ZingTruyen.Xyz

என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)

18.என்னை மறந்தாயோ கண்ணம்மா

Nivethamagathi

" ஏன் வாசு..நாம ஏன் ரோகிணிக்கும் விசுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க கூடாது? "

கேட்டுவிட்டு உன்னை நானறிவேன் என்பதை போல பார்த்து வைத்தார்..

வாசுவின் மனதில் இருந்ததைத் தான் பாஹீ கேட்டிருந்தாள்.. அவனுக்கு இதனை நேரடியாக கேட்பதற்கு இருந்த தயக்கம் பாஹீக்கு இல்லை.. தன் மனைவியை மெச்சுதலாய் ஒரு பார்வை பார்க்க, அவரும் வாசுவைத்தான் பார்த்திருந்தார்..

( ம்மா..நீங்களே பார்த்துட்டு இருந்தா எப்படி.. இந்த சின்ன சிறுசுங்களுக்கும்  சான்ஸ் கொடுங்கப்பா )

" என்னப்பா சொல்றீங்க ரெண்டு பேரும்..ஒன்னும் அவசரம் இல்ல.. முடிவ நல்லா யோசிச்சு சொல்லுங்க "  இருவருக்கும் நேரம் கொடுத்து ஒதுங்கிக் கொண்டார்கள்....இனி அவர்கள் பாடு..

ரோகிணிக்கும் விசுவிற்கும் உண்மையில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை..

விசாகனுக்கு ரோகிணியை பிடிக்கும்..

பிடிக்கும் என்றால் அவள் ராஜியின் ஏஞ்சல்.. நல்ல பெண்.. கள்ளம் கபடமறியா மனம் படைத்தவள் போன்ற காரணங்களால் தான்.. உண்மையில் சொல்லப் போனால் தனது அத்தை தனக்காக பெண் பார்த்து கட்டி வைப்பார்கள் என நினைத்துக் கொண்டு, அவன் எந்தப் பெண்ணையும் காதலிக்கும் எண்ணத்தில் பார்த்ததே இல்லை .. ரோகிணியை சின்ன வயதில் அழைத்தது போல ஏஞ்சல் என்று அழைத்தால், எங்கே அவளது திருமண வாழ்வில் பிரச்சனை வந்துவிடுமோ என்று தான் அவளை பெயர் சொல்லியே அழைத்தான்.. ஆனால் திடிரென்று, அவன் பாட்டிற்கு இருந்தவனுக்கு திருமண செய்தி சொன்னால் என்ன செய்வான் அவன்.. அதுவும் ரோகிணியை..

ரோகிணியின் நிலையும் கிட்டத்தட்ட அப்படித்தான்.. உடனே கல்யாணம் என்றதும் திடுக்கிட்டுத் தான் போனாள். அதுவும் விசாகனை....

அவன் நல்லவன் தான் என ரோகிணிக்கும் தெரியும் தான்..ஆனால் அவனைக் கண்டதும் சிறுநடுக்கம் எப்போதுமே ஏற்படும்.. இருட்டில் தனிமையை புகட்டியவன் அல்லவா.. இருந்தும் அவனது சூழ்நிலை அப்படி.. அவளுக்கு தன் தந்தையை போல தன்னிடம் பாசம் காண்பித்தால் போதும்.. தன்னவனும் தன் தந்தையும் நண்பர்களாய் ஒட்டி உறவாட வேண்டும்..என்னவோ அவளைப் பொருத்த வகையில் அவளுக்கு அதுதான் திருமணக் கனவு.. இந்த இரண்டு ஆசையையும் அவன் கண்டிப்பாக நிறைவேற்றிவிடுவான்..நிறைவேற்றியும் விட்டான்.. வேறென்ன..அவள் சொல்ல..

தூணில் சாய்ந்த வண்ணம் அவள் அங்கேயே உட்கார்ந்திருக்க, அவனும் நகராமல் அதே இடத்தில் தான் அமர்ந்திருந்தான்..பாஹீயும் வாசுவும் தான்

இடத்தை காலி செய்திருந்தனர்...

" ஏன் வாசு.. அந்த உதயன் பையன் கூட தேறிட்டான்.. இவன் தான் உன்னை மாதிரி தத்தியா இருக்கான் பாரு..வேஸ்ட் பெல்லோ"

" ஹேய்.. என்னடி.. நீ அவன சொல்ற மாதிரி எனைய திட்டுற.. நாங்கெலாம் அப்பவே அந்த மாதிரி" அவன் பெருமை பாட, அவளோ நக்கலாக

" அய்யடா.. நான் உண்மைய தான சொன்னேன்..ஏன் உனக்கு ஞாபகம் இல்லையா..

நான் விடாம உன்னை தொறத்தி தொறத்தி லவ் பண்ணாலும் நீ

ஒதுங்கி பதுங்கி பயந்து ஓடனது எல்லாம்.. "

" ஹேய்..உனைய எனக்கு பிடிக்கும்டி..ஆனா "

" ஆனா எங்கப்பாவுக்கு பயந்துட்டு  மறைச்சிக்கிட்ட அதான.. " என்றவள் ஏதோ நினைவு வந்தவளாக " ஏன் வாசு.. அவுங்க ரெண்டு பேரும் நல்ல ஜோடி தான.. நான் ஏதும் அவுங்கள கன்ட்ரோல் பண்ல தான"

" அதானே..பேசறது எல்லாம் பேசிறு..அப்ரோ கடைசியா வந்து ஐயயோன்னு விசனப்படு..

பாஹீ

அவுங்களுக்கு டைம் கொடுத்துருக்கோம்ல..அவுங்களே யோசிச்சு சொல்வாங்க..ப்ரீயா இரு "

" ஹூம் . சரி வாசு.. " 

                   😍😍😍😍😍

பெண்களுக்கு மட்டுந்தான் கல்யாணக் கனவுகள் இருக்குமா என்ன?. ஆண்களுக்கு அதற்கு ஒரு படி மேலேயே இருக்கும் என்பதற்கு விசாகனே ஒரு சான்று.. அத்தையின் ஆசைப்படிதான் தன் திருமணம் என்பதால் தனக்கு வரும் மனைவி எப்படி பட்டவளாக இருப்பாள் என்று தெரியாவிட்டாலும் திருமணத்திற்கு பின் அவளை எவ்விதம் பார்த்துக் கொள்ள வேண்டும்,  அவளுக்காய் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என மனக்கோட்டைகளைக் கட்டித் தான் வைத்திருந்தான் அவன் .. இன்று அந்த  அனைத்திற்குமே சொந்தக்காரியாகப் போகிறவள் ரோகிணி தானா...

உதட்டினோரம் சிறு புன்னகை.. இன்று காலை தான் அவன் ஆசைகள் அனைத்தையும் மேலோட்டமாக அவளிடம் கூறியிருந்தான்.. அதற்கு அவளும் ' உங்க வொய்ப் ரொம்ப கொடுத்து வெச்சவங்க'  என்று பாராட்டியிருந்தாள்.. தற்போது அவளே அந்த மனைவியாக வரப் போகிறாளா..

தன்னெதிரே முதுகு காட்டி அமர்ந்திருந்தவளை பார்த்து " ரோகிணி " என்றழைக்க, அந்தக் குரல் அவள் காதினில் சென்றடைந்தாலும் அவள் திரும்பவில்லை..உள்ளுக்குள் அத்துனை பதற்றம்... கை கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது.. கன்னங்களின் இரத்த நாளங்களில் தாறுமாறாக இரத்தம் ஓட்டம் நாட்டியமாட, அதனால்  அவள் கைவிரலில் சிவந்திருக்கும் மருதாணிக்கு இணையாக கன்னமும் காட்சியளித்தது.. அதற்கு பெயர் தான் வெட்கமோ..

" ரோகிணி "

அவள் மௌனம் அவள் விருப்பத்தை தெரிவக்கிறதா.. வெறுப்பை வெளிக்காட்டுகிறதா என்று அவளுக்கு பின்னால் அமர்ந்திருக்கும் அவனுக்கு தெரியவில்லை..

" ரோகிணி.. உனக்கு கேட்குதுன்னு எனக்கும் தெரியும்..பின்னாடி திரும்பு.. "

அவள் மெதுவாக திரும்ப, அவள் முகமே தன்னைக் காண கூச்சம் கொள்கிறாள் என்பதை அவனுக்கு உணர்த்தியது.. அவள் பயந்த சுபாவம் என்றாலும் அவனிடம் நன்றாகத் தான் வாயாடினாள்.. ஆனால் இப்போது..  திருமணம் என்றதும் நாணம் வந்து விருந்தாளியாக ஒட்டிக் கொண்டதோ என்னவோ.. இருவருக்கும் இடையே எட்டடி இடைவேளை இருந்தாலும் அவள் இருதயம் துடிக்கும் ஓசை அவன் காதினில் கேட்பது போல தோன்றியது..

அவளுக்குள் அவன் என்ன சொல்வானோ என்கிற பயம் வேறு பாடாய் படுத்தியது..

இதுவரை காதலிக்கவில்லை இருவரும்.. ஆனால் இனி..

பெரியோர்களால் உறுதி செய்யப்படும் திருமணம் என்றால் இப்படித் தான் இருக்குமோ..

" மாமா கிட்ட என்ன சொல்லட்டும் ரோகிணி.. "

வறண்ட நாக்கை எச்சிலால் ஈரப்படுத்திக் கொண்டு " உங்களுக்கு என்ன தோணுதோ "

என்றாள்..

அவள் உதட்டு அசவை பார்க்காவிடில் அவள் என்ன சொன்னாள் என்று அவனுக்கும் கேட்டிருக்காது..அந்த அளவிற்கு மெதுவாகத் தான் கூறினாள்..

" அது தெரியாம தான் உங்கிட்ட கேட்கிறேன்.. சீதா தேவி மேடம்.. இந்த இரவாணன உங்களுக்கு பிடிக்காம போயிடுச்சுனா???? "

அவன் தைரியமாக பேசிக் கொண்டிருந்தாலும் அவனும் உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டுதான் இருந்தான்.. வாய் வார்த்தை மட்டுந்தான் சத்தமாக வந்தது..

தன் கைவிரலில் கவனத்தை பதித்திருந்தவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.. அந்த ஒரு நொடி வெட்கம் போய் கோபம் வந்து ஒட்டிக் கொண்டது..

பார்வைகள் கலந்தாலும் அங்கே எந்த முடிவும் எடுக்கப்படவில்லை..

" என்ன சொல்லட்டும் ரோகிணி " அவன் மறுபடியும் ஆரம்பித்தான்.

" உங்களுக்கு பிடிச்சா..பிடிச்சிருக்குனு சொல்லுங்க..பிடிக்கலைனா பிடிக்கலன்னு சொல்லுங்க"

முதல் வரி சொன்ன போது இருந்த குரலின் அழுத்தம் இரண்டாம் வரியில் சற்று தேய்ந்திருந்தது.. அது அவனை பிடிக்காது என்று சொல்லிவிடாதே என்று எச்சரித்ததோ என்னவோ..

" எனக்கு உனைய கல்யாணம் பண்ணிக்க

சம்மதம் ரோகிணி.. இனி உனைய நான் ரோகிணின்னே கூப்பிடறதும், இல்லை ஏஞ்சல்னு மாத்தி சொல்றதும் உன் கைல தான் இருக்கு.. " என்றவன் அவளுக்கு யோசிக்க நேரம் கொடுத்து மடிக்கணினியை எடுத்துக் கொண்டு உள்ளே சொல்லப் போக

" எனைய இனி ஏஞ்சல்னே கூப்பறீங்களா "

அவள் பதிலில் உதட்டோடு கண்களும் சிரித்தது அவனுக்கு.. திரும்பி அவள் முகம் காண, அவளோ பறந்திருந்தாள் அவளது அறைக்கு.. கொஞ்சும் கொலுசின் ஒலி அவள் வேகத்தைக் கூறியது..

அவன்  மனைவியை தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டுமே பாஹீயிடம்..அப்படி தேர்ந்தெடுத்த பெண்ணை அப்படியே விட்டு விடுவானா என்ன? இனி வாசுவும் பாஹீயும் என்ன சொல்வது..

விசாகன் ரோகிணியின் கவசமாவான்.. ரோகிணி விசாகனின் சுவாசமாவாள்..

💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

இன்றோடு உத்ரா வேலைக்கு சேர்ந்து ஒரு வாரமானது.. அவளது திறமைகளை அறிந்ததாலே தானே இந்த சாம்ராஜ்ஜியத்தில் வேலையே கிடைத்தது.. தனது திறமைகளை வேலையில் காட்டியவள் கே.எஸ் ஆரைப் பற்றி விசாரிக்கவும் மறக்கவில்லை..

இந்த ஒரு வாரத்தில் இவள் அறிந்தது..

கே.ஏஸ்.ஆரின் குடும்பம் வெளிநாட்டில் உள்ளது.. அவனது தாயகம் தமிழகம் என்றாலும் வருடத்தில் என்றாவது சில நாட்கள் மட்டுமே வருவான்.. ஆனால் தவிர்க்க முடியாத எதோ ஒரு விசயத்திற்காகத் தான் கடந்த பத்து நாட்களாக இங்கிருக்கின்றான்.. தொழிலில்  சுத்தமாக இருந்தான்..  எந்த தவறான தொழிலும் அவளுக்குத் தெரிந்து அவன் செய்ததில்லை.. தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு அதிக ஊதியம்தான் அளித்தான்.. அதனால் அவனுக்கு விசுவாசிகள் அதிகம்..

அவனது உண்மையான பெயர் சுகதேவன்..

என்ன செய்தாலும் இதனைத் தாண்டி அவளால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.. ஆனால் அவனிடம் இரண்டு முறை குறிப்பிட்ட நேரத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்ததால் நற்பெயர் வாங்கியிருந்தாள்.. அவளின் துடிப்பு அவனைக் கவர்ந்திருந்தது..அவளும் அவனை நெருங்கும் சந்தர்பத்தை எதிர்நோக்கி காத்திருந்தாள்.

உதயன் அங்கு வந்த இரண்டு நாளில்

தங்களது விசுவாசிகளால் அவர்களது வீட்டிற்கு காவலை அதிகப் படுத்தியிருந்தான்.. நாகராஜிடம் நடந்தவற்றைக் கூறி விளக்கம் அளித்திருந்தான்..

உதயன் ஈஸ்வரி க்ரூப் ஆப் கம்பெனியின் சார்பாக ஒரு நிலப் பிரச்சனையை சாக்காய் வைத்துக் கொண்டு

கே.எஸ்.ஆரின் கம்பெனிக்கு சென்றான்.. அவனது முகஜாடையே அவன் யாரென்று எடுத்துக் கூறியது கே.எஸ்.ஆருக்கு.. சின்னதாய் அவன் முகம் சுழித்தாலும் அது தேவாதான் என்பதை உறுதி செய்துவிடலாம் என்கிற நோக்கில்தான் வந்திருந்தான்.. ஆனால்  அதற்கும் வாய்ப்பளிக்காமல் நல்ல முறையிலே நடந்து கொண்டான் அந்த நயவஞ்சகன்..

எடுத்து வைக்கும் அனைத்து அடிகளும் தோல்வியைத் தழுவ என்ன செய்வதென்று திணறிப் போனான்.. மறுபக்கம் அவனது தொழில்களில் பிரச்சனைக்கு மேல் பிரச்சனை. நிமிர்ந்து பார்க்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தான்..இதற்கு தேவா தான் காரணம் என்று தெரிந்தாலும் அதற்கான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை..  விசாகனும் அங்கிருந்து எவ்வளவு முயற்சித்தாலும் உண்மையில் இருவராலும் தேவாவைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.. அவனது பண பலமும் அரசியல் செல்வாக்கும் அவன் நினைத்ததை நடத்திக் கொண்டிருக்கிறது..

கே.எஸ்.ஆர் அவன்படும் பாட்டை இரசித்துக் கொண்டிருந்தான்.. அவன் இன்னும் கண்டுபிடிக்காதது வாசு பாஹீயின் வசிப்பிடம் மட்டுமே..அதனையும் எவ்வளவு நாள் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் என்று விட்டுத் தான் பிடித்துக் கொண்டிருந்தான்..

உதயனுக்கு ஒவ்வொரு பிரச்சனையாக வர வர தேவாவின் அறிவுத் திறனை அறிய முடிந்தது..உதயனே அவனது திட்டங்களைப் பார்த்து அதிசயித்துத் தான் போனான்.. ஆனால் எந்த இடத்திலும் தேவா தான் பிரச்சனைக்கு காரணம் என்ற தடயம் கிடைக்கவே இல்லை..
தேவாவையே மனதில் குருவாய் ஏற்றுக் கொண்டு அவன் வழியிலே பிரச்சனைகளை யோசிக்கத் துவங்கினான்.. அதன் வழியே செய்துமே காட்டினான்..

💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

அலைபேசியில் விசாகனின் கோபமான பேச்சும் எந்நேரமும் மடிக்கணினியை போட்டுத் தட்டிக் கொண்டிருப்பதும்

நிலைமையின் தீவிரத்தை வாசுவிற்கும் பாஹீக்கும் உணர்த்தியது..

" வாசு.. "

" என்னமா "

" பசங்க ரொம்ப சிரமப்படறாங்கல.. "

" ம்ம்ம் "

" இப்படியே விட்டா அவன் நம்மள ஒன்னுமே இல்லாம பண்ணிடுவான் வாசு.. நீ எதாச்சும் பண்ணலாம் தானே "

" என்ன பண்ணனும்னு  நினைக்கற .. இப்போ டெக்னாலஜி வளர்ந்துடுச்சு..அங்கபோய் அவங்கூட என்னால சண்டை போட முடியாது.. அப்படி நான் போயி நின்னா என்னைய ஒரே புல்லட்ல வீழ்த்திடுவான் "

" வாசு.. என்ன பேச்சு இது..

முட்டாள் மாதிரி பேசாத.. " அவள் முகம் திருப்பிக் கொண்டாள்..

" பாஹீ.. எனைய பாரேன்.. நான் என்னை விட எம்பசங்கள நம்பறேன்டி..

அவனுங்களால கண்டிப்பா அவன எதிர் கொள்ள முடியும் பாஹீ.நாம ஏன் அவனுங்க திறமைய குறைச்சு மதிப்பிடனும்.. ஒருத்தனை  இரண்டு பேரால சமாளிக்க முடியாதா என்ன?  அவனுங்க பாத்துக்குவாங்க பாஹீ.."

" இல்ல வாசு..முன்ன மாதிரி யாருக்காச்சும் "

" அப்படி நடக்காதுன்னு நம்புவோம் பாஹீ.. தேவா பிரச்சனை பண்ண யோசிக்கும் போது அவனயே அறியாம தப்பு பண்ண வாய்ப்பிருக்கு.. அது மூலமா அவன கையும் களவுமா பிடிச்சரலாம்.. பாஹீ "

" இதெல்லாம் எப்போ நடக்கும் வாசு..அவன நினைச்சாலே எனக்கு கோபம் கோபமா வருது.. எங்க முன்ன மாதிரி கோபப்பட்டு எல்லாத்தையும் இழந்திடுவேனோன்னு பயமா இருக்கு " அவள் கண்கள் சிவக்க ஆரம்பிக்க, மனது பக்கென்றானது அவனுக்கு..

தலையைப் பிடித்துக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டாள்..

அவளை திசை திருப்பும் வகையில்

" பாப்பா " என உரக்க கத்தினான்.. அவன் கத்தலில் அரண்டு போன ரோகிணி, தான் சாப்பிட்டுக் கொண்டிருந்த காலை உணவினை அப்படியே வைத்துவிட்டு ஓடி வந்தாள்..விசாகனும் பருவதம் கூட வந்துவிட்டனர்..

" என்னப்பா..என்னாச்சு.. "

" பாப்பா உன் கல்யாண விசயத்துல ரெண்டு பேரும் என்ன முடிவு எடுத்துருக்கிறீங்க.. நானும் உங்களுக்கு ஒரு வாரம் டைம் கொடுத்தேன்.. " என்று தனித்தனியாக அவர்கள் சம்மதம் தெரிவித்தும் வேண்டும் என்றே கேட்டான், பாஹீயைப் பார்த்து கண்காட்டி,

ரோகிணி பாஹீயின் அருகே அமர்ந்து கொண்டவள்

" அம்மாக்கு சம்மதம்னா எனக்கும் சம்மதம்பா.. அம்மா நீங்க என்ன சொல்றீங்க" என்று பாஹீயின் முகம் நோக்கி கேட்க, மகளின் திருமண விசயத்தால் தேவாவின் நினைவு மறக்கடிக்கப்பட்டது..

ஆசையாய் அவள் முகத்தில் முத்தம் வைத்து " ரொம்ப சந்தோசம்டா " என்றவர்

வி

சாகனை காண, அவனும் பாஹீயின் நிலை அறிந்ததால் சிரித்த முகத்துடனே சம்மதம் தெரிவித்தான்..

"  அப்ரோ என்ன வாசு.. சீக்கிரமா கல்யாண வேலைய ஸ்டார்ட் பண்ணலாம்..நான் உதயன் ராஜூ ( நாகராஜன் ) அம்மாக்கு தகவல் சொல்லிடறேன் " ஒரே நொடியில் புள்ளிமானாக துள்ளி எழுந்தாள்.. அனைவருக்கும் அப்போதுதான் மூச்சே வந்தது..

ரோகிணி " அப்பா அம்மா எனக்கொரு ஆசை" என்க,

" சொல்லுடா.. "

" என் கல்யாணம் உங்க சொந்த ஊருல நடக்கனும்பா.. "

புகளூரில் விற்ற சொத்துக்களில் நல்ல நிலைக்கு வந்தவுடன் மில்லை விட்டுவிட்டு வீ்ட்டையும் நிலபுலன்களை மட்டும் திரும்ப வாங்கிவிட்டிருந்தனர்..ஆனால் அங்கு சென்றால் பாஹீ மீண்டும் உணர்ச்சி வசப்பட்டால் என்ன ஆவது என்று அனைவருக்கும் கவலை..
ஆனால் ரோகிணிக்கு எங்கே தன் தாய் வாழ்ந்தாரோ, அங்கேயாவது தன் திருமணம் நடக்க வேண்டும் என்று ஆசை.. பாஹீயை பாவமாக பார்க்க, அவரும் அதற்கு சம்மதித்தார்..அவரது இளமைப் பருவ நிகழ்வுகள் அதில்தானே புதைந்திருக்கின்றன..இருந்தும் வாசு சம்மதிக்கவில்லை..
அங்கே செல்ல இது சரியான தருணம் இல்லை என்பதை அவரால் உணர முடிந்தது..

அந்த இடம் சற்று சோகமாக " வோய்..மாமா  ஒத்துக்கையா .அதான் உம்பொண்ணு ஆசையா கேட்கறால்ல.." என விசாகன் ஆரம்பிக்க,

" இங்க பாருங்க..எங்கப்பாவ மரியாதையா பேசுங்க"

கோபம் மூக்கு மேல் வந்தது அவளுக்கு..

" உனக்கு அப்பாங்கறதுக்கு முன்னாடி எனக்கு என்னோட சூப்பர்மேன்..அதை ஞாபகம் வெச்சுக்கோ .. அதென்ன மத்த நேரம் அமுக்குனி மாதிரி இருந்துட்டு உங்கப்பாவ எதும் சொல்லும் போது மட்டும் மூக்கு விடைக்குது உனக்கு " என்று அவள் அருகில் வர, அவனுக்கு குறுக்காய் வந்து நின்ற வாசு

" டேய்..என்னடா..நான் இருக்கும் போதே என் பொண்ண மிரட்டுற.." எகிற

" அய்யோ..இந்த பந்தா காமிக்கற வேலைலா எனக்கு வேணா.. அவ ஆசைப்பட்டு கேட்ருக்கா ஒன்னு அப்பங்காரனா அதை நடத்தி வை..இல்லையா என் பொண்டாட்டியோட ஆசைய நானே நிறைவேத்திக்கறேன் "

அவன் பேச்சில் சிரிப்புத் தான் வந்தது வாசுவிற்கு.. " என்னடா பொண்ண கட்டிக்கொடுக்க போறோம்னு மாப்பிள்ளை பகட்ட காட்டுறீயோ "

" ஆமாயா..அப்படித்தான் "

" அப்ப உனக்கு பொண்ணு கிடையாது போடா "

" அதென்ன நீ சொல்றது  நானே சொல்றேன்..நான் ஒரு கண்டிசன் போடுவேன்   அதை கேட்கலீனா உன் பொண்ணு எனக்கு வேணாம்யா"

அவர்கள் விளையாட்டாய்தான் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.. ஆனால் பாஹீயும் ரோகிணியும் தான் பயந்து விட்டார்கள்..

" என்னடா கன்டிசன்னு "

" ஹூம்..உன் பொண்ணு என் கூட ..

வேணா வேணா வேற ஒரு நல்ல பைட்டரோட சண்டை போட்டு அவ ஜெயிக்கனும்.. அவ கராத்தே கத்துக்குவாளோ..பாக்சிங் கத்துக்குவாளோ..அதைலா எனக்கு தெரியாது.. ஆனா அவ ஜெயிக்கனும்..அப்படி அவ ஜெயிச்சிட்டா அடுத்த முகூர்த்தத்துல எங்க கல்யாணம் அந்த ஊர்ல நடக்கறதுக்கு நான் சம்மதிக்குறேன் "

அவன் சொல்வதை எல்லாம் நினைத்துப் பார்க்கையிலே ரோகிணிக்கு தலை சுற்றியது.. பயத்தில் தன் முன் நின்றிருந்த வாசுவின் கைகளைப் பிடித்துவிட்டாள்..

" அப்படி சண்டை போட்டு ஜெயிச்சிட்டு தான் உன்னைய கட்டிக்கடனும்னா.. என் பொண்ணுக்கு அப்படி ஒரு கல்யாணம் தேவையே இல்ல போடா "


"நீங்க இப்படி பொத்தி பொத்தி வைக்கறதால தான் அவ எதுக்கெடுத்தாலும் பயந்து சாகறா.

ஏன் உங்க தொடை நடுங்கி பொண்ணு மேல உங்களுக்கே நம்பிக்கை இல்லாம தான என் கன்டிசனுக்கு ஒத்துக்க மாட்டீங்கறீங்க"

இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த ரோகிணி " அப்பா நான் ஜெயிச்சிட்டு உங்க பொண்ணுனு நிரூபிக்கிறேன்பா " என்றாள்.. அவனுக்கு விசாகனின் மீது சொல்ல முடியாத அளவுக்கு கோபம்.. நான் சாப்பிட்டு வரேன் என்றவள் அங்கிருந்து சென்றுவிட்டாள்..


பாஹீ " வாசு.. அவன் தான் பேசாறான்னா .. நீ அதுக்கேத்த மாதிரியே பேசற..உங்களுக்கு என்னை பைத்தியமா பிடிச்சிருக்கு.. மாமனும் மருமகனுக்கும்  கல்யாணம் அவ்ளோ விளையாட்டா போச்சா..அங்கப் பாருங்க..அவ எப்படி சோர்ந்து போறான்னு .. ரெண்டு பேரும் எம்முகத்துல முழிக்காதீங்க " என ரோகிணியை சமாதனப்படுத்த சென்றுவிட்டாள்..

வீராப்புடன் முரைத்துக் கொண்டு நின்றிருந்தவர்களை  பருவதம் கூட கேவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு பாஹீயுடன் ஐக்கியமாகி விட்டார்..


அதுவரை முரைத்திருந்தவர்கள் சிரித்துக் கொண்டனர்.. இப்போது இருக்கும் பிரச்சனையில் அவர்கள் வெளியே செல்வது, அதுவும் புகளூர்க்கு செல்வது அவர்களது பாதுகாப்பிற்கும் பாஹீயின் மனநிலைக்கு  சரியாக இருக்காது என்பது இருவருக்குமே தெரிந்துதான் ரோகிணியின் ஆசையை சுத்தலில் விட்டனர்.. அவள் ஆசைக்காக ஆபத்தில் மாட்டிக் கொள்ள முடியுமா..

வேண்டும் என்றால்
அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்த பின்னர் அவள் ஆசைப்படியே திருமணம் செய்து கொள்ளலாம்.. என விசாகன் நினைத்துக் கொண்டான்...

அத்துடன் ரோகிணியும் தன் பயம் எனும் கூட்டிலிருந்து வெளியே வந்து அவளே எதிரிகளை எதிர்க்க வேண்டும் என்று தான் அந்தப் போட்டி..மத்தபடி அதில் வேறொன்றும் இல்லை..தன்னவளை பாதுகாக்க தானிருந்தாலும் அவன் இல்லாத சமயங்களில் அவள் தடுமாற கூடாது என்ற எண்ணம் மட்டுமே..

அதை விட முக்கியமாக பாஹீயின் மனத்தை திசை திருப்பியாயிற்று..இனி அவர் ரோகிணிக்கு ஆதரவாகவும்,
இவர்கள் இருவரின் மீது கோபமாகவும் தான் இருப்பார்..அவரது முழுக் கவனமும் இவர்கள் மேலே இருக்க தேவாவின் எண்ணத்தை மறந்திடுவார் என்றே இந்த மாமனும் மருமகனும் இந்த ஆட்டத்தை ஆரம்பித்திருந்தனர்..

ஒரு கண் அசைவில் அனைத்தையும் புரிந்து கொள்ள முடியுமா இருவராலும்..

புரிந்ததே இவர்களுக்கு..

. சரியாக அந்த தருணம் உதயனின் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.. அவன் அங்கே அனைத்து பிரச்சனைகளையும் அவன் சரி செய்து விட்டதாய் கூற, சற்று நிம்மதியாக இருந்தது இங்கே..

அவன் அத்துடன் ஒரு முக்கிய தகவல் கிடைத்திருக்கின்றது என்று வாட்சப்பிற்கு அதனை அனுப்பி வைத்தான்..

தேவாவுடன் அவரது தந்தையும் தாயும் இருக்கும் அந்த புகைப்படத்தை வாசுவிடம் காண்பிக்க அவனுக்கு மூளையில் எங்கோ மின்னல் அடித்தது..

உத்ரா உதயன் பகுதி அடுத்த அப்டேட்ல கொடுக்கறேன்..என்னடா இவ 10 பகுதில முடிக்கறேன்னு சொல்லிட்டு இப்படி இழுக்கறான்னு நினைக்க வேணா.. சீக்கரமா பிரச்சினைக்கு  ஒரு என்ட் கார்ட் போட்டராலம்.. கதை எப்படி இருக்குனு ஒரு நாலு வார்த்தையாச்சும் சொல்லுங்க மக்களே.. பாவம் பிள்ள கை வலிக்க டைப் பண்ணுது.. 😍😍

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz