என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)
26.என்னை மறந்தாயோ கண்ணம்மா
உதயனும் வாசுவும் பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்குச் செல்ல, அங்கே பாஹீ இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை.. வாசுவிற்கோ இனி அடுத்த தடவை பாஹீக்கு கோபம் வந்தால் அவரின் நிலை கவலைக்கிடமாகி விடும் என்று ரஞ்சித் கூறிய வார்த்தையே காதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது..
அனைத்து பிரச்சனைகளும் முடிந்து சந்தோசமாக இருக்க வேண்டிய இந்நேரத்தில் பாஹீயின் உடல்நிலையால் துவண்டு போயிருந்தான்..
மகனுக்கு தந்தை ஆறுதல் சொல்வதா..தந்தைக்கு மகன் ஆறுதல் சொல்வதா என தெரியாமல் இருவரும்
துக்கத்தின் பிடியில் தங்களைப் பறிக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.. அடுத்த அரை மணி நேரத்தில் விசாகன் பாஹீயை கையிலேந்தியபடி உள்ளே வர, இரஞ்சித் அவருக்கான மருத்துவ அறையை ஏற்பாடு செய்து முன்பு போல அவரது கைகளுக்கு விலங்கிட்டு தன் சிகிச்சையை ஆரம்பித்தான்..
வெளியே ரோகிணியும் சண்முகனும் வாசுவைக் கட்டிக் கொண்டு அழுது கொண்டிருந்தனர்..
" அப்பா எனக்கு ரொம்ப பயமா இருக்குப்பா.. அம்மாக்கு ஒன்னும் ஆகாது தான "
" அம்மா திடீர்னு தேவா..ம்ம்.. தேவாவ கொல்லனும்னு கத்த ஆரம்பிச்சாங்கப்பா.. அவுங்க அவரையே அடிச்சிட்டாங்கப்பா "
அவள் பாட்டிற்கு புலம்பிக் கொண்டிருக்க, அப்போதுதான் விசாகனின் நெற்றியில் இரத்தம் வடிந்து காய்ந்திருப்பதைப் பார்த்தான்.. அன்று சுந்தர்..இன்று அவரது மகன் விசாகன் என பாஹீயின் கோபத்திற்கு பலியாகி போயினர்..
இரஞ்சித் அவரது மருத்துவ கோப்புகளை ஆராய்ந்துவிட்டு வெளியே வந்தான்.. அனைவரும் பதற்றமாக அவனைச் சூழ்ந்து கொள்ள,
" வாசு சார்.. நான் கடைசி தடவை சொன்னது போலதான் அவுங்க நரம்புகள்ல ஏற்பட்ட பாதிப்பால ஒன்னு அவுங்க கோமா ஸ்டேஜ்க்கோ..இல்ல புத்தி சுவாதீனம் இல்லாம போக நிறைய வாய்ப்பிருக்கு.. முன்னாடி அவுங்க கோபத்திலிருந்து வெளியவர காரணமா இருந்தது நீங்கதான்..ஏன்னா நீங்க அவுங்க குடும்பத்தையே அழிச்சதா நினைச்சாலும் அவுங்க உங்க மேல வெச்சிருந்த காதலால அவுங்க அந்த நிலைல இருந்து மீண்டு வந்தாங்க.. ஆனா இப்போ வாசுவும் தேவாவும் வேற வேறன்னு அவுங்க ஆள்மனசு ஏத்துக்கிச்சு.. இனி தேவாவ பாரக்கற வரை அவுங்க பழைய நிலைக்கு வரமாட்டாங்க"
" தேவா தான் இதுக்கு ஒரே வழியா"
" அப்படி இல்ல.. இப்போதைக்கு அது ஒன்னு தான் வழி..நான் யூ.எஸ்ல இருந்து நியூரோஸ்பெசலிஸ்ட் மிஸஸ்.பூர்ணிமா சீதாராமன் மேடம்கிட்ட ரெக்யூவஸ்ட் பண்ணி கேட்டதால அவுங்க இந்தியா வர சம்மதிச்சிருக்காங்க.. கண்டிப்பா அவுங்க ஈஸ்வரியம்மாவ குணப்படுத்திடுவாங்க.. ஆனா அதுவரை ஈஸ்வரியம்மாவ நாம பத்திரமா பாத்துக்கனும்.. அவுங்க அதிக டிப்ரஸனுக்கு போக கூடாது.. புரியற மாதிரி சொல்னும்னா அவுங்க கோபமும் படனும்..அதேசமயம் கோபமும் படக்கூடாது.. "
அவன் சொன்னது யாருக்குமே புரியவில்லை..
" அதாவது கோபப்பட்டா அவுங்க டிப்ரெஸன் குறையும்.. உணர்வுகள் வெளிவந்துட்டாவே பாதி பிரச்சனை குறைஞ்சிடும்..அது அவுங்க மனசுக்கு நல்லது..
அதேசமயம் அவுங்க கோபப்பட்டா அவுங்களோட உடல்நிலை ரொம்ப மோசமாகிடும்..ஏன்னா அவுங்களோட கோபத்தோட அளவு நம்ம எல்லாருக்குமே தெரியும்.. அந்த கோபத்த அவுங்க மூளையால தாங்கிக்க முடியாது.. தலையே வெடிக்கற அளவுக்கு வலிக்கும் "
" என்னதான் சொல்ல வர ரஞ்சித் "
விசாகன் சற்று விரக்தியுடனே கேட்க,
" அவுங்க கோபப்படணும்..ஆனா அளவா..அதாவது அவுங்களோட ஆங்கார கோபம் இல்லாம சாதாரண மனுசனுக்கு வரக்கூடிய கோபம் அதுவும் தேவா மேல.. அப்போதான் அவுங்க ஆழ்மனசு கொஞ்சமாச்சும் நிம்மதியடையும்.."
" அப்போ தேவா வந்தா அத்தைய குணப்படுத்திடலாமா ரஞ்சித்" என்று அங்கே அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த தேவாவையும் உத்ராவையும் நோக்கி கேட்டான் விசாகன்..
அனைவரும் பாஹீயின் இந்த நிலைக்கு காரணமான தேவாவை கோபமாக பார்க்க, ரோகிணியோ வாசுவின் நெஞ்சுக்குள் ஆழப் புதைந்து கொண்டாள்.. ஆனால் அவளை கவனிக்காத தேவா மருத்துவ உடையில் இருந்த ரஞ்சித்தை நோக்கி " டாக்டர்..ஈஸ்வரி மேடம் கொல்ல நினைக்கற தேவா நான் தான் .. நான் செஞ்ச பாவத்துக்கு சாபவிமோசனமா அவுங்க கையாலயே செத்தாலும் பரவால.. நான் சாக தயாரா இருக்கேன்.. என்னை அவுங்ககிட்ட கூட்டிட்டு போங்க " என்றான்..
ரஞ்சித் தயங்க " ப்ளீஸ் டாக்டர்.. அவுங்கிட்ட நான் மன்னிப்பு கேட்கனும்.. ப்ளீஸ் " எனக் கெஞ்ச, கேஎஸ்ஆராய் இதுவரை பார்த்து வியந்தவன் தேவாவாய் கெஞ்சியதனைப் பார்க்க பாவமாகத் தான் இருந்தது..
" ஆனா உங்கள அவுங்க தீவரமா தாக்க அதிக வாய்ப்பிருக்கு சார்"
" பரவாயில்லை டாக்டர்.. பூமிக்கு பாரமா நான் இருக்கறத விட ஒரு நல்லவங்க திரும்பி வரதுதான் முக்கியம் ..என் முட்டாள்தனத்தால இந்த குடும்பம் பட்ட கஷ்டமெல்லாம் போதும்.இனியாச்சும் அவுங்க சந்தோசமா இருக்கட்டும்" என்றதும் ரஞ்சித் தேவாவை உள்ளே
அழைத்துச் செல்ல நினைக்க,
வாசு " வேண்டாம் டாக்டர் சார்.. என் மனைவிக்காக வேற ஒருத்தர் பாதிக்கப்படறத நான் விரும்பல.. நீங்க டாக்டர் மேடம் வந்த பின்னாடி டிரீட்மென்ட் ஆரம்பிச்சிக்கலாம் " என்றான் தேவாவின் பார்வையிலிருந்து ரோகிணியை மறைத்தபடி..
ஆனால் அவன் கண்கள் ராஜியின் மருஉருவமாய் நின்றிருந்த ரோகிணியின் முகத்தைக் காணவே எத்தனித்தது.. ஏனோ ஒரு தடவை தன் மகளைக் கண்டுவிட மாட்டோமா என்கிற ஏக்கம் அருவியாய் வழிந்தது..
" வாசு சார் நீங்க பிடிவாதம் புடிக்கறதுல எந்த புரோயஜனமும் இல்ல.. டாக்டர் வரவரைக்கும் ஈஸ்வரியம்மாவ மயக்கத்துல வெச்சிருக்கறது ரொம்ப ஆபத்து "
தேவா வாசுவை கெஞ்சும் பார்வை பார்க்க, வாசுவின் நெஞ்சமும் கொஞ்சம் கனிந்தது..
" நான் ஒத்துக்கறேன்..ஆனா இதை காரணமா கொண்டு என் மகள யாரும் உரிமை கொண்டாட கூடாது "
உறுதியாய் ஒலித்தது அவனது குரல்..
விரக்தியாய் புன்னகைத்தவன் " என் ராஜிக்கு செய்த பாவத்துக்கு என் மகள நான் பிரிஞ்சு வாழறதுதான் எனக்கு சரியான தண்டனையா இருக்கும் வாசுதேவரே..
என் மக உங்ககிட்டயே இருந்தாதான் சந்தோசமா இருப்பா " என்றான்..
ரோகிணி வாசுவின் நெஞ்சில் முகம் புதைத்திருக்கும் அழகே சொல்லியது வாசு ரோகிணியின் உறவின் ஆழத்தை.. அந்த அழகான உறவை உரிமை என்ற பெயரில் பிரிக்க அவன் மனம் விளையவில்லை..
ஒரே ஒருமுறை மட்டும் திரும்பி ரோகிணியைப் பார்த்துவிட்டு மருத்துவ அறைக்குள் புகுந்தார் தேவா..
பாஹீ அரை மயக்கத்தில் இருந்தார்.. ரஞ்சித் தேவாவிற்கு சில ஆலோசனைகளை வழங்கினான்..அதன்பின்பு தேவா பாஹீயிடம் பேச ஆரம்பித்தான்..
" ஈஸ்வரி மேடம்..நான் தான் தேவா..உங்க தங்கை ராஜியோட காதலன்னு நீங்க நினைச்சிட்டு இருக்கிறவன்..
என்னை மன்னிப்பீங்களா இல்லையான்னு எனக்குத் தெரியாது மேடம்..ஆனா உங்ககிட்ட எல்லாத்தையும் ஆரம்பத்திலிருந்தே சொல்லி மன்னிப்பு கேட்கனும்னு தோணுது.. " என்றவன் இதுவரை நடந்த உண்மைகளை ஒன்றுவிடாது அவரிடம் கூறினான்.
"உங்க கணவர் மாதிரி வாழ்க்கைத் துணை கிடைக்க நீங்க கொடுத்து வெச்சிருக்கனும்..மேடம்.. மனைவி உயிரோட நல்லபடியா வாழ்ந்தா போதும்னு உங்கள விட்டு இத்தனை வருசம் பிரிஞ்சி இருந்துருக்காரு..ஆனா நான் ஒரு நயவஞ்சகனோட பேச்சைக் கேட்டு என் ராஜிய தவிக்க வெச்சிட்டேன்.. அவள நான் ரொம்ப காயப்படுத்திட்டேன்.. நான் ஒரு முட்டாள்..நான் உங்களுக்கு செஞ்ச பாவத்துக்கு தான் இப்போ பெத்த மக முகத்துல முழிக்க தைரியம் இல்லாம தவிக்கிறேன் மேடம்..
என்னை தண்டிக்க கூட இப்போ ஆளில்ல.. நீங்க உங்க கையால என்னை குத்திக் கொன்னாலும் எங்கம்மாவே என்னை தண்டிச்சமாறி நினைச்சி சந்தோசமா செத்துருவேன்மா.. எனக்கு தண்டனை தந்து நான் பண்ண பாவத்துல இருந்து எனக்கு விடுதலை கொடுங்கம்மா " என்றவன் அவரது கைவிலங்கை விடுவித்தான்..
வெளியே அனைவரும் கடவுளை வேண்டியபடி இருக்க, அவர்கள் வேண்டுதல் இறைவனின் செவிப்பறையில் விழுந்ததோ என்னவோ டாக்டர்.பூர்ணிமா மருத்துவமனை வந்து சேர்ந்தார்..
ஐம்பதுகளின் தொடக்கத்தில் இருந்தவரை இன்னும் இளமையாகத் தான் காட்டியது அவரது துடிப்பும் நடையும்..
ரஞ்சித் அவர்களை வாசுவிடம் அறிமுகப்படுத்தி வைக்க வாசுவிற்கோ அவரை இதற்கு முன்பு எங்கோ சந்தித்தது போன்ற உணர்வு..
பாஹீயின் மருத்துவகுறிப்புகளை ரஞ்சித் அவருக்கு முன்பே அனுப்பியிருந்ததால் இன்னும் இரண்டு மணி நேரத்தில் அறுவைச் சிகிச்சை செய்து விடலாம் என்று அவர் கூறவும் நிம்மதியாக இருந்தது அனைவருக்கும்..
வாசு மட்டும் இவரை எங்கு சந்தித்தோம் என்று யோசித்துக் கொண்டே இருக்க,தன் மடியில் தலைவைத்து படுத்திருக்கும் ரோகிணியை பார்த்ததும் அவரை எங்கு பார்த்தோம் என்று கண்டுபிடித்துவிட்டான் வாசு..
ராஜிக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் மிஸ்.பூர்ணிமா சீனிவாசன் தான் இப்போது திருமணமாகி மிஸஸ்.பூர்ணிமா சீதாராமனாக மாறியிருக்கிறார் என்று.. அன்று பிரசவம் பார்க்கும் மருத்துவர் விடுப்பு விடுத்த அந்த அசாதராண சூழ்நிலையில் ராஜியின் கதறலைக் கண்டு பொறுக்க முடியாது தானே ராஜிக்கு பிரசவம் பார்க்க சம்மதித்து உள்ளே அழைத்துச் சென்றவர் ஏனோ சோகமுகமாய் தனக்கு மிகவும் நெருங்கியவர்களே இறந்ததுபோன்று முகத்தை வைத்துக் கொண்டு ராஜி இறந்து விட்டார் என்று கூறியவரினை மறக்க முடியுமா அவரால்.. இதில் அவரது தவறு என்ன.. விதியின் வினை என்று நினைத்துக் கொண்டு குழந்தையும் இறந்துவிட்டது என்று கூறி விடுங்கள் சகோதரி என அழுது கைக்கூப்பி கெஞ்சியவனிடம் சம்மதமாய் தலையசைத்த பின் தான் பருவதத்தைக் கூட்டிக் கொண்டு பெரிய குளத்திற்கு சென்றது..
சிந்தனையின் பிடியில் உலன்றவனை உதயனின் குரல் கலைத்தது..
" அப்பா டாக்டர் உங்கள உள்ள வரச் சொன்னாங்கப்பா " என்று ஒரு கேபினைக் காட்ட, அவனும் உள்ளே சென்றான்..
" டாக்டர் என் மனைவிய குணப்படுத்திடலாம் தானே "
அவன் குரலில் அத்தனை பதற்றம்.. பயம்.. நடுக்கம்..
அவன் அணிந்திருந்த கருப்புச் சட்டையை ஏற இறங்க பார்த்தவர் "முதல்ல உட்காருங்க மிஸ்டர்.வாசு.. உங்க மனைவி பாஹீய கண்டிப்பா குணப்டுத்திடலாம்.. அவுங்களக்கு எதுனால இந்த பிரச்சனைன்னு தெரியாத காரணத்தாலதான் டாக்டர் ரஞ்சித் ஒரு வாரத்துக்கு முன்னாடி கேட்டப்ப கூட என்னால உறுதியா எதுவும் சொல்ல முடியாம இருந்தது.. ஆனா இப்போதான் கரண்ட்சாக்கால தான் அவுங்க நரம்புகள் அதிகமா பாதிக்கப்பட்டு இருக்குங்கறது தெரிஞ்சதால அவுங்கள ஈசியா குணப்படுத்திடலாம்.."
அவர்பேசி முடித்தபின் தான் வாசுவிற்கு உயிரே வந்தது..
" ரொம்ப நன்றி டாக்டர் "
" இது என்னோட கடமை சார்.. " என்றவர் சற்று தயங்கியவாறு
" என்னை உங்களுக்கு அடையாளம் தெரியுதா " என்றார்..
" தெரியுது டாக்டர் "
" அன்னைக்கு உங்களுக்கு என்னால உதவ முடியல "
" இல்லை டாக்டர்.. அதுல உங்க தப்பு எதுவும் இல்ல "
" வாசு சார் நான் உங்ககிட்ட மன்னிப்புக் கேட்டுக்கறேன்.. நான் உங்ககிட்ட உண்மைய மறைச்சிட்டேன்..சத்தியமா சொல்றேன்..நான் எந்தவொரு கெட்ட எண்ணத்துலயும் அந்த மாதிரி செய்யல"
அவர் பேச பேச வாசுவிற்குத் தான் அவர் எதைப்பற்றி பேசுகிறார் என்ற குழப்பம் தோன்றியது..
" அந்த குழந்தை இங்க இருக்காங்களா "
வாசுவும் ஆமா டாக்டர் என் பொண்ணு ரோகிணி இங்க தான் இருக்கா என்றதும்
" சாரி வாசு சார்..ரஞ்சித் அன்னைக்கு பாஹீஸ்வரி மேடமோட ரிப்போர்ட் சென்ட் பண்ணும்போது உங்க குடும்பத்தைப் பற்றியும் உங்க வாழ்க்கைல நடந்தது பற்றியும் சொல்லியிருந்தாங்க.. அப்போதான் நான் பண்ண உதவியால உங்க வாழ்க்கை எப்படி மாறியிருக்குனு தெரிஞ்சுது..அதுனால தான் நான் இங்க உடனே வந்துட்டேன்.. "
" டாக்டர் தயவுசெஞ்சு சுத்தி வளைக்காம நேரடியா சொல்லுங்க"
" அன்னைக்கு நீங்க கொண்டு வந்து சேர்த்த பேசன்ட் ராஜேஸ்வரி குழந்தை பிறந்து மயக்கம் தெளிஞ்சதும் தற்கொலைக்கு முயற்சி பண்ணாங்க..அவுங்கள தடுக்க நான் அந்த குழந்தை மீது சத்தியம் வாங்கி அவுங்கள நிறுத்தி வெச்சேன்..ஆனா அவுங்க தன்னாலதான் தன் அக்கா வாழ்க்கையும் மாமா வாழ்க்கையும் கஷ்டத்துல இருக்கு..தான் செத்துட்டா எல்லா பிரச்சனையும் சரியாகிடும்னு கெஞ்சி கேட்டாங்க.. எனக்கு அவுங்கள பார்க்க பாவமா இருந்துச்சு.. எங்க அவுங்கள விட்டா குழந்தையும் கொண்ணுட்டு அவுங்களையும் செத்துருவாங்கனு பயமா இருந்தது.. அதுனால தான் உங்களுக்கு நல்லது செய்யறேன்னு சொல்லி குழந்தைய மட்டும் உங்ககிட்ட கொடுத்துட்டு அவுங்க மனசு மாற வரைக்கும்
எங்களோட இருக்கட்டும்னு
என் சிஸ்டரோட மலேசியா அனுப்பி வெச்சிட்டேன்..
உங்க மனைவி வொயிட் சேரி கட்டியிருந்தத பார்த்ததும் மனசு கேட்காம நீங்க உயிரோடதான் இருக்கீங்கனும்
ராஜியோட குழந்தை சாகலைன்னும் அவுங்கள ஆறுதல் படுத்தினேன்..அப்பாவாச்சும்
அவுங்க உங்களை புரிஞ்சு சேர்ந்து வாழ்வீங்கனு நினைச்சுத்தான் அப்படி பண்ணேன்..
அடுத்து கொஞ்சநாள்ல ராஜிய கூட்டிட்டு ஊருக்கு வந்தா நீங்க எல்லோரும் அந்த ஊரை விட்டே போயிட்டீங்க.. உங்கள எப்படி கான்டேக்ட் பண்றதுன்னே தெரியல..அடுத்து எனக்கும் கல்யாணமாகி வெளிநாட்டுல செட்டில் ஆகிட்டேன்..
ஆனா ராஜியோட உயிர காப்பாத்த நான் செஞ்ச அந்த தப்பால உங்க வாழ்க்கை திசை மாறி போயிடிச்சு.. "
என்று முடிக்கவும் வாசுவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை..
அவரை திட்டவா பாராட்டவா என்று புரியாது " இப்போ ராஜி எங்க இருக்கா"
என்றான்.
" அவுங்க இந்தியா வரை இத்தனை வருசம் மறுத்துகிட்டே இருந்தாங்க. ' செத்தவ செத்தவளாவே இருந்துட்டு போகட்டும்னு உறுதியா இருந்தாங்க..இப்போ உங்களைப் பத்தி உண்மை தெரிஞ்சவுடனே இங்கவர சம்மதிச்சிட்டாங்க.. நாளைக்குள்ள இங்க வந்திடுவாங்க "
இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும்போது ரஞ்சித் அவசரமாக கதவைத் திறந்து " டாக்டர் எமெர்ஜென்ஸி..ஈஸ்வரியம்மா..மயக்கம் தெளிஞ்சு ஆர்பாட்டம் பண்ணிட்டு இருக்காங்க..சீக்கிரம் வாங்க.."என்றான்..
இங்க நிறைய பேருக்கு ராஜிய திரும்ப கொண்டு வந்தது ஓவர் சினிமாட்டிக்கா இருக்கும்..ஆனால் கதைங்கறது நம்ம சந்தோசத்துக்கு தானே.. தேவாவ நினைச்சா கஷ்டமா இருந்துச்சுப்பா..அதுனாலதான் இந்த திடீர் முடிவு..யாரும் கோவீக்காதீங்கப்பா..
ராஜி வந்ததும் தேவா ரோகிணி என்ன செய்வாங்க..
பாஹீ முழுமையா குணமடைந்து வி்டுவாரா..
என்பதை அடுத்த பகுதியில் காண்போம்.. 😍😍
என்றும் அன்புடன்
நிவேதாமகதி.. 🙃
Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz