உறவு 14
கனியிடம் பேசிவிட்டு வந்தவன் நீண்ட நேரம் யோசனையாக இருக்கவே " என்னாச்சு மச்சான்.. " என்று தேவா கேட்க..
பெருமூச்சு ஒன்றினை விட்டவன் " கனி என்னை பார்க்குற பார்வையே வேறயா இருக்குடா.. " என்றதும் " என்னடா. அப்போ நம்மள கண்டுபிடிச்சுட்டளா ? " என்று பயத்துடன் கேட்க,
" அதில்லடா. அந்தப் பொண்ணு என்னைப் பார்த்து வெட்கப்படறாடா.. ஒருவேளை என்னை காதலிக்க ஆரம்பிச்சிட்டாளோனு நினைக்கிறேன் " என்றான் எழில்
அவன் முகத்தை அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திருப்பிப் பார்த்த பின்பு தேவா " பார்த்த உடனே உன் அழகுல மயங்குற அளவுக்கு உங்கிட்ட ஒன்றுமில்லையேடா.. பின்ன எதைப் பார்த்து உன்னை லவ் பண்ணிருக்கும் " என்றிட அவனை முறைத்தவன் " நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன்டா. மொக்க போடாத.. இது அண்ணிக்கு தெரிஞ்சா ப்பீல் பண்ணுவாங்கடா.. அதான் என்ன பண்றதுன்னு யோசிக்கிறேன் "
" இதுல யோசிக்க என்னடா இருக்கு.. அந்தப் பொண்ண பிடிச்சிருந்தா லவ் பண்ணு. இல்லைனா விட்டுடு.. அவ்ளோதான் சிம்பிள். சரி இப்போ சொல்லு .. அந்தப் பொண்ண பிடிச்சிருக்கா இல்லையா?" என்றதும்
எதையும் யோசித்துப் பார்த்து பேசாத வெள்ளந்தியான
குழந்தைப் பேச்சு..தன்னைப் பார்க்கும் போது பால்நிறத்திலான
கொளுகொளுவென்றிருந்த கன்னங்கள் சிவக்கும் படியான சிறு வெட்கம்தான் அவன் நினைவில் வந்தது.
" அழகாதான் இருக்கா.. ஆனா லவ் ப்பீல் வர்லியேடா..ஆனா அதை அவகி்ட்ட சொன்னா வருத்தப்படுவாளே.. பேசாம இனி அவகிட்ட பேசாம டிஸ்டன்ட் மெயின்டைன் பண்ணலாம்னு நினைக்கிறேன்.. நீ என்ன சொல்ற " என்று தேவாவை கேட்க அவனோ எழில் பேசுவதைக் கவனிக்காமல் வேறு எதையோ யோசித்துக் கொண்டிருந்தான்..
' இவன ' என மனதிற்குள் கடித்துக் குதறியவன் அவன் மூக்கிலே ஓங்கி குத்த சுயநினைவுக்கு வந்தான்..
" ஏன்டா.. "
" நான் பேசறத கூட கவனிக்க முடியாம அப்படி என்னடா யோசனை.. "
" இஇஇஇ.. "
" அடச்சீ சொல்லு. "
" அது என்னனு தெரிஞ்சா நீயே என்ன பாராட்டுவ.."
அவன் சொல்லாமல் இழுக்கவும் எழில் தன் கைகளை முறுக்க " டேய் கூல்.. சொல்றத பொறுமையா கேளு.. நீ ஏன் கனிய பிடிக்கலைனு சொன்னனு எனக்கு தெரிஞ்சிடுச்சு.. " என்றான் தனது முப்பது பல்களையும் காட்டியவாறு..
" எதுனால "
" அதை நான் உங்கள் காதில்தான் சொல்லுவேன் " என்று பழைய கதாநாயகியைப் போல பேசியவன் எழிலின் காதோராமாய் மெதுவாக " ஏன்னா நீ கனியோட பிரண்ட் துளசியதான் விரும்புற " என்றான்..
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
மாலை வகுப்பு முடிந்தபிறகு கனியும் துளசியும் தங்களுக்கு தேவையான உடைகளை எடுத்து வைத்துக் கொண்டு விடுதிக்கு வெளியே காத்துக் கொண்டிருந்தனர்..துளசிக்கு எழிலுடன் கனியைப் பார்த்ததும் முன்பு அவன் தான் அழும்போது கைக்குட்டை கொடுத்ததும் அடுத்தநாள் அவனின் நண்பன் தன்னிடம் வம்பிழுத்ததும் நியாபகம் வந்தது.. அந்த பொறுக்கிகளிடம் கனி மாட்டிக் கொள்ளக் கூடாது என தனது இஷ்ட தெய்வமான முருகனை வேண்டிக் கொண்டிருந்தாள்..
கனி மெதுவாக துளசியின்புறம் அமர முயற்சிக்க அவள் எழுந்து நின்று கொண்டாள்..
' இப்ப எதுக்கு நம்ம மேல கோபமா இருக்கா.. நான் தான அவமேல கோபப்பட்டு பேசாம இருந்தேன்.. அப்போ அவதான என்னை சமாதனப்படுத்தனும்.. அதும் நான் தான பர்த்டெ கேர்ள்.. கொஞ்சம் இரக்கம் காட்டலாம்ல.. ஹூம்.. சரி.. யாரும் நம்மள பார்க்கல.. நாமளே சாரி கேட்டு அவர் பத்தியும் சொல்லிடலாம் ' என நினைத்தவள் துளசியின் புறம் திரும்பிய போதுதான் அவளுக்கு அபியும் கதிரும் வந்தது தெரிந்தது..
தன்னைப் பார்த்து சிரித்த கதிரின் முகம் துளசியைக் கண்டதும் இறுகியதைக் கண்டவள் அவர்களுக்குள் பிரச்சனை துவங்கி விட்டதை அறிந்து கொண்டாள். கதிரிடம் சென்றவள் " மாமா.. இன்னைக்கு தான நானும் அபியும் சமாதானம் ஆனோம்.. நான் அவுங்கோட வரேனே " என்றதும் துளசியும் அபியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
கதிர் மறுப்பாக தலையாட்டவும் " ப்ளீஸ் மாமா.. பர்த்டெ கேர்ள் பாவமில்லையா .. எனக்காக.. " என்று கெஞ்சவும் வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டான்.
துளசிக்கு கனி மறைமுகமாக தனது காதலை ஏற்றுக் கொண்டதை தெரிவித்ததால் மகிழ்ச்சியாக கதிரின் அருகே வர, அவளை அடுத்த அடி எடுத்து வைக்க விடாதவாறு கதிர் அவளை முரைத்துப் பார்க்க உம்மென்று முகத்தை வைத்துக் கொண்டாள்.
அவனுக்கு இது சாதாரணமாக இருக்கலாம்..ஆனால் அவளுக்கு இது மூன்று வருட தவத்திற்கு கிடைத்த வரம்.. எங்கே தன்னை வண்டியில் ஏற்றிக் கொள்ள மாட்டானோ என பயத்தில் நகத்தைக் கடிக்க ஆரம்பித்தாள்.. அபிக்கு தனது தங்கைக்கு பரிந்துபேச முடியாத நிலை..
கனிக்கு துளசியைப் பார்க்க பாவமாக இருந்தது.. கனியின் முகம் வாடியதும் அதை தாங்காத கதிர் வா என துளசியை கண்ணசைக்க அவள் மிகுந்த உற்சாகத்துடன் வண்டியில் அமர்ந்தாள்.
மெதுவாக அவர்கள் பயணம் தொடர அதை இன்னும் தாமதமாக்கும் எண்ணத்தில் பானிப்பூரி கடை துவங்கி வழியில் தோன்றும் அனைத்துக் கடைகளிலும் கனி எதாவது வேண்டும் என்று அடம்பிடிக்க அதைக் கடுப்பான கதிர் "நீங்க வாங்குங்க நான் வெளிய வெயிட் பண்றேன்" என மரத்தடியில் ஒதுங்க கனிக்கு துணையாக அபி செல்வதாக வேகமாக உள்ளே சென்றிட கதிரும் துளசியும் தனித்து விடப்பட்டனர்.
இந்த சந்திப்பு இவர்களை பேசு வைப்பதற்காக வேண்டுமென்றே அவர்கள் உருவாக்கிவிட்டுச் சென்றதுதான் என இருவருக்குமே நன்றாக தெரிந்தது.
அபியும் கனியும் அவர்களுக்குத் தெரியாமல் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள மரத்திற்கு பின்னே ஒளிந்து கவனித்துக் கொண்டிருந்தனர்.
" என்ன அவுங்க பேசிக்கவே மாட்டிங்கறாங்க. சண்டையாச்சும் போட்டாதான சுவாரஸ்யமா இருக்கும் " என எட்டிப் பார்த்துக் கொண்டே கேட்க அவளுக்குப் பின்னே நின்ற அபி அவள் முதுகை சொரிந்தான்.
அதில் கடுப்பானவள்
" ம்சும் என்ன "என எரிச்சலாய் கேட்க " இப்போ நீ என்ன வேலை பார்த்துட்டிருக்கேனு தெரியுதா " என கேவலமாக கேட்க..அதன் அர்த்தம் புரிந்தவள் " இஇஇ. நான் இல்ல தம்பி.. நாம .. ஏன் பிரிச்சுப் பேசற " என்று அவன் தோளில் கைபோட, "அடியேய் அவ எனக்கு தங்கச்சிடி. " என அலுத்துக் கொள்ள,
" தங்கச்சிதான் நான் இல்லைன்னு சொல்லலியே.. ஆனா மிஸ்டர் கதிர்வேல் எனக்கு மாமாவாச்சே தம்பி.. அப்போ இதுல என்மேல தப்பில.. உன்மேலதான தப்பு " என அழகாய் பொறுமையாய் கூற
அபி தன் நிலையை எண்ணி தலையலடித்துக் கொண்டான்..
" என்ன இப்படி அலுத்துக்கற.. உன் தங்கச்சிக்கு நீ ஹெல்ப் பண்ணாதான்ன உன் சோன்பப்டி மேட்டர்ல நாங்க எதும் பண்ண முடியும் "
" ஏய்.. அப்படி பிராபளம்லா இல்ல எனக்கு " என்றவன் "ஏய் உனக்கெப்டிடி தெரியும் " என்றான் அதிர்ச்சியாக
" இது பெரிய சிதம்பர இரகசியமா. டைரி எழுதரதே அடுத்தவங்க படிக்கறதுக்குத் தான் அய்யாச்சாமி.. டென்சன் ஆகாம வேடிக்கை மட்டும் பாரு " என்றவள் தன் வேலையைத் தொடர்ந்தாள்.
ஆனால் அபியினால் பொறுமையாக இருக்க முடியவில்லை. எங்கே கதிர் கோபப்பட்டு துளசியை அடித்து விடுவானோ என்கிற பயத்தில் அவர்களிடம் செல்ல முயற்சிக்க கனி அவனை தடுக்க முயற்சித்தாள்.. அதற்குள் அவன் முன்னேறிட " ஏய் போகாதன்னு சொல்றேன்ல " என கனி கத்திக் கொண்டே பி்ன்னாடி வந்தாள்.. அவன் அதற்கு மேல் நகராமல் நிற்க " என்ன நின்னுட்ட " என்று அபியைக் கேட்டாள்..
அதற்கு அவன் தன்னை நோக்கி இருந்த கனியின் முகத்தை திருப்பி " கொஞ்சம் அக்கட சூடு " என்றான்..அவள் அந்த திசையில் பார்க்க, அதிர்ச்சியில் அவளது வாய் தானாக ' ஒ ' என விரிந்தது..
Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz