ZingTruyen.Xyz

என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)

1.என்னை மறந்தாயோ கண்ணம்மா

Nivethamagathi

மாலை மங்கும் நேரம்..

அந்தப் புகழ்பெற்ற மகளிர் கல்லூரி வாசலில், இறுதியாண்டு மாணவிகள்
தங்களது இறுதித் தேர்வை முடித்துவிட்டு, சந்தோசமும் துக்கமும் கலந்து முகத்திலும் உடையிலும் தோழிகளுக்கே தங்களை அடையாளம் தெரியாதது போல, வண்ணப் பொடிகளை பூசிக் கொண்டும்  தோழிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டும்  பிரியாவிடை கொடுத்துக் கொண்டிருந்தனர்..

அதனை தூரத்தில், தங்களது மகிழுந்தில் அமர்ந்தவண்ணம் நண்பர்கள் இருவர் கவனித்தவண்ணம் இருந்தனர்..

அவர்களில் ஒருவன் பெயர் உதயன்..
இன்னொருவன் விசாகன்.. இருவருமே
வறுமை என்றால் என்னவென்றே
அறியாத மேற்தட்டு பணக்கார வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அவர்கள் அணிந்திருக்கும் உடையும் அவர்கள் அமர்ந்திருக்கும் அந்த விலையுயர் மகிழுந்தே காட்டிக் கொடுத்தது.

உதயன் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தவாறே " டேய் எவ்ளோ நேரம்டா வெட்டியா இங்கையே இருக்குறது.. எனக்கு மும்பைல மதியம் முக்கியமான மீட்டிங் இருந்துச்சு..நீ கூப்டனு ஒரே காரணத்துக்காக மட்டுந்தான் இருநூறு கோடி ரூபா பிசினஸ் டீல கேன்சல் பண்ணிட்டு வந்துருக்கேன்..ஆனா நீ என்னடான்னா இங்க, வந்த ஒரு மணி நேரமா எதுவும் பேசாம வழக்கத்துக்கு மாறா அமைதியாவே இருக்க " என சளித்துக் கொள்ள, அவனுக்கு தன் புன்னகையை பரிசளித்த விசாகன்,

" பொண்ணுங்க விசயத்துல நான் எப்படி? " என்றான்.

" என்னடா நான் இங்க காட்டுக் கத்தலா கத்திட்டு இருக்கேன்.. நீ முட்டாள்தனமா பேசிட்டு இருக்க"

" ம்ச்..கேட்டதுக்கு பதில் சொல்லு " என்று சொல்லும்போதே தங்கள் காரினை நோக்கி வந்த பெண்கள் கூட்டத்தைப் பார்த்து அவன் முகம் பிரகாசித்தது..

அவன் கேள்வியில் குழம்பிய உதயன் அவன் முகத்தில் வழியும் பிரகாசத்தைப் பார்த்து எதையோ புரிந்தவன்

" மச்சி நீ லவ் பண்றியா " என சந்தோசமாக கேட்க, அவனுக்கு விசாகனிடமிருந்து முரைப்பே பதிலாக கிடைத்தது.

" நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு..நான் பொண்ணுங்க விசயத்துல எப்படி" என அவன் மறுபடியும் முதலிலிருந்தே துவங்க,சில நொடி யோசித்த உதயன் பதிலளிக்க துவங்கினான்..
அவன் குரலிலே தன் நண்பனின் மீது வைத்துள்ள நம்பிக்கையை உணர முடிந்தது..

" விசாகன். என் ஆருயிர் நண்பன்.
என்னோட மாமன் மகன்.. என் அம்மாவோட இன்னொரு பையன். அழகுல கண்ணன்..அடுத்தவுங்களுக்கு உதவி செய்றதுல்ல கர்ணன். அன்பில..."

" டேய்..இப்படி எதுகை மோனை வெச்சு பேசுனா எக்ஸ்ட்ரா அஞ்சு மார்க போட இது உன் தமிழ் எக்சாம் பேப்பர் கிடையாது.
பில்டப் பண்ணாம பதில மட்டும் சொல்லு " என்ற விசாகனின் குரலில் உள்ள கண்டிப்பை எண்ணி விளையாடாமல் பதிலளிக்கத் துவங்கினான்.

" நீ என்னோட அம்மாவோட வளர்ப்பு..
அதுனால பெண்கள தெய்வமா பாக்குறவன்.. நீ இதுவரைக்கும் எந்தப் பொண்ணையும் அவ்ளோ ஏன் உன் பின்னாடியே லவ்ன்னு பொய் சொல்லிட்டு பணத்துக்காக வந்தவங்கள கூட பண்பா எடுத்துச் சொல்லி தள்ளி வெச்சவன். என் அம்மா பாக்குற பொண்ணைதான் கல்யாணம் பண்ணுவேனு உறுதியா இருக்குறவன்.சமூகத்துல பாதிக்கப்பட்ட
பெண்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்தலயும் நல்வாழ்வு மையத்தை
வெற்றிகரமா நடத்திட்டு இருக்குறவன்..மொத்தத்துல பெண்களின் நலவிரும்பி.. போதுமா விளக்கம் " என கூற, தன் நண்பன் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை அறிந்து மகிழ்ந்தவன்

" அப்போ பொண்ணுங்களுக்கு என்னால எந்த கெடுதலும் வராதுன்னு நம்பற தான" என்றான்.

" நான் நம்பறனோ இல்லையோ.. நீ மேட்டர் என்னனு சொல்லல நான் இப்படியே உன்னை இறக்கி விட்டுட்டு போயிடுவேன் "

" சரி சரி சொல்றேன்..நாம இப்போ ரெண்டு பொண்ணுங்கள கடத்தப் போறோம்" என அசட்டையாக சொல்ல, உதயன் அவனை நம்பாமல் ஒரு பார்வை பார்க்க,

" அதோ வராங்க பாரு.. ரெண்டு பொண்ணுங்க..அவுங்களதான்.. நீ ஒருத்தரையும்..நான் ஒருத்தரையும் தனித்தனியா கடத்தப் போறோம்.. நீ அந்தக் கடத்தற  பொண்ண நம்ம தோட்டத்து வீட்டுக்கு கொண்டு போயிரு..இந்தா மயக்க மருந்து " என கைக்குட்டையை நீட்ட, அதனைத் தட்டி விட்டு விசாகனை ஓங்கி அறைந்திருந்தான் உதயன்.. தன்னை என்ன காரியம் செய்ய சொல்லி விட்டான்..என்ற கோபம் அவன் முகத்தில் தெறிந்தது..

" விசாகா..என்னடா இது.. என்னால நம்ப முடியலையே..நீயாடா இப்படி.. அவுங்களையெலாம் பார்த்தா நம்ம நதியா மாதிரி தான தோனுது.. " என மறு கன்னத்தையும் அடிக்க கையோங்க, புன்னகையுடனே அதனைத் தடுத்து அவன் கைகளை சிறை செய்தவன்
" நம்ம நட்பு மேல சத்தியமா அந்த பொண்ணுங்களுக்கு கெட்டது நடக்க நான் விட மாட்டேன்டா.. வேற வழியில்லாம தான் இதை செய்ய போறோம். இவுங்க வெறும் தூண்டில்தான்.. நம்மளோட எய்ம் அந்தப் பொண்ணோட அப்பாதான்..அவன வெளிவர வைக்க இதைவிட்டா வேற வழி கிடையாது..அதான்"

" நீ ஆளு யாருன்னு மட்டும் சொல்லுடா.. நானே அவன கண்டுபிடிக்கறேன்..அதைவிட்டுட்டு கோழை மாதிரி தூண்டில் போடறானாம்..தூண்டில்.. நாம அந்தப் பொண்ணுங்கள கடத்திட்டா அந்தப் பொண்ணுங்களோட குடும்பத்த சேர்ந்தவுங்க நிலைய நினைச்சுப் பார்த்தியா" என ஆத்திரமாய் உதயன் கோபத்தில் கத்த,

"அதெல்லாம் நான் யோசிக்காம இருப்பனாடா.. நீ கடத்தப் போற பொண்ணுக்கு அப்பா அம்மா கிடையாது.. நம்மோட அன்னை ஆசிரமத்துலதான் வளர்ந்தா.. ".

" அப்போ அநாதைன்னா என்ன வேனா செய்யலாமா "

" சும்மா குதிக்காதடா.. நான் என்ன சொல்ல வரேன்னு முழுசா கேளு..அப்ரோ என்ன வேணா சொல்லு.. நம்ம கிட்ட இல்லாத அடியாள் பலமா..ஏன் மும்பைல இருந்து உன்னை கூட்டிட்டு வந்தேன்.. ஏன்னா இந்த விசயத்துல வேற யாரையும் நான் நம்பல.. ஒரு வேளை அந்தப் பொண்ணுங்களுக்கு தப்பா எதாச்சும் நடந்துச்சுனா என் மனசாட்சியே என்னை கொண்ணுடும்..நான் மட்டுமில்ல.. நீயும் பொண்ணுங்கள மதிக்கறவன்தான்..
அதான் உன்னைய இதுல சேர்த்துகிட்டேன்."

" ம்ச்.. நான் நல்லவனா இருந்தாலும் அந்தப் பொண்ணுக்கு நான் வேற யாரோ தான" என விசாகன் என்ன சொன்னாலும் உதயனின் மனம் ஏற்றுக் கொள்ள மறுத்தது..

தன் நண்பனைப் பற்றி அறிந்தவன் ஆதலால், உண்மையை அவனிடம் கூறினால் மட்டுமே உதவுவான் என்பதை அறிந்து

" நான் கடத்தப்போற பொண்ணோட அப்பா வேற யாருமில்ல.. உன்னோட அப்பா, என்னோட அப்பா, அம்மா, நம்ம  தாத்தா , உன் சித்தின்னு அஞ்சு பேரோட சாவுக்கும் காரணமான தேவா.. என் அப்பா அம்மாவ என் கண்ணு முன்னாடியே கொன்னவன்..என் அத்தையும் பாட்டியும் பூவையும் பொட்டையும் இழக்க காரணமானவன்..என்னை அப்பா அம்மா பாசத்தை அனுபவிக்க விடாம செஞ்ச கொலைகாரன். என் சின்ன அத்தைய காதல்ங்கற பேரைச் சொல்லி ஏமாத்தி கர்பமாக்கி அவுங்கள துடிதுடிக்க கொன்னவன்..
" என வெற்று குரலில் கூறினான். அவன் கூறி முடிக்கும் போதே அவன் கன்னத்தில் கன்னீர் பட்டுத் தெறித்தது..

அவன் கூறியதைக் கேட்டு உதயனின் நெஞ்சமும் கோபத்தில் பொங்கியது.

" அவன் அத்தைய கொன்னுட்டு தலை மறைவானவன நாகராஜ் சித்தப்பா இத்தனை வருசமும் தேடிக்கிட்டுதான் இருக்காங்க. ஆனா அவன் எங்க போய் தொலைஞ்சான்னு ஒரு தகவலும் கிடைக்கல..ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் நம்ம மருது அண்ணா இந்த காலேஜ் வாசல்ல பார்த்திருககாரு..அதை சித்தப்பாக்கிட்ட சொல்லும் போதுதான் நான் கேட்டுட்டேன்.. சித்தப்பா அந்த கொலைகாரனால மறுபடியும்   நம்ம குடும்பத்துக்கு எதாச்சும் ஆகிடும்னு
பயந்து அதோட விட்டுட்டாரு.. ஆனா என்னால அதை விட முடியல.. சின்ன வயசுல அவன் என் அப்பா அம்மாவ கொன்னது என் நெஞ்சுக்குள்ள ஆறா இரணமா இன்னும் இருக்கு.. பாகி அத்தை நாம சின்ன பசங்க..எனக்கு ஞாபகம் இருக்காதுன்னு நினைச்சிட்டு எல்லோரும் ஆக்சிடன்ட்ல இறந்திட்டாங்கனு வெளி உலகத்தையும் உன்னையும் நம்ப வெச்சாங்க..ஆனா உண்மை என்ன தெரியுமா.. அது அத்தனையும் திட்டமிட்ட கொலை.. அதப் பண்ணவன் அந்தத் துரோகி தேவா..
என கர்ஜித்தவன்

" அவன பத்தி யாருக்கும் ஒன்னும் தெரியல..அந்தக் காலேஜ்ல இருக்குற என் பிரண்ட்டோட அம்மா நிர்மலா மேம் அவனோட பொண்ணு இங்கதான் படிக்குதுன்னு சொல்லி எனக்கு ஹெல்ப் பண்ணாங்க..
அவனோட பொண்ணுக்கு கூட அவன் எங்கிருக்கான்னு தெரியாது.. . எப்பவாச்சும் யாருக்கும் தெரியாம சந்திச்சிட்டு போவான்..அவளுக்கு இன்னையோட காலேஜ் முடியுது.. இன்னைக்கு அவள கடத்துனாதா எல்லாம் சரியா இருக்கும்னு கெஸ் பண்றேன்" என தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு கூற, இதுவரை அமைதியாக இருந்த உதயன் தன் குடும்பத்தவர்கள் கொலை செய்யப் பட்டு இருக்கிறார்கள் என்பதை தாங்கிக் கொள்ளாமல் துக்கம் தொண்டையை அடைத்த குரலில் " ஆனா அவன் ஒருவேளை உசாராகி வராம போயிட்டானா? " என கேட்க,

" கண்டிப்பா வருவான் " என்ற உறுதியான குரலில் பதிலளித்தான் விசாகன்.

" ஆனா இதுல எந்த சம்பந்தமும் இல்லாத இன்னொரு பொண்ண ஏன் கடத்தனும் "

" அந்தப் பொண்ணுனால மூனு யூஸ் இருக்கு.. பர்ஸ்ட் விசயம்.. அவுங்க ரெண்டு பேரும் குளோஸ் பிரண்ட்ஸ்.. இவள வெச்சுத்தான் தேவாவோட பொண்ண நம்ம சொல்பேச்சு கேட்க வைக்க முடியும்..
ரெண்டாவது விசயம் இந்தப் பொண்ண விட்டா, அவளுக்கு வேற யாரும் அந்தளவுக்கு குளோஸ் இல்ல..
ஒருவேளை இவள கடத்தலைனா இந்தப் பொண்ணு நம்மள போலிஸ்ல மாட்டி விடவும் வாய்ப்பு இருக்கு..அதுனாலதான் அந்தப் பொண்ணையும் கடத்த சொன்னேன்..
மூனாவது விசயம் போகப் போக நீயே கண்டு பிடிச்சிப்ப..
இவங்களோட மத்த பிரண்ட்ஸ்
காலேஜ் முடிஞ்சதால எல்லோரும் வீட்டுக்கு போயிருவாங்க..தனியா ரூம் எடுத்து தங்கியிருக்க இவங்க ரெண்டு பேரையும் அவ்ளவா தேட மாட்டாங்க..
" என்றவன் அவனுக்கு இன்னும் பல அறிவுரைகளையும் கூறி தன் திட்டத்தைத் துவங்கினான் விசாகன்.

அவர்கள் திட்டப்படி தேவாவின் பெண்ணை விசாகன்
தங்கள் வீட்டிற்கு கடத்திச் செல்ல, உதயன் அவள் தோழிக்கு மயக்க மருந்து அளித்து தோட்டத்து வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

அங்கே ஏற்கனவே விசாகன் காவலுக்கு ஆட்களை அனுப்பியிருந்தான்.. அந்தப் பெண்ணை ஒரு அறையில் படுக்க வைத்தவன் அவளுக்கு மயக்கம் தெளியும் வரை வெளியில் காத்திருந்தான்.. இரண்டு மணி நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்து பயத்துடன் வந்தவள் வரவேற்பறையில் அமர்ந்திருந்த உதயனைப் பார்த்ததும் கொதித்துப் போனாள்..

அவனை அவனது ஆசிரமத்தில் இரண்டு மூன்று முறை பார்த்திருக்கிறாள்.. அவர்கள் குடும்பத்தைப் பற்றியும் அவளுக்கு தெரியும்..ஆனால் அவன் இவ்வளவு இழிவாக நடந்து கொள்வான் என அவள் நினைத்திருக்கவில்லை.. அப்போதுதான் இன்னொரு காரில் தன் தோழி ரோகிணி கடத்தப்பட்டது வேறு ஞாபகம் வந்தது..

இவள் உத்ரா.. வேகத்துடன் விவேகமும் வாய்க்கப் பற்றவள்.. தவறு செய்பவரை கண்டு ஒதுங்கிப் போகாமல் அடித்து துவம்சம் செய்யும் பெண்ணவள்..தனிமையும் சமூகமும் அவளுக்கு இந்த மாதிரியான சந்தர்பங்களை சமாளிக்கும் திறத்தைக் கொடுத்திருந்தது.

அவன் சட்டையைப் பற்றியவள்
"என் ரோகிணிய என்னடா பண்ணிங்க.. அந்தக் கார்ல இருந்தவன் உன் பிரண்ட்தான.. அவளுக்கு மட்டும் ஏதாச்சும் ஆச்சு உங்கள உயிரோட விட மாட்டேன்டா.. பொண்ணுங்கள கடத்துற கேடு கெட்டவன்லாம் எதுக்குடா வெளிய நல்லவன் வேசம் போடறீங்க.. " என கேள்வியாய் கேட்டவள் அவன் முகத்தை ஏறிட, கண்களில் கண்ணீர் வழிய அவன் கூனிக் குறுகி நின்றிருந்தான்.

தனது தந்தை முகம் கூட அவனுக்கு ஞாபகம் இல்லை..ஏதோ கருப்பு வெள்ளை படங்கள் போல அவன் தந்தை அவனை கொஞ்சுவதும் தலையில் தூக்கி வைத்து ஆடுவதும் மட்டுமே ஞாபகம் இருந்தது.. அவரை கொலை செய்துள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது தவித்துப் போய் அவர் நினைவில் இருந்தவனை உத்ரா  உளுக்கி கேள்வி கேட்கவும்
தன் இயலாமையை கண்ணீராய் வெளிப்படுத்தியிருந்தான்.

அவன் கண்ணீரைப் பார்த்து அமைதியானவளிடம் தான் வாங்கி வைத்திருந்த உடைகளையும் அவளுக்கு தேவையான பொருட்களையும் கொடுத்தவன்
" உங்க மேல என் நிழல் கூட படாது..உங்க பிரண்ட் இருக்குறது என்னோட வீட்ல..அப்போ அவளோட பாதுகாப்புக்கு விளக்கம் நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியனும்னு இல்ல..  எதையும் போட்டு குழப்பிக்காம இரண்டு நாள் மட்டும் இங்க இருங்க.. ப்ளீஸ் " என தலையை குனிந்து கொண்டே கூறியவன்
" தயவுசெஞ்சு தப்பிக்க முயற்சிக்காதீங்க..வெளிய காவலுக்கு நிறைய பேர் இருக்காங்க.. இதுல சாப்பாடு இருக்கு சாப்பிடுங்க " என மரியாதையாகவே கூற, உத்ராவிற்கு இதனை எவ்விதம் கருதுவது என்று தெரியவில்லை..

தன்னை வந்ததிலிருந்து நிமிர்ந்து கூட அவன் பார்க்காததே அவனது ஒழுக்கத்தைப் பற்றிக் கூறி விட எதற்கு இந்தக் கடத்தல் என்றே அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஆனால் ரோகிணி.. அவளுக்கு என்ன ஆனது..  ஈஸ்வரியம்மா இருக்கும் இடத்தில் தவறு நடக்க வாய்ப்பில்லை என நிம்மதியடைய மட்டுமே அவளால் முடிந்தது.. அவன் அசந்த நேரம் வீட்டை விட்டு தப்பிக்க வேண்டும் என்றே நினைத்தவள் அவன் வாங்கி வந்ததை எடுத்துக் கொண்டு உள்ளறைக்குச் சென்று தாளிட்டுக் கொண்டாள்.

அவள் ஆடை முகம் அனைத்தும் வண்ணச் சாயங்களாய் இருக்க, குளியலறைக்குள் புகுந்து முகம் கழுவியவள் அங்கே காமிரா இல்லையென்பதை பத்து முறைக்கு மேல் சோதனை செய்தே குளிக்கச் சென்றாள்.

குளித்துவிட்டு அவன் வாங்கியிருந்த
சுடிதாரை அணிந்தவள் உணவை மட்டும் உண்ணாமல் ஓரங்கட்டி வைத்துவிட்டு சன்னல் வழியே எட்டிப் பார்த்தாள்.. குறைந்தது பத்து பேராவது காவலுக்கு நின்றிருந்தனர். தப்பிக்க வழியேதும் கிடைக்காதா என யோசித்துக் கொண்டிருந்தவளை கதவு தட்டும் சத்தம் நினைவுக்கு கொண்டு வந்தது..

என்னதான் உதயனைப் பற்றி நன்கு தெரிந்திருந்தாலும் பெண்மைக்குண்டான சிறுபயம் அவளுக்கும் இருந்தது.. பயத்துடனே கதவைத் திறக்க, அவள் முகத்தில் இருக்கும் பயத்திற்கு தான்தான் காரணம் என்பதை அறிந்த உதயனுக்கு அவமானமாக இருந்தது.

" என்ன வேணும் உதயன் சார்" என்ற உத்ராவின் குரல் பயத்திலும் கம்பீரமாகவே ஒலித்தது..

" எனக்கு ஆபிஸ்ல இம்பார்டன்ட் மீட்டிங் ஒன்னு இருக்கு.. வொன் அவர்ல முடிஞ்சிரும்"

" அதுக்கு நான் என்ன பண்ணனும் " என உத்ரா எரிச்சலுடன் கேட்க,

" நான் வெளிய போறேன்..மெயின் டோர உள்பக்கமா லாக் பண்ணிடுங்க.. என்னைத் தவிர வேற யார் வந்தாலும் திறக்காதீங்க" என்றவன் வெளியே செல்ல அடி எடுத்து வைக்க, பிறகு என்ன யோசித்தானோ தெரியவில்லை.. அவளை நோக்கி திரும்பியவன் தனது கால்சட்டையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவள் கையில் கொடுத்தான்..

" இது புல் லோட்ல இருக்கு..நானும் வெளிய லாக் பண்ணிட்டு தான் போவேன்.. ஒருவேளை உங்க பாதுகாப்புக்கு எதும் பங்கம் வந்தா மட்டும் இதை யூஸ் பண்ணுங்க " என்றவன் அதை உபயோகிக்கவும் கற்றுக் கொடுத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் சென்று விட்டான்.

இவனை எந்த வகையில் சேர்ப்பது.. கடத்திக் கொண்டு வந்தவன் தன்னிடம் தவறாக நடந்துகொள்ளவில்லை.. கட்டிப் போடவில்லை.. தலைக்கு குளிக்க பிராண்டட் ஷாம்பூ வரை வாங்கி கொடுத்தவன் கையில் துப்பாக்கியையும் கொடுத்துச் சென்றுள்ளான்.. நான் அவனையே சுட்டுவிட்டு தப்பித்தால் அவன் என்ன செய்வான் பைத்தியக்காரன் என தலையலடித்துக் கொண்டு கதவை தாளிட்டாள்.. அவளுக்கு தெரியவில்லை.. அவள் நினைத்தது போலவே நடக்கும் என்பது..

இங்கே ஈஸ்வரி இல்லம்..

மாணிக்கம்- மரகதம்பாள் தம்பதியினருக்கு நான்கு பிள்ளைகள்.
மூத்தவன் சுந்தரராஜன்..அவரது மனைவி ரேவதி.. அவர்கள் புதல்வன்தான் விசாகன்.. தற்போது மாணிக்கமும் அவரது மூத்த மகனும் மருமகளும் உயிருடன் இல்லை..

இரண்டாவது பாஹேஸ்வரி..அந்த மாளிகையின் இளவரசி.. சுந்தரின் நண்பன் வாசுவுடன்  திருமணம் முடித்து தங்கள் வீட்டுடனே வைத்துக் கொண்டனர். அவர்களது மகன்தான் உதயன்..
விசாகன் உதயனை விட பத்து மாதங்கள் மூத்தவன்..

மூன்றாவது ராஜேஸ்வரி..அவரைத்தான் தேவா காதல் வலையால் கொன்றது.. நான்காவதுதான்  நாகராஜன்.. மூத்த தலைமுறையில் உயிருடன் இருக்கும் ஒரே ஆண்வாரிசு.. அவரது மனைவி சிந்தாமணி.. மகள் நதியா..பத்தாம் வகுப்பு படிக்கிறாள்..

உத்ராவைப் போல ரோகிணிக்கு மயக்க மருந்து கொடுக்காமல் கையை மட்டுமே கட்டி, வாயில் பிளாஸ்திரி வைத்து அடைத்திருந்தான்.
அந்தப் பிரமாண்டமான மாளிகையில் வேகமாக வண்டியை நிறுத்தியவன் தரதரவென்று அவளை உள்ளே இழுத்துவந்தான்.. அவள் தந்தை மேலுள்ள கோபம் சற்று அவள் மீதும் இருந்தது.. வண்டியில் வரும்போது அவன் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்..

" அத்தை.. பாட்டி..சித்தப்பா சித்தி எல்லாரும் எங்க இருக்கிங்க " எனக் கத்திக் கொண்டே வந்தவனது பார்வை சுவற்றில் மாட்டியிருந்த தனது தந்தை தாயின் புகைப்படத்தில் பதிந்தது..

பாட்டி மரகதம் அவனது குரலில் பதறியடித்துக் கொண்டு வர,பின்னாலே மற்றவர்களும் வந்து சேர்ந்தனர் ஒருவரைத் தவிர.

" யாருப்பா இந்தப் பொண்ணு" என்ற சிந்தாமணியிடம்
" அந்தக் கொலைகாரன் தேவாவோட பொண்ணு" என்றதும் அனைவரது முகத்திலும் அத்தனை உணர்ச்சிகள்..

தனது சின்னம்மா சிந்தாமணியிடம் ரோகிணியைத் தள்ளிவிட்டவன் " இவளுக்கு சாப்பாடு தண்ணீ எதும் கொடுக்காம ரூம்ல அடைச்சு வைங்க.. அவ அப்பன் வந்து இவ முகத்தைப் பார்த்தவுடனே நொந்து சாகனும் " என்றவன் தனது அத்தையைப் பார்க்க அவரது அறைக்கு விரைந்தான்.

அங்கே அவனது பாஹீ அத்தை எவருடனோ அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார். லட்சுமி கடாட்சமான முகம்..ஆனால் மங்களமாய் நெற்றியில் குங்குமம் இல்லை.. கழுத்தில் அவரது அம்மா மரகதத்தைப் போல வெள்ளிக் சங்கிலியைக் கூட அணியாமல் வெற்றுக் கழுத்தாய் இருந்தார்.
மூடப்பழக்கங்களையும் பழைய சடங்குகளையும் அழிக்க துடித்துக் கொண்டிருக்கும் அவரோ அதனை, தான் செயல்படுத்தாமல் வெண்ணிற புடவையில் தன்னை புகுத்திக் கொண்டார்.. இந்தக் கோலம் இப்போது மட்டுமல்ல..தனது கணவனை இழந்த தனது இருபத்தி மூன்றாம் வயதிலிருந்தே இப்படித்தான்.. இவரைக் கண்ட மரகதத்தின் பெற்ற மனம் பற்றி எரியும்.. எத்தனையோ மறுமணங்கள் நடக்க காரணமாக இருந்தவரின் மனைவி இன்று வெண்ணிற ஆடையில் உடம்பில் பேச்சுக்கும் சிறு நகை இல்லாமல் ஒரு துறவி போல நடமாடிக் கொண்டிருந்தார்..

ஒரு காலத்தில் பாஹீஸ்வரி என்றால் அகங்காரங் கொண்டவள்.பிடிவாதக்காரி என்று நினைத்துக் கொண்டவர்கள் எல்லாம் இந்தக் காட்சியைக் கண்டால் நம்பக் கூட மாட்டார்கள்.. முகத்தில் அவ்வளவு சாந்தம்.. நிதானம்.. அதே சமயம் வெறுமையும் கூட,

" அத்தை " என்று அழைத்தவன் தான் செய்து வந்தக் காரியத்தைப் பற்றிக் கூறிய பின் அவரை சாப்பிட அழைத்தான்.  அவரது முகத்தில் தான் செய்ய முடியாததை தனது வளர்ப்பு மகன் செய்து முடித்திருக்கிறான் என்ற ஆனந்தம் தெரிந்தது.. ஆனாலும் அந்தப் பெண்ணை பட்டினி போட அவரால் முடியவில்லை.. தினமும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் வீட்டில் பட்டினியாக ஒரு ஜீவன் இருப்பதா என எண்ணி தனது குடும்பத்தை அழித்தவனின் மகளிற்கு அன்னத்தை வழங்கினாள் அந்த புன்னியவதி..

அதே நேரத்தில் அங்கே தன் மகள் கடத்தப் பட்டிருக்கிறாள் என்ற செய்தியை அறிந்து கையில் அருவாளுடன் ஈஸ்வரி இல்லம் நோக்கி விரைந்து கொண்டிருந்தான் தேவா..
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வணக்கம் மக்களே.. மறுபடியும் உங்கள சந்திக்க என்னோட மூன்றாவது கதையோட வந்துட்டேன்.. காதலின் மொழி மற்றும் உயிரோடு உறவாட கதைகளுக்கு கொடுத்த ஆதரவைப்  போலவே
இதற்கும் தங்கள் ஆதரவு இருக்கும் என்று நம்புகிறேன்..மறுபடியும் கதை எழுதுவேனு நினைக்கல..இந்தக் கதை..இரண்டு நாள் முன்னாடி என் கனவுல வந்துச்சு.. அதைதான்  சின்னச் சின்ன திருத்தம் பண்ணி எழுத போறேன்.. கனவுனால கொஞ்சம் சினிமாட்டிக்கா இருக்கலாம்..அங்கங்க ஆக்சன் காட்சியிலாம் வரும்.. 😊😊😊..
என்னோட கடந்த இரண்டு கதையிலுமே பெரிய வில்லன்னு யாரும் இருக்கமாட்டாங்க.. அது தப்புன்னு அவுங்களே தெரியாம செஞ்சவுங்கதான் இருப்பாங்க.. இந்த கதைல ஹீரோ..பெரிய ஹீரோ.. சின்ன ஹீரோ.. சின்ன வில்லன் பெரிய வில்லன்லாம் வருவாங்க..
அப்ரோ நீங்க இது ஹிந்தி சீரியல் மாதிரி இருக்கு.. தெலுங்கு படம் மாதிரி இருக்குன்னு யாராச்சும் நினைச்சீங்கனா..தயங்காம சொல்லுங்க.. எனக்கே இதையெலாம் எங்கிருந்து நம்ம மண்டைக்குள்ள ஏறுச்சுன்னு யோசனையா இருக்கு... நெக்ஸ்ட் எபில தான் ஒரு முக்கியமான சர்பிரைஸ ஒளிச்சி வெச்சிருக்கேன்.. அதுக்கு முன்னாடியே பதில் கண்டுபிடிச்சவங்க நாளைக்கு ஆன்சர் செக் பண்ணிக்கலாம்..

ஆனா எப்படியும் லாஜிக் மிஸ்ஸாகாம உறவுகளோட புனிதம் குறையாம சின்னச் சின்ன காதல் காட்சிகளோடு கதையை கொடுக்க முயற்சிக்கிறேன்..இந்தக் கதை பத்தே பத்து எபிசோட்தான்.. அதுனால இவ பாதிலயே காணாம போயிருவானு நினைக்காதீங்க..கொரானா இருக்கும் வரை கண்டிப்பாக நான் வருவேன்.. ❤❤❤❤❤❤❤ இஇஇ அது போயிட்டா காலேஜ் வந்துரும்ல அதான்..அப்படி சொன்னேன்.. தப்பா நினைக்காதீங்க.. அப்றம் கதை எப்படி இருக்கு..
உங்களுக்கு என்ன தோணுச்சுனாலும் மறைக்காம ( திட்டாம ) சொல்லுங்க..
நான் உங்கள வோட் பண்ண சொல்லி கூட அதிகமா கேட்கல..ஒரு ரெண்டு வார்த்தை பாசிட்டிவ்வா சொன்னிங்கனாதான எனக்கும் கொஞ்சம் சந்தோசமா இருக்கும்.. தயவுசெஞ்சு உங்க கருத்துகளை பகிர்ந்துக்கோங்க..

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz