ZingTruyen.Xyz

என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)

22.என்னை மறந்தாயோ கண்ணம்மா

Nivethamagathi

உதயன் திடீரென உத்ரா வரச் சொன்னதுமே அதில் ஆபத்து இருக்கும் என்று தெரிந்து அனைத்திற்கும் தயாராகித்தான் வந்திருந்தான்..

தேவா சரியாக வந்து சேரவும் மெதுவாக பதறாமல் பேச்சை ஆரம்பித்தான்..

" ஹாய் சார்..  வாட் அ பிளசன்ட் சர்பிரைஸ்.. " என சிரித்த முகமாக கை குலுக்க, அவனது கையை தட்டிவிட்டான் தேவா..

அவனது கோபத்தின் அளவு அதில் தெரிந்தது..

உதயன் சும்மா விடுவானா.. " ஏன் சார்.. உங்க ஸ்டாப் உத்ராவ எங்கூட பார்த்ததும் நான்தான் உங்க கம்பெனிக்குள்ள ஸ்பை வெச்சி காய நகர்த்தறேன்னு நினைச்சிட்டிங்களா..இல்ல நீங்க கோபப்பட வேற எதுவும் ரீசன் இருக்கா "

என்க,

" . சுமார்டா மூவ் பண்றீங்கனு நினைப்போ.. " என்றவன் உத்ராவிடம்

" இப்போ கூட நீ என் ஆபிஸ்ல ஸ்பையா வேலை செஞ்ச காரணத்துக்காக என்னால லீகலா ஆக்சன் எடுக்க முடியும் உத்ரா.. உன்னை மாறி ஆளுங்களால தான் நம்பிக்கை, விஸ்வாசம் அப்படிங்கற வார்த்தைக்கே அர்த்தம் இல்லாம போகுது .. ஆனா உன்னோட துடிப்பும் வயசும் இந்நேரம் எனக்கு பொண் குழந்தை இருந்திருந்தா உன்னை மாதிரி தான் இருந்திருக்கும் என்கிற காரணத்தால தான் நீ என்ன செஞ்சாலும் அமைதியா இருந்தேன்.."

அவள் பேசவில்லை.. என்ன இருந்தாலும் அவனுக்கு முதலாளி என்கிற வகையில் இவள் செய்தது தவறு தானே.. உதயனுக்கும் தேவா ஒன்றும் அவ்வளவு மோசம் இல்லை என்று தோன்றியதுதான்.. ஆனால் அவனிடம் உண்மையை வரவைத்தே ஆக வேண்டுமே..

" நம்பிக்கை விஸ்வாசம் பத்தி நீங்க சொல்ல வேணா .. நீங்களே கே.எஸ் ஆர்னு பேர மாத்தி வெச்சிட்டு தானே ஊரை ஏமாத்துறீங்க.. அப்படி அதுக்கான அர்த்தம் தெரிஞ்சிருந்தா ஒரு அப்பாவி பொண்ணு அத்தனை அவமானத்தையும் சந்திச்சிட்டு உயிர விட்ருக்க மாட்டாங்க"

அவன் ராஜியை பற்றி தான் பேசுகிறான் என்று தெரிந்ததும் தேவாவின் முகம் ஒரு விதமான முகபாவத்தைத் தான் காட்டியது.. அது குற்றவுணர்வா காதலின் பிரிவா என்று பிரித்தறிய முடியவில்லை..

கோபத்தில்

" செஞ்ச தவற மூடி மறைச்சு நல்லவர் வேசம் போடற உங்கப்பாவ விட நான் ஒன்னும் மோசம் கிடையாது உதயன்..

நீ யாரு..உங்க அப்பா யாருன்னு எனக்கு நல்லா தெரியும்... நேர்மைக்கு எடுத்துக்காட்டே நீங்க தான " என்றான் அவனை அறுவெறுத்த பார்வையோடு..

வாசுவின் மீதிருந்த கோபத்தை உதயனிடத்தில் காட்டினான்.. உதயனுக்கும் அதுதானே வேண்டும்..

" சூப்பர் சார்..எனக்கே எங்கப்பாவ பத்தி லாஸ்ட் ப்பிஃவ்டின் டேசா தான் தெரியும்.. ஆனா உங்களுக்கு முன்னவே தெரிஞ்சிருக்கும் போல சார்.  நீங்களும் என் அப்பா வாசுதேவரும் பிரண்ட்ஸா சார் "

அடுத்து அவன் தேவா வாயினைத் திறக்க விடவே இல்லையே.

" தென் சார்.. நீங்க என்னையும் உத்ராவையும் ஒன்னா சேர்த்தி வெச்சு பார்க்கறதால தப்பா நினைக்காதீங்க.. உத்ரா என் சிஸ்டரோட பிரண்ட்.. அதோட என்னோட பியான்ஸேவும் கூட.. உங்கள ஏமாத்தி பொழைக்கனும்னு எங்களுக்கு அவசியம் இல்ல..அத்தோட எங்களுக்கும் உறவாடி கெடுக்க பழக்கம் இல்ல "

கடைசி வரியில் அவன் ராஜிக்கு செய்த துரோகத்தைத் தான் குறிப்பிடுகிறான் என்பது தெளிவாகத் தெரிந்தது..

ஒன்று தேவா வந்த வழியே போக வேண்டும்..இல்லையேல் நான் தான் தேவா என்று ஒற்றுக் கொள்ள வேண்டும்.. இந்த சிறுவனிடம் தான் ஒதுங்கிப் போவதா என நினைத்தவன் இந்த முறை நேரடியாக களத்தில் இறங்கினான்..

" ம்ம்..நல்லா பேசுற.. அப்படியே உங்கப்பா மாதிரி " விரக்தி புன்னகையில் பதில் அளித்தான்..

" நீங்க அவர்கூட ரொம்ப வருசம் பழகிப் பார்த்த மாதிரி சொல்றீங்க.. அப்போ ஒத்துக்கறீங்க நீங்க தான் தேவா ன்..னு " அவன் பேச்சில் உறுதி இருந்தது

தேவா பயப்படவில்லை.. புன்னகையை உதிர்த்தவன் " ய்யா.. இவ்வளவு தூரம் உண்மை வந்தாச்சு.. இனியும் மறைச்சு பலனில்லை.. ஆமா நான் தேவா தான்.. எங்கப்பா அம்மா வெச்ச பேரு சுகதேவன்..சோ.. தேவா ங்கிறது என்னோட நேம் தான்.. இதுல எதும் தவறா எனக்கு தெரியலையே "

அவன் உண்மையை உலறப் போகிறான் என சந்தோசப்பட்டவனிடம் மொக்கையாக பதில் அளித்தான் தேவா.. அவன் முக மாறுதல் கண்டு ஏனோ தேவாவும் சிரித்துக் கொண்டான்.

" சரிங்க சார் நான் நேரடியாவே கேட்கறேன்.. இருபத்தி மூனு வருசத்துக்கு முன்னாடி எங்கப்பா உங்களுக்கு எந்த தீங்கு செஞ்சாருன்னு அவர இந்த அளவுக்கு கெடுக்க நினைக்கறீங்க " சுற்றி வளைக்க விரும்பாது பேச்சை ஆரம்பித்தான்.

தேவாவின் கண்முன் தனது தந்தை தாய் தங்கை நினைவு வந்து செல்ல முகம் பாறையாய் இறுகியது..

" நான் கேள்விபட்டேன் சார்.. உங்க குடும்பத்துல உங்க பேரன்ட்ஸும் உங்க சிஸ்டரும் உயிரோட இல்லைன்னு.. என் கெஸ் கரெக்ட்னா நீங்க அவங்க இறந்ததுக்கு தான் எங்கள பழி வாங்கறீங்களா "

அவன் கூறாவிட்டாலும் தானே கண்டுபிடித்த உதயனின் அறிவுக் கூர்மையை மெச்சிக் கொண்டவன்

" அதை அழிச்சவங்க கிட்டயே கேட்க வேண்டியது தான மிஸ்டர்.உதய தேவ மூர்த்தி.. என்னை தனியா தவிக்க விட்ட உங்கப்பாவ கேட்க வேண்டியது தான.. என் குடும்பம் அவருக்கு என்ன பாவம் பண்ணோம்னு.. கல்யாண கனவோடு இருந்த என் இந்து என்ன பாவம் பண்ணானு ..உலகம் தெரியா பச்சை மண்ணு என் இந்து.. அவளோட கல்யாணத்தை எப்படி எல்லாம் நடத்தி பார்க்கனும்னு ஆசை பட்டேன் தெரியுமா உனக்கு.. கடைசில என் கையால கொள்ளி வைக்க வெச்சிட்டானே பாவி..ஒரு டாக்டராகி சேவை செய்யனும்னு நினைச்சிட்டு இருந்த என்னை.. எத்தனை பேர் சாவுக்கு காரணமா இருக்க வெச்சிட்டானே உங்கப்பன்..அவனையே கேளு..எதுனால அப்படி பண்ணாணு " என்றான்.

தேவாவிடம் யாரும் இதுவரை அவனது மனக்காயத்தை கிளறி கேள்வி கேட்டதில்லை..கேட்பதற்கும் ஆளில்லை.. உதயன் கேட்டதும் தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தி விட்டான்..

உத்ரா அவனது கத்தலில் மிரண்டவள் தன்னை சுதாரித்துக் கொண்டு

தண்ணீர் டம்ளரை எடுத்து தேவாவிடம் நீட்டினாள் ..

" சார் கொஞ்சம் தண்ணிய குடிங்க சார்..உங்க பிபி ரைஸாகிடும்.. " இத்தனை வருடங்களுக்கு பிறகு அவன் உடல்நிலை குறித்து கவலைப்பட்டது இதுதான் முதன்முறை..

அவள் கண்களில் தெரிந்த அக்கறை அவனை சாந்தமாக்கியது..

அவன் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த உதயன் தற்போது பேச்சை ஆரம்பித்தான்.

" சரிங்க சார்..உங்களோட எதிரி வாசுதேவனும் அவரோட குடும்பமும் கெட்டவங்களாவே இருக்கட்டும் சார்.. ஆனா அவுங்கள தண்டிக்க நீங்க யார் சார்.. வாசு தெரியாம பண்ண தப்புக்கு இவ்ளோ தண்டனைனா.. நீங்க தெரிஞ்சே பண்ண தப்புக்கு தண்டனை என்ன சார்..இதை நான் வாசுவோட பையனா கேட்கல.. உங்க பக்கத்துல இருக்கற நியாயத்தையும் தெரிஞ்சுக்கனும்னு தான் கேட்கறேன் சார்..

அவர்தான் குற்றவாளின்னா மத்தவங்கள ஏன் சார் கொன்னீங்க.. ராஜீ சித்தி என்ன சார் பாவம் பண்ணாங்க.. இப்படி உறவாடி அவுங்க சாகும்போது கூட கெட்ட பெயரோட சாவடிச்சிட்டீங்களே.. அவுங்க வயித்துல இருந்தது உங்க குழந்தைதானே.. அதையும் சேர்த்து தண்டிச்சிட்டீங்களே.. உங்க தங்கச்சிக்கு நேர்ந்தா அது கொடுமை.. அடுத்தவன் தங்கச்சினா அது நியாயமா சார்.. இதைவிட்டா இனி உங்கள பார்க்க முடியுமான்னு கூட தெரியாது.. அதான் இப்பவே கேட்கறேன்.. பதில் சொல்லுங்க சார்.. விசாகனோட அம்மா அப்பாலா உங்க குடும்பத்த  கொலை பண்ற அளவுக்கு என்ன சார் பண்ணாங்க..  எப்படியும் அதுக்கான சரியான ரீசன் நீங்க வெச்சிருப்பீங்க ..சொல்லுங்க சார்.. "

வாழைப் பழத்தில் ஊசி இறக்குவதைப் போல உன்னிடம் சரியான காரணம் இருக்காது என அவன் செய்த குற்றங்களை வரிசையாக இறக்கினான்..

" சொல்லுங்க சார்... எங்கப்பா என்ன தான் செஞ்சாரு.. "

அவன் கேள்விக்கு பதில் கூற முடியா இயலாமை கோபத்தைக் கிளப்ப டேபிளைத் தட்டினான் தேவா..

தன் கோபத்தை கட்டுப்படுத்தியவன்

" என்ன தெரியனும் உனக்கு... என்ன போட்டு வாங்கறீயா.. எனக்கு ஒன்னும் பயம் கிடையாதுடா.  நான் நல்லா சொல்வேன்.. உங்கப்பா தான் என் குடும்பம் அழியறதுக்கு காரணம்..நான் தனிமைல வாடறதுக்கு காரணம்.. அவன் மட்டும் என் தங்கை வாழ்க்கைல வராம இருந்திருந்தா எங்குடும்பம் இந்நேரம் எங்கூட இருந்திருக்கும்.. வாசு பசுந்தோல் போற்றிய நரி.. அவன என் கையால கொல்லனும்னு எனக்கு அவ்ளோ ஆசை.. ஆனா ஒரு மருத்துவனான என்னால ஒரு உயிர பறிக்க முடியாது..அதுனால தான் அவன காயப்படுத்த நினைச்சேன்.. மத்தபடி நீ சொல்ற கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நான் ஒத்துக்கறேன்.. ராஜி விசயத்துல நான் முட்டாள்தனமா நடந்துகிட்டேன் தான்.  ஆனா அதுக்கான தண்டனைய தான் இத்தனை வருசமும் அனுபவிச்சிட்டு இருக்கேன்.. ஒருவகையில ராஜி இறந்ததுக்கு கூட உங்கப்பா தான் காரணம்.. அவ பேர நான் கெடுக்கல..தன்னோட தவறான செய்கையால உங்கப்பா தான் தன் மனைவியோட தங்கைன்னு கூட யோசிக்காம அவகிட்ட தவறா"

தேவாவால் அடுத்த வார்த்தை பேச முடியவில்லை.. உதயன் அவன் சட்டையை பற்றியிருந்தான்.. வாசுவைப் பற்றி என்ன வார்த்தை சொல்லி விட்டான் அவன்..

தேவாவோ ரகுபதியின் வாய்ஜாலத்தால் இன்னமும் பொய்யை உண்மையென நம்பிக் கொண்டிருந்தான்.. உதயனை இதுவரை சாதுவாக பார்த்திருந்த உத்ரா கூட உதயனின் இந்த அவதாரத்தைக் கண்டு அதிர்ந்து விட்டாள்..

" யாரப் போய் என்ன வார்த்தை சொல்லீட்டீங்க.. அவர் வாசுதேவர்.. தன் மனைவிய தவிர வேற யாரையும் நினைச்சு பார்க்காத உத்தமர் அவர்.. அவர் மனைவி உயிரோட இருக்கனும்ங்கற  காரணத்துக்காக இருபத்தி மூணு வருசம் பெத்த பிள்ளையையும் மனைவியையும் விட்டுட்டு வனவாசம் போல தன் வாழ்க்கைய வாழ்ந்தவரு.. அவர் மட்டும் இல்லைனா இந்நேரம் உங்கபொண்ணு.. உங்களுக்கும் ராஜி சித்திக்கும் பொறந்த பொண்ணு இந்த உலகத்தை விட்டே போயிருப்பா.. அதை மொதல்ல தெரிஞ்சுக்கோங்க.  கண்ணால் காண்பதும் பொய்..காதால் கேட்பதும் பொய்னு எப்போ நீங்க புரிஞ்சிக்கிறீங்களோ அப்போதான் உங்களுக்கும் உண்மை புரியும்..

நீங்க அந்த கொலைகள செய்யலைன்னு என் நண்பன் சொன்னத கூட நம்பாம உங்க நடத்தையே வெச்சே கண்டுபிடிச்சேன்.. ஆனா நீங்க யாரோ சொன்ன கட்டுக்கதைய நம்பிக்கிட்டு.. என் அப்பாவ குறை சொல்றீங்க.. "

தந்தைக்கு இழுக்கென்றால் தனக்கும் தானே என்று பொங்கி எழுந்தவன் உண்மையை உலறிவிட்டான்...

உத்ரா அவன் கைப்பிடித்து இழுக்கவும்தான் சுயநினைவுக்கு வந்தவன் தேவாவின் முகம் பார்க்க, தன் மகள் உயிருடன் இருக்கிறாளா

என்ற அதிர்ச்சியில் இருந்து அவர் இன்னமும் மீண்டுவரவில்லை..

அதற்குள் தேவாவின் சட்டையைப் பிடித்ததால் அவரின் பாதுகாவலர்கள் உதயனைத் தாக்க அவனை நெருங்கியிருந்தனர்..

உத்ரா அவனை குற்றம் சாட்டுவதைப் போல பார்க்க, அவனும் அவசரத்தில் உலறிவிட்டதை எண்ணி தன்னையே நொந்து கொண்டான்.. காவலர்களை ஒதுங்கச் சொன்ன தேவா

" என் மகள் உயிரோட இருக்கிறாளா " என பதற்றமாக கேட்டான்..

" ஆமா இருக்கா... என் அப்பா வாசு தேவரோட பொண்ணா.. அவரோட இளவரசியா" அவன் வெட்டாய் பதில் சொன்னான்.

" அவள நான் பார்க்கனும் .. பேசனும்"

" என்னால உங்களுக்கு உதவ முடியாது..ஒருவேளை ரோகிணியும் என் அப்பாவும் மனசு வெச்சா முடியும்.."

" நீ சம்மதிக்காம அவுங்க ஒத்துக்க மாட்டாங்க.. என்ன செஞ்சா நீ எனக்கு உதவி செய்வ "

" என் அத்தை மாமா தாத்தாவோட சாவுக்கு காரணமானவங்களுக்கு தண்டனை கிடைச்சா"

" அது.. அது..என்னால முடியாது"

" அப்போ அவ எங்கிருக்கா எங்கிற பதிலையும் சொல்ல முடியாது "

" நான் நினைச்சா நிமிசத்துல கண்டுபிடிச்சிருவேன்"

" எனக்கு அதைப் பத்தி கவலையில்ல"

" உம்மேல உனக்கு அவ்ளோ நம்பிக்கையா "

" என் அப்பா மேலயும் அவரோட வருங்கால மாப்பிள்ளையான என் நண்பன் மேலயும் தான் நம்பிக்கை "

" எம்மகள நான் கண்டுபிடிச்சு அவள நான் உங்ககிட்ட இருந்து மீட்டெடுத்ததுக்கு பிறகு உங்கள என்னை பண்றேன்னு பாருங்க.. இந்த தேவா நினைச்சா உன்னை இந்த நிமிசம் கொல்ல முடியும் "

" நினைச்சா தானே கொல்ல முடியும்.. நீங்க கொல்ல மாட்டீங்க " மெல்ல சிரித்துக் கொண்டான் அவன்..

" நீங்க உங்க பொண்ணை நெருங்கறதுக்குள்ள எங்கப்பா எந்த தப்பும் பண்ணலனும் அந்த கொலைகள செஞ்சவன சரியான ஆதாரத்தோடு கண்டுபிடிச்சு சட்டத்து முன்னாடி நிறுத்திக் காட்டறேன்.. "

அவன் உத்ராவையும் அரை மயக்கத்தில் இருந்த ரஞ்சித்தையும் கூட்டிக் கொண்டு வெளியேறிட, தேவா தான் அதே இடத்தில் சிலை போல நின்றான்.

" சார்.. அவங்க போறாங்க சார் " என்ற பாதுகாவலரிடம் போக விடுங்கள் என்று கண்ணசைத்த தேவா அதே இடத்தில் அமர்ந்து விட்டான்... தான் அநாதை என்ற நிலையை முறியடிக்க, தன்னால் உருவான ஒரு உயிர் இருக்கின்றது என்ற நினைவிலே சுழன்றவன் தொடர்ந்து கட்டளைகளை பிறப்பித்தான்..

இரஞ்சித்தை மருத்துவமனையில் சேர்ப்பித்து விசாரிக்க அவன் வாசு எங்கிருக்கிறான் என்பதை மட்டுமே விசாரித்தான் என்று மட்டுமே கூறினான்.. பாதுகாப்பிற்காக

அவனையும் உத்ராவையும் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

தூக்கம் வராததால் தோட்டத்தில் சற்று பொழுதைக் கழிக்கலாம் என்று தோட்டத்திற்கு வந்த உத்ரா , அங்கே தரையில் அமர்ந்திருந்த உதயனின் அருகே அமர்ந்தாள்..

" என்னாச்சு உத்தீ.. ரொம்ப ரெஸ்ட் லஸ்ஸா இருக்கீங்க..தேவா சார நினைச்சா"

" ம்ம்.. அவர் எதுவும் ஏடா கூடமா பண்ணிருவார்னோ பயமா இருக்கு..  ஏய்..எதுக்கு இப்போ சிரிக்கற"

" அங்க என்னமோ அவ்ளோ வீரமா பேசிட்டு வந்துட்டு..இங்கே இப்படி பயப்படறீங்களே.. வாசு அங்கிள பத்தி பேசுனதும் ரோகிணி மாதிரி உங்களுக்கும் கோபம் வந்திடுச்சு போல.. என்ன இருந்தாலும் அப்பா மகன் உறவு.. அது வேற ப்பீல் இல்ல.. "

வானத்தை வெறித்தவன் " எனக்கும் அவர பிடிக்கும் உத்தீ..நான் அவர் மேல கோபப்படலாம்..ஆனா மத்தவங்க..ம்ஹூஹூம்.. அத என்னால பார்க்க முடியாது.. "

" இவ்ளோ பாசம் வெச்சிருக்க நீ ஏன் இங்க வந்த உதீ.. அவரோட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணிருக்கலாம்தானே "

" ஏன்னு உனக்குத் தெரியாதா "

" தெரியும் தான்.. ஆனா எனக்காக மட்டுந்தான்னு சொல்றது மட்டும் முழுக் காரணம் இல்லையே.. உங்க இடத்துல விசாகன் இருந்திருந்தா கூட இதே மாறி பார்த்திருக்க முடியும் தானே "

"  "

" பதில் சொல்ல விருப்பம் இல்லைனா விட்ரூங்க "

அவள் எழப்போக தன் கைக்குள் அவள் கையைைப் பற்றிக் கொண்டவன் " சின்ன வயசுல என் அப்பாவுக்காக விசாகனும் நானும் அடுச்சிப்போமாம்.. எங்க அப்பத்தா சொன்னாங்க..

அவனுக்கு எங்கப்பான்னா உசிரு.. எந்நேரமும் சூப்பர் மேன்.. சூப்பர்மேன்னு தான் சொல்லிட்டு இருப்பானாம்..ஆனா எனக்கு அதுலா அவ்ளோ ஞாபகம் இல்ல..

இப்பவும் அவர பார்த்த உடனே என்னை விட அவன் தான் ரொம்ப சந்தோசப்பட்டான் அவனோட ஹீரோ கிடைச்சிட்டார்னு.. "

" அப்போ நீங்க விசாகனுக்காக வாசு அங்கிள விட்டுக் கொடுக்கப் போறீங்களா "

" முட்டாள் மாதிரி பேசாத உதீ.. அவர நான் விட்டுக் கொடுக்கல கொஞ்சம் விலகி இருக்கேன்..அவ்ளோ தான்.. இறந்து போயிட்டார்னு நினைச்ச என் அப்பா திரும்ப வந்த மாறி அவனோட அப்பாவும் அம்மாவும் வர வாய்ப்பில்லையே.. நான் அப்பாவோட நெருங்கி இருந்தா கண்டிப்பா அவன் ஒதுங்கி போயிருப்பான்.. அவனோட அப்பா அம்மா இல்லையேன்னு ப்பீல் பண்ணுவான்.. நான் அவர் மேல கோபமா இருக்கறதால தான் அவனே எங்கள சேர்த்து வைக்க நினைக்கிறான்.. அதுக்காக அவன் என்னை பார்த்து பொறாமை படுவான்னு நான் நினைக்கல.. எங்க அவன் இங்க தனியா வந்து, தான் மட்டும் தணிச்சு போயிட்டோம்னு ஒரு நொடி நினைச்சாலும் நான் அவன் நண்பனா இருக்கறதுக்கு அர்த்தம் இல்ல.. அவன் சந்தோசமா இருக்கனும்.. அதுதான் எனக்கு முக்கியம் "

" உண்மையா உங்க நட்பு மேல எனக்கும்  பொறாமையா இருக்கு.. விசாகன் உம்மேலயும் நீங்க அவர் மேலயும் அவ்ளோ பாசம் வெச்சிருக்கீங்கல்ல.. ரியலி கிரேட்"

" நீயும் கிரேட் தான் உதீ.. என் அம்மாவுக்காக நான் செஞ்சா அதுல ஒரு சுயநலம் இருக்கு..ஆனா தன்னை வளர்த்துன ஒரு காரணத்துக்காக எவ்ளோ ரிஸ்க் எடுத்துருக்க "

" அதுல என்ன இருக்கு உதீ.நான் போயிட்டா ஏன்னு கேட்கறதுக்கு கூட ஆள் இல்ல.. என்னோட உயிர் ஈஸ்வரி அம்மாக்காக போனா புண்ணியம் தான் "

" உதீ "

" சாரி தெரியாம"

" அப்போ நான்..நம்ம குடும்பம் யாரும் தேவையில்லையா உனக்கு.. "

" ஹே..சாரிப்பா.. நான் எதோ ஞாபகத்துல"

" இனி  கனவுல கூட அநாதைங்கற வார்த்தை உன் வாயில இருந்து வரக் கூடாது புரியுதா.."

" ம்ம்.. இனி சொல்ல மாட்டேன்.. "

சில நிமிடங்கள் அமைதியில் கழிந்தது.. 

" ஏன் உத்தீ.. தேவ சார் ரோகிணிய பார்த்தா என்ன செய்வான்னு நினைக்கிற "

" தெரியல 😏🤨 "

" நான் சொல்லட்டுமா "

" அப்ரோ ஏன் எங்கிட்ட கேட்ட.. "

" அட.. என்னமோ நீ அடிக்கடி கோப்படறீயே.. சரியில்ல..உனக்கும் ஒரு பாயசத்தை போட்டற வேண்டியது தான்.." மெதுவாக புலம்பிக் கொண்டாள்..

" என்ன சொன்ன "

" ஒன்னும் சொல்லலியே.. "

" "

" ஏன் உதீ..பேசாம தேவா சார நாமளே வாசு அங்கிள் கிட்ட பேச வெச்சா.."

" இதுகாச்சும் பதில் சொல்லலாம்ல "

" அது சரிப்படாது.. அப்பாவோ நானோ தேவா விசயத்துல பொறுமையா இருக்கறது கையாளாகாததால இல்ல.. அம்மாவோட மனநிலைக்காக.. அவுங்க முழுசா குணமாகற வரை நாம பொறுத்துத்தான் ஆகனும்.. ரஞ்சித் சொல்றத வெச்சு பார்க்கும் போது தேவாவ அம்மா நேர்ல சந்திச்சாங்கனா அவுங்க கோபம் முன்ன இருந்தத விட பல மடங்கு அதிகமாக வாய்ப்பிருக்கு."

" ஓ... ஆமா..உனக்கு ஏன் தேவா சார் மேல இந்தளவுக்கு நம்பிக்கை.."

" தெரியல...ஆனா அவர் தப்பானவரா எனக்கு தெரியல.. ஒருவேளை சூழ்நிலை அப்படி அமைஞ்சிருக்கலாம்..ம்

சரி..

நேரமாச்சு உத்தீ போய் தூங்கு.. "

" நான் கேட்ட எந்த கேள்விக்காச்சும் உருப்படியா பதில் சொல்றீயா நீ..

குட் நைட்"

" குட் நைட் "

இதுவரை தங்களது குடும்ப பிரச்சனையை பேசும்போது இல்லாத தயக்கம் எழுந்து பிரிந்து செல்லும் போது தெரிந்தது..

மீண்டும் அவனருகே அமர்ந்து அவன் தோளில் வாகாய்  சாய்ந்து கொண்டாள்..

" நம்மளோட எல்லா பிரச்சனையும் சீக்கிரம் சரியாகீடும் உத்தீ... "

" ம்ம் "

" எது நடந்தாலும் மனச தளர விடாத..உனக்கு துணையா நான் இருப்பேன்.. "

" ம்ம்.. "

" ஓவரா ஸ்ரெஸ் ஆகாத..ரிலாக்சா இரு.. எந்நேரமும் நீ நிக்காம ஓடிக்கிட்டே இருக்க.."

" "

" அப்ரோ ஆன்டி என்னை தான் கேப்பாங்க..என்னம்மா என் பையன ஒழுங்கா பார்த்துக்க மாட்டியான்னு"

"  "

இரண்டு முறை பதில் வராததும் தன் தோளில் பாரம் கூடுவதும்  அவன் தூங்கிவிட்டான் என உணர்த்த அவனது தலையை மெதுவாக எடுத்து தன் மடியில்

வைத்துக் கொண்டாள்.. அந்த நிலா வெளிச்சத்திலும் தோட்டத்தில் பொறுத்தியிருந்த விளக்கின் துணையிலும் அவனது முகம் தெளிவாக தெரிந்தது அவளுக்கு..


கண்ணிற்கு அடியில் கருவளையம் அவனது இத்தனை நாள் தூங்கா இரவுகளை உணர்த்த, மெதுவாக அவன் சுருட்டை முடியை கோதிவிட்டாள்.. அடர்த்தியான சுருள்முடி, ஆதலால் அவன் தூக்கம் பாதிக்கப் போக, கையை அசையாது அவன் சிகைக்குள்ளே வைத்துக் கொண்டாள்.. இன்று தேவாவிடம் தன்னை பியான்சே என்று அறிமுகப்படுத்தியதை நினைத்து புன்னகை தானாக உதிர்த்தது..

சாது போலவே இருந்து தன் மனதை வசியம் செய்த சாகசக்காரனை செல்லமாக கடிந்து கொண்டு மனம் முழுக்க சந்தோசத்தோடு தன் மடியில் தன்னவன் தலை வைத்திருக்க,  தரையில் தலைவைத்து , மெதுவாக கால் நீட்டி அப்படியே படுத்துக் கொண்டாள்..

அடுத்த பகுதியில் ரகுபதி பராக்..பராக்..

யாரெல்லாம் வாசுவையும் விசாகனையும்

மிஸ் பண்ணிங்க.. அவுங்களாம் அடுத்த எபில கண்டிப்பா வருவாங்க..
இந்த எபி கொஞ்சம் டிரையா தான் இருக்கும்.. கொஞ்சம் அட்ஜஸ்ட் கரோ..

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz