என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)
23.என்னை மறந்தாயோ கண்ணம்மா
பெரியகுளம் காலை 5.40..
ஊரிலுள்ள இளம்பெண்களுக்கும் வயதானவர்களும் ஒரு திடலில் குழுமியிருந்தனர்..
சிறுவர்களும் வயதானவர்களும் யோகாசனத்தில் ஈடுபட்டிருக்க, சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் தற்காப்புக்கலையின் அடிப்படைகள் கற்றுக் கொடுக்கப்பட்டது.
அங்கே விசாகனின் கட்டளைப்படி அனைவரும் சிரத்தையுடன் கற்றுக் கொண்டிருந்தனர்.. யார் மனதையும் வதைக்காமல் இளகிய முறையிலும் அதே சமயம் ஒரு கட்டுப்பாடோடு அனைவருக்கும் புரியும் வகையில் சொல்லித் தந்து கொண்டிருந்தான்..
அன்று சொன்னது போல ரோகிணிக்கு தற்காப்புக் கலைகள் கற்றுத் தருவதோடு நிறுத்தி விடாமல் அங்கிருக்கும் பெண்களின் பாதுகாப்புக்காவும் இந்த முயற்சியை எடுத்திருந்தான்.. வளர்ந்து வரும் பாலீயல் கொடுமைகளை தடுப்பதற்கு ஒரு முதற்புள்ளியை நாட்டியிருந்தான்.. ஊர்மக்களும் அவன்பேச்சில் கல்லுண்ட வண்டாய் மயங்கி அவனுக்கு ஒத்துழைத்தனர்..
பெற்றவர்களும் ஆண் என்று பேதம் பார்க்காது வாசுவின் மீதுள்ள நம்பிக்கையில் தன் பிள்ளைகளை அனுப்பி வைத்து தாங்களும் அதில் பங்கு கொண்டனர்..
ரோகிணியும் சண்முகனும் தான் இதற்கு கொள்கை பரப்புச் செயலாளர்.. அவர்களுமே முழு ஈடுபாடோடு அதில் பங்கு பெற்றனர்..
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
பளபளக்கும் கோட் சூட்டில் தனது கட்டைக் காலை மறைத்து மனதில் வஞ்சத்தையும் அடுத்தவன் பணத்தில் உடலையும் வளர்த்து கொழுத்துப் போய் இந்தியா வந்து சேர்ந்தான் ரகுபதி..
இட்லி
தோசை சாதம் என்றால் என்ன என்று கேட்கும் வெளிநாட்டு விளங்காத பன்னியாய் வந்து சேர்ந்தவன் சற்று தெளிந்திருந்த தேவாவை குழப்ப தயாராகினான்..
" இங்க பாருங்க மச்சான்.. அவனுங்க எல்லோரும் அரசியல்வாதி மாதிரி.. வெளிய நல்லவங்க மாதிரி தான் நடிப்பாங்க.. நீங்க அதுல ஏமாந்திடாதீங்க..நம்ம குடும்பத்துல இருக்கற எல்லாத்தையும் கொன்னது பத்தாம நம்ப வீட்டு பொண்ண இத்தனை வருசம் நம்ம கிட்டருந்து பிரிச்சு வெச்சிருக்கான் அந்த வாசு.. இதைக் கேட்டதும் என் நெஞ்சே பதறுது..நீங்க எப்படி இவ்ளோ அமைதியா இருக்கிங்க.. இந்நேரம் இந்து இருந்திருந்தா தன் மருமகள எங்கையோ இருக்க விட்ருப்பாளா.. அத்தைமடி மெத்தைன்னு பாட்டு பாடி ராணி மாதிரி வளர்த்திருப்பா.. அங்க நம்ப பொண்ணு எவ்ளோ சிரமப்படுதோ.. என்னை கொடுமை படுத்துராங்களோ..வாசு ரொம்ப மோசமானவனாச்சே.. என்ன பண்ணி வெச்சிருக்கானோ..இந்த தடவை அவன உயிரோட விடக்கூடாது.. நீங்க மட்டும் அன்னைக்கு தடுக்கலைனா அவன கொன்னு"
வழக்கம்போல சகுனி பாணியில் தன் திட்டத்தை தொடங்கினான்.
" நீங்க கொஞ்சோ அமைதியா இருக்கிங்களா ரகுபதி.. போதும்..நீங்க எனக்கு அறிவுரை சொன்னதெல்லாம் போதும்.. இப்போவரை என் இந்து மேல நீங்க வெச்சிருக்கற பாசத்துக்காக தான் நான் கட்டுப்பட்டு நிக்கறேன்...இதோட உங்க பொதுசேவைய நிறுத்திக்கோங்க.நான் என் பாணில என் பொண்ண எங்கிட்ட வரவெச்சிக்கிறேன்.. "
முதன்முறை அவனை எதிர்த்து கத்தினான் தேவா.. ஏதோ உதயனிசம் கொஞ்சம் வேலை செய்திருக்கும் போல..
வாரிசில்லா சொத்துக்கு இனி தான்தானே எல்லாம் என தப்புக் கணக்கு போட்டுக் கொண்டிருந்தவனுக்கு தேவாவின் மகள் உயிருடன் இருக்கிறாள் என்ற செய்தி வந்தடைய பறந்து வந்துவிட்டான் அவன்.. அவனுக்கு தேவாவிற்கு தெரியாமல் ஒரு குடும்பமும் இருந்தது..
அன்று யாரை அழிக்க பாஹீயின் இல்லம் புகுந்தானோ..யார் இல்லாது போக, அங்கே ஆத்திரமடைந்து நான்கு உயிர்களை பறித்தானோ.. யார் இறந்ததால் நல்லது என நம்பி தப்பித்து வெளிநாட்டில் தலை மறைவானானோ அந்த அதே யாருக்காக திரும்பவும் தாயகம் திரும்பியிருக்கிறான்.. அந்த யாரான ரோகிணியை நெருங்க வாசு கண்டிப்பாக தடையாக இருப்பான் என்று தெரிந்ததால் இந்த முட்டாள் தேவாவிடம் எப்படியாவது அவளைச் சேர்த்தாக வேண்டும்.. அதன்பின்னர் அவளை கொன்று விடலாம் என நினைத்திருக்க, தேவாவின் வெட்டாய்ப்பான பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியது..
அவனுக்கு மட்டும் தொழிலை மேம்படுத்த தெரிந்திருந்தால் இந்நேரம் தேவா செத்து பல வருடங்கள் ஆகியிருக்கும்.. அவனுக்கு பணம் வேண்டும்..அதுவும் உழைக்காமல் வேண்டும்.. இருக்கும்வரை ராஜபோகத்தை அனுபவிக்க நினைக்கும் சோம்பேறி நரி இவன்..
" என்ன மச்சான் நான் என்ன தப்பா சொல்லிட்டேனு இப்படி கோபப்படுறீங்க .. நானும் என்னைக்கே செத்துருப்பேன்..ஆனா இந்த கொடூர பூமியில உங்கள தனியா விட மனசில்ல..அந்த ஒரே காரணத்துக்காக தான் இத்தனை வருசம் பொறுத்திருந்தேன்.. இப்போ உங்க மக..உங்க ரத்தம் உங்களுக்காக வந்துட்டானா, என் வாழ்க்கைய சந்தோசமா முடிச்சிக்கிட்டு என் இந்து கிட்ட போயிருவேன்..கடவுள் எனக்கு அந்த கொடுப்பனைய கொடுப்பானானு தெரிலயே.. "
நான்கு சொட்டு நீலிக் கண்ணீர் வடித்தான்
" உங்களுக்காக மட்டுந்தான் நான் பொறுமையா இருக்கேன்.. இல்லைனா அவனையும் கொன்னுட்டு அந்த கொலைகளையும் நான் தான் செஞ்சேன்னு போலிஸ்ல தைரியமா சரண்டர் ஆயிருப்பேன்..ஆனா என்னை விட்டா உங்களுக்கு யார் இருக்கானு தான் இத்தனை வருசம் பொறுமையா இருந்திட்டேன்.. ஆனா இப்போ நீங்களே என்னைய ஒதுங்க சொன்னா "
அதிகப் பிரசிங்கித் தனம் இல்லாது உண்மையான வருத்தத்தோடு கூறுவதைப் போலவே அமைதியாக பேசியே காரியத்தை சாதித்தவனுக்கு இதெல்லாம் சாதாரணம்..
" ரகுபதி..நான் ஏதோ ஞாபகத்துல அப்படி சொல்லிட்டேன்.. சரி விடுங்க.. சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க..நான் லீகலா இதுக்கு ஆக்சன் எடுக்கறேன் "
குழப்பத்துடனே சென்றுவிட்டான் தேவா.. அவன் குழம்பிய முகம் கண்டு மனதுக்குள் நயவஞ்சகமாய் சிரித்துக் கொண்டான் ரகுபதி.. அவனது அழிவுக்கு நாள் குறித்தது தெரியாமல்..
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
" அடங்கா மனைவி அடிமைப் புருசன்
குடும்பத்துக்காகாது.. மாமா குடும்பத்துக்காது "
வாசலில் எதற்கோ பாஹீயிடம் கைக்கட்டி திட்டு வாங்கிக் கொண்டிருக்கும் வாசுவைப் பார்த்துத்தான் சண்முகம் இந்த பழைய பாடலை பாடிக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான் .
விசாகன் தனது மடிக்கணினியில் மூழ்கியிருக்க, ரோகிணி சுவாரசியமாக நோட்டில் எழுதிக் கொண்டிருந்தாள்..
" என்ன ஸ்டாரு.. மணி நாலாக பத்து நிமிசம்தான் இருக்குது.. இன்னுமா நீ சால்வ் பண்ணல "
" டேய்.. இருடா.. ப்ளீஸ் ப்ளீஸ்..கிட்டத்தட்ட முடிச்சிட்டேன்.. " என்று மீண்டும் எழுத துவங்கினாள்..
தன்வேலையிலே கவனமாக இருந்த விசாகன் தற்போதுதான் அவளைப் பார்த்தான்.. தீவிரமாக யோசித்து எதையோ எழுதுவதும் பின்பு அதனை அழிப்பதுமாக இருக்க, நடுநடுவே விரல்களை நீட்டி மடக்கி சிறு குழந்தை போல எதையோ செய்து கொண்டிருந்தாள்..
அவளையே இரசனையாய் பார்த்திருந்தவன் சண்முகனின் " ஹூக்கும் " என்ற கனைப்பில் சுயநினைவுக்கு வந்தான்..
" என்ன வாத்தியாரே.. லேப்டாப் அங்க இருக்க..லுக்கு ஏன் இந்தப் பக்கம் வருது "
வேண்டுமென்றே ரோகிணியை மறைப்பது போல குறுக்கே வந்து நின்றான்..
அவன் முறைக்கவும் ஒதுங்கிக் கொண்டு ரோகிணியின் நோட்டை பறித்துக் கொண்டான்..
" டேய்..ப்ளீஸ்டா..ப்ளீஷ்"
" ஹூஹூம். டைம் முடிஞ்சு போச்சு.. எடு அந்த தாயக்கட்டைய.. "
அவளும் சிணுங்கிக் கொண்டு வாசு அவளுக்காக மரத்தில் அழகாய் செதுக்கி கொடுத்திருந்த தாயக் கட்டையை எடுத்து அவனிடம் கொடுத்தான்.. அதனை சகுனி போல நக்கலாய் சிரித்துக் கொண்டே வாங்கியவன் " ஜெய்.. ஜக்கம்மா.. " என உருட்டிக் கொண்டே சமையலறைக்குள் ஓடிவிட்டான்
விசாகனுக்கு வழக்கம்போல பந்தயத்தில் தோற்றுவிட்டாள் என்பது மட்டுமே புரிந்தது..
அவள் கூடத்தின் தரையில்
அவள் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு அமர்ந்திருக்க, மேலே மேசையருகே நாற்காலியில் அமர்ந்திருந்தவாரே
" மேடம் இன்னைக்கு எதுல தோத்தீங்க"
அவள்கூறும் பதிலுக்காய் சுவாரசியமாக அவளை பார்த்திருந்தான்.
" நீங்க என்னைய ரொம்ப மட்டந்தட்டறீங்க.. நீங்க தான எந்த போட்டியா இருந்தாலும் தோத்தாலும் விடாமுயற்சியோட கலந்துக்கனும்னு சொன்னிங்க.. அதான் அவன் சொல்ற கேம்ல கலந்துகிட்டேன்"
வார்த்தைகள் வேகமாய் வந்தாலும் சத்தம் அவனுக்கு கேட்கவில்லை..
எழுந்து அவளருகில் வந்தமர்ந்தவன்
" கேம்ல பார்ட்டிசிபேட் பண்றது தப்பு கிடையாது.. ஆனா அதுக்கு பந்தயப் பொருள் வெச்சு விளையாடறீங்க பாரு..அதுதான் தப்பு "
அவன் அவ்வாறு அவளை குறை கூறவும் முகத்தை வேகமாய் அவன் எதிர்புறம் திருப்பிக் கொண்டான்..
அவள் கையில் வைத்திருக்கும் நோட்டை வாங்க முற்பட, " இங்க பாருங்க..நான் ஒன்னும் வேணும்னே பந்தயத்துல கலந்துக்கல.. அவன் தான் அவன் கேட்கற கேள்விக்கு பதில் சொன்னா எனக்கு ரெண்டு கைலயும் மருதாணி வெச்சி விடறேன்னு சொன்னான்..அவன் ரொம்ப அழகா வைப்பான்னா அதான் ஒரு ஆசைல ஒத்துக்கிட்டேன் " படப்பட பட்டாசாய் வெடித்தாள்.. அவனுக்கு அதுதானே வேண்டும்..
" அவன் அவ்ளோ அழகா வெச்சி விடுவானா.. " கொஞ்சம் பொறாமையும் எட்டிப் பார்த்தது அவனது குரலில்..
" ம்ம் "
" சரி அவனையே வெச்சி விடச் சொல்றேன்.. அவ்ளோ தான.. கொஞ்சமாச்சும் சிரிங்க ஏஞ்சல்.. "
ஏஞ்சல் என்றதும் அவள் உண்மையிலுமே சிரித்தாள்..
வாசலில் அவர்கள் இருவரையும் பார்த்தவண்ணம் நின்றிருந்த வாசுக்கு தானாக கண்கள் பனித்தது..
" வாசு..என்னாச்சு " பாஹீயும் அவன் கண்ணீரில் பதறிவிட,
கண்ணீரை மறைத்தவன் " இன்னும் கொஞ்ச நாள்ள ரோகிணிக்கு கல்யாணம்னு நம்பமுடியல பாஹீ..இப்போதான் அவள பள்ளிக்கூடத்துல சேர்த்து விட்ட மாறி இருக்கு.. " என்க,
" வாசு என்னதிது சின்னப்புள்ள தனமா..அவ கல்யாணமாகி எங்க போக போறா..நம்ப கூடதான இருக்கப் போறா..அப்ரோ என்ன வாசு.. "
" ம்ம்.. என்னமோ தெரியல பாஹீ.. மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு.. கனவும் தாறுமாறா வருது.ரோகிணி என்னைய விட்டு ரொம்ப தூர போகிற மாறி ..பயமா இருக்கு"
அவன் மனதை மாற்றும் விதமாக " ஹலோ..கருப்புச் சட்டை காரரே.. என்னதிது கனவுக்குலாம் பயந்துகிட்டு.. நீங்க ரொம்ப மாறிட்டீங்க போல. பேசாம இந்த அய்யனாருக்னு கோவில்ல போயி வேப்பிலை அடிக்க வேண்டியதுதான் "
அவள் கேலியில் கொஞ்சமாய் சிரித்துவிட்டான்..
" தனக்கு வயசாகிடுச்சுனு மறைக்க, விட்டா தம் பொண்ணு இன்னும் பால்வாடி தான் படிக்குதுன்னு சொல்வ போல.. கல்யாணம்ங்கறது எல்லார் வாழ்க்கைலயும் நடக்கறதுதான்.. அதுக்காக ப்பீல் பண்ணுவியா.. கண்ணை துடைச்சிக்கிட்டு உள்ளார வா.."
பாஹீ உள்ளே செல்ல வலியுடன் அவளைத் தொடர்ந்தான்.. தேவாவிற்கு ரோகிணி விசயம் தெரிந்ததால் எங்கே தன் மகளை தன்னிடம் இருந்து பிரித்துவிடுவானோ என்கிற பயம் அவனுக்கு.. ஏற்கனவே நிறைய இழப்புகளை சந்தித்தாயிற்று.. இனி அவன் எதையும் இழக்க விரும்பவில்லை.. இந்த செய்தி பாஹீக்கு தெரிந்தால் கோபப்பட்டு விடுவாள் என்கிற காரணத்தால் தெரியக் கூடாது என மறைத்து விட்டான் வாசு..
அவன் உள்ளே செல்ல, சண்முகம்
" வாத்தியாரே..நீங்க கத்தின்னா..இந்த சண்முகப் பிரியன் புத்தி.. உங்களால சண்டை போட தான் முடியும்.. என் அறிவோட போட்டி போட முடியாது " என விசாகனைப் பார்த்து சவால் விட்டுக் கொண்டிருந்தான்..
விசாகன் " டேய் சம்பு..நீ புத்தியா இல்லையான்னு நான் சொல்றேன்..சீன் போடாம கேள்விய சொல்லுடா. "
அவனும் சரிக்கு சமமாய் அவனுடன் வாதிட்டான்..
சண்முகம் வாசு உள்ளே நுழைந்ததைப் பார்த்ததும் சற்று பம்ப ஆரம்பித்தான்..அந்தக் கேள்வியை முதலில் இவனுக்கு சொல்லித் தந்ததே வாசு தானே..
விசாகன் ரோகிணிக்காய் மறுபடியும் கேட்க,இந்த முறை கேள்வியை சொன்னான்..
" இஇஇ சின்ன கணக்கு தான். ஜீனியஷ் டக்குனு ஆன்சர் பண்ணுங்க ..எனக்கு கணக்கு வராது..நான் ஒதுங்கிக்கிறேன்னு சொல்லக் கூடாது.நாம ஸ்கூல்ல படிச்ச கூட்டல் கணக்குதான். இதுக்கு சரியா பதில் சொல்றவங்க விசாகன் ரோகிணி கல்யாணத்துக்கு முக்கிய விருந்தினரா வரலாம்..இவளா ஒரு ஆளு.. பதில் சொல்னுமான்னு நினைக்க கூடாது சரியா..பதில் கண்டுபிடிச்சவங்க பி.சி ல ஆன்சர் மட்டும் மெசேஜ் பண்ணுங்க.. இது எனக்கு சப்போர்டா இருக்கற உங்களுக்காக மட்டுந்தான் 😍😍 "
" ஒரு ஊர்ல ஒரு விவசாயிக்கு மூணு மகன்கள்.. அவருக்கு கால் லிட்டர் பால் கறக்கும் மாடு பத்தும், முக்கால் லிட்டர் பால் கறக்கும் மாடு பத்தும் 2 லிட்டர் பால் கறக்கும் மாடு பத்தும் இருந்துச்சு..
மூனு மகன்..முப்பது மாடு..முப்பது லிட்டர் பால்..
அவர்
ஒவ்வொரு மகனுக்கும் பாலோட அளவும் பத்து லிட்டர் வரமாதிரியும், மாடும் பத்து உருப்படி வர மாதிரியும் பிரிச்சி கொடுக்கனும்.. அப்போ அவர் எப்படி பிரிச்சு கொடுப்பாரு.. இதான் கேள்வி.. "
என்ன பிரண்ட்ஸ் உங்க பள்ளிக்கூட வாழ்க்கை நினைவு வந்துடுச்சா..
விசாகன் ரோகிணிக்காக பதி்ல் சொல்லுவானானு தெரியல.. நீங்களாச்சும் உதவி பண்ணுங்க..
அடுத்த பகுதியில உங்க எல்லோர்க்கும் பெரிய ஷாக் வெச்சிருக்கேன்.. சீக்கிரம் கண்டுபிடிச்சு சொல்லுங்க.
என்றும் அன்புடன்
நிவி..
Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz