உறவு 16
மருத்துவர் நம்ப முடியாத வகையில் குண்டு ஒன்றினைத் தூக்கிப் போட்டு சென்றிட அனைவரும் தலைகுனிந்த படியே உள்ளே சென்றனர்..
முதலில் சுயநினைவடைந்த துளசி மெதுவாக " அபி.. கனியோட அழகே அவ முடி தான்டா.. அதை ஆப்ரேசன் பண்ணும் போது வெட்டி மொட்டையடிச்சிட்டா அவளால தாங்க முடியாதுலடா " என சோகமாக சொல்லிட அதற்கு அபியோ " ஏய் ப்பீல் பண்ணாதடா.. அவ மண்டைல இருக்கிற களிமண்ண வெளில தூக்கிப் போட இதெல்லாம் அவசியம் தானடா.. நர்ஸ் நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க" என அவனும் அதேக் குரலில் கூறிட இதுவரை மயக்கமடைந்தவள் போல நடித்துக் கொண்டிருந்தவள் அதை நம்பி மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தாள்..
அனைவரும் கொலைவெறியுடன் அவளை முறைத்துக் கொண்டிருந்தனர்..
' அச்சோ.. நல்லா மாட்டிக்கிட்டனா.. அந்த டாக்டர கூட சமாளிச்சிட்டேன்.. இதுங்க என்னை சும்மா விடாதே 😯 ' என பயந்தவாறே " ஹிஹி.. நைட் டெஸ்டுக்கு விடிய விடிய படிச்சு தூங்கவே இல்ல.. அதான் கொஞ்சமா கண்ணசர்ந்துட்டேன் 😫😟😥" என உதட்டைப் பிதுக்கியவாறே கூற அவளின் குழந்தைத் தனத்தினை உணர்ந்து யாருக்கும் திட்ட மனம் வரவே இல்லை.. அவர்களுக்கும் தெரிந்துவிட்டது அனைவரின் கவனத்தையும் திசை திருப்பத்தான் இந்த நாடகம் என்று..
அனைவரும் அவளை செல்லமாக முறைக்க, துளசி அருகிலிருந்த சிறிய தலையணையை எடுத்து அடிப்பது போல பாவனை செய்ய அதனை பி்டுங்கி தூக்கி எறிந்துவி்ட்டு கனி படுத்திருந்த கட்டிலில் அமர்ந்து கனியின் கைகளை தனக்குள் பிடித்துக் கொண்டு " கனிம்மா... இனிமே இப்படி பண்ணாதடா.. அதைத் தாங்குற சக்தி எனக்கில்ல " என்று கிட்டத்தட்ட அழுகுரலில் கூறவும் " சாரி மாமா.. " என்றவள் எழுந்து அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்..
அவர்கள் இருவரும் உணர்ச்சிக் கடலில் மூழ்கிக் கொண்டிருக்க அடியையும் வாங்கிக் கொண்டு தோழியின் நிலைகண்டு துடித்துக் கொண்டும் இருந்தவளை தனது அண்ணனைத் தவிர வேறுயாரும் நினைக்கவே இல்லையே என்ற வருத்ததில் வெளியேறிட அவளை அறிந்த அபியும் எதுவும் பேசாமல் அவளைப் பின் தொடர்ந்தான்..
செவிலியர் " சார் இந்தாங்க பில்..இதைக் கௌன்டர்ல பே பண்ணிருங்க " என்று கதிரிடம் சீட்டை நீட்ட அவனும் உடனே வருவதாக கூறிவிட்டு வெளியேறினான்..
அறையை விட்டு வெளியே வந்த துளசியை கைப்பற்றி இழுத்து " துளசி.. என்னாச்சுடி.. இன்னும் வலிக்குதா.. அவன சும்மாவிட்டுடேனு நினைக்காதடா.. அவன் உன்னை அடிச்சதுக்கு கண்டிப்பா அவன் பீல் பண்ணியே ஆகனும்" என்றவனை
" விடு அபி..என்ன இருந்தாலும் அவுங்க கனியோட ரிலேசன் ஆயிட்டாங்க. நானும் ரொம்பதான் பேசிட்டேன் " என சோகமாக சொல்லவும் " அப்போ கதிர் உனக்காக அவங்கோட சண்டை போடலைன்னு ப்பீல் பண்றியாடி.. " என்றதும் கண்களிலிருந்து தானாக கண்ணீர் சுரந்தது..
" எதுக்குடி வீனா அழுகுற.. உனக்காக நான் இருக்கும்போது நீ ஏன் மத்தவங்கள நினைச்சு வருத்தப்படற. உன்னோட கவனம் எப்போதும் படிப்புல மட்டும்தான் இருக்கனும்.. மத்தத பத்தி யோசி்க்க இன்னும் நிறைய வருசம் இருக்குடி.. என் துளசி எப்பவும் நிதானமா.. புத்திசாலியா.. தைரியமா எந்த சூழ்நிலையையும் தனக்கு சாதகமா மாத்திக்குவா.. இப்படி சாதாரண பொண்ணு மாறி கண்ணை கசக்கிட்டு நிக்க மாட்டா.. " என்று அபி தனது தங்கையை நினைத்து மிகவும் வருத்ததுடன் கூற அவன் தலையில் கொட்டிவிட்டு
" துளசி ஒன்னும் சாதாரண பொண்ணு கிடையாது. அவ இனி எதுக்கும் அழ மாட்டா.. மிஸ்டர்.சோன்பப்டி " என்றாள் கண்களைத் துடைத்துக்கொண்டு..
அவர்கள் இருவரும் வருத்தமாக பேசிக் கொண்டிருப்பதைத் தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த கதிருக்கும் வருத்தமாக இருந்தது.. ஆனால் துளசிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் ஒரு செயலைக் கூட செய்யக் கூடாது என்பதால் நண்பனின் வெறுப்பைச் சம்பாதித்தாலும் பரவாயில்லை.. அவள் தங்கை வாழ்வு நலமாக அமைய வேண்டுமென என அமைதி காத்தான்..
தற்போது அந்த அறையில் கனி, ஐசு மற்றும் அசோக் மட்டுமே இருக்க அவர்கள் இருவரையும் கசக்கி ஜூஸ் பிழிவது போல நினைத்துக் கொண்டே அவர்களை முரைத்துப் பார்த்தாள்.
அசோக் அவளருகே வந்து தலையை நீவியவாரே " பாப்பா ஆனா இனிமே இப்படி பண்ணாதடா.. நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா " என்றதும் அவன் கையைத் தட்டிவிட முயல அவனோ அவள் எண்ணம் அறிந்து தோளினை அழுத்திப் பிடித்தான்..
அந்த நேரம் வெளியே சென்ற மூவரும் உள்ளே வந்திருந்தனர்..
கதிரும் அபியும் அவனை நெருங்குமுன்பே அவனை வேகமாக தள்ளிவிட்டவள் ஓங்கி வயிற்றில் குத்தினாள்..
" இது என் துளசிய அடிச்சதுக்கு " 👊👊
"இது என் அபியோட சண்டை போட்டதுக்கு 👊👊 "
" கடைசியா இது என்னை பாப்பானு கூப்டதுக்கு 👊👊 " என்று வேகமாக குத்தினாள்..
"கனி "
" கனிமொழி "
" கனி "
" கனிம்மா " என அசோக்கைத் தவிர அனைவரும் அவளை அதிர்ச்சியில் அழைத்திட, அவளோ அவர்களின் அதிர்ச்சி முகத்தை பார்த்த பிறகே தான் செய்த காரீயத்தின் வீரியத்தை உணர்ந்தாள்..
' கொஞ்சம் ஓவராத் தான் போயிட்டமோ 😰😰 ' என எண்ணி அசோக்கின் கசங்கிய சட்டையை நீவி
" சாரி " என்று கூறிவிட்டு ஓடி கதிரின் பின்னால் மறைந்து கொண்டாள்..
" மாமா.. இன்னும் கொஞ்ச நேரத்துல அப்பா அம்மா வந்துருவாங்க.. அதுவரைக்கும் என்னை காப்பாத்து மாமா " என அவனின் காதில் இரகசியமாய் கூறிட அவளை இழுத்து முன்புறம் நிறுத்தியவன்
" உன்மேல கை வைக்கிற தைரியம் அவனுக்கில்லடா கனிம்மா " என்றான் கனியின் செய்கையால் சிரித்துக் கொண்டிருந்த அசோக்கினைப் புரியாமல் பார்த்து..
அசோக் ஐசுவிற்கு சொந்தமான அனைத்தும் அவனுக்கும் சொந்தமென நினைப்பான்.. அதுவும் கனி என்றால் அவனுக்கு கொள்ளைப் பிரியம். அவளை நேரில் கண்டதில்லையே தவிர அவளைப் பற்றி அனைத்துமே அவனுக்கு தெரியும்.. அவள் செய்யும் சேட்டைகளையும் குறும்புகளையும் கேட்டறிந்தவனுக்கு அவள் குழந்தையாகவே தோன்ற அவன் மனதில் பாப்பாவாகவே அவளை உருவகம் செய்து கொண்டான். ஆனாலும் ஏனோ கதிருடன் அவள் ஒட்டிக் கொண்டே திரிவது மட்டும் வழக்கம் போல அவனுக்குப் பிடிக்கவில்லை..
இங்கிருந்த
யாருக்கும் அங்கே பாதியில் விட்டுச் சென்ற சண்டையை தொடர மனமில்லை.. கனிக்காக அவளைச் சார்ந்தவர்கள் துடித்ததில் ஒரு நியாயம் இருந்தது..? ஆனால் இதுவரை அவளைக் கண்டிராத அசோக்கின் பதற்றம் ஆச்சர்யத்தைத் தந்தது.. அனைவரும் யாருடனும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தனர்..
அசோக் கதிரைக் கண்டதும் இதுவரை ஒதுங்கி ஓரமாக நின்றிருந்த ஐசுவை இழுத்து தன்னருகே நிறுத்திக் கொண்டான்..கதிரோ நீ செய்யும் செயல் என்னை பாதிக்கவில்லை என்பது போல ஏளனமாக புன்னகைத்தான்.
யாரும் எதற்கும் வாயைத் திறக்கக் கூடாது என்பதுபோல ஊமையாக நின்றிருந்தனர்.
சில நிமிடங்களில் கந்தனும் தேவியும் பதற்றத்துடன் வந்திட அவர்கள் பின்னால் செல்வராஜும் சாரதாவும் வந்தனர்..
நிலையை சீராக்க அபி நடந்தவற்றை பெற்றோர்களிடம் எடுத்துரைத்தான்.
பெரியவர்கள் அனைவரும் ஊமையாகி என்ன சொல்வதென்று தெரியாமல் இருக்க இளைய தலைமுறையினர் தலைகுனிந்தனர்..
செல்வராஜ் தனது பையனின் இந்த இழிவான செயலை நம்ப முடியாமல் தவித்தார். கந்தனும் தேவியும் நீண்ட நாட்களுக்கு பிறகு, அழுதுகொண்டிருந்த தங்கள் மகளை பார்த்தனர்.. அவளை திட்டவோ அடிக்கவோ இவர்களுக்கும் முடியவில்லை..
கனி பொறுப்பாக
" ஐயோ.. இப்போ என்ன நடந்துச்சுனு எல்லாரும் ஒரே சோகமாக இருக்கிங்க.. அதான் எல்லாரும் மீட் பண்ணியாச்சுல.. அடிக்க வேண்டியவுங்கள அடிச்சு திட்ட வேண்டியவுங்கள திட்டி .. மன்னிக்கிறவுங்கள மன்னிச்சு ஒன்னு சேர வேண்டாமா.. என்னப்பா ஹிந்தி சீரியல் மாறி எல்லோர் பேஷையும் குளோஸப்ல அரை நிமிசத்துக்கு காமிச்சிகிட்டு சன்டிவி சீரியல் மாறி டக்குனு முடிச்சு விடுங்கப்பா.. பசிக்குதுல்ல
" என்று ஐசுவை பார்த்தவாரே கூறவும் அவள் பயத்துடன் அசோக்கைப் பார்த்தாள்..
ஆனால் ஏற்கனவே அசோக் தனது தந்தைக்கு பயந்து பொட்டிப் பாம்பாய் அடங்கியிருந்தான்..
செல்வராஜ் கந்தன் அருகே சென்று " என்னை மன்னிச்சிடுங்க சார்.. என் பையன்மேலயும் என் மருமக மேலையும் வெச்சிருந்த நம்பிக்கையால மேற்கொண்டு அவுங்கள விசாரிக்காம இருந்திட்டேன்.. ஆனா நடந்தத யாராலும் மாத்த முடியாது.. அதுனால எனக்காக அவுங்கள பெரிய மனசு பண்ணி ஏத்துக்கோங்க.. சம்பந்தி " என்று அவர் தோள் தொடவும் கந்தனும் ஆதரவாக அவர் கைகளைப் பிடித்துக் கொண்டார்..
பிள்ளைகள் செய்யும் தவறினால் தலைகுனிவதும் சில சமயம் கொலைவெறி கொள்வதும் அதே சமயம் அவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்வதும் பெற்றோர்கள் தான்.
( அடுத்து என்ன? ஐசு பெற்றோரிடம் அழுது புரண்டு காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க, அசோக்கோ அவளது அருகே எந்த உணர்ச்சியும் காட்டாது நின்று கொண்டிருந்தான்.. மற்றவர்கள் அனைவரும் பார்வையாளர்களாகினர். )
செல்வராஜோ ' உன் மேல நம்பிக்கை வெச்சதுக்கு நல்ல மதிப்ப வாங்கிக் கொடுத்துட்ட ' என்பது போல் அசோக்கைப் பார்க்கவும் அவமானத்தால் கூனிக் குறுக, ஐசுவோ அந்நிலையிலும் அவனுக்கு ஆதரவாக அவன் வலது கையை இறுக்கமாக பற்றி ' எல்லாம் சரியாகிடும் ' என்பது போல கண்சிமிட்ட அவனும் அவளைப் பார்த்து புன்னகைத்தான்..
இதைக் கண்ட
அங்கிருந்த அனைவருக்கும் அவர்களது காதல் புரிந்திட இதற்கு மேல் தாங்கள் என்ன செய்ய என்று அவர்களின் மீதிருந்த கோபத்தினை விடுத்தனர்.
கனியைப் பார்த்ததுமே செல்வராஜிற்கு பிடித்துவிட அவள் அருகே சென்றவர் " நீங்க சொன்னமாறியே மன்னிச்சு விட்டுட்டேன் பெரிய மனுஸி.. இப்போ சந்தோசம்தானே.. " என்றார் புன்னகைத்தவரே.. அவளுக்கும் அவரைப் பிடித்துவிட.. " அவ்வ்... நீங்க ரொம்ப ஸ்டைலா இருக்கிங்க.. நல்லவனுக்கு நல்லவன் படத்துல வர அப்பா ரஜினி சார் மாறி இருக்கிங்க. " என்று அவரது கோட் சூட்டைப் பார்த்துக் கூறவும் இந்த சினிமா பைத்தியத்த என்ன பண்ணுவது என எண்ணி அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்..
இங்கு நடப்பது அனைத்தையும் இதுவரை வாசலுக்கு வெளியே ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த எழில் பிரச்சனை சரியானதும் உள்ளே வர கனிக்கு இதயம் வழக்கத்தை விட ' தக்.தக்.தக்.தக் ' என வேகமாக துடிக்க ஆரம்பித்தது.
துளசியோ அவன் இங்கேயும் வந்துவிட்டானா என எண்ணி தனது கை முஷ்டிகளை முறுக்க ஆரம்பித்தாள்.. அவனை எப்படியாவது கனியின் வாழ்வை விட்டு துரத்த முடிவு செய்தாள்.
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
தாமதத்திற்கு மன்னிக்கவும்.. 😟😊😊
Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz