என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)
24.என்னை மறந்தாயோ கண்ணம்மா
விசாகன் பதில் சொல்லி விடுவானா என்கிற தவிப்பில் சண்முகம் பார்த்திருக்க, ரோகிணியோ அவன் பதிலை சொல்லி விட வேண்டும் என வேண்டிக் கொண்டிருந்தாள்..
விசாகனும் அவள் தவிப்பிற்காகவே ஒரே நிமிடத்தில் பதிலை கண்டுபிடித்து விட்டான்..
" முதல் மகனுக்கு
கால் லிட்டர் மாடு ஐந்தும் முக்கால் லிட்டர் மாடு ஒன்றும் இரண்டு லிட்டர் மாடு நான்கு..
இரண்டாம் மகனுக்கும் இதே போல் பிரித்துக் கொடுக்கலாம்..
மூன்றாவது மகனுக்கு மீதமுள்ள எட்டு முக்கால் லிட்டர் மாடுகளும், இரண்டு இரண்டு லிட்டர் மாடும் கொடுக்கலாம்..
லிட்டரும் பத்து உருப்படியும் பத்து போதுமா.. "
சண்முகன் பெருமூச்சு ஒன்றினை விட, ரோகிணி ஹேய்..என்று துள்ளி குதித்தாள்...
அவள் சந்தோசத்திற்காகவே எண்ண வேண்டும் என்றாலும் செய்யலாம் போன்று தோன்றியது விசாகனுக்கு....
பந்தயத்தின் படி சண்முகன் முனகியபடியே மருதாணிக் கிண்ணத்தைக் கையிலெடுக்க, வாசு அவனிடமிருந்து அதனை வாங்கிக் கொண்டான்.
" மாமா.. இது புதினாச்சட்னி இல்ல.. மருதாணி "
அவனை வாசு முரைத்த முரைப்பில் " என்னமோ போங்கப்பா..எல்லோரும் ஒரு மார்க்கமாத்தான் திரியுரீங்க.. என்னைய கொஞ்சமாச்சும் ஸ்கோர் பண்ண விடறீங்களா.."
அழுத்துக் கொண்டான்..
" சண்முகா.. வாசு மாதிரி அழகா யாருமே மருதாணி வெக்க முடியாது தெரியுமா.. "
பாஹீ தங்கள் கடந்த கால நினைவில் வாசுவை காதலாய் பார்த்து சொல்ல,
விசகான் ' பிள்ளையில்லா வீட்டுல கிழவன் துள்ளி விளையாண்டானாம் ' சத்தமாகவே அங்கலாய்த்துக் கொண்டான். பின்னே அவன் விடுகதைக்கு பதிலை சொல்லி ரோகிணியை மகிழ்விக்க நினைக்க, வாசுவோ அந்த சந்தோசம் கூட நிலைக்க விடாது மகளின் கவனத்தை தான் பெற்றுக் கொண்டால் கோபம் வரும்தானே அவனுக்கும்..
ரோகிணியும் சண்முகமும் ஆச்சரியமாக வாசுவைப் பார்க்க, அவனோ தன் மகளின் கைகளில் மருதாணியை வைத்து விட ஆரம்பித்தான்.
பார்க்கவே மிகவும் அழகாக இருந்தது.. அத்தனை நேர்த்தியாக வைத்து விட்டிருந்தான்..
ரோகிணிக்கு வைத்து விட்டு அருகில் இருந்த பாஹீயைப் பார்க்க அவரும் சிரித்த முகமாகவே கையை நீட்டினார்..
எத்தனை வருடங்களாயிற்று..அவன் கையால் மருதாணி வைத்துக் கொண்டு.. அவன் கையால் வைத்துக் கொள்வதற்காகவே கையில் சிவந்திருக்கும் மருதாணி அலைந்து போக, துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது என பிடிக்காத வேலையை கூட எத்தனை முறை பருவதம் மறுத்தும் செய்திருக்கிறாள்..எத்தனை மருதாணி மரங்களை காலி செய்திருக்கிறாள்.. அதனை நினைக்கும் போதே கையில் வைத்திருக்கும் மருதாணியின் குளுமையோடு மனமும் குளிர்ந்தது..
வாசுவும் அந்த நினைவுகளில் தானே மூழ்கியிருந்தான்..கைகள் தானாக அதன் வேலையை செய்து கொண்டிருக்க, கண்கள் மட்டும் ஏனோ பாஹீயை விடுத்து விலகாதிருந்தது..
அவர்களைக் கண்டு ரோகிணி இதேபோல காதலோடு தானும் விசாகனும் எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டும் என எண்ணிக் கொண்டே அவனைப் பார்க்க, அவனும் அதே வேலையைத் தான் பார்த்திருந்தான்..
ஏனோ அவள் கண்களில் தெரியும் அன்பில் அத்தனை ஆனந்தம் அவனுக்கு.. இவர்கள் திருமணம் காதலித்த பின் நிச்சயக்கப்பட வில்லை..மாறாக நிச்சயத்தபின் காதலிக்க துவங்கினர்..
இது காதலா என்றால் நிச்சயமாக இருவருக்கும் தெரியாது.. ஆனால் ஒருவர் மீது ஒருவர் அன்பினை அளவில்லாது வைத்திருப்பது நிஜம்.. அன்பை யார் மீது வைத்துள்ளமோ அதனைப் பொறுத்து பெயர் மாறும்.. ஆனால் அன்பு என்றும் மாறாதது தானே..
அங்கே ஒரு அப்பாவி ஜீவன் வாய்ப் பொற்றி அமர்ந்திருப்பதை இவர்கள் கவனிக்கும் நிலையில் இல்லை..
" அடேய் சண்முகா..என்னடாச்சு உனக்கு "
" ஐய்யோ..பிம்பிள் செல்லோ..நீயாச்சும் எங்கிட்ட பேச வந்தியே.. உனக்காச்சும் நானே வெச்சி விடறேன் வா..கடுப்பேத்தறாங்க மை லார்ட் "
புலம்பிக் கொண்டே பருவதம் மறுக்க மறுக்க அவர் கைப்பிடித்து மருதாணி வைக்க ஆரம்பித்தான்.
அந்த நேரம் உதயனிடமிருந்து வீடியோ கால் வர, விசாகன் அவனிடம் பேச ஆரம்பித்தான்.. உத்ராவும் கூட அவனருகே தான் நின்றிருந்தாள்..
வாசுவும் பாஹீயும் கூட தங்கள் உலகத்திலிருந்து விடுபட்டு அவர்களிடம் பேசினர்..
அனைவரும் பேசி முடித்து விட்டு உத்ரா தன்னறைக்குச் சென்று படுத்துக் கொண்டாள்..
அவர்களை எல்லாம் ஒன்றாய் பார்த்துவிட்டு, ஏனோ தான் மட்டும் தனியாக இருப்பது போல தோன்றியது..
அன்று நடந்த விபத்து மட்டும் நடவாது இருந்திருந்தால் தானும் இன்று தாய் தந்தையோடு சந்தோசமாக இருந்திருக்கலாமே.. தான் என்ன பாவம் செய்தேன்..கடவுள் என்னை ஏன் தனியாக தவிக்க விட்டார்.. உதயன் மட்டும் இல்லையென்றால் இன்றும் தான் ஏதோ ஒரு விடுதியில் சாப்பிட்டேனா..இல்லையா.. என்ன செய்கிறேன் என கேட்பதற்கு கூட ஆளில்லாது தானே, வெறுமையாய் வாழ்வை கடத்தியிருப்பேன்..
எண்ணங்கள் எங்கெங்கோ தறிக்கெட்டு
வழக்கம்போல ஓடியது... ரோகிணி தனக்கு நல்ல தோழி தான்..ஆனால் அவளையும் முழுவதாய் சார்ந்திருக்க முடியாது அல்லவா.. வாசு தன் மேல் மகளின் தோழி என்று பாசமாக இருக்கலாம்.. ஆனால் அதற்கும் ஒரு வரைமுறை உண்டு தானே..
ஆனால் உதயனின் மனைவியான பின் வாசுவும் பாஹீயும் மாமாவும் அத்தையும் ஆவார்கள்..விசாகன் அண்ணனாவான்.ரோகிணி அண்ணி ஆவாள். அப்பத்தா.. ராஜூ சித்தப்பா..சிந்தாமணி சித்தி.. மரகதம் பாட்டி.நதியா தங்கச்சி..
என ஒரு குடும்பமே உறவாக கிடைக்குமே..
ஆனால் என்னால் உதயனுக்கு என்ன கிடைக்கும்.. அவனுக்கு நான் தகுதியானவனா.. என்னை மருமகளாய் இந்த குடும்பம் ஏற்றுக் கொள்ளுமா.. அவர்கள் மகனிற்கு சிறந்த மருமகளைத் தானே தேர்ந்தெடுப்பார்கள்..அப்படியிருக்க நான் எந்த விதத்தில் இவர்களது குடும்பத்திற்கு உகந்தவளாக இருப்பேன்.. காதல் வேகத்தில் சுயநலமாக சிந்தித்து விட்டேனா..
தெய்வமே போதும்..உன் கற்பனைக் குதிரையை பிடித்து கட்டிவிடு..அது வேறு எங்காவாது ஓடி விட போகிறது என மனசாட்சி அவளைத் தட்டி எழுப்ப, சிந்தனையிலிருந்து கலைந்தவளுக்கு, தற்போது மீண்டும் தட்டும் சத்தம் கேட்டது..
' ஓ.. கதவா ' என நினைத்துக் கொண்டு கதவனைத் திறக்க,
உதயன் சிரித்த முகமாய் நின்றிருந்தான்..
அவன் சிரித்த சிரிப்பே நீ இதுவரை என்ன செய்து கொண்டிருந்தாய் என எனக்குத் தெரியும் என்பதைப் போல இருக்க தலை குனிந்து கொண்டாள்..
" இரணிய நேரத்துல படுத்திருக்க கூடாதுன்னு பாட்டி உன்னை எழுப்பி விடச் சொன்னாங்க உத்தீ "
" நான் தூங்கல.. "
" ம்..சரி தான் தூங்கல..ஆனா அழுதுருக்க .. அப்படிதானே "
அவன் சொன்னதும் தான் தன் கண்ணங்களில் வழியும் கண்ணீரைத் துடைத்தாள்..
" ரூம்லயே அடைஞ்சு கடந்தா எப்படி உத்தீ.. கீழ வந்து எல்லோரடயும் பேசிப் பழகு..நாளைக்கு எப்படியிருந்தாலும் இவங்க கூடதான இருந்தாகனும்.. அவுங்களும் நல்லவங்க தான் உத்தீ.. நதி உன்னை கேட்டுட்டே இருந்தா..நான் எல்லோர் கிட்டயும் நம்மளப்பத்தி சொல்லிட்டேன்.. அதுனால நீ தயங்காம எல்லோர்கிட்டயும் பேசு.. "
சொல்லாமல் சொல்லிவிட்டான்..இனி இவர்கள்தான் உன் குடும்பம் என்று.. அதற்கு மேல் எந்த விளக்கமும் தரவில்லை அவன்..
அவன் பின்னூடே அவளும் சென்றாள்..
அங்கே கூடத்தில் மரகதம் அவளைத் தான் ஏற இறங்க பார்த்திருந்தார் தன் பேரனுக்கு ஏற்றவள் தானா என்று.. ஏற்கனவே அஸ்தஸ்து பார்த்து இழந்தது போதும் என பட்டுத் திருந்தி விட்டார்..
சிந்தாமணி கையில் ஒரு கிண்ணத்தோடு வந்தார்..
" மருமகனே.. ஏதோ என் பொண்ணுக்காக கேட்டீங்கனு சொல்லி தான் நீங்க கேட்டவுடனே அரைச்சாந்தேன்.. இந்தாங்க "
உத்ரா கேள்வியாக அவனைப் பார்க்க, உன்னை எந்த சூழ்நிலையிலும் எதற்காகவும் தவிக்க விட மாட்டேன் கண்மணி என பார்வையால் சொன்னவன்
" என்ன அத்தை .... மகளப் பார்த்ததும் அதுக்குள்ள கட்சி மாறீட்டீங்க " என சிந்தாமணியுடன் பேசியபடியே சோபாவில் அமர்ந்திருந்த உத்ராவின் கைப்பிடித்து மருதாணி வைத்து விட ஆரம்பித்தான்..
அவன் கருமமே கண்ணாக இருக்க, உத்ரா தான் நெழிந்து கொண்டு இருந்தாள்.. சிந்தாமணியும் மரகதமும் சிரித்துக் கொண்டே எழுந்து சென்றது இன்னும் அவளை இம்சை செய்தது..
" உத்தீ..நீ பண்றனு நல்லாருக்குதா "
" ஹேய்..எனக்கு மருதாணி வெச்சு விடறதுலாம் இதான் மொத தடவை..பார்க்க கொஞ்சம் சுமாராதான் இருக்கு.. அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.. "
அவன் பணியைத் தொடர,
" உத்தீ..அவுங்களாம் என்ன நினைப்பாங்க"
" என்னை நினைப்பாங்க.. நான் உனக்கு மருதாணி தானே வெச்சு விடறேன்.. அதுல எதும் தப்பா தெரியலையே "
" அதில்ல உத்தீ "
"சுப்..அமைதியா இரு..இல்லைனா மீதமிருக்கற மருதாணிய மொகத்துல வெச்சி விட்ருவேன் "
அவன் குரலில் தெரிந்த உறுதி அவளை அமைதியடையச் செய்தது.. அவள் உண்மையில் மருதாணி வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாலா என்றால் அதற்கு பதில் இல்லை தான். ஆனால் பாஹீயின் முகத்தில் தெரியும் ஆனந்தம் கண்டு மெய்சிலிர்த்ததும் உண்மைதான்..
தான் எதற்கும் வருந்தக் கூடாது என்பதற்காக பார்த்து பார்த்து செய்யும் உதயனின் மீது காதல் வளர்ந்து கொண்டே இருந்தது..
அவன் கவனம் முழுதும் மருதாணியின் மீது இருக்க, இவள் அவன்மீது கவனத்தை செலுத்தினாள்..யோசித்து யோசித்து அவன் மருதாணி வைத்து விடும் அழகில் சொக்கித்தான் போனாள் பேதையவள்..
" உத்தீ "
" ம்ம் "
அவளைக் காணாது தன் வேலையைத் தொடர்ந்தவாரே அவன் கேட்டு வைக்க,
" என்னை எதுனால காதலிக்க ஆரம்பிச்ச"
கேள்வியைக் கேட்டுவிட்டு அவனையே பார்க்க, அவள் குரலிலும் பார்வையிலும் தெரியும் அன்பைக் கண்டு திகைத்துத் தான் போனான் அவன்..
" உத்தீ " என ஆரம்பிக்கும்போதே சிறப்பு வகுப்புக்கு சென்றிருந்த நதியா வந்து சேர்ந்தாள்..
" உதய் மாமா.. அக்காவுக்கு மட்டுந்தான் வெச்சு விடுவீங்களா . எனக்கும் வெச்சு விடனும் சரியா " என்றவள் உத்ராவை நோக்கி
" அக்கா.. என்கூட பேசாம தப்பிக்க பார்க்கிறீங்க தான..இனிமே இந்த தியாக்குட்டிக் கிட்டருந்து நீங்க தப்பிக்க முடியாதே " என பின்னிருந்து அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்..
அவள் உரிமையோடு தன்னோடு பேசியதில் மகிழ்ந்த உத்ரா
" அப்டியா..தியா மேடம் உங்ககிட்டருந்து தப்பிக்க, எனக்கு எந்தவொரு காரணமும் இல்ல.அதுனால நானே உங்ககிட்ட சரண்டாரயிரேன் " என்க,
" ஐய்யா...ஜாலி.. எனக்கு புது அக்காவும் ஒரு புது அண்ணியும் கிடைச்சிட்டாங்களே.. "என குதிக்க ஆரம்பித்தாள் சந்தோசத்தோடு..
உதயனுக்கும் அவர்கள் நன்றாக பேசிக் கொண்டது மகிழ்ச்சியைத் தந்தது..
அடுத்து உதயன் நதிக்கும் மருதாணி வைத்துவிட்டு அலுவலக வேலையை பார்க்க சென்றுவிட, உத்ராதான் தான் கேட்ட கேள்வியையும் மறந்து விட்டு நதியிடம் உரையாடிக் கொண்டிருந்தாள்.
" அக்கா..உங்ககிட்ட பேசிட்டு இருந்து.. என் டம்மிய கவனிக்க மறந்துட்டேன்னே.. இப்போ நான் எப்படி சாப்பிடுவேன் " என பாவமாக முகத்தை வைக்க, சிந்தாமணி அவள் தலையைக் கொட்டிவிட்டு தான் கொண்டு வந்த உணவை ஊட்டிவிட ஆரம்பித்தார்..
அவள் நினைக்கும் முன்னே பசியறிந்து உணவு கொண்டு வந்தவரைப் பார்த்து தாய்ப்பாசம் என்னவென்று கண்டு கொண்டாள் உத்ரா.. இலேசாக கண்கள் கரிக்க ஆரம்பித்து கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது.. அவள் கற்பனைக் குதிரையை அவிழ்த்து விடுவதற்கு முன்னரே நல்லவேளையாக சிந்தாமணி உத்ராவிற்கும் ஊட்டி விட்டார்.
" வாயை நல்லா திறடா..சாப்பாடி சிதறுது பாரு... "
"இவளப் பாரு விட்டா தட்டையே முழுங்கிருவா போல... "
ஏதேதோ பேசியபடியே வழக்கத்தை விட அதிகளவு உணவை ஊட்டி விட்டிருந்தார்.
உண்மையில் அவள் வயிறு முட்ட சாப்பிட்டது இதுதான் முதல் முறை.. அவர் ஊட்ட ஊட்ட மறுக்க நினைக்காது வாய் திறந்து வாங்கிக் கொண்டிருந்தாள்.. கடைசி வாய் ஊட்டிவிட்டு அவள் உதட்டின் ஓரத்தில் இருந்த பருக்கையையும் துடைத்து விட்டு தண்ணீர் புகட்டியும் விட தற்போது நிற்காமல் கண்ணீர் சுரந்தது.. உத்ரா எதற்கெடுத்தாலும் அழுகும் இரகம் அல்ல... ஆனால் பாசத்திற்கு ஏங்கும் அவள் மனது குழந்தையாய் மாறி
அழுது விட்டது..
💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
அந்த நாள் இரவே வாசு பாஹீயிடம் வெளியூரில் விதை நெல் வாங்கி வருவதாக உரைத்துவிட்டு தேவாவை சந்திக்க கிளம்பிவிட்டான்..
விசாகன் எவ்வளவு தடுத்தும் இனி ஓடி ஒளிந்து காலத்தைக் கடத்தியது போதும்.எதிரி நம்மைத் தேடி வருமுன்னே தானே அவனை சந்தித்து இரண்டில் ஒன்று பார்த்து விட வேண்டும்.. என் மகளை இழந்துவிடுவேனோ என்கிற பயத்தில் தன்னால் இருக்க முடியாது.இனி
எதிரியை நேருக்குநேர் சந்திக்க முடிவெடுத்து விட்டேன்..என்றுரைத்துவிட்டு கிளம்பிவிட்டான்..
விசாகனுக்கு அவரை தனியாக அனுப்ப மனம் இல்லை.. உதயனுக்கு விசயத்தை தெரிவிக்க அவன் பார்த்துக் கொள்வதாக கூறிய பின்னரே மனம் கொஞ்சம் தெளிவுற்றது..
கே.எஸ்.ஆர் என்ற பெயர் பொறிக்கப் பட்டிருந்த மாளிகையின் முன் நின்றிருந்தான் வாசு.. கருப்புச் சட்டையும் வெள்ளை வேட்டியாய் கிராமத்தின் சாயலில் நின்றிருந்த வாசுவை தயங்கிக் கொண்டு தான் உள்ளே விட்டான் வாயிற்காவலன்..
காவலாளி வாசுதேவன் என்கிற ஒருத்தர் தங்களைக் காண வந்திருக்கிறார் என கூறியதுமே அவரை உள்ளே விடச் சொன்ன தேவா வாசுவிற்காக ஆவலாய் காத்திருந்தான்.
இதுவரை இவர்கள் நேருக்கு நேர் உரையாடியதே இல்லை.. பார்ப்போம் இனி என்ன நடக்குமென்று..
💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மன்னித்துவிடுங்கள் மக்களே.. ஏதோ நெகட்டிவ் கமென்ட்ஸ்னால கொஞ்சம் மூளை குழம்பிடிச்சு..
இ
துவரைக்கும் 6 பேர் சரியான பதில சொல்லி இருக்காங்க.. அவுங்களுக்கு உங்களோட சார்பா வாழ்த்துக்கள தெரிவிச்சிக்கறேன்.. அப்டியே
அறியாப் பிள்ளைய மன்னுச்சு..
Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz