உறவு 29
நேற்றைய தினத்தைப் போலே இன்றும் கனியும் எழிலும் தனது அலுவலகத்திற்கு வந்திருந்ததை கொஞ்சம் கூட பிடிக்காமல் வேண்டா வெறுப்பாக கண்காணிப்புக் கேமிராவில் பார்த்துக் கொண்டிருந்த அசோக் அவர்கள் உள்ளே நுழைந்ததும் எதுவும் தெரியாதது போல தனது வேலையைப் பார்க்கத் துவங்கினான் .
கதவைத் தட்டாமல் உள்ளே கனி நுழைய எழில் வாசலிலே நின்று கொண்டான்.. அவன்மனம் அசோக்கிடம் பேசுமளவிற்கு இன்னும் பக்குவப்படவில்லை..அவன்மனதில் என்றோ அண்ணனுக்குரிய மரியாதையை இழந்திருந்தான்.
அசோக்கின் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தவள் அவன் தன்னிடம் பேச மறுக்கிறான் என்பதை புரிந்து,
" ஹூக்கும்... அத்தான் நீங்க உங்க டிரச லாண்ட்ரிக்கு போடுவீங்களா.. இல்லை நீங்களே அயர்ன் பண்ணுவீங்களா. உங்கள மாறியே வீராப்பா முறைச்சிட்டு இருக்கு " என அவள் கேலியாய் கேட்க, அவனோ இந்நேரம் இந்தக் கேள்வி அவசியம்தானா என்பது போல கோபப்பார்வையை விடுத்தான் .
" அதுக்கு உங்க பார்வை பதில் இல்லையே.. சரி விடுங்க.. ஆமா உங்களுக்கொரு நீயூஸ் கொண்டு வந்திருக்கேன்.. என்னனு கேட்க மாட்டீங்களா? " அவன் அதற்கும் பதில் பேசாமல் இருக்க,
" பார்த்தீங்களா.. நேத்து வரைக்கும் என்னை எவ்ளோ செல்லமா கொஞ்சிட்டு இருந்தீங்க..
எங்க அக்காவுக்கும் உங்களுக்கும் டிவோர்ஸ் ஆகப் போகுதுன்னு இனி இவகிட்ட பேசி என்ன இலாபம்னு ஒதுங்கிட்டிங்கல்ல அத்தான்..சாரி சாரி இனி உங்கள அத்தான்னு கூப்பிட்டா உங்களுக்கு கெட்ட கோபம் வந்து இங்க இருக்க திங்ஸ கூட தூக்கி எறிஞ்சிடுவீங்கல்ல." எனும் போது அவள் குரல் கேலியிலிருந்து சோகத்திற்கு மாறியிருந்தது..
அவள் கூற்றில் கொஞ்சம் மனம் சறுக்கினாலும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு " இப்போ உனக்கு என்ன பிரச்சனை. எதுக்கு வொர்க்கிங் டைம்ல என்னை டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்க.. " என கத்த ஆரம்பிக்க,
"போதும் நிறுத்துங்க அத்தான்.. கொஞ்சம் நானே என்னை கன்ட்ரோல் பண்ணி பேசிட்டு இருக்கேன்..ஆனா நீங்க இன்னும் பைத்தியம் மாறி கத்துனா என்ன செய்வேனு எனக்கே தெரியாது.. இப்போ என்ன சொன்னிங்க.. எனக்கு என்ன பிரச்சனைனா? நீங்க தான் பிரச்சனையே. கொஞ்சம் கூட யார் மேலயும் நம்பிக்கை வைக்காம..நீங்க மட்டும்தான் இந்த உலகத்துல உத்தமர்னு நினைக்கிறதுதான்.. அப்படி ஐசு அப்படி என்ன பண்ணா.. உங்க தம்பிகிட்ட கொஞ்சம் சிரிச்சு பேசுனா. அது தப்பா.. இதுவே உங்களுக்கு தம்பிக்கு பதிலா ஒரு தங்கை இருந்தா அவகூட அவ பேசுனாலும் நீங்க இப்படித்தான் சந்தேக படுவீங்களா? சொல்லுங்க.. அண்ணியும் அம்மாவும் வேற இல்லைனு எப்படி மறந்தீங்க..இதுதான் உங்க காதல்மேல.... உங்க மனைவி மேல வெச்சிருக்கிற நம்பிக்கையா.. நீங்க அவளை தப்பா நினைச்சிட்டிங்கனு அவளுக்கு தெரிஞ்சப்ப ஐசு மனசுக்குள்ள எவ்ளோ துடிச்சிருப்பா.. நீங்க இல்லாம எவ்ளோ வலிய அனுபவிச்சிருப்பா.. அதையெலாம்கூட புரிஞ்சுக்ககூட நீங்க முயற்சிக்கல இல்லை.. அன்னைக்கு நீயெல்லாம் ஒரு பொண்ணானு ஐசுவ கேட்டானு சொல்லிதான துளசிய அப்படி அடிச்சிங்க.. இப்போ நீங்க ஊரே அவளப்பார்த்து தப்பா பேசறமாறி கல்யாணமாகி கொஞ்சநாள்ள வீட்டை விட்டு போன்னு அனுப்பிட்டீங்கள்ள."என கோபமாய் சொல்ல,
அவனோ அதனை மறுக்கும் பொருட்டு இல்லையென்று தலையாட்டி " அவள நான் போக சொல்லல.. அவதான் என்னை விட்டுட்டு போயிட்டா.. " என்றான்..
" ஓ.. அப்போ அவ போயிட்டா.. போன உடனே பின்னாடியே டிவோர்ஸ் நோட்டிஸும் அனுப்பிருவீங்க.. அப்படிதான " என அவள் நக்கலாய் வினவ,
இவ்வளவு நேரம் கோபமாய் நின்றவன் தன் சக்தி அனைத்தும் வடிந்தவனாக
" சும்மா என்னை கேலி பண்றத நிறுத்தும்மா.. அது ஒன்னும் ஒரிஜினல் கிடையாது.. அவள எங்கிட்ட வரவைக்க நான் போட்ட பிளான்.. ஆனா அவதான் அதை உண்மைன்னு நினைச்சு என்கி்ட்ட இருந்து தப்பிச்சா போதும்னு சைன் பண்ணி என் நம்பிக்கைல கரிய பூசிட்டா.. அவளுக்கு நான் தேவையே இல்ல..என்னை தனியா தவிக்க விட்டு போயிட்டா.. " என பாவமாக சொல்ல,
அவனை ஏளனமாய் பார்த்தவள்" அப்போ அவகூட சேர்ந்து வாழனும்னு ஆசை.. ஆனா பண்ண தப்புக்கு மன்னிப்பு கேட்க கூடாது.. காயப்பட்டவங்களே உங்க கால்ல விழுந்து உங்க கூட சேர்ந்துக்கனும்..ஏன்னா உங்க ஈகோவ விட்றகூடாது அப்படிதான அத்தான்" என்றதும் அவன் தலை குனிந்து கொண்டான் .
உங்களுக்குத் தெரியுமா அத்தான்.. இந்த எல்லா பிரச்சனைக்கும் உங்களோட சந்தேக புத்தி தான் காரணம்.. அது ஒரு கேவலமான நோய் அத்தான்.. அதை மட்டும் விட்ருங்க..நீங்க ஐசுமேல உசிரையே வெச்சிருக்கிங்கனு எல்லார்க்குமே தெரியும். ஆனா உங்க உண்மையான காதல அந்த சந்தேக புத்தினால கலங்கப்படுத்திட்டிங்க.. .. அவ ரொம்ப பாவம் அத்தான். என்னதான் அவள தைரியமா காட்டிகிட்டாலும் நீங்க இல்லாம ரொம்ப உடைஞ்சிட்டா.. நேத்து நான் மட்டும் இல்லைனா அவ இந்நேரம் அந்த விசத்தக் குடிச்சிட்டு செத்துருப்பா... அப்படி நடந்துருந்தா நீங்க யார்கிட்ட உங்க ஈகோவ காமிப்பிங்க.. " என்று கண்களில் தேங்கும் கண்ணீரை மறைத்தவாறே அவள் கூற, இதுவரை அவள் பேசியதே அவனுக்கு போதுமானதாய் இருக்க அவள் கடைசியில் கூறிய வார்த்தையில் திடுக்கிட்டவனாய் , எழுந்து அவள் தோள்பற்றியவன்
" ஐசுக்கு என்னாச்சு..அவ நல்லார்க்கா தான.. ப்ளீஸ் கொஞ்சம் என்னாச்சுனு சொல்லேன்.. ஏன் அவ அந்தமாறிலாம் நடந்துக்குறா.. " என அவன் பதற,
" அது அவள சந்தேகப் படும்போதும், டிவோர்ஸ் கேட்கும்போதும் அவ இப்படி பண்ணிக்குவானு உங்களுக்கு தெரிலயா " என அவனை சுட்டெரிக்கும் பார்வையோடு கேட்டிட,
" அய்யோ அவள நான் சந்தேகப்படவே இல்லையே.. ஆத்திரத்துல அவள அடிச்சதுக்கு கதிர் வீட்டுக்கு போயிட்டாளேனு கோபத்துல இருந்துட்டேன்.. சத்தியமா எனக்கு அவமேல சந்தேகம் இல்ல.. என்னை நம்பு கனி " என அவள் கன்னம் ஏந்தியவாறு கேட்க,
" அப்போ அவ மேல இல்லைனா எழில் மேலயா.. உங்க அம்மா அப்பா ஸ்தானத்துல வெச்சிருந்த அவர் மேலயா " என்றதும் அவன் ஆமென்பது போல மௌனமாக, இவ்வளவு நேரம் இவர்களது சம்பாசனைகளை வாசலிருந்து கேட்டுக் கொண்டிருந்த எழிலின் முகம் கறுத்தது..
அவனது பதிலில் பத்ரகாளியாய் உருமாறியவள் அவன் வாய் பேச துவங்கும்போதே எதுவும் பேச வேண்டாம் என்பதுபோல கையை அவன் முகத்திற்கு நேராக காட்டியவள்
" அப்படி பர்ஸ்ட் சந்தேகப்படனும்னா ஐசுவும் எழிலும்தான் நம்ப ரெண்டு பேரையும் சேர்த்து வெச்சு சந்தேகப்படனும் " என்றாள் அவன்மீதான அறுவெறுப்புடன்,
அவன் புரியாமல் பார்க்க,
" இதோ நீங்க இப்போ என்னோட தோள தொட்டிங்க.. கன்னத்த தொட்டிங்க..இதோ எனக்கு இந்த பிரேஸ்லெட்ட வாங்கி உங்க கையாலயே போட்டுவிட்டிங்க.. பேபி.. பாப்புகுட்டினு ரொம்ப செல்லமா கொஞ்சுறீங்க.. பாசமா நேத்து ஜூஸ்லாம் ஊட்டி விட்டிங்க.. அன்னைக்கு ஹாஸ்பிடல்ல உரிமையா இனிமேல் மயக்கம் போடறமாறி நடிக்காதீங்கனு அதட்டினீங்க.. இதெல்லாம் உங்களுக்கு தப்பா தெரிலயா அத்தான்.. அப்போ அன்னைக்கு உங்களுக்கு நான் இருக்கேனு கட்டிப்பிடிச்சு ஆறுதல் சொன்னேனே..அப்படினா நான் தப்பானவளா. நம்ம உறவு தப்பானதா.. ஆனா அதையெலாம் பார்த்த அவரும் ஐசுவும் ஒருபோதும் உங்களையோ என்னையோ தப்பா நினைச்சு சின்னதா முகம்கூட சுழிச்சது இல்லையே.. ஆனா நீங்க மட்டும் ஏன் அவுங்கள தப்பா நினைக்கிறீங்க.. " என்றதும் அவனை யாரோ செறுப்பால் அடிப்பது போன்றிருந்தது.. கனியுடனான அவனது உறவு தந்தை மகள் உறவு போன்றது என்றால், ஐசுவுடனான எழிலின் உறவும் தாய் மகன் போன்ற உறவு என்பதை எவ்வாறு உணர மறந்தான்.. தன்னை விட சிறிய பெண்ணான கனிக்கு இருக்கும் பக்குவம் தனக்கு இல்லாமல் போனதை எண்ணி தன்னையே நொந்து கொண்டான்.. இனியும் பொறுக்காதவன் வாசலில் நின்ற எழிலின் கைகளைப் பிடித்து தன்னையே கன்னத்தில் மாறிமாறி அடித்துக் கொண்டே " என்னை மன்னிச்சிடுடா " என கெஞ்ச ஆரம்பித்தான்..
அவனது கையை அசோக்கிடமிருந்து விடுவித்துக் கொண்டவன் " முதல்ல அண்ணி வீட்டுக்கு வரட்டும்.. அதுக்கு பிறகு இதைப்பத்தி பேசிக்கலாம் அண்ணா" என்ற மறுநொடி அசோக் ஐசுவைக் காண சென்றிருந்தான்..
அவன் போன திசையையே பார்த்துக் கொண்டிருந்தவனை " ஹேய்.. நாம ஜெயிச்சிட்டோம் " என்று டோராவினைப் போல சந்தோசமாக பாடிக்கொண்டே ஆடியவாறு இருந்த கனியின் செய்கை நினைவுக்கு கொண்டு வந்தது..
அவளது கள்ளமில்லா குழந்தை உள்ளத்தால் மீண்டும் ஈர்க்கப்பட்டவன்
அவளையே இரசித்துக் கொண்டிருக்க, அப்போது வேண்டா வெறுப்பாக தனது தந்தையின் வேண்டுகோளும் நினைவுக்கு வர தனது பார்வையை மாற்றிக் கொண்டான்..
அவளுக்கும் தற்போதுதான் அவர்கள் பேசிக் கொண்டது நினைவு வந்தது.இருப்பினும் அசோக் மனது மாறிவிட்டால் அவர்கள் வீட்டிலும் இவர்களது காதலுக்கு பச்சைக் கொடி காட்டி விடுவார்கள் என்ற நம்பிக்கையால் அதனை சாதரணமாக எடுத்துக்கொண்டு அலுவலகத்திலிருந்து வெளியே வந்தனர்..
" திம்ஸூ.. நாம உங்க மாமாகிட்ட நம்ம லவ் பத்தி உண்மைய சொல்லாம்னு நினைக்கிறேன்.. அவரே தெரிஞ்சிட்டா பிரச்சனையாகும் தான.நீ என்ன சொல்ற.."
" ஹேய் நீங்க எம்மாமாவ பத்தி என்ன
நினைக்கிறீங்க.. என்னோட சின்ன கண்ணசைவ வெச்சே இந்நேரம் கண்டுபிடிச்சிருக்கும்.. அது நான் இன்னும் உண்மைய சொல்லலினுதான் கோபமா சுத்திட்டிருக்கு.. இன்னைக்கே சொல்லிறேன்.. இங்கிருந்து சீக்கரமா போலாங்க.. காலேஜ் முடியற நேரமாகிடுச்சு.. " என்றாள் கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி.
" உங்க மாமா ஒருவேளை என்னை பிடிக்கலைனு சொல்லிட்டார்னா என்னை மறந்துருவியா.. " என்றான் எழில்..
அவன் கண்களில் வழியும் காதலையும் அவளைப் பிரிந்து விடுவோமோ என்ற ஏக்கத்தையும் பார்த்தவள்
" எனக்கு உங்கள பிடிச்சிருக்குனா..மாமாக்கும் உங்களை பிடிக்கும்.. ஒருவேளை அதுக்கு உங்களை பிடிக்கலைனாலும் எனக்காக ஏத்துக்கும்" என்றாள் கதிரின் மீதான நம்பிக்கையால்..
இருவரும் சிரித்தமுகமாக வெளியே வர, அவர்களுக்காகவே காத்துக் கொண்டிருப்பது வாசலில் கோபமாக நின்று கொண்டிருந்தான் கதிர். அசோக் தன்னிடம் எதுவோ பேச வேண்டும் என்று அழைத்ததினால் தனது முக்கியமான வேலையை பாதியில் விட்டுவந்தவன் அலுவலகத்திற்குள் அவன் இல்லாது போக அசோக் வழக்கம் போல தன்னை அவமானப்படுத்தத்தான் அழைத்திருக்கிறான் என எண்ணி கோபத்தில் நின்றிருக்க, அவன் கண்ணில்பட்டதோ கைகளைக் கோர்த்தபடி வந்து கொண்டிருந்த எழிலையும் கனியையும்தான்..
நேற்று அவ்வளவு எடுத்துக் கூறியும் கல்லூரியை மட்டம் அடித்துக் கொண்டு அவனோடு வந்திருக்கிறாள் என எண்ணும்போது அவள்மீதான நம்பிக்கை எனும் கோட்டையில் விரிசல் விடத்துவங்கியது..
🍜🍜🍜🍜🍜🍜🍜🍜🍜🍜🍜🍜🍜
அவள் தன்னை விட்டு்ச் சென்றாலும் விடுதலை பத்திரத்தில் கையெழுத்திட்டிருந்தாலும் அவள் சாகத் துணிந்திருக்கிறாள் என்றதைக் கேட்டதும் அவனால் கோபத்தை இழுத்துப் பிடிக்க இயலவில்லை. அவளைக் காணவென்று கல்லூரிக்கு விரைந்து சென்றான்..
கல்லூரிப் பேருந்தில் ஏறி கண்களை மூடி அமர்ந்திருந்தாள் ஐசு.. தன்னை யாரோ உற்றுப்பார்ப்பதினைப் போல இருக்க, நிமிர்ந்து பார்க்க அவள் கண்ணீருக்கு காரணமானவன் அவளருகே நின்று கொண்டிருந்தான்..
இதேக் கல்லூரியில் அவன் தன்னை சமாதனப்படுத்த வேண்டும் என்பதற்காகவே பலமுறை முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்திருக்கிறாள்.. இப்போதும் அதைத்தான் எதிர்பார்க்கிறாள்.. ஆனால் அவனோ வாயைத் திறப்பேனோ என்பது போல எதுவுமே பேசாமல் அமைதியாகவே இருந்தான்.. அவனுக்கோ எங்கே அருகில் சென்றால் கத்தி கூச்சலிடுவாளோ.. தன்னை வார்த்தையால் கிளித்தெடுப்பாளோ என்கிற பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தான்..
அவள் இறங்க வேண்டிய இடமும் வந்தது.. அவளும் தனது வழியில் நின்றிருந்தவனை தள்ளி நிறுத்திவிட்டு இறங்கி அவள்பாட்டிற்கு சென்று கொண்டிருந்தாள்.. அவனும் வேறு வழியின்றி அவள்பின்னே சென்றான்..
வீட்டிற்குள் நுழைந்ததும் " என்ன ஐசு.. இன்னைகக்கும் கனி உங்கோட வரலியா.. வயசுப் பொண்ணு தினமும் லேட்டா வந்தா நல்லாவா இருக்கும் .. எல்லாம் கதிர சொல்லணும்.. அவனை ஒதைச்சா அவ அடங்கிடுவா " என்று புலம்பியபடி இருந்த தேவி பின்னால் நின்றிருந்த அசோக்கை கண்டதும் வாய் நிறைய புன்னகையோடு
" வாங்க மாப்பிள்ளை.. உள்ள வாங்க..என்னங்க வெளிய வாங்க " என்ற சந்தோசத்தில் தலைகால் புரியாமல் மனதுக்குள் துள்ளிக்குதித்தார்.. எங்கே தன் மகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுமோ என்கிற பயத்தில் இருந்தவர்களுக்கு அவனின் வருகை மகிழ்ச்சியைத் தந்தது. கந்தனும் மனதுக்குள் அவன்மீது வெறுப்பிருந்தாலும் கோபத்தைக் குறைத்துக் கொண்டு " வாங்க " என்று வரவேற்றார்..
தயங்கியவாறே உள்ளே நுழைந்தவனக்கு அவர்களின் வரவேற்பு அவனது குற்ற உணர்ச்சியினை அதிகப்படுத்தியது..
" மாமா ஐசுவ வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்னு " என ஆரம்பிக்கும்போதே உள்ளறையில் எதுவோ படாரென்று உடைந்து நொறுங்கிய சத்தம் காதைக் கிழித்தது.. பயத்தில் அவன் எச்சிலை முழுங்க
" உள்ள போய் பேசுங்க மாப்பிள்ளை " என்று கூறியவர்கள் அவர்களுக்கு தனிமை வழங்க வேண்டி கடைக்கு செல்வதாக கூறி வெளியே சென்றனர்.
சாதாரணமாக போடும் சண்டைக்கே அவளை சமாதனப்படுத்த ஒரு வாரம் ஆகும் என்ற நிலையில் அவளோ பலவகையில் அவன்மீது கொலைவெறியில் இருக்கிறாள்.. அவளை எப்படி சமாளித்து வீட்டிற்கு அழைத்துச் செல்வது என்று நினைக்கும் போது தன்னிலையை எண்ணி அவனுக்கே பாவமாக இருந்தது .
அவன் அமர்ந்த இடத்தை விட்டு நகராமல் இருக்க அவனருகே வந்தவள் அவன் வேலைக்கு ஆகமாட்டான் என்பதை உணர்ந்து ஒரு கையால் கொத்தாக அவன் முடியைப் பிடித்தவள் மற்றொரு கையில் வைத்திருந்த ஹாக்கி ஸ்டிக் கொண்டு அவனை அடித்து துவைத்தவாறே" இனிமே யாராச்சும் எங்கூட பேசுனா சந்தேகப்படுவியா .. லூசு மாறி கோபப்பட்டு கிறுக்கு வேலை செய்வியா .. சொல்லு செய்வியா.. இனிமேல் ஒழுங்கா இருப்பியா " எனக் கேட்டுக் கொண்டே இருந்தவள் அவள் அடியால் அவனது சிவந்து கன்றிப்போன முகத்தைப் பார்த்தபின்னரே குச்சியைத் தூரப் போட்டாள்.. அவள் அடிக்க அடிக்க " வலிக்குது ஐசு.. சாரி ஐசு " என வலியால் கத்திக் கொண்டே இருந்தவன் அவள் அடியை நிறுத்திய பிறகே அமைதியாக சோபாவில் அமர்ந்தான்..
பொசசிவ்நஷ்க்கும் சந்தேகத்திற்கும் நூலளவுதான் வித்தியாசம் ..ஆனால் அந்த அளவைத் தாண்டியதால்தான்
தங்களுக்குள் பிரச்சனை என்பதை நன்றாக உணர்ந்திருந்தாள் ஐசு..
மற்றவர்கள் இவன்மீது குறையை மட்டுமே கண்டிட, காதல்கொண்ட கண்களுக்கோ குறையிலும் நிறைகளே தெரிந்தன. அவனைப் பற்றி முழுதும் உணர்ந்தவளால் அவன் தன்னிடம் மட்டுமே உரிமையை எதிர்பார்க்கிறான் என்பதை புரிந்துகொள்ள கஷ்டமாக ஒன்றுமில்லை.. ஆனால் அவனுக்கு நிதர்சனத்தை உணர்த்தியாக வேண்டிய கட்டாயம் அவளுக்கு இருந்தது.
எத்தனையோ தடவை தந்தையோ தாயோ அடித்தாலோ திட்டினாலோ சிறிதுநேரம் கோபித்துக்கொண்டு பிறகு மீண்டும் அவர்களிடத்திலே ஆறுதல் தேடுவோம்.. யாரும் அவர்கள் இனி நமக்கு தேவையில்லை .. விவாகரத்தைப் போல உறவை ரத்து செய்வதில்லை.. அதையே தான் தன் கணவனிடத்திலும் தேடினாள்.
" சாரி ஐசு.. " என அவன் ஆரம்பிக்க, அவனை பேச வேண்டாம் என சைகை செய்தவள் அலைபேசியை எடுத்து கல்லூரிக்கு 4 நாட்கள் விடுப்பு தெரிவித்தாள்..
" நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது ..
உனக்கு 4 நாள்தான் டைம்.இங்கையே தங்கி அதுக்குள்ள என்னை சமாதனப்படுத்திட்டா அங்க வரேன்.. இல்லைனா கடைசி வரை இங்கையே இருந்திரேன் " என்றவுடன்
" என்ன ஐசு.. இந்த வீட்ல நான் எப்படி.. இது கதிரோட " என்கும்போதே அவள் முரைக்க,
" நான் இருக்கேன்.. ஐசு.. உனக்காக.. " என்றான்
" நீ இங்க இருக்குறது முக்கியமில்ல.. ஆனா கதிர் மாமாக்கிட்டவும் எங்க அப்பாகிட்டவும் நல்ல பேர் வாங்கனும்.. இல்ல என்னால கதிரோட பேச முடியாது.. நீயும் அவங்கிட்ட பேசக்கூடாதுன்னு மாறி கன்டிசன் போட்டா வாசல் அந்தப்பக்கம்தான் போயிட்டே இருக்கலாம்.. " என ஐசு சொல்லி முடிக்கவும் போதையில் தள்ளாடியபடியே கதிர் உள்ளே வரவும் சரியாக இருந்தது..
அதனைப் பார்த்த ஐசுவோ சங்கடமாக அசோக்கைப் பார்க்க அவனோ கதிரைத்தான் முறைத்துக் கொண்டிருந்தான்.
தாமதத்திற்கு மன்னிக்கவும் மக்களே..😥😥😊
Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz