ZingTruyen.Xyz

என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)

25. என்னை மறந்தாயோ கண்ணம்மா

Nivethamagathi

கதிரவன் தன் ஆதிக்கத்தை செலுத்த துவங்கியிருக்க,அவனது சீற்றத்திற்கும் சற்றும் குறைவில்லாமல் பொங்கிய கோபத்தோடு தன்னைச் சுற்றி காவலாளிகள் துப்பாக்கியோடு ஆங்காங்கே நின்றிருந்தாலும் அதனை பொருட்படுத்தாது வீறு கொண்ட சிங்கமாய் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கம்பீரமாய் உள்ளே நடந்து வந்த வாசுதேவ மூர்த்தியைக் கண்டதும்,
அவனது கம்பீரத்தில் ஒரு நொடி வியந்துதான் போனான் தேவா..

நடுக்கூடத்தில் தேவா அமர்ந்திருக்க, உள்ளுக்குள் ஆயிரம் போராட்டம்.. தான் கொல்ல நினைத்த எதிரி..தன்னை தனியாளாக ஆக்கி தனது பெண்ணையும் தன்னிடம் இருந்து பிரித்த நயவஞ்சகன் தன்னை நோக்கி..தன் இருப்பிடத்திற்கே  எந்தவித பாதுகாப்புமின்றி வந்திருக்கிறான்.. அவனை தன் கையாலே கழுத்தை நெறித்து கொன்று விட வேண்டும் என்ற கோபத்தீ அவனுக்குள் கொழுந்துவிட்டு எறிந்தது..
அதே சமயம் உதயன் கூற்றின்படி எதையும் அவனிடமே பேசிப் பார்த்துவிடலாம் என்றும் தோன்றியது..

ஆனால் அந்த எண்ணம் வாசுவை பார்க்காத வரை மட்டுமே .. வாசுவையும் அவனது கருப்புச் சட்டையையும் பார்த்ததுமே நேராக அவனது சட்டையைப் பற்றினான் தேவா.. வாசுவும் அதே கோபத்தில் தானே வந்திருந்தான்.. தனது சட்டையைப் பிடித்தால் சும்மாய் இருப்பானா.. அவன் கையை உதறிவிட்டு ஓங்கி அவனது மூக்கில் குத்திவிட்டு, இந்த முறை இறுக்கமாய் அவன் நகர்ந்து விடாதபடி தேவாவின் சட்டையை கொத்தாய் பிடித்தான்..

அவன் பிடியில் இருந்து மீளமுயற்சி செய்து கொண்டிருக்கும்போதே பாதுகாவலர்கள் வாசுவை சுற்றி வளைத்தனர்.. தேவா அவர்களை விலகியிருக்கும்படி கண்ணசைக்க அவர்களும் சற்று பின்தள்ளி நின்றனர்..

" என்ன வாசுதேவரே.. என் வீட்டுக்கே வந்து என்மேல கை வைக்கற அளவுக்கு துணிச்சல் வந்திடுச்சா..ஊரை விட்டு ஓடி ஒளிஞ்ச கோளை தான நீ "

அவன் முகத்தில் மீண்டும் ஒரு முறை குத்தியவன் " முதுகுல குத்துற துரோகிக்கு என்னை பத்தி பேச எந்த தகுதியும் இல்ல " வாசு
தேவாவின் சட்டையை விட்டு விட, அடித்த வேகத்தில் பின்னிருந்த சோபாவில் போய் விழுந்தான்..

தேவா தனியாக சென்றதும் வாசுவை நான்கு பாதுகாவலர்கள் துப்பாக்கி முனையில் நிறுத்தி வைத்தனர்..

அவர்களிடம் ஏளனப் புன்னகையை சிந்திய வாசு கண்ணிமைக்கும் நேரத்தில் தனக்குப் பின் நின்றிருந்த இருவரிடமிருந்து துப்பாக்கியை கைப்பற்றி, அந்த துப்பாக்கி கொண்டே தன்  முன்னே நின்றிருந்த இருவரின் துப்பாக்கியையும் தட்டிவிடச் செய்தான்..

அடுத்து அவர்களுடன் ஒரு சண்டை நடக்க, காட்டு வேலை செய்து உரமேறிய அவன் கையில் அடிக்கும் ஒவ்வொரு அடியும்  இடி போல அவர்களை தாக்கியது..
மீண்டும் தன்னை அடிக்க வந்த அவர்களிடம்
" இங்கப் பாருங்க.. நீங்க உங்க கடமையைச் செய்யறீங்க.. ஆனா அதுல தப்பித் தவறி உங்க உயிர் போறத நான் விரும்பல.. நான் பேச வேண்டியத பேசிட்டு போயிடறேன் .. அதுவரை கொஞ்சம் அமைதியா இருங்க.. " என்று கட்டளையாய் சொல்ல அவன் குரலில் உள்ள ஏதோவொன்று அவர்களை அமைதியடையச் செய்தது..

அதுவரை நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த தேவா ஒரு ஏளன சிரிப்போடு கைத்தட்டி, " வாவ்..எக்சலன்ட்..வாசுதேவரே..நானும் உங்க வாய்ஜாலத்தை மத்தவங்க சொல்லிதான் கேள்விபட்டுருக்கேன்..ஆனா இப்போதான் நேர்ல பார்க்குறேன்.. ம்ம்..பெரிய ஆளு தான்பா நீ.. எங்கிட்ட சம்பளம் வாங்கற என் கார்ட்ஸயே உன்பேச்சுக்கு கட்டுப்பட வெச்சிட்டியே " கேலியாக சொல்ல,

அங்கிருந்த பாதுகாவலர்களில் தலைமையானவன் " சார்...சாரி " என ஆரம்பிக்க, " இனி உங்க பாதுகாப்பு எனக்கு ஒன்னும் தேவையில்ல.. மொதல்ல இங்கிருந்து நீங்கலாம் வெளிய போங்க " என்றதும் அனைவரும் தலைகுனிந்தபடியே வெளியே சென்றனர்..

அவன் கோபமாய் வாசுவைப் பார்க்க வாசு அவனை வெறித்து ஒரு பார்வை பார்த்து வைத்தான்.

" உனக்கு இப்போ சந்தோசமா இருக்குமே..என்னைச் சுத்தி யாருமே இருக்கக் கூடாது..தனி மரமா நான் நிக்கனும்..அதுதானே உன்னோட பிளான்.. நீ ஜெயிச்சிட்டில்ல.. சந்தோசமா.. என் தங்கையோட காதல பறிச்சு என் அப்பாவ தூண்டிவிட்டு அவுங்க ரெண்டு பேரையும் சாக வெச்சிட்டு நீ மட்டும் குடும்பத்தோட சந்தோசமா இருந்தியே..அது தப்பு இல்லையா...
ஊருக்கு முன்னாடி நல்லவன் வேசம் போட்டுக்கிட்டு உன் மனைவிக்கு கூட தெரியாம திருட்டு, தப்பான சகவாசம்னு சரியான பொறுக்கியா தான்டா நீ இருந்த.. உன் மாமனாரே உங்கிட்டருந்து அவர் பொண்ணயும் பணத்தையும் காப்பாத்த போலிஸ் கம்ளெயின்ட் கொடுத்ததெல்லாம் மறந்து போயிடுச்சா உனக்கு..

அதையெல்லாம் உன் பையனுக்கு தெரிஞ்சா..ச்சீ போன்னு உன் முகத்துல முழிக்காம போயிருவான்..ச்சே.. நீ எப்படி வேனா கெட்டுப்போ..எனக்கு அதைப் பத்தி கவல இல்ல.. ஆனா என் மகள..எங்கிட்டருந்து பிரிச்சு வெச்சிருக்கியே.. அதை தெரிஞ்சபின்னாடியும் உன்னை பார்த்துட்டு சும்மா இருக்க சொல்றீயா..பொறுக்கி ராஸ்கல்.."
வாசுவைப் பற்றி தனக்கு தெரிந்தவற்றை கொலைவெறியுடன் கூறிய தேவா ஆத்திரத்தில் தன் பலங்கொண்டு வாசுவைத் தாக்கினான்..

வாசு அவனைத் தடுக்கவில்லை.. சிலையாக அமைதியாக அப்படியே நின்றிருந்தான்.. அடித்தடித்து கலைத்துப் போன தேவா மூச்சு வாங்க வாசுவைப் பார்க்க,

உதட்டில் வழியும் இரத்தத்தை துடைத்து
"என்னை அடிச்சதால உன் ஆத்திரம் குறைஞ்சிருக்கும்னு நம்பறேன்.. உனக்கு என்மேல தான கோபம்..அதான் என்னை தாக்கிட்ட..எல்லாம் இப்போ சரியா போயிடுச்சு..ஆனால் இழந்த என் உறவுகள உன்னால திருப்பித் தர முடியுமா " என முழங்க, அவனுக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் அப்படியே நின்றான் தேவா..

" உன்னால என் உறவுகள திருப்பித் தர முடியுமா..இந்த இருபத்தி மூனு வருசம் நானும் பாஹீயும் பட்ட கஷ்டத்த ஈடு செய்ய முடியுமா.. "

அவன் பதில் சொல்லாது இருக்க தானே தொடர்ந்தான்..
" நீ உன் குடும்பத்த இழந்த கோபத்துல என்ன தப்பு பண்ணியிருந்தா கூட மன்னிச்சிருப்பேன்.. ஆனா ஒன்னுந்தெரியாத அந்த பச்சை மண்ண காதலிச்சி புள்ளையோட விட்டுட்டு போனியே அதை என்னால மன்னிக்கவே முடியாதுடா.. அந்தப் புள்ளை உனக்கு என்னடா பாவம் பண்ணுச்சு.. தனக்காக ஒரு குடும்பம் இருந்தும் எல்லாத்தையும் ஓரங்கட்டிட்டு உன்னை நம்பிதானடா உன் கையால தாலி வாங்குனா.. அவ சாகும்போது என்னை நினைச்சிட்டு செத்துருப்பா.. ச்சே.. நீயெல்லாம்...உன்னை அடிச்சா எனக்கு கேவலம்.. இங்கப்பாரு நான் உங்கிட்ட பழசப்பத்தி பேச வரல.. நான் வந்தது என் பாப்பாவுக்காக.. என் மக ரோகிணிக்காக..
ரோகிணி என்னோட மக..அவள உரிமை கொண்டாட உனக்கு எந்த தகுதியும் இல்ல..நீ அவளோட அப்பாங்கற தகுதி என்னைக்கு அவ அம்மாவையும் அவ பிறப்பையும் மத்தவங்க தப்பா பேசற மாறி விட்டுட்டு போனியோ அப்பவே போயிடுச்சு..
அவ கருவா வயித்துல உருவாக காரணமா இருந்த ஒரு காரணத்துக்காக நீ வந்தவுடனே அவள உங்கிட்ட தூக்கித் தர முடியாது.."

அவன் பேசப் பேச ராஜிக்கு அவன் செய்த துரோகம் கண் முன்னால் வந்து நின்றது.. தாயின் மறைவில் காதல் மனைவியை தவிக்க விட்டு சென்று கோழைத்தனமாய் தினந்தினம் அதையே நினைத்து மனம் வெந்து கண்ணீர் சிந்தியது என அனைத்தும் ஞாபகம் வந்து அவனைக் கொன்றது..

அவன் காதல் நிஜம்.. ராஜியை ஆசையாக மணந்தது நிஜம்..அதனை பழி வாங்கும் நோக்கில் அவன் செய்யவில்லையே..தாயை இழந்த  தன்னை தேற்றுவார் யாருமில்லாது போக, அந்த ரகுபதியின் பேச்சைக் கேட்டு மனமாறுதலுக்காக ராஜியிடம் கூட சொல்லாது வெளிநாடு போனது தனது வாழ்க்கையையே மாற்றி விட்டதே..

எட்டு மாதங்கள் கழித்து திரும்பி வந்தவன் தன் மனைவியைப் பார்த்து
உண்மையை உறைத்து அவளை தன்னில்லம் கூட்டி வந்துவிடலாம் என்ற ஆசையில்
அவன் ராஜியைப் பார்க்க அவள் இல்லத்திற்கு செல்ல, அவன் கண்டதோ
இரத்த வெள்ளத்தில் கீழே கடந்த ரேவதி, மாணிக்கத்தின் உடலையும், ரகுபதியிடமிருந்து தப்பிக்க போராடிக் கொண்டிருக்கும் சுந்தரையும் தான்..

சுந்தரும் தேவாவும் ஒன்றாக மருத்துவம் பயின்றவர்கள்..அந்த நிலையிலும் சுந்தர் தேவாவைக் கண்டதும் அவனை பெயர் சொல்லி அழைக்க, அவனது கவன சிதறலை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ரகுபதி சுந்தரின் வயிற்றில் கத்தியை இறக்கிவிட்டு தப்பித்து ஓடிவிட்டான்..

நொடியில் நிகழ்ந்த அந்த நிகழ்வில் அதிர்ந்து போனவன் சுந்தரை நெருங்க, அவன் தேவா என்று அழைத்தவாரே உயிரை விட்டிருந்தான்.. விசாகன் இந்த நிகழ்வைத் தான் சிறுவயதில் பார்த்து தேவாதான் கொலைகாரன் என நம்பியது..

ரகுபதியின் மீது கோபம் கொண்ட தேவா அவனைத் துரத்திப் பிடிக்க அவன் பின்னே சென்றுவிட, இங்கே பழி வாசுவின் மீது வந்து விழந்தது..

ரகுபதியோ அந்தக் கொலைகள் அனைத்தும் தேவாவிற்காகத் தான் செய்தேன்..அவன் தனிமரமாய் நின்று கஷ்டப் படுவதை பார்க்க முடியாது அவர்களிடம் உண்மையை கூறி ராஜியை தேவாவிடம் அனுப்பி வைக்க கேட்கப் போய் அவர்கள் மறுத்து தேவாவை தரக்குறைவாக பேசியதால் தெரியாது ஆத்திரத்தில் கொலை செய்து விட்டேன்..எப்படியாவது  அந்தக் கொலையில் இருந்து காப்பாற்றுங்கள் என கெஞ்சி காலில் விழுந்து அழுதாலும் தேவாவிற்கு மனம் ஏற்கவில்லை..ஆனால் அவன் அழுது கரைந்து பல நாடகங்கள் போட்டு அவன் மனதை மாற்றியிருந்தான்.. இது தேவா செய்த மற்றுமொரு குற்றம்..

மூன்று நாள் கழித்து வாசு வர,அங்கே பாஹீயின் கோபத்தால் நடக்க கூடாதது எல்லாம் நடந்து முடிந்தது.. தேவாவிற்கு கடைசியாக வேலுவின் மூலம் வந்த செய்தி ராஜியும் குழந்தையும் இறந்து போனதும் வாசு பாஹீயைப் பிரிந்து தாயுடன் ஊரை விட்டு சென்றதும் தான்..

ராஜி இறந்ததை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..பித்து பிடித்தவன் போல் அவள் பெயரையே கூறிக்கொண்டு ஒரு அறையில் முடங்கிவிட்டான்.. அச்சமயம்தான் அவன் நண்பர்கள் வந்து ஆறுதல் சொல்லி அவன் கவனத்தை தொழிலை கவனிக்கும்படி திசை திருப்பினர்.. அந்த தேவாவிற்கு வாசுவை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை.. பூமிக்கு பாரமாய் வாழ ஆரம்பித்தான்.. ஆனால் அவையனைத்தும் அன்று மருத்துவமனையில் விசாகனும் உதயனும் அவனை அடிக்கும்வரை மட்டுமே..

வாசு திரும்ப வந்து குடும்பத்தோடு வாழ்கிறான் எனத் தெரிந்ததுமே அவனது கோபம் மீண்டும் உயிர்பெற்றது.. தன் செல்வாக்கைப் பயன்படுத்தி ஈஸ்வரி கம்பெனிக்கு பல இடையூறுகளை கொடுக்க ஆரம்பித்தான்.. அவனைப் பொறுத்த வரை அவன் செய்வது சரி..இது தவறு..சரியென வழிப்படுத்த அவனுக்கென்று யாருமில்லை..ஆனால் இனி தனக்கென ஒரு மகள் இருக்கிறாள் என்று தெரிந்ததில் இருந்து அவனது ஒவ்வொரு அணுவும் அவளைக் காண துடிதுடித்துக் கொண்டிருந்தது..ஆனால் அவளைக் காண அவனுக்கு தகதியில்லை என்றதும் பெத்த மனம் வலிக்கத் துவங்கியது.. அவனைப் பொறுத்தவரை அவன் ஒரு துர்பாக்கியசாலி.. எந்த சந்தோசத்தையும் அனுபவிக்க அவனுக்கு கொடுத்து வைக்கவில்லை என்ற சுயஇரக்கம் சூழ்ந்துகொள்ள வலியோடு வாசுவைப் பார்த்தான்..

" கடைசியா உங்கப்பாகிட்ட பேசும்போது நான் என்ன சொல்லிட்டு வந்தேன்னு தெரியுமா..உங்க பொண்ணுக்கு மனசங்கள பத்தி சொல்லிக் கொடுங்க..உலக அறிவே இல்லாம இருக்கான்னு..இதைத் தவிர அவர்கிட்ட நான் ஒன்னுமே பேசல.. நீ என்னை புரிஞ்சிக்கறதுக்கு முன்னாடி உங்கப்பாவ புரிஞ்சிக்க..அவர் அப்படி பணம் காசு பார்த்து தன் பொண்ண கொல்றவரான்னு "

வாசு பேசப் பேச உள்ளுக்குள் ஒன்று உடைந்தது..வேறென்ன தேவாவின் மனதில் ரகுபதி கட்டிவைத்திருந்த வாசுவின் மீதான கெட்ட எண்ணங்கள் தான்.. வாசுவை தவறாக நினைக்க காரணமாக இருந்த முதல் காரணமே இங்கு பொய்யாக இருக்க மீதமும் பொய்யாகதான் இருக்கும் என அப்போது தான் தோன்ற ஆரம்பித்தது..

நொறுங்கிப் போய் அப்படியே அமர்ந்துவிட்டான்.அவன் பேச்சைக் கேட்டுத்தானே அத்தனை தொல்லைகளையும் வாசுவிற்கு செய்தோம்.. ஆனால்....
அப்படியெனில் அந்தக் கொலைகள் ...
தலையே வெடித்துவிடும் போல இருந்தது அவனுக்கு..

இதற்கிடையில் உதயனும் உத்ராவும்  ரகுபதியை அடித்து தேவாவின் முன்னிருத்தி
அவன் வாயிலாகவே அவன் செய்த அத்தனை கொலைகளையும் அதற்கான காரணத்தையும் கூறச்செய்தனர்..
அவன் சொல்வதை வைத்து பார்த்தால் தேவாவிற்கும் அந்தக் கொலைகளுக்கும் எந்த சம்பந்ததும் இல்லை என்று உறுதியானது..

" தேவா ஒரு ஏமாளி..யாரும் பாசமா பேசுனா அப்படியே நம்பிருவான்..அதை எனக்கு சாதகமா மாத்திக்கிட்டேன்.. ஒரு பணம் காய்க்கற மரமா தான் அவன நினைச்சேன்.. ராஜிய கொன்னு, ராஜி வாசுவோட தவறான உறவு தெரிஞ்சதால தான் தேவா ராஜிய கொன்னுட்டான்னு கதை கட்டி ஜெயிலுக்கு அனுப்ப அவன் சொத்தை அனுபவிக்க நினைச்சேன்..ஆனால் அந்த பிளான் ராஜி அங்க இல்லாததால மாறிடுச்சு..அந்த கிழம் என்னை அடையாளம் கண்டு கத்த ஆரம்பிச்சதும் வேற வழி தெரியாம கோபத்துல அவுங்க மூனு பேரையும் கொன்னுட்டேன்..அந்தப் பழிய வாச்சும் தேவா மேல போடலாம்னு பார்த்தா அது வாசு மேல விழுந்துடுச்சு..சரி அதுவும் நமக்கு நல்லதுன்னு விட்டுட்டேன்..
தேவாவ எப்படியோ சமாளிச்சா அவன் இனி இந்தியா வரக் கூடாதுன்னு வெளிநாட்டுக்கு அனுப்பிட்டான்.. எனக்குத் தேவையான எல்லாம் செஞ்சு கொடுத்தான்.. சரி என் பையன் மேஜர் ஆகற வரை அவன உயிரோட விடலாம்னு பார்த்தா தேவாக்கு பொண்ணு இருக்குனு உண்மை தெரிஞ்சது..அதான் அவளையும் கொண்ணு அந்தப் பழிய தேவா மேலயே போடலாம்னு தான் நான் திரும்ப இந்தியாவே வந்தேன்.. அந்தப் பொண்ண கொல்ல "
அந்த வாக்கியத்தை முடிக்கவிடாமல் வாசு அவனை ஓங்கி அறைந்திருந்தான்.

" எம் பொண்ணோட நிழல கூட உன்னை தொட விட மாட்டேன்டா ராஸ்கல்..பணந்தான் வேணும்னா கேட்க வேண்டியது தானடா..எதுக்குடா அத்தனை பாவம் செஞ்சே..உயிர பறிக்குற அளவுக்கு போவயாடா "ஓங்கி மீண்டும் அறைந்திருந்தான்.

" அப்பா அவன உங்க கையால அடிக்காதீங்க.. அவன தொடறதே பாவம்.. அவன் வெளிய இருந்தா நானே அவன கொன்னுருவேன்..அதான் போலிஸ்க்கு தகவல் சொல்லிட்டேன்.. இவன் செஞ்ச 5 கொலைகளும் அதுக்கு மேல செஞ்ச நிறையா சில்லறை தனங்களுக்கும் அவனுக்கு தூக்கு தண்டனை கிடைச்சாலும் கிடைக்கும்.. சட்டம் தன் கடமைய செய்யும்பா.. நீங்க அவன கொன்னு அவன் பாவத்தை சுமக்காதீங்கப்பா"

அவன் பேசப் பேச பாஹீ பேசுவது போலவே தெரிந்தது வாசுவிற்கு.. தன் மகனை இத்தனை வருடங்களாய் பிரிவதற்கும் காரணமாக இருந்தவனை நினைக்க ஆத்திரம் அதிகமானது..அதற்குள் நல்லவேளையாக காவலர்கள் வந்து அவனை பிடித்து சென்றனர்.

அங்கே கடைசியாக நடந்த களேபரங்களை கவனிக்கும் நிலையில் தேவா இல்லை..அவன் ரகுபதியை திட்டவில்லை..அடிக்கவில்லை..ஏன் ஒரு பார்வை கூட பார்க்கவில்லை..அவன் கூறிய கட்டுக்கதையை நம்பியது இவன்தானே.. பாம்புக்கு பால் வார்த்து வளர்த்து விட்டு பின்பு அது கொத்தி விட்டதே என்று வருந்துவதில் என்ன பலன்..மரத்துப போய் அமர்ந்திருந்தான்..

தேவா சந்தோசமாக வாழ்ந்தது என்றால் அது அவனது கல்லூரி காலம் வரை மட்டுமே.அதற்கடுத்து தந்தை தங்கையின் மறைவு, தாய் படுத்த படிக்கையாக விழுந்தது.. பிடித்துப் படித்த படிப்பை விட்டு தந்தையின் தொழிலை கவனித்தது, இதற்கிடையில் அவன் வாழ்வில் தென்றலென வீசிச் சென்ற ராஜீயின் நினைவுகள் மட்டுமே அவனை உயிர்ப்போடு வைத்திருந்தது.. அதுவும் சில காலம்..தாயின் மறைவுக்குப் பின் ரகுபதியின் கட்டாயத்தால் வெளிநாடு சென்று திரும்பியவனின் காதில் விழுந்தது ராஜியின் மறைவுச் செய்தி.. அவள் கர்ப்பமாக இருந்ததே அவனுக்கு அவள் இறந்த பின்பு தான் தெரிந்தது.. அதன்பின்பு அவன் வாழ்வு சூன்யமே.. தன் மகள் உயிரோடு இருக்கிறாள் என்று தெரிந்த பின்புதான் அவன் வாழவே ஆசைப்பட்டான்..ஆனால் அதற்கும் முட்டுக் கட்டையாக ரகுபதியின் துரோகம் உயிரோடு அவனைக் கொன்றது..
அவனுக்கு இப்போது ஆற்றுவாரும் இல்லை தேற்றுவாரும் இல்லை.. அப்போதாவது ரகுபதி என்ற நயவஞ்சகன் முதுகில் குத்தவாது கூட இருந்தான்..ஆனால் இப்போது அதற்கும் யாருமில்லை..

வாசுவுக்கும் அவனைப பார்க்க பாவமாக இருந்தது.. ஆனால் ராஜியின் நிலையை எண்ணிப் பார்த்து மனதை பூட்டி வைத்துக் கொண்டான்..

அப்போது உதயனுக்கு ரஞ்சித்திடமிருந்து அழைப்பு வந்தது..
" உதய்.. ஈஸ்வரியம்மா வாசு சார் எங்க இருக்காருன்னு தெரிஞ்சதும் மறுபடியும் கோபப்பட்டாங்களாம்..விசாகன் அவருக்கு மயக்க மருந்து கொடுத்து இங்க கூட்டிட்டு சாப்டர்ல வந்துட்டு இருக்கான்.. அவுங்க நிலை கொஞ்சம் கிரிட்டிகளா இருக்கு.. நான் என் சீஃப் கிட்ட பேசிட்டு அவுங்களுக்கான டிரீட்மென்ட்ட ஆரம்பிச்சடறேன்..நீ சார கூட்டிட்டு ஹாஸ்பிடல் வந்துரு"

இதனைக் கேட்டதும் வாசுவும் உதயனும் கிளம்பிவிட, அந்நிலையிலும் தேவாவை தனியாக இருக்கவிட மனமின்றி உத்ராவை விட்டுச் சென்றனர்.

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz