ZingTruyen.Xyz

யாதுமாகி நின்றவள் (முடிந்தது)

part 4

NiranjanaNepol

பாகம் 4

"அம்மா நான் முன் சீட்டில் உட்காரட்டுமா?" அபியை பார்த்து கொண்டு மஹாவிடம் கேட்டாள், யாழினி.

"ஓ...தாராளமா" என்றார் மஹா.

"நான் அவர்கிட்ட முக்கியமா ஒன்னு கேட்கணும்"

அபியும், மஹாவும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர். மஹா தலையசைக்க முன் சீட்டில், அபியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள் யாழினி.

"சீட் பெல்ட்" என்று கூறிய அபியை குழப்பமாக பார்த்தாள் யாழினி.

"உன்னோட சீட் பெல்டை போட சொன்னேன்"

யாழினி தன்னை சீட் பெல்டுடன் பிணைத்துக்கொண்டாள்.

அபி, காரை ஸ்டார்ட் செய்தான்.

"இது யாரோட கார்?" யாழினி கேட்டாள்.

"என்னோடது தான்"

"உங்களோட கார வேற யார்கிட்டயாவது கொடுத்திருந்திங்களா?"

"இல்ல. எனக்கு என்னோட பொருளை வேற யாரும் தொட்றது பிடிக்காது"

"ஒரு கார் மேல இவ்வளவு பொசசிவ்நெஸ்ஸா?"

"காரோ, ரிலேஷன்ஷிப்போ, எனக்கு எல்லாமே ஒன்னு தான். காருக்கே இவ்ளோ பொசசிவ்நெஸ்ன்னா, ரிலேஷன்ஷிப் பத்தி நான் சொல்ல வேண்டியது இல்லைன்னு நினைக்குறேன்."

அவன் ஆணித்தரமாகக் கூறியது, அவளை லேசாக கலக்கித்தான் விட்டது. இந்த இடத்தில், இந்த விளக்கதிற்கு என்ன தேவை என அவளுக்கு புரியவில்லை.

"நேத்து நைட்டு, இந்த காரை, எங்க வீட்டு பக்கத்துல நான் பார்த்தேன்"

ரியர் வியூ மிரர் மூலமாக மகாவை பார்த்தான் அபி. தனக்கு எதுவும் தெரியாது என்பது போல் தலையசைத்தார் மகா.

"இருக்கலாம். நான் அடிக்கடி அந்த பக்கம் வருவேன்"

சாதாரணமாக கூறினான்.

"என்னோட பெஸ்ட் ஃபிரெண்டா இருந்துகிட்டு, என்னை வந்து பார்க்கனும்னு உங்களுக்கு தோணலையா?"

அபிக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை. அதேநேரம், யாழினி, ஏன் இதைக் கேட்டாள் என்பது அவளுக்கும் புரியவில்லை.

"சில கேள்விகளுக்கு பதில் தேடாம இருக்குறது நல்லது"

அவனுடைய அந்த பதில், அவளுக்கு எள்ளளவும் சந்தோஷம் அளிக்கவில்லை என்பதை அவன் அறிவான்.

"அந்த அர்த்த ராத்திரியில, கொட்டுற மழைல, எங்க வீட்டுக்கு முன்னாடி நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க?"

விடாமல் கேட்டாள் அவள்.

"ஒரு ஃபோன் பேச வேண்டியிருந்தது. அதுக்காக நிறுத்தினேன்"

"ப்ளூ டூத்ல பேசும் போது கூட காரை நிறுத்தி தான் பேசுவீங்களா?"

அவனுடைய காதில் இருந்த, ப்ளூடூத் ஐ சுட்டிக்காட்டினாள்.

"நேத்து நான் அதை எடுக்க மறந்துட்டேன்"

மகா அவர்களை மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், அதன் பிறகு யாழினி எதுவும் கேட்கவில்லை. அவள் கேட்கவில்லை தான், அதற்காக அவள் எதையும் யோசிக்கவில்லை என்பதற்கில்லை.

அவர்கள், ஆதிகேசவனின் வீட்டை வந்தடைந்தார்கள்.

"பை" என்று விடையளித்தாள் யாழினி.

மென்மையாக தலையசைத்துவிட்டு, மகாவை பார்த்தான் அபி.

மெல்லிய சிரிப்புடன் அவனிடமிருந்து விடை பெற்றார் மகா.

அவர்கள் இருவரும் உள்ளே நுழைந்த போது, ஆதிகேசவனின் குரல் அவர்களை நிறுத்தியது.

"இன்னைக்கு நாள் எப்படி இருந்தது?"

"இன்னைக்கு போல என்னைக்குமே நான் சந்தோஷமா இருந்தது இல்ல. அம்மா, நான் டயர்டா இருக்கேன். ரூமுக்கு போறேன்"

வெடுக்கென கூறிவிட்டு, யாழினி தன் அறைக்கு சென்று விட்டாள். அவளிடம் ஒரு மாற்றத்தை ஆதிகேசவன் கவனிக்காமல் இல்லை. இதற்காகத் தான் அவர் பயந்து கொண்டிருந்தார். அவருக்கு தெரியும், யாழினியை, அவர்கள் தலையில் வைத்து தங்கியிருப்பார்கள் . யாழினி, நிச்சயம் அவர் மீது கோபமாக தான் இருப்பாள் அவர்களுடன் சேரவிடாமல் வைத்திருந்ததற்காக. இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும். அதே நேரத்தில் யாழினியும் வருத்தப்பட கூடாது. ஆதி கேசவன் தீவிரமாக யோசித்தார்.

மகாவிற்கு ஆதிகேசவன் மனம் புரிந்தது. இதற்கு யாரும் எதுவும் செய்ய முடியாது. அவர் விதைத்ததை, அவர் அறுத்து தான் ஆக வேண்டும்.

*சாந்தி நிலையம்*

அபி, வீடு திரும்பிய போது அனைவரும் ஒன்றாக அமர்ந்து, யாழினியை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

"இங்க வரணும்னு, யாழினி, ஆதிகேசவன் கிட்ட, எப்படி சண்டை போட்டாளாம் தெரியுமா?"

பாட்டி பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

அபி அவர்களுடன் வந்து அமர்ந்துகொண்டான்.

"நிஜமாவே அப்படி செய்தாளா?"
ஆச்சரியமாக கேட்டான் அபி.

"ஆமாம். மகாவே சொன்னா" அபியின் மாமி, மனோரமா சிலாகித்தாள்.

"கடவுளுக்கு ரொம்ப நன்றி. நம்ம எல்லாரும் நெனச்ச அளவுக்கு யாழினியோட நிலைமை மோசமா இல்லை" அஞ்சலி கடவுளுக்கு நன்றி கூறினாள்.

"ஆமாக்கா, ரொம்ப நார்மலா தான் இருந்தா. பெரிய மாறுதல் எதுவுமே இல்லை" -பிரியா

"அவ இங்க தொடர்ந்து வந்துகிட்டு இருந்தா, பழைய நிலைமைக்கு சீக்கிரமா வந்துருவா. எல்லாத்தையும் ஞாபகமும் படுத்த முடியும்னு தோணுது. அவ சீக்கிரமே நம்மள்ல ஒருத்தியாகுறத யாரும் தடுக்க முடியாது."- லாவண்யா சொல்ல ஆமாம் என்று தலையசைத்தாள் அஞ்சலி.

"யாழினியோட மனநிலையைப் பொறுத்து தான், உண்மையை சொல்ல மாட்டோம்னு ஆதிகேசவனுக்கு சத்தியம் பண்ணி கொடுத்தோம். ஆனா இன்னைக்கு அவ ரொம்ப சகஜமாக இருக்கிறத பார்க்கும்போது, நம் அப்படி செஞ்சிருக்க வேண்டியதில்லைனு ரொம்ப வருத்தமா இருக்கு."
பாட்டி நொந்துகொண்டார்.

"நான் ஒரு விஷயத்தைக் கவனிச்சேன், அவ தன்னை சுத்தி நடந்த அத்தனை விஷயத்தையும் உன்னிப்பா கவனிச்சிக்கிட்டிருந்தா. முன்னை விட இப்போ ரொம்ப ஸ்டராங்கா இருக்கா மாதிரி தெரியுது. அவ லைஃபை ஃபேஸ் பண்ண பயப்படுற மாதிரி எனக்கு தெரியல." ஷாம் கூறினான்.

"அவளுக்கு, சீக்கிரமா எல்லாதையும் ஞாபபடுத்தணும்."
நந்தா சொன்னான்

"அப்படி நடக்க, ஆதிமாமா விட்டுடுவார்னு நீ நினைக்கிறாயா?"
அஜய் அதைக் கேட்டது தான் தாமதம், அபியின் முகம் மாறிப் போனது. அவன் பல்லை நறநறவென்று கடித்துக் கொண்டு, எழுந்து நின்றான். எந்த எதிர்மறையான விஷயங்களையும் அவன் கேட்க தயாராக இல்லை என்பது தெள்ளென புரிந்தது.

"எனக்கு தூக்கம் வருது. நான் போறேன். குட் நைட்" சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தான் அபி.

"உன்னால தான் அபி அண்ணா அப்செட் ஆயிட்டார். ரொம்ப நாளைக்கு அப்பறம், இன்னைக்கு தான், நம்ம கூட பேச உட்கார்ந்தார். நீ அவர, மூட் ஆஃப் பண்ணிட்டே." பிரியா அஜய்யை திட்டி தீர்த்தாள்.

"ஆனா, நான் உண்மைய தான சொன்னேன்? " வருத்தத்துடன் கேட்டுவிட்டு அனைவரையும் பாவமாக பார்த்தான் அஜய்.

"அஜெய் சொல்றதுல எந்த தப்பும் இல்ல அண்ணி. ஆதிமாமா, அபிக்கு நிச்சயம் சிம்மசொப்பனமா தான் இருப்பார். அதுல எந்த சந்தேகமும் இல்ல." உண்மையை ஆணித்தரமாக கூறினான் நந்தா.

"அபிக்கு மட்டும் தானா, நமக்கு இல்லையா?" கேட்ட ஷ்யாமை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.

"மாமா சொல்றது நிஜம் தான். ஆனா இந்த விஷயத்தில் அபியை நம்ம யாரும் தனியா விடக்கூடாது. நம்ம எல்லாரும் அவன் கூட இருக்கணும்." கூறினான் அஜெய்.

"நீ என்ன நெனச்சிட்டு இருக்க? அவன் நம்ம உதவிக்காக காத்திருப்பான்னு நினைக்கிறாயா? இந்த நேரம் அவனோடு "ஹார்வர்ட் மூலை" என்ன பண்ணணும்னு பக்காவா ப்ளான் பண்ணியிருக்கும்." ஒரு கம்பீர புன்னகையுடன் சொன்னான் ஷ்யாம்

அனைவரும், தங்களுக்கும் அது தெரியும் என்பது போல புன்னகைத்தார்கள். அது உண்மை தான். அபி, ஒரு விஷயத்தில் இறங்கிவிட்டால் அவனுடைய வெற்றியை தடுத்து நிறுத்த யாராலும் முடியாது. அதுவும் குறிப்பாக, அது யாழினி சம்மந்தப்பட்ட விஷயமாக இருக்கும் பட்சத்தில் அந்த கடவுளுக்கு மட்டுமே தெரியும், அவன் எந்த அளவிற்கு செல்வானென்று.

*ஆதிகேசவன் இல்லம்*

யாழினி என்னேரமும் அபியின் குடும்பத்தினரை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால்... அவளுடைய முகத்தில் புன்னகை தவழ யோசித்துக் கொண்டிருந்தாள். எப்படி ஒட்டு மொத்த குடும்பமும் ஒரே மாதிரியாக இருக்க முடியும்? மிக இனிமையாக... அழகான புரிதலுடன்... சந்தோஷமாக...

குறிப்பாக அபி. அவன் பார்வை, அவன் சிரிப்பு, அவனுடைய குரல், எல்லாமே மற்றவர்களிடம் இருந்து அவனை வேறுபடுத்திக் காட்டுகிறது. அவன் தன் பெயரை எப்படி அழைத்தான் என்று நினைத்த போது அவளுக்கு புல்லரித்துப் போனது. அப்படி ஒரு நபரை, வாழ்க்கையில் பெற்றதற்காக அவள் சந்தோஷப்பட்டாள். ஆனால், ஏனோ அவளுடைய உள்ளுணர்வு உணர்த்திக் கொண்டே இருந்தது. அவன் அவளுக்கு வெறும் நண்பன் மட்டும் அல்ல, அதற்கும் மேல், என்று. அப்போது தான் அவளுடைய ஃபோனை பற்றி அஞ்சலி கூறியது ஞாபகம் வந்தது. நந்தா சொல்லவில்லை, அபி அவளுக்கு ஒரு ஐ ஃபோனை பரிசாக அளித்தான் என்று? அவள் அறை முழுவதும் தேடத் தொடங்கினாள். அவள் அறை மொத்தமும் தலைகீழாகி போனது. ஆனால், அவள் தேடிய பொருள் அவளுக்கு கிடைக்கவில்லை. மிகுந்த சோர்வுடனும் வருத்ததுடனும் தூங்கிப் போனாள்.

இந்த அணைத்திலும் மிகவும் சந்தோஷமான நபர் யார் என்றால் அது மகாவாக தான் இருக்க முடியும். யாழினியின் நிலைமை, அவள் நினைத்தது போல இல்லை. விபத்து நடந்த போது, டாக்டர்களின் எச்சரிக்கைகளால் அவள் இடிந்து போனாள்.

ஆனால் இப்போது அவளை மிகவும் சாதாரணமாக பார்க்கும் போது, எல்லாமே சீக்கிரம் நல்ல நிலைக்கு மாறிவிடும் என்று அவர் நம்பினார். எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் யாழினி இருந்தாலும், அவரால் ஏதும் செய்துவிட முடியாது. அவர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு தடைக்கல், அவர்கள் ஆதிகேசவனுக்கு செய்து கொடுத்த சத்தியம் தான்.

அடுத்த நாள் காலை, வழக்கத்திற்கு மாறாக இருந்தது, ஆதிக்கு. யாழினி அவருடன் வழக்கம் போல் பேசவில்லை. அவள் இறுக்கமாய் இருந்தாள். அவள், அவர் மீது கோபமாக இருந்தாள். ஆதிகேசவன் அதை புரிந்து கொண்டவராய் அவளுக்கு எந்த தொல்லையும் கொடுக்காமல் விலகி இருந்தார். அவளுக்கு அந்த சிறு இடைவெளி தேவை என்பதை உணர்ந்திருந்தார். காலை உணவை முடித்துக் கொண்டு அலுவலகத்திற்கு புறப்பட்டார்.

ஏதோ இதற்காகவே காத்திருந்தவள் போல, யாழினி மகாவை இழுத்துக் கொண்டு தன் அறைக்கு ஓடினாள். மகாவை மெத்தை மீது அமர வைத்து தானும் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.

"அம்மா, உங்க அண்ணன் குடும்பம் ரொம்ப நல்லவங்க. அவங்கள, எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு. அவங்க இந்த மாதிரி இருப்பாங்கன்னு நான் நினைச்சு கூட பாக்கல. எனக்கு ரொம்ப சந்தோஷம். "

மகா அவளை விசித்திரமாக பார்த்தாள்.

"அவங்கள பத்தி நான் என்ன நினைக்கிறேன்னு உங்க கிட்ட சொல்லிட்டேன். அதே மாதிரி, இப்போ எனக்கு நீங்க அவங்கள பத்தி எல்லாத்தையும் சொல்லுங்க."

"இப்ப நான் என்ன சொல்லணும்?

"எல்லாத்தையும் ஒன்னு விடாம எனக்கு சொல்லணும். மாமா, மாமி எல்லார பத்தியும் சொல்லுங்க. அவங்க எப்படி இறந்தாங்கன்னு சொல்லுங்க.

மஹாவிற்கு புரிந்துபோனது. இதற்கு பிறகு யாழினி எந்த ஒரு சமாதானத்தையும் ஏற்கப்போவதில்லை. அவரும், எல்லாவற்றையும் சொல்லிவிட தீர்மானித்தார். எல்லாவற்றையும் என்றால், எல்லாவற்றையும் இல்லை...

தொடரும்...

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz