒரு முக பாவத்தை காட்டுவல..பாவமா.. அதையும் நீ சண்டை போடும்போது கெத்தா நிப்பல அதையும் நினைச்சு பார்த்தேன்..  சிரிப்பு வந்திடுச்சு "

அவளுக்கு சாதம் ஊட்டிவிட்டவாரே..

" வரும்டிவரும்.. மனுசன சாகடிக்கப் பாத்திட்டு உனக்கு அதை நினைச்சு சிரிப்பு வேற வருதாக்கும்.. இனி கோபப்பட்டு பாரு நல்லா தக்காளி மாதிரி சிவக்கற அந்த கண்ண நோண்டி காக்காயிக்கு போட்டறேன்.. "

என திட்ட பாஹீ மீண்டும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்..

பாஹீ குணமடைந்ததிலிருந்து ஏனோ இருவரும் சோகமாகவோ..பாவமாகவோ..அழுதுகொண்டோ பேசிக் கொள்வதே இல்லை.. கசப்பான சம்பவங்களை நினைவு கூர்ந்து வருத்தப்பட இருவருமே விரும்பவில்லை.. அவர்கள் காதலிக்கும்போது எவ்வாறு பேசிக் கொண்டனரோ அதே போல்தான் அடாவடியாக பேசிக் கொண்டிருந்தனர்.. அதனைக் கண்டு சின்னஞ்சிறுசுங்க தான் காண்டாகிப் போயினர்..

" ஏன் வாசு.. வரவர உன் காஸ்ட்டியூம் செம போரடிக்குதுப்பா..உனக்கு வயசும் கூடிப் போயி கிழவனா வேற மாறிட்ட.. வேணும்னா நீயேன் இந்த வெள்ள வேட்டி கருப்புச் சட்டைய விட்டுட்டு ஜீன்ஸ் பேன்டும் டீசர்ட்டும் டிரை பண்ண கூடாது.. "

அவளை முரைத்தவன் " நீயுந்தான் கிழவியாகிட்ட.. நான் எதும் சொன்னேனா கிழவி..

ஐயாவோட மவுச பெரிய குளத்துல பார்த்துமா கிழவன்னு சொல்ற " என்க,

மனதுக்குள் ' அதுக்குதானே உன்னை வேட்டி கட்ட வேணான்னு சொல்றேன் ' என நினைத்துக் கொண்டவள் அவனுக்கு பழிப்புக் காண்பித்தாள்..

அடுத்து வாசு என்னவோ சொல்லப் போக, அந்த வழியாக வந்த சண்முகம் கண்ணை இறுக்க மூடி,

காதைப் பொத்திக் கொண்டு

" நிறுத்துங்க " என்று பழைய பட கதாநாயகியைப் போல பாவனை செய்ய, அவனது கத்தலில் மொத்த குடும்பமும் பாஹீயின் அறையில் திரண்டு விட்டது..

" யோவ் மாமா..என்னங்க அத்தை " என்று வாசுவையும் பாஹீயையும் சுட்டிக் காட்டியவன்

" அங்கப்பாரு.. உம்பையன் உன்னொசரத்துக்கு வளர்ந்து நிக்கறாரு..அவர் கூட இந்தளவுக்கு என்னைய சோதிக்கல.. ஆனா நீ இங்க ஒரு வயசுப் பையன்.. கெத்து சிங்கிளா நடமாடிட்டு இருக்கும்போது புது மாப்பிள்ளை மாறி ப்லிம் காட்டற பாரு..அதாய என்னால தாங்க முடியல..  நான் பாவம்யா.. " என சோகமாய் முகத்தை வைத்தவன்

'அய்யோ எல்லோரும் முரைக்கிறாங்களே..'

அப்படியே விசாகனையும் ரோகிணியையும் கைக்காட்டி "

அவுங்க பாவம்யா..அய்யனாரு.. இதெல்லாம் நல்லால்ல..அவுங்களுக்கும் சீக்கிரமா கல்யாணம் பண்ணி வெச்சிட்டு..அதே கையோட "

அவன் பேசப் பேச அவன் வாசு கையை முறுக்க ஆரம்பித்திருந்தான்..

" சொல்லு.. அதே கையோட"

" அதே கையோட எனக்கும்.. "

இன்னும் கொஞ்சம் முறுக்க

" எம்மா ஸ்டாரு..உனக்காகத்தான பேசிட்டு இருக்கேன்.. அவர் உங்கோட ஒழுங்கா பேச மாட்டிங்கறார்னு கண்ணீர் வடிக்க மட்டுந் தெரியுதுல்ல.. அவர சமாதனப்படுத்த எந்த முயற்சியாச்சும் பண்ணியா..

ஐய்யோ.. அய்யனாரே..வலிக்குது..விடுங்க.. "என்று விசாகன் ரோகிணியையும் மாட்டிவிட்டவன் அடுத்து

உதயனை நோக்கி

" ஏங்க அய்யனார் ஜெராக்சே.. கல்யாணமாகம எப்படி உங்க ஆள இங்கையே தங்க வைக்கறதுன்னு ஹாஸ்டலுக்கு அனுப்பி விட்ருச்சே அந்த பிம்பிள் கிழவி..ஹீரோவா என்ன பண்ணியிருக்கனும் நீ..அப்போ எனக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ணி வைங்கனு சண்டை போட்ருக்கனுமா வேணாமா.. " என உதயனையும் தூண்டி விட்டான்..

" அதெல்லாம் பண்ணாம நீங்க ரெண்டு பேரும் ஆபிசே கதியின்னு சுத்திட்டு இருக்கறதால தான் "  என வாசுவை மேலுங்கீழுமாய் பார்வை பார்த்து பேச ஆரம்பிக்க, அடுத்து அவன் என்ன சொல்லப் போகிறான் என்பதை தெரிந்த விசாகனும் உதயனும் அவன் வாய் பொத்தி அப்படியே அவனைக் கடத்திக் கொண்டு பக்கத்து அறைக்கு தூக்கி சென்றனர்..

மற்றவர்களும் வாசு பாஹீயை கேலியாய் பார்த்துவிட்டு செல்ல, வாசு தான் பாஹீயின் உடல்நிலையை நினைத்துக் கொண்டு பிள்ளைகளை கவனிக்காது போய்விட்டேனோ என எண்ணிக் கொண்டான்.

ரோகிணியை இருவருக்கும் இடையே அமர வைத்த வாசு.. "  பாப்பா ..ரெண்டு பேருக்கும் என்னடா பிரச்சினை " என்க,

அவள் பதில் சொல்லாது இருக்க,
" நீ சொல்றீயா.. இல்ல நானே அவன கேட்கட்டுமா" என்றான்..

அதில் பயந்தவள்

" அவர் எங்கோட பேச மாட்டீங்கறாரு பா " என்றாள் தயங்கியபடி,

" எதுனாலம்மா அவன் பேச மாட்டீங்கறான்..சொல்லு..அவன நான் கேட்கறேன் " என பாஹீயும் கேட்க,

" தெரியலமா.. நான் அவர எதுமே சொல்லல.. நான் என்ன தப்பு பண்ணேனும் தெரியலம்மா..நான் பக்கத்துல போனாலே எறிஞ்சு விழறாரு.அவருக்கு என்னை பிடிக்கவே இல்லம்மா. " என்றவள் பாஹீயின் தோளில் சாய்ந்து கொள்ள,

" பாப்பா..அழாத.. சாமி.. நான் என்னனு கேட்கறேன்.. எந்த பிரச்சனைனாலும் இனி பொறுமையா பேசித் தீர்த்துக்கலாம்..சரியா.. நான் அவன்கிட்ட பேசறேன்.. " என ஆறுதல் படுத்திய வாசு விசாகனின் அறைக்குச் சற்று கோபத்துடனே சென்றான்...

( தேவா ராஜிய பத்தி அடுத்த பதிவுல தெளிவா பார்க்கலாம்பா..சிங்கிள் சண்முகனுக்கும் ஜோடி கம்மிங் )
விசாகன் கோபப்படற அளவுக்கு ரோகிணி என்ன பண்ணியிருப்பா?

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz