ZingTruyen.Xyz

உயிரோடு உறவாட ( முழுக் கதை)

உறவு 31

Nivethamagathi

அழைப்பினை ஏற்று " ஹலோ " என்க,
" அண்ணா நான் கனி கிளாஸ்மேட் ரக்சனா பேசறேன்னா.. இங்க ஹாஸ்டல்ல துளசிக்கு கொஞ்சம் முடியலன்னா.. அபி அண்ணா போன் ரிங் போகுது..ஆனா எடுக்கவே மாட்டிங்கறாரு.. அம்மாக்கு இந்நேரம் பண்ணா ரொம்ப பயந்துடுவாங்க.. ஹாஸ்டல் வார்டன் வீட்டுக்கு இன்பார்ம் பண்ணி அவுங்கள வரச் சொன்னாங்கண்ணா.. அபியண்ணா கிட்ட நீங்க இதை சொல்லிடறீங்களா.. " என ரக்சனா அழுதுகொண்டே சொன்னதே துளசியின் நிலை மோசமாக உள்ளது என்பதை தெளிவாக கூறியது.. மருத்துவமனை விபரம் கேட்டவன் கனியிடம் கூற கூட மறந்து அடித்துப்பிடித்து அவ்விடம் சென்றான்.. செல்லும் வழி முழுவதும் அபிக்கு தொடர்பு கொண்டே போக அவனோ அழைப்பை ஏற்கவில்லை.

தீவிர சிகச்சைப் பிரிவுக்கு வெளியே வார்டனுடன் ரக்சனாவும் இரண்டு தோழிகளும் பயந்தவாறே நின்றிருந்தனர்.

நேற்று சாய்பாபாவிற்கு விரதம்.. இன்று கிருத்திகைக்காக விரதம்..அத்துடன் காலையிலே  கோவிலுக்குச் சென்று வர வேண்டும் என்பதால் அதிகாலையில் எழுந்து சுடுதண்ணீர் வருவதற்கு முன்னரே குளிர்நீரில் குளித்ததால் குளிர்காய்ச்சலும் வந்திருந்தது.. அதனை அலட்சியப்படுத்தியதால் தற்போது கிட்டத்தட்ட ஜன்னி வரும் நிலைக்கு கொண்டு வந்து விட்டது..

இரண்டு மணி நேரத்திற்கு பிறகே சாதாரண அறைக்கு மாற்றப்பட்டாள்..
முகம் கறுத்து
துவண்ட கொடி போல படுக்கையில் கிடந்த துளசியைப் பார்க்க அவனுக்கு என்னவோ போலாகி விட்டது.

விடுதி காப்பாளர் அவனை துளசியின் அண்ணன் அபி என்று எண்ணி " சார் இந்த நேரத்துல இதை சொல்லக் கூடாதுதான். ஆனா எங்க ஹாஸ்டலுக்கு நிறைய ரூல்ஸ் இருக்கு சார்..அதை துளசி பாலோ பண்றதே இல்ல. வீக்லி மூணு நாள் விரதம் இருந்துட்டு சாப்பிட வரதே இல்ல.. இவ கைக்குழந்தையா சார் மிரட்டி சாப்ட வைக்க.. இவ அனிமி்க்கா இருக்கறதுக்கு டாக்டர்  எங்க ஹாஸ்டல் சாப்பாடுதான் காரணம்னு கேஸ் போட போறார்னு பயப்படுத்துறாங்க.. நெக்ஸ்ட் வீக் செமஸ்டர் ஸ்டார்ட் ஆகுது. இந்த  நேரத்துல இப்படி ஆச்சுனா அவ ஸ்டடிஸ்தான் வேஸ்ட் ஆகும்.. " என துளசியை இந்த முடியாத சூழ்நிலையிலும் நன்றாக போட்டுக் கொடுக்க, அவர் முகத்தை வைத்தே துளசி கண் திறந்ததும் அவளை ஒரு  வழி செய்யாமல் விடமாட்டார் என்பதை உணர்ந்து முதலில் அவரை வெளியே துரத்த வேண்டும் என முடிவெடித்தான்..

" சாரி மேம். இனிமே அவ ஒழுங்கா சாப்பிடுவா.. டாக்டர்ட்ட நான் பேசிக்கிறேன். நீங்க அந்த பொண்ணுங்கள கூட்டிட்டு ஹாஸ்டல் போங்க. துளசிய நான் பார்த்துக்கிறேன்.. அம்மா நாளைக்கு மார்னிங் வந்துருவாங்க.. சோ நீங்க கிளம்பலாம்.. " என்றதும் அவரும் துளசியின் கல்லூரித் தோழிகளும் கிளம்பி விட்டனர்..

துளசியின் அருகே நாற்காலியில் அமர்ந்தவன் இப்போது அபியின் எண்ணிற்கு அழைக்க, ஆனால் பதில்தான் வந்தபாடில்லை..

சோர்ந்துபோய் முயற்சியை கைவிட்டவனாய்  துளசியைப் பார்க்க, அவளோ மருந்தின் வீரியத்தால் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்.
எவ்வளவு துடிப்பான பெண் இவள்.. சட்டென்று கோபம் வந்துவிடுமே தவிர மனதில் எதையும் வைத்துக் கொள்ள மாட்டாள்.. எத்தனையோ தடவை கனியுடன் இவள் தன்வீடு வந்திருக்கிறாள். ஆனால் ஒருபோதும் இவனுடன் பேச முயற்சித்தே இல்லை.. தான் வந்தாலே இவளது குரல் அடங்கிவிடும்.. இவளையும் கனியைப் போல சிறுபிள்ளை என்றுதானே நினைத்தேன்.. அப்படி இவள் மனதைக் கவரும் வகையில் நான் என்ன செய்து விட்டேன். இது தவறு என்று அபிக்கு கூட புரியவில்லையா.. அவளை சமாதனப்படுத்த ஏதோ அவள் படிப்பு வரை காத்திருப்பதாக சொல்லிவிட்டேன்.. பிறகு வேண்டாம் என்று நான் சொல்லிவிட்டால் நான் உணர்ந்த  அதே காதல் வலியைத்தானே அவளும் அனுபவிப்பாள்.. நானும் எந்த உரிமையில் வயதுப் பெண்ணை தனியாக பார்த்துக் கொள்ள சம்மதித்தேன். அவள் கண் முழித்ததும் என்னைப் பார்த்தால் அவளது காதலை நான் ஏற்றுக் கொண்டது போலல்லவா ஆகும்  என எண்ணம் முழுவதும் துளசியே நிறைந்திருக்க
அதை கலைக்கும் விதமாக,
" நான் நல்லா படிக்குறேன்..  என்னை  கடைசில வேணானு சொல்லமாட்டீங்க தான.. என்னை  ஏமாத்த மாட்டீங்க தான " என துளசியின் புலம்பல் கேட்டது.. அவன் இதமாக தலையை நீவ அவளது  புலம்பல் நின்று ஆழந்த உறக்கத்திற்கு சென்று விட, அவனோ
தூக்கம் மறந்து துளசியையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்தப் பார்வை பார்ப்பது சரியா தவறா என்று அவனுக்குத் தெரியவில்லை.. ஆனால் காதலிப்பதைப் போல காதலிக்கப் படுவதும் தனி சுகம்தான்..அவனும் அந்த சுகத்தில்தான் உலகத்தை மறந்து கொண்டிருந்தான்.  அவனும் மனிதன்தானே தவிர, துறவி இல்லையே ..

😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

காலை உணவை முடித்தவர்கள் ஹாலில் ஓய்வெடுக்க, தேவி " கனி பஸ்ஸூக்கு டைமாச்சு சீக்கிரம் " என துரிதப்படுத்த,

" அத்தை இன்னைக்கு கனி காலேஜ் லீவ்.. இன்னைக்கு நாங்க சினிமாக்கு போலாம்னு நைட்டே பிளான் பண்ணிட்டோம்.. உங்களுக்கும் சேர்த்துதான் டிக்கெட் புக் பண்ணிற்கோம் " என அசோக் பதிலளித்தான்.தேவியோ அசோக்கின் பேச்சினை மறுக்க முடியாமல் அமைதியாகினார்..

ஆனால் ஐசுவோ அசோக்கினை முரைத்துக் கொண்டே " அம்மா நாம எங்கயும் போகல.. கனிக்கு எக்சாம் வருது.. அவ வீட்ல இருந்தே படிக்கட்டும்.. நான் சொல்லித்தரேன். இல்லைனா மேடம் வாங்குன இன்டெர்னல்க்கு , முட்டை தான் வாங்கனும். இந்தா இந்த யுனிட்ட வொன் அவர்க்குள்ள கம்ளீட் பண்ணு.
என்று மேத்ஸ் புக்கை நீட்ட கனி அசோக்கை பாவமாக பார்த்தாள்.
ஆனால் ஐசுவின் முன்னால் அவனால் ஒன்றுமே செய்ய முடியவில்லை ..

ஐசு இதுவரை படித்ததை  டெஸ்ட் எழுத சொல்ல, கனியோ அதில் தப்பிக்க, ஐந்து ஐந்து நிமிடங்களாக கடன் வாங்கிக் கொண்டிருந்தாள்..  சில சமயங்களில் அவளுக்கு அடியும் விழுந்தது.. அசோக்கிற்கு அப்போதுதான் கனிக்கு ஐசுவை பிடிக்காமல் போனதற்கான காரணத்தினை தெரிந்து கொண்டான் .. விடாப்படியாக இப்படி படிக்கச் சொல்லி தொந்தரவு செய்தால் அவளுக்கு வெறுப்பு வராமல் என்ன செய்யும்..

ஐசு சொல்லித்தந்து கொண்டிருக்க,
கனி தூங்கி தூங்கி வழிந்து கொண்டே இருந்தாள். அவளை யாருக்கும் தெரியாமல் எழுப்பி விடுவதே அவனுக்கு வேலையாகியது.. வெறுத்துப்போன
ஐசுவோ இருவரையும் கேவலமாக ஒரு பார்வையினை பார்த்துவிட்டு தேவிக்கு உதவ சென்றுவிட்டாள்.

அசோக்கின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாய் குறைய அவனே அவளுக்கு சொல்லித் தர ஆரம்பித்தான்.  சாதாரண integration and differentiation ஐ அவளுக்கு புரிய வைப்பதற்கு பதிலாக ஐசுவிடம் இன்னும் நான்கு அடிகளை வாங்கிக் கொள்ளலாம் என்று தோன்றியது.. ஆனால் அவள் மனம் முழுவதும் அதனைக் கவனிக்காமல் வேறொரு சிந்தனையில் சுழன்று கொண்டிருந்தது..
ஒரு கட்டத்தில் கனிக்கே அவனைப் பார்க்க பாவமாக இருக்க ' நானே படிச்சிக்குறேன் ' என்று உள்ளே சென்று விட்டாள்..

அசோக்கினால் கனியின் நடவடிக்கைகளில் வித்தியாசத்தினை உணர முடிந்தது. அவள் வாய் ஓயாமல் பேசினாலும் அதில் நிமிடத்திற்கு ஒரு முறையாவது கதிரின் பெயர் இடம் பெற்றிருக்கும் ஆனால் அவள் வந்ததிலிருந்து ஒரு வார்த்தை கூட அவனைப் பற்றி பேசவில்லையென்று.. இருவருக்குள்ளும் என்ன பிரச்சனையாக இருக்கும் என யோசிக்கத் துவங்கினான்..

அவனருகே அமர்ந்த ஐசு
அசோக்கிற்கு பழச்சாறை கொடுத்து விட்டு, " என்ன சார் வாசல் பக்கமே பார்த்துட்டு இருக்கிங்க " என்றதும்
" உங்க கதிர் மாமாவுக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன். " என்றான் சிறிதும் யோசிக்காமல்.

அவனை சந்தேகமாக பார்த்தவள் " எதுக்கு " என்றாள்.

" இல்ல ஐசும்மா.. நான் வேற கதிர்கிட்ட பர்ஸ்ட்ல இருந்தே எரிஞ்சுதான் விழிந்துருக்கேன்.. அதுனால அவர சரிகட்ட கொஞ்சம் டைம் எடுக்கும்.. சரி நாமளும் நல்லவன் மாறி பர்மாசன்ஸ் பண்ணி ஸ்கோர் பண்ணலாம்னு பார்த்தா அவர கைலயே பிடிக்க முடிலயே ..அதான் " என பவ்யமாக சொன்னவனை பார்த்து புன்னகைத்ததும்
" ஒருவேளை அவர்  என்னை  மன்னிக்கலைனா வீட்டுக்கு வர மாட்டியாடி " என ஏக்கமாய் கேட்க அவளோ சிறிதும் யோசிக்காமல்
" கண்டிப்பா " என்று கூறி உள்ளே சென்று விட்டாள்.

" ஏங்க.. பார்த்திங்களா.. கனிய மாப்பிள்ளை நல்லா பார்த்துக்கிறார் இல்ல.ஐசு மிரட்டுனா எப்படி அடங்கிப் போறார்னு பார்த்திங்கள்ள. ரொம்ப சந்தோசமா இருக்குங்க " என்றவர்
இந்த கதிருக்கு என்னாச்சுங்க.. மாப்பிள்ளை வந்து தங்கியிருக்கும் போது காலைலயே எங்கயோ போயிட்டான்..அவரு என்ன நினைப்பாரு " என்று  தேவி கந்தனிடம் குறை கூற, கந்தன் சிரித்தே விட்டார். இந்த பெண்கள் மனது மட்டும் ஏன் மரத்திற்கு மரம் தாவும் குரங்கினை போல உள்ளது என்று.. இதே வாய்தான் அசோக்கை வாய் வலி்க்க திட்டி தீர்த்தது..இப்போது கதிரினை மறந்து அசோக்கின் புகழ் பாடுகிறது..
தேவியினைப் போல அசோக் செய்த தவறுகளையும் கதிர் அனுபவித்த அவமானங்களையும் அவரால் மறக்க முடியவில்லை .. ஆனால் அதனை வெளிகாட்டவும் விரும்பவில்லை ..

☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️

அதே நேரத்தில் இங்கு கதிர் ருத்ரதாண்டவம் ஆடிக் கொண்டிருந்தான்.. கதிருக்கு கோபம் வருமென்று தெரியும்.. ஆனால் அபியிடமே இவ்வளவுகோபப்படுவான் என்பதை அபி இன்றுதான் கண்டுகொண்டான்.
காலையில் காபிக்கு பணம் செலுத்தும்போதே அபியின் போன் அவளிடம் இருப்பதை உணர்ந்தவள் அதனை ஆன் செய்ய  அதில்  கதிரிடமிருந்து 54, கல்லூரி விடுதியில் 15, அபியின் அன்னையிடமிருந்து 12 மிஸ்டுகால் வந்திருந்தது.. ஏற்கனவே அபியிடம் பயணம் முழுவதும் திட்டுவாங்கி இப்போது கதிரிடம் அபியுடன் சேர்ந்து தர்ஷுவும் திட்டு வாங்கிக் கொண்டிருந்தாள்.
கதிர் இன்று உடல்நிலை சரியில்லாமல் இருந்த துளசியையும் விட்டுவைக்கவில்லை.. இனி மாதம் ஒருமுறை மட்டும்தான் கோவிலுக்கு செல்ல வேண்டும் அத்துடன் அவள் விரதம் இருக்கும் நாள் அவளது கல்லூரியின் கடைசி நாளாக அமையும் என ஏகப்பட்ட நிபந்தனைகள்  விதித்தான். பிறகு சற்று அமைதியானவன்
அவளது விரதத்திற்கான காரணங்களை வினவ,
அதுவும்
துளசியின் காதலுக்காக செவ்வாய், கனியின் காதலுக்காக வெள்ளி, அபியின் காதலுக்காக வியாழன்
அத்துடன் முருகனுக்காக கிருத்திகை என பட்டியல் நீண்டு கொண்டே போக,
அப்போது ஆரம்பித்ததுதான் இன்னும் அவளை திட்டுவதை முடிக்கவில்லை.. அப்பாவிடம் தினமும் திட்டு வாங்கும் தர்ஷுவிற்கே காதில் இரத்தம் வரத் துவங்கியிருந்தது..

அவன் உயிரைக் கொடுத்து திட்டிக் கொண்டிருக்க துளசி அபியிடம் கூறிய வார்த்தைகள் அவனை ஊமை ஆக்கியது.

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz