6 சுதர்சனின் முடிவு
6 சுதர்சனின் முடிவு
சுதர்சனின் முடிவைக் கேட்ட ராஜஸ்ரீ வியந்தாள்.
"இப்போ நீ என்ன சொன்ன?"
"நான் ஃபாரின் போகத் தயாரா இருக்கேன்."
"நான் கனவு ஒன்னும் காணலையே?"
"அக்கா, ஓவரா ரியாட் பண்ணாதீங்க."
"சத்தியமா நீ சொன்னதை என்னால நம்பவே முடியல. எத்தனை தடவை உன்னை ஃபாரின் போகச் சொல்லி நான் கெஞ்சினேன்? அப்படி இருக்கும் போது, என்னால எப்படி நம்ப முடியும்?"
"நம்புங்க."
"நீ இந்த முடிவை எடுக்கிற அளவுக்கு அப்படி என்ன நடந்தது?"
"செட்டில் ஆகணும்னு நினைக்கிறேன். அதனால், ஷட்டவுன் ஜாபுக்குப் போலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்."
"நல்ல முடிவு. சீதா கேட்டா ரொம்ப சந்தோஷப்படுவார்."
"நான் மாமாகிட்ட அப்புறம் பேசுறேன்."
"சரி, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு."
"எனக்குத் தெரியும் கா."
"உன் முடிவுக்கு ஏதாவது ஸ்பெஷல் காரணம் இருக்கா?"
"அக்கா, நான் என் முடிவை மாத்திக்கணுமா?"
"இல்ல, இல்ல, நான் உன்னை ஒன்னும் கேக்கல."
"குட் நைட்." என்று சிரித்தபடி அழைப்பைத் துண்டித்தான் சுதர்சன்.
சற்று நேரத்தில் சீதாராமனிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. ராஜஸ்ரீ அனைத்தையும் அவனிடம் கூறிவிட்டாள் என்பது அவனுக்குப் புரிந்தது. அந்த அழைப்பை ஏற்றான்.
"எப்படி இருக்கீங்க, மாமா?"
"நல்லா இருக்கேன். நீ ஃபாரின் வர விரும்புறதா ராஜா சொன்னா. அதைக் கேட்டு நான் நம்ப முடியாம இருக்கேன்." என்று சிரித்தான்.
"ஆமாம், மாமா, லைஃப்ல செட்டில் ஆகணும்னு நினைக்கிறேன். என்னோட சம்பளம் எனக்குப் போதுமானதா இருந்தாலும், கொஞ்சம் பணம் சேர்க்க நினைக்கிறேன்."
"ரொம்ப சந்தோஷமா இருக்கு, மச்சான். உனக்கு நல்ல வேலை, நல்ல சம்பளத்தோட ரெடியா இருக்கு. இந்தியாவுக்குப் போக தோணுச்சின்னா நீ தாராளமா போகலாம்."
"நான் நிச்சயம் இந்தியாவுக்குத் திரும்பி வருவேன்." என்றான் ஹரிதாவை நினைத்தபடி.
"உனக்கு இந்தியா மேல எவ்வளவு பற்றுன்னு எனக்குத் தான் தெரியுமே. நான் உன்னோட விசாவுக்கு ஏற்பாடு பண்றேன்."
"ஃபார்மாலிட்டிஸ் முடிய எவ்வளவு நாளாகும்?"
"ஒரே வாரத்துல கூட என்னால முடிக்க முடியும்."
"இல்ல, எனக்குக் கொஞ்சம் டைம் வேணும். நான் அடுத்த மாசம் வரேன்."
"சரி, அடுத்த மாசம் ஒரு புது ப்ராஜெக்ட் ஆரம்பமாகுது. நீ அதுல ஜாயின் பண்ணிக்கோ."
"சரி, மாமா, தேங்க்ஸ்."
"நான் தான் உனக்குத் தேங்க்ஸ் சொல்லணும். நீ எவ்வளவு சின்சியர்ன்னு எனக்குத் தெரியும். நீ என் கம்பெனில சேர்றது எனக்கு ரொம்ப சந்தோஷம்."
"என்னை நம்புறதுக்குத் தேங்க்ஸ், மாமா."
"நம்ம சீக்கிரம் சந்திக்கலாம். பை."
அவர்கள் அழைப்பைத் துண்டித்தார்கள். ஹரிதாவுக்குச் சிகிச்சை செய்வதற்கான வழி கிடைத்துவிட்டது. அவளுக்குச் சீக்கிரமே பார்வை கிடைத்துவிடும் என மகிழ்ந்தான் சுதர்சன்.
மறுநாள்
அன்று சுதந்திர தினம் என்பதால், அவனுக்கு அலுவலகம் விடுமுறை. உமாபதியைக் கைபேசியில் தொடர்பு கொண்ட சுதர்சன்,
"ஹரிதா எப்படி இருக்காங்க?" என்றான்.
"இப்போ பரவாயில்ல."
"இப்போ பரவாயில்லன்னா? அவங்க முதல்ல நல்லா இல்லாம இருந்தாங்களா?"
"ஆமாம், சுதா. அவ நேத்து ரொம்ப நேரமா தூங்காம இருந்தா."
"நீயும் உங்க அம்மாவும் அவங்களைச் சமாதானப்படுத்த முயற்சி பண்ணலையா?"
"பண்ணோம். ஆனா முடியல."
"ஏன்?"
"நித்யா மேல கேஸ் ஃபைல் பண்ணதுல அம்மாவுக்கு ரொம்ப கோபம்."
"ஆனா ஏன்? அவன் பொறுக்கி தானே?"
"கேஸ் கொடுத்தா, ஹரிதா போலீஸ் ஸ்டேஷனுக்கும் கோர்ட்டுக்கும் போகணும்னு அம்மா பயப்படுறாங்க."
"அதனால என்ன?"
"அதனால கேஸை வாபஸ் வாங்கச் சொல்லிட்டாங்க." சுதர்சன் எரிச்சல் அடைந்தான்.
"என்னால ஒன்னும் செய்ய முடியல, சுதா. அதனால ஹரி ரொம்ப அப்செட்டா இருக்கா."
"நான் உன்னைப் பாக்கணும்."
"நாலு டெலிவரி கொடுக்க வேண்டியிருக்கு. அதுக்கு அப்புறம் நம்ம பார்க்கலாம். அவசரம்னா இப்பவே சொல்லு."
"இது ஃபோன்ல பேசுற விஷயமில்ல. நேர்ல தான் பேசணும். நான் உன் வீட்டுக்கு வரட்டுமா?"
சில நொடி திகைத்தான் உமாபதி. என்ன பதில் கூறுவது என்று அவனுக்குத் தெரியவில்லை. அவன் தான் யாரையும் வீட்டிற்கு அழைப்பதில்லையே. ஆனாலும், முதல் நாள் அவன் ஹரிதாவிடம் நடந்து கொண்ட விதம், உமாபதியின் தயக்கத்தைத் துடைத்தது.
"சரி, நான் இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துடுவேன். உனக்கு என் அட்ரஸை அனுப்புறேன்."
"சரி."
ஒரு மணி நேரம் கழித்து, உமாபதி அனுப்பிய முகவரியைச் சென்று அடைந்த சுதர்சன், உள்ளிருந்து வந்த குரல் கேட்டு நின்றான்.
"அம்மா, எதுக்காக இப்போ அந்தப் பாட்டை மாத்தினீங்க? எனக்கு அது ரொம்ப பிடிக்கும். ப்ளீஸ் வையுங்களேன்." என்றாள் ஹரிதா கெஞ்சலாக.
அது ஜெய்ஹிந்த் படத்தில் வரும் தேச பக்தி பாடல்.
"நீயும், உன் பாட்டும்... இவ்வளவு தேசப்பற்றோட இருந்து நீ எண்ணத்தைக் கண்ட? ஒரு கேடு கெட்டவன் உன்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணான். உன்னைப் பத்தி வெளியில யாருக்கும் தெரியக் கூடாதுன்னு நீ ஒளிஞ்சு வாழ்ந்துகிட்டு இருக்க. இந்த நாட்டை சேர்ந்தவங்க, உன்னைக் கிழிச்சு திங்க எப்போ சந்தர்ப்பம் கிடைக்கும்னு காத்துகிட்டு இருக்காங்க." என்றார் அவளது அம்மா சிவகாமி ஆதங்கத்துடன்.
அவர்கள் இருவருக்காகவும் வருந்தினான் சுதர்சன். அவனுக்கு உள்ளே செல்வதா, வேண்டாமா என்று புரியவில்லை. சூழ்நிலை சரியாக இல்லாததால், அங்கிருந்து கிளம்பி விடலாம் என்று நினைத்தான். ஆனால் ஹரிதா கூறுவதைக் கேட்டு அவன் கால்கள் நகர மறுத்தன.
"நான் பிரச்சனைகளை ஃபேஸ் பண்ணிக்கிட்டு இருக்கிறதுக்குக் காரணம் நான் இந்தியன் அப்படிங்கிறதால கிடையாது. இந்தியாவில் இருக்கிற சில பேர் கெட்டவங்க அப்படிங்கறதற்காக தான். எல்லா நாட்லயும் கெட்டவங்களும் நல்லவங்களும் கலந்து தான் இருக்காங்க. அது நம்ம இந்தியாவோட தப்பு இல்ல. பார்வை இல்லாம இருக்கிறதும் என்னோட பிரச்சனை இல்ல. கெட்ட எண்ணம் கொண்ட மனுசங்க தான் பிரச்சனை. அது எனக்கு தேச பக்தி இருக்கிறதால நடக்கல. அது எல்லாருக்கும் நடக்குது. நான் தேசபக்தியோடு இருக்கிறதால எனக்குக் கெட்டது நடக்கும்னா, நடக்கட்டும். இந்த நாட்டுக்கு நான் ரொம்ப நன்றியுள்ளவளா இருப்பேன். ஏன்னா, இந்த நாடு எனக்கு வாசுகி, விசாலாட்சி, கிருஷ்ணா, சுதர்சன் மாதிரி நிறைய நல்லவங்களைக் கொடுத்திருக்கு." என்றாள்.
அதைக் கேட்டு சுதர்சனின் கண்கள் மின்னின. அவனது நட்பைக் கொடுத்ததற்காக அவள் இந்தியாவிற்கு நன்றி உள்ளவளாக இருக்கிறாளா? தன்னை நினைத்து பெருமை கொண்டான் சுதர்சன்.
"சுதர்சனா? அவனைப் பத்தி உனக்கு என்ன தெரியும்?" என்றார் சிவகாமி.
"நான் யாரையும் கண்ணால பார்க்க முடியாம இருக்கலாம். ஆனா அவங்களோ தொடுதல் மூலமா என்னால அவங்களை உணர முடியும். நேத்து சாயங்காலம் நான் அவர் கையைத் தொட்டப்போ, அதை அவர் தனக்குச் சாதகமா பயன்படுத்திக்கல. என்னைத் தொட அவர் முயற்சி பண்ணல. ஒருவேளை அவர் என்னைக் கட்டிப்பிடிச்சிருந்தா கூட, அந்த நேரத்துல அது தப்பா தெரிஞ்சிருக்காது. என்னை வாஷ் பேஷனுக்கு அவர் கூட்டிகிட்டுப் போனது கூட, வார்த்தை மூலமா வழிநடத்தித் தானே தவிர, என் கையைப் பிடிச்சிக் கூட்டிகிட்டு போகல. அப்படி அவர் செஞ்சிருந்தா கூட அவரை யாரும் தப்பா நினைச்சு இருக்க மாட்டாங்க. ஆனா அவர் ரொம்ப ஜென்டிலா நடந்துகிட்டாரு."
அதைக் கேட்டு சுதர்சனின் கால்கள் பூமியில் இல்லை. அவனை ஹரிதா இந்த அளவிற்கு கவனித்திருக்கிறாள் என்பது அவன் எதிர்பாராதது. தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உமாபதி உள்ளே வருவதைக் கண்டான் சுதர்சன்.
"எதுக்காக இங்கேயே நிற்கிற, சுதா? உள்ள வா." என்றான்.
"உன் பைக் வெளியில இல்ல. அதனால உனக்காக காத்திருந்தேன்."
"சரி, வா." என்று அவனை உள்ளே அழைத்து வந்தான்.
ஒரு புதியவனைக் கண்ட சிவகாமி முகம் சுருக்கினார்.
"அம்மா, இவன் தான் சுதர்சன்."
ஹரிதா நிமிர்ந்து அமர்வதைக் கவனித்தான் சுதர்சன்.
"இப்ப தான் ஹரி உங்களைப் பத்திச் சொல்லிக்கிட்டு இருந்தா. உங்களைப் பாக்கணும்னு நான் கூட ரொம்ப ஆசையா இருந்தேன்." என்று வெட்கமில்லாமல் பொய் கூறினார் சிவகாமி.
அவர் கூறியது உண்மை இல்லை என்று தெரிந்தபோதிலும் சிரித்து வைத்தான் சுதர்சன். ஆனால் ஹரிதாவோ சங்கடத்தில் நெளிந்தாள்.
"வா, சுதா, என் ரூமுக்குப் போகலாம்." என்றான் உமாபதி.
"இல்ல, உமா, நான் உங்க எல்லார்கிட்டயும் தான் பேசணும்."
"எல்லார்கிட்டயுமா? என்ன சுதா?" என்றான் யோசனையுடன்.
"எனக்குன்னு யாரும் இல்லன்னு உனக்குத் தெரியும். எங்க அம்மா அப்பா இறந்ததுக்கு அப்புறம், மூணு வருஷமா நான் தனியா தான் இருக்கேன். ஒரு கெமிக்கல் கம்பெனியில் வேலை செஞ்சுகிட்டு இருக்கேன். இப்போ நான் ஃபாரின் போக முடிவெடுத்துருக்கேன்." என்றான் ஹரிதாவைப் பார்த்தவாறு. அவன் கூறியதைக் கேட்ட அவளது முகபாவம் மாறியது.
"ஆனா, இதையெல்லாம் எங்க கிட்ட ஏன் சொல்லிக்கிட்டு இருக்க?" என்றான் உமா.
"அதுக்கு காரணம் இருக்கு. நீங்க என்னைப் பத்தி தெரிஞ்சுக்கணும்னு தான் சொல்றேன்."
"ஏன் தெரிஞ்சுக்கணும்?"
"ஏன்னா, நான் ஹரிதாவைக் கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன்." என்று கூறி அங்கு இருந்தவர்களைத் திகைக்கச் செய்தான். ஹரிதாவுக்குத் தலை சுற்றுவது போல் இருந்தது.
கண் சிமிட்டும்...
Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz