உறவு 32
வணக்கம் நண்பர்களே.. எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்கப்பா...சிலபல காரணங்களால் என்னால் தொடர்ந்து பதிவிட முடியவில்லை.. உங்கள் ஆதரவு மீண்டும் கிடைக்கும் என்கிற நம்பிக்கையால் எனது எழுத்துப்பணியை தொடர்கிறேன்.. கண்டிப்பா கொடுப்பீங்கதானே ! இனி என்ன ஆனாலும் வாரம் ஒரு பதிவையாவது பதிப்பித்து விடுகிறேன்..நட்பூக்களே.. அறியாப் பிள்ளையை மன்னிச்சுசுசு..... .......
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
கதிர் அவர்களை திட்டி கொண்டிருக்க மயக்கத்தில் இருந்த துளசியோ, " அண்ணா அவர் பசியோட இருக்கார்.. சாப்பிட ஏதாவது வாங்கி தா " என சொல்லிவிட்டு கண்களை மூடிக் கொண்டாள்.. அவள் சொன்ன பிறகுதான் நேற்றிலிருந்து அவன் சாப்பிடாதது கதிருக்கே நியாபகம் வந்தது.
இதுவரை மௌனமாக திட்டு வாங்கிக் கொண்டிருந்த அபி கூட தற்போதுதான்
கதிரை கவனித்தான்... கசங்கிய இரவு உடையில் நின்றிருந்தவன் முகத்தில் கடுகுக்கும் கனிவில்லை..கோபத்தில் முகம் ருத்ரமூர்த்தியாக இருந்தாலும் முகம் சோர்வாகத்தான் இருந்தது.
அபி அவனை அழைத்துக் கொண்டு உணவகத்திற்கு சென்றுவிட, தர்ஷு துளசியின் அருகிலமர்ந்து தலையினை கோதிவிட ஆரம்பித்தாள்.. அவள் தொடுகையில் விழித்தவள் தன் அருகே அன்று கோவிலில் பார்த்த பெண் அமர்ந்திருப்பதைக் கண்டதும் மெலிதாக சிரிக்க முயன்றாள்..
" துளசி எதாவது வேணுமா" என்க,
அவள் உடலிலிருந்த அசதி மறைத்து உற்சாகத்துடன் " நீங்க தான சோன்பப்டி " என்றாள் கேள்வியாக,
தன்னவனின் வாயில் வரமறுத்த அந்த அழைப்பினை அவள் சகோதரி அழைத்ததும் விண்ணில் பறந்தவள்
" மூட்டைப்பூச்சி என்னைப் பத்திலா உங்கிட்ட சொல்லிற்கானா.. " என சந்தோசப்பட்டவள் " ஆமா அவன் என்னைப் பத்தி என்ன சொல்லி வெச்சிருக்கான் " என ஏக்கமாய் கேட்டாள்..
அவளின் கேள்விக்கு
" உன் பெயர் தர்ஷினி
பார்பதற்கோ தர்பூசணி
பேசினால் ஹாஸினி..
மொத்தத்தில் லூசுநீ " என்ற
தனது அண்ணனின் பள்ளிக் கால மொக்கை கவிதையினையா பதில் சொல்ல முடியும் என யோசித்தவள்
" ஸ்கூல் பிரண்ட் " என மட்டும் சொல்லி வைக்க, தர்ஷூக்கோ சப்பென்றானது..
அதே நேரத்தில் கேன்டினில் சாப்பிட்டுக் கொண்டே கதிர் அபியினை கேள்விகளால் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தான்..
"யார்டா அந்த பொண்ணு.. "
" பிரெண்ட் மச்சான்" என்று சொல்லும்போதே கதிர் நெற்றிக் கண்ணை திறக்க, தனது காதல் கதையினை முழுவதுமாக கூறினான்.
" இப்போ என்ன பண்ணலாம்னு இருக்க..எப்போ அந்தப் பொண்ணுக்கிட்ட உண்மைய சொல்லலாம்னு இருக்க? "
" தெரிலடா..கடைசி வரை இப்படியே இருந்திடலாம்னு தோணுது.. உண்மை தெரிஞ்சா அவ கஷ்டப்படுவானுதான் நான் ஒதுங்கியே இருக்கேன்" எனக் கூறும்போதே அவனது குரல் உடைந்தது..
அவனின் வேதனை புரிந்தாலும்
" பார்த்துக்கலாம் " என அவன் தோளினை ஆதரவாய் பற்ற, " அதுசரி மச்சான்..உனக்கென்னடா ஆச்சு..அந்த அசோக்கு உங்கிட்ட இன்னும் வம்பு பண்றானா..ஏன் இப்படி எதையோ பறி கொடுத்த மாறி இருக்க.. வீட்ல எல்லோரும் நல்லார்க்காங்கதான" என்றவனிடத்தில் ஏனோ உண்மையினை கூற மனம் வரவில்லை..
" அதெல்லாம் ஒன்னுமில்லடா.. வா போகலாம் " என பேச்சினை முடித்தவன் துளசிக்கும் தர்ஷுக்கும் உணவினை வாங்க சென்றுவிட்டான்.
அறையின் வாசலினை நெருங்கும் முன்னரே துளசி மற்றும் தர்ஷுவின் சிரிப்புச் சத்தம் காதினைக் கிழித்தது..
அங்கே கதிரினைப் போல கோபமாக பேசிக்காட்டி பின்னர் அபியினைப் போல முகத்தினை அப்பாவியாக வைத்துக் கொண்டு திட்டு வாங்குவது போல நடித்துக் காட்டியவள் கடைசியாக துளசியினை போல " அண்ணா அவர் பசியோட இருக்கார்..ப்ளீஸ் எதாச்சும் வாங்கி கொடு..இல்லைனா என்னால தாங்க முடியாதுணா " என சோகமாக கூறியவள் துளசியின் அழுவது போன்ற முகத்தினைக் கண்டு அவளும் கொல்லென்று சிரித்து விட்டாள்.
" ஹஹாஹா.. என்னால முடியல லசி பேபி..அதெப்டி மேடம்க்கு உடம்பு சரியில்லைனா சார் விழுந்து விழுந்து கவனிப்பாராம்..அதே மாறி மேடம் அவரோட கண் பார்வையே வெச்சே அவர் சாப்பிடலைனு கண்டுபிடிப்பாங்களாம்.. என்ன லவ்..என்ன லவ்வு..ம்ச்..ம்ச்ச்.. வாரேவா " என பாராட்டியபடியே திரும்ப, அங்கே கதிர் அவளை முரைத்துக் கொண்டிருக்க, அபி அவன் பின்னால் வாய்மேல் விரல் வைத்து சிரித்துக் கொண்டிருந்தான்.
" அண்ணா...இஇஇஇ...அதுவந்து..லசி பேபி சோகமா இருந்தாளா...அதான் சிரிக்க வைக்கலாம்னு..சும்மா..பேசிட்டு
இருந்தோம்" என சமாளிக்க அவளது உருட்டி உருட்டி விழிக்கும் திருட்டு முழியினைப் பார்த்த கதிர் தானும் சிரித்துவிட்டான்..
சிறிது நேரத்தில் மருத்துவர் வந்து பரிசோதனை செய்துவிட்டு வீட்டிற்கு அழைத்துச் செல்ல அனுமதி அளித்தார். துளசி மிக பலவீனமாக இருப்பதால் விடுதி உணவைத் தவிர்க்க சொல்லிவிட்டார்.
முன்பு போல இருந்தாலாவது கதிரின் வீட்டிற்கு துளசியினை அழைத்துச் செல்லலாம்..ஆனால் தற்போது சொந்த வீட்டிலே அந்நியனாய் இருக்கும் கதிருக்கு அந்த யோசனை நன்றாகப் படவில்லை..மேலும் தனது நண்பனின் தன்மானமும் அதில் அடங்கியிருக்கிறது.. ஊருக்கு அழைத்துச் செல்லலாம் என்றால் தேர்வு வேறு நெருங்கிவிட்டது.
இந்த இக்கட்டான சூழலில் அபி என்ன செய்வது என திண்டாடி போக தர்ஷு துளசியை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறினாள்..
அவளது தந்தையிடம் தினமும் வாங்கும் மண்டகப்படியை மறந்து அவள் யோசனை கூற அபி அவளை முரைக்க ஆரம்பித்தான்..
" ஹேய் என்னப்பா..இப்படி எல்லோரும் என்னை முரைக்கிறீங்க.நான் நிஜமாத்தான் சொல்றேன்.. நான் என்னோட திறமையால துளசிய ரெண்டு நாள் எங்கூட தங்க வெச்சிக்கிறேன்..எங்க வீட்டு மேல் மாடி போர்சன் ரொம்ப நாளா காலியாதான் இருக்கு..வேணும்னா உங்க திறமைய யூஸ் பண்ணி உங்க மம்மிய ஊர்ல இருந்து வரவெச்சு அங்க தங்கிக்கோங்க.. ஏன்னா துளசிக்கும் அம்மா பக்கத்தில இருந்து பார்த்துட்ட மாதிரி இருக்கும்ல.. " என அவள் உறுதியாக சொல்ல கதிருக்கு இது நல்ல யோசனையாகப் பட்டது.. தர்ஷுவின் வீட்டு ஓனரிடம் பேசி சம்மதம் வாங்குவதாக கதிர் ஒத்துக்கொள்ள, ஆனால் அபி தான் எதற்கும் ஒத்து வர மறுத்தான்..
ஆனால் அனுமார் வால் போன்று நீடித்துக் கொண்டே போகும் தங்களது பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் அதற்கு சில சாகசங்களை செய்துதான் ஆக வேண்டும் என தர்ஷு உறுதியாக இருந்தாள்..
அபி பின்னால் வரப் போகும் பிரச்சனையை எண்ணி அமைதியாக இருக்க, அபியின் தயக்கத்தை துளசியின் வாடிய முகம் சரிக்கட்டியது., அவனும் மனது மாறி தனது தாயிடம் அலைபேசியின் வாயிலாக அனைத்தையும் அவர் பயப்படாதவாறு எடுத்துரைத்தான்..
இந்த சந்தடி சாக்கில் தர்ஷு ' இப்போ எப்படி என் ஆள என் வீட்டு பக்கத்தில தங்க வெச்சேனு பார்த்தியா ' என இல்லாத காலரைக் கெத்தாக தூக்கிவிட , ' ஐயடா..ரொம்பத்தான் ' என துளசியும் அவளுக்கு நாக்கை துறுத்தி அழகு காண்பித்தாள்.. அபி போன் பேசிவிட்டு திரும்பி வரும்போது சரியாக இருவரும் அப்பாவி போல வைத்துக் கொண்டனர்..
கதிர் இந்தப் பெண்களின் சிறுபிள்ளைத்தனத்தையும், அபியின் யாரும் அறியாவண்ணம் தர்ஷுவின் மீது படறும் காதல் பார்வையினை பார்த்து இரசித்திருந்துக் கொண்டிருந்தாலும் ஏனோ மனம் முழுதும் கனியின் நினைவே சுழன்று கொண்டிருந்தது.. வாய் ஓயாது அவள் பேசும் கட்டுக்கதையும் நிமிடத்திற்கு நிமிடம் மாறும் அவள் முகபாவனையும் பச்சைக் குழந்தையின் பிள்ளையமுதாய் மனதில் இனித்திருக்கும்..இன்றோ நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் அவள் வார்த்தைகள்.. மனதை கட்டுப்படுத்திக் கொண்டு வந்த வேலையினை கவனிக்கலானான்..
அவனையே கவனித்துக் கொண்டிருந்த துளசி அவனது வலி நிறைந்த முகத்தினை மனதினில் குறித்துக் கொண்டாள்.. ஆனால் இன்னும் உரிமையாய் என்னவென்று கேட்க காலம் கனியவில்லை என அமைதி காத்தாள்.. அவன் கண்ணிமை அசைவினைக் கூட உண்ணிப்பாய் கவனிப்பவள் அவனது மனத்துயரத்தினை அறியாமலா இருப்பாள்.. அவன் மனக்காயம் ஏதென்று அறியாவிடினும் சீக்கிரம் சரியாகி விட வேண்டும் என மீண்டும் தனது இஷ்ட தெய்வத்திடம் வேண்டுதல் வைத்தவள் தனது அண்ணனின் அறிவாளியுடன் புறப்பட்டு விட்டாள்..
காய்ச்சல் மயக்கம் கலைந்ததுமே அவள் கண்டது தன்னவனின் தரிசனத்தைத்தான்.. என்னதான் அவன் அவளை விரதம் இருக்கக்கூடாது என திட்டிக் கொண்டிருந்தாலும், இன்று என்றும் போல ஒதுங்கி நிற்காமல் உரிமையாய் அவளிடம் கட்டளை விதித்தது கூட துளசிக்கு நிறைவாகத்தான் இருந்தது.
அவனது கோபம் கூட தன்மேல் உள்ள அக்கரையினால்தான் என்பதே அவளுக்கு போதுமானதாக இருந்தது.
விரைவில் அவன் மனதிலும் தன்மீது காதல் பிறக்கும் என்கிற நம்பிக்கையில் படிப்பில் தனது முழுக் கவனத்தினைச் செலுத்த நினைத்தாள்..
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
கதிர் தனது வீட்டிற்குள் நுழைந்ததுமே கண்டது கனியுடன் செல்லமாய் வம்பிழுத்துக் கொண்டிருந்த அசோக்கைத் தான்.. கதிரைக் கண்டதும் மனதில் பழைய வெறுப்பு தோன்றினாலும் அதனை மறைத்த அசோக் " வாங்க கதிர்.. காலைல இருந்து எங்க போனீங்க.. உங்களுக்காகத்தான் நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.. உட்காருங்க " என சிரிப்பை சிந்திக் கொண்டே உபசரிக்க கதிர் அதனை ஒற்றைப் புன்னகையில் ஏற்றுக் கொண்டான்..
கண்கள் தானாக கனியினைத் தேட, அவளோ அவனைக் கண்டதும் உள்ளே ஒழிந்து கொண்டாள்..
கதிருக்கு அது மிகவும் ஏமாற்றமாகிப் போக அமைதியாக அமர்ந்து கொண்டான்.
அசோக் ' நாம தான் இவ்ளோ எறங்கி வந்து பேசிறோம்ல..வாயத் தொறந்து பேசுனா முத்தா உதிர்ந்துவிடும் ' என அவனை மனதிற்குள் அர்ச்சிக்க, கதிரோ வாயைத் திறப்பானேன் என்றிருந்தான்..
என்னதான் அசோக் முழுவதுமாக திருந்தியிருந்தாலும் கதிரைப் பார்க்கும் போது மட்டும் வரும் வேண்டா வெறுப்பை அவனால் குறைத்துக் கொள்ள முடியவில்லை.
இவர்கள் இருவரையும் சமையலறையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஐசு, அசோக்கினை எதாவது பேசு என சைகை காட்ட, அசோக்கிற்குத் தான் தனது தகுதியை மீறி இவனிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறோம் எனத் தோன்றியது..
அங்கே நிலவும் அசாதாரண அமைதியினை கலைத்திடும் விதமாக கதிர் " சார் உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசனும்..வெளிய போயிட்டு வரலாமா ? " என்றிட, அசோக்கும் அவனுடன் கிளம்பிச் சென்றான்.
💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
திரும்பி வர ஒரு வாரம் ஆகும் என்று
சுற்றுலாவிற்கு சென்ற மகள் அடுத்த நாளே சிறு பெண்ணை தன் தோழி என அழைத்து வந்திருப்பதும் வந்ததிலிருந்து தனது கண்களை நேராக சந்திக்காமல் திருட்டு முழி முழிப்பதுமே அவளது திருட்டுத்தனத்தினை காட்டிக் கொடுத்துவிட, அவள் என்ன தான் கதை சொல்லப் போகிறாள் என அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் தர்ஷுவின் தந்தை..
துளசியின் ஊரினைக் கேட்டதுமே மனதில் எதுவோ தட்டுப்பட, அவளது குடும்ப விவரத்தினைக் கேட்டதுமே நிலையினை முழுதுமாக உணர்ந்து கொண்டார் விருமாண்டி..
துளசியை உள்ளே போகச் சொன்னவர் மனதில் எதனையோ கணக்கிட்டவராய்
தர்ஷுவைப் பார்த்து வெற்றுச் சிரிப்பை உதிர்த்துச் சென்றார்..
Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz