என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)
20.என்னை மறந்தாயோ கண்ணம்மா
பயத்தில் நெற்றியில் வியர்வை முத்து முத்தாக வழிய, அதனை தனது கைக்குட்டையை வைத்து துடைத்தவள் தன்னை தைரியப்படுத்திக் கொண்டு
"சார் நீங்க என்ன கேட்க வரீங்கன்னு எனக்கு புரியல சார்" என்க,
" லுக் மிஸ்.உத்ரா.. அப்போ இந்த ஸ்பீக்கருக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது "
" எ..ஸ்ஸ் ..சார்"
பயத்தை மறைத்து தெளிவாக பதில் சொன்னாள்.
" ம்.. ஓகே.. நீங்க கிளம்பலாம் "
" சார்.... "
" நான் உங்கள கிளம்ப சொன்னேன்"
அவளும் வெளியே வந்து தன் வேலையை பார்க்கலானாள்.. இருந்தும் இனி பார்த்துத்தான் நடந்து கொள்ள வேண்டும் என தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
தேவாவிற்கு உத்ராவின் நடவடிக்கைகள் சந்தேகத்தைக் கொடுத்தாலும் அவள் அவனுக்கு எதிராக எந்த செயலும் இதுவரை செய்தததில்லை என்பதால் அமைதி காத்தான்.. தனது கம்பெனியில் வேலை செய்பவர்களிடம் போலியாக ஒரு நபரை அனுப்பி கம்பெனி விவரங்களை திருடி தந்தால் பணம் கொடுப்பதாக ஏமாற்றி அவர்களின் உண்மை முகத்தினை அறிந்து கொள்ள முயற்சி செய்வான்.. இதன்மூலம் விசுவாசிகளை தனியாக பிரித்தெடுத்து துரோகிகளை இனம் கண்டு கொண்டு அவர்களுக்கு தக்க தண்டனை கொடுப்பான்.
அந்த வகையில் உத்ரா விசுவாசிகளின் பக்கம் இருக்க, அவளை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டான். தொழிலில் உபயோகித்த இதே மூளையை ரகுபதியின் விசயத்திலும் பயன்படுத்தியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.. ஹூம்..
அன்று இரவு, அறைக்கு வந்த உத்ராவிற்கு மிகவும் களைப்பாக இருக்க வந்தவுடனே உடையை கூட மாற்றாமல் அப்படியே படுத்துவிட்டாள்..
ஏழு மணிக்கு அழைப்பு மணி அடிக்க கதவு திறந்தவளிடம் ஒரு பெண்மணி உணவுப் பொட்டலங்களை அளித்து விட்டுச் சென்றார்..
உடல் களைப்பு அனைத்தும் காணாமல் போனது.. இதனை யார் கொடுத்து விட்டார்கள் என்பதை சொல்லவா வேண்டும்.. தினமும் நடப்பது தானே..
நன்றாக மூக்கு முட்ட சாப்பிட்டு முடித்தவுடன் அவளது அலைபேசி சிணுங்க அதில் உதயன் பெயர் தோன்றியது..
அணைப்பை ஏற்றதும்
" உத்தி " என்ற அவனது குரல் கேட்க, இவளும் அதே போல் " உத்தி " என்றழைத்தாள்.
" அப்பாவுக்கு நீ அனுப்புன போட்டோவ சென்ட் பண்ணேன்.. அப்பாவே நேர்ல போயி தேவாகிட்ட பேசறேன்னு சொல்லி இருக்காரு.. "
"ஹூம்.. கே.எஸ்.ஆருக்கு எம்மேல டபுட் வந்துடுச்சு "
" உத்தி.. நீ இதுவரை கண்டுபிடிச்சு சொன்னது போதும்.. வேலைய விட்டறியா .. பயமா இருக்கு..நீ ஆபத்துல மாட்டிக்கிட்டா"
" எனக்கு பயம் இல்ல..கே.எஸ்.ஆர் அவ்ளோ கெட்டவர் கிடையாது.. பணக்காரர்னு திமிர் இருக்கே தவிர மத்தபடி அவர் கொலை பண்ற அளவுக்கு போயிருப்பார்னு நினைக்கத் தோணல "
" யாரையும் ஈசியா நம்பீர கூடாது உத்தி..நான் இத்தனை நாள் என் அப்பாவ தான் கொலைகாரன்னு நினைச்சிட்டு இருந்தேன்.. ஆனா உண்மை வேறயா இருக்கு..அதுக்குத் தான் எல்லா தரப்பையும் தீர விசாரிச்சிட்டு முடிவு பண்ணலாம்னு இருக்கேன்.. ஆயிரம் குற்றவாளிங்க தப்பிக்கலாம்.ஆனா ஒரு நிரபராதி தண்டிக்க கூடாது "
இருவருக்கும் அடுத்து என்ன பேச என்று தெரியாமல் மௌனம் ஆட்சி செய்ய,
" அப்ரோ "
" அப்ரோ என்ன..
பார்த்து பத்திரமா இரு உத்தி.. எந்த ஆபத்துனாலும் உடனே எனக்கு கால் பண்ணு "
சரியான தத்தி என அவனை திட்டிக் கொண்டவள் " ம்ம் " மட்டுமே சொல்லி வைக்க, மறுபடியும் அமைதி..
" ரொம்ப கஷ்டம்தான் " அவள் சளித்துக் கொண்டாள்.
அதனை புரிந்து கொள்ளாதவன்
" என்ன ரொம்ப கஸ்டம் உத்தி..எதும் பிரச்சனையா.. நான் வரவா..எங்கேயும் போவாதா..நான் ரெண்டு நிமிசத்துல அங்க இருப்பேன் " என பதற, அந்தப் பக்கம் அவளது சிரிப்புச் சத்தம் அவனை சாந்தமாக்கியது.. அதன்பின்னரே அவள் சொன்ன கஷ்டத்தின் அர்த்தம் புரிய கொஞ்சூண்டு சிரிப்புடனே தலையில் அடித்துக் கொண்டான்..
" ஹாஹா..உங்க அப்பத்தா சொன்னது நிஜம்தான்னு எனக்கு இப்பதான் புரியுது "
அவள் கேலி கலந்த பேச்சில் கூற, அவள் தன்னை வாரப் போகிறாள் என தெரிந்தே
" என்ன புரிஞ்சுது " உதட்டில் விரியும் புன்னகையை கட்டுப் படுத்திக் கொண்டு கேட்டு வைத்தான்.
" என்ன சொன்னாங்க தெரியுமா.. உங்க மம்மி உங்க டேடிய கரெக்ட் பண்ண ரொம்ப கஷ்டப்பட்ட மாதிரி நானும் உங்கள கரெக்ட் பண்ண ரொம்ப கஷ்டப்படனும்னு.. " அவள் நக்கலாக சொல்லி முடித்த பின்னரே என்ன உலறி வைத்தோம் என்பது புாிய வெட்கத்தில் கண்ணை மூடி நாக்கை கடித்துக் கொண்டாள்.. இந்த தடவை சிரிப்பது அவன் முறையானது..
அவன் சீரியஸாக " எங்க அப்பத்தாக்கிட்ட நான் சொன்னேனு சொல்லிரு.. உத்தி " என்க, அவள் என்னவென்று வெட்கம் விலக்கி கண்களைத் திறந்து அவன் சொல்வதை கேட்கலானாள்..
" நான் எங்கப்பா அளவுக்கு ஒன்னும் ஸ்டெடி கிடையாது.. நானெல்லாம் பார்த்த பர்ஸ்ட் பார்வைலயே டக் அவுட்டுன்னு.. "
அவன் பதிலில் அவள் வாயையே திறக்கவில்லையே.. இந்த முறை இமைகளைக் கொண்டு விழி மூடாமல் தனது உள்ளங்கையால் முகத்தை மூடிக் கொள்ள, சிணுங்களில் குவிந்த அவள் உதடுகள் மட்டுமே அவள் வெட்கப்படுகிறாள்
என்பதை வெளிப்படுத்தியது.
மனம் நிறைய
" குட் நைட் உத்தி " என்று அழைப்பை துண்டித்தவன் அடுத்து விசாகனுக்கு அழைத்தான்.
" டேய் விசாகா "
" மச்சான்..என்னடா செம ஹேப்பியா இருக்க போல "
" எப்படிடா கண்டுபிடிச்ச.. "
" நான் உன் நண்பன்டா.. எனக்கு உன்னை பத்தி தெரியாதா. நீ இந்நேரம் யாருக்கு கேட்டரிங் சர்வீஸ் பண்ணுவ.. யார் கிட்ட கலந்துரையாடிட்டு இருப்பனு "
" டேய் ".
" ஓ.. வெட்கமாக்கும்.. எப்படியோ ஒரு வருசங்கழிச்சி இப்பவாச்சும் உனக்கு உன் காதல்ல சொல்னும்னு தோணுச்சே "
" டேய்..போதும்டா..வாராதா "
" அப்படிதான்டா வாருவேன்.. கூட இருந்த என்கிட்ட கூட மறச்சீல.. ஹூம்.. எல்லாத்தையும் நானே கண்டுபிடிக்க வேண்டியதா இருக்கு "
" போதும்டா.. சின்ன பையன் தெரியாம பண்ணிட்டேன்..ஆள விடு.. அங்க எல்லோரும் எப்படி இருக்காங்க "
" எல்லோரும்னா யாரு"
" எல்லோரும்னா எல்லாரும்ந்தான்டா.. நீ..ரோகிணி..அப்பத்தா.. அம்மா...அப்.
.ப்ச்.. அதான் உன்னோட ஹீரோ போதுமா "
" உதயா நீ அவர்மேல கோபமா இருக்குற மாதிரி நடிக்கறதுலா மத்தவங்க நம்பலாம்..நான் நம்ப மாட்டேன்.. அவர்கிட்ட பேச உனக்கு என்னடா தயக்கம்.. பாவம்டா அவரு"
" தெரியும்டா..ஆனா மனசு ஒத்துக்க மாட்டீங்குதே.. அம்மா படற கஸ்"
" அடே ராசா..நீ மட்டும் இங்க இதுங்க ரெண்டும் பண்ற கூத்த பார்த்தன்னு வையி..அந்த டயலாக்க அடிக்கறத நிறுத்திடுவடா..அநியாயமா இந்த சிங்கிள சோதிக்கிறாங்கடா " அவன் பேசுவதை ரோகிணி மறைந்திருந்து கேட்பதை அறிந்து கொண்டே கூற,
" என்னது நீ சிங்கிள்ளா.. அடேய்.. அப்போ கல்யாணத்துக்கு நோ சொல்லிட்டியாடா " அதிர்ச்சியாய் வினவ,
" ஹிஹி..ஒரு புளோல வந்துருச்சு மச்சான்.. என்ன பண்ண எங்கத்தைக்காக இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க வேண்டியதா போச்சு "
அவள் முகம் வாடி சோகமாய் அங்கிருந்து நழுவ, அவள் கைகளை விடாது பிடித்துக் கொண்டான்.
அங்கே அண்ணனாய் அவன் கோபம் கொண்டு " டேய் அப்படி நீ சளிச்சிக்கிட்டுலாம் என் தங்கச்சிய கட்டிக்க வேணா.. அவளுக்கு நல்லா பையனா நானே பார்த்து கட்டி வைக்கிறேன்.. நீ உன் வேலைய மட்டும் பாரு " என கத்த,
" ஸொபா.. உங்க குடும்பத்துல எங்கத்தைய தவிர ஒருத்தருக்கும் மூளையே கிடையாதா..
எங்கத்தைக்காக தான் உடனே கல்யாணம் பண்ண வேண்டியதா போச்சு..இல்லைனா
இங்க எல்லா பிரச்சனையும் முடிஞ்ச பின்னாடி மெதுவா பண்ணிக்கலாம்னு சொல்ல வந்தேன்.மத்தபடி என் ஏஞ்சல யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்டா " என்றதும்தான் அண்ணன் தங்கை முகத்தில் புன்னகை தோன்றியது..
திடீரென முதுகில் பட்ட அடியில்
" அம்மா " என்று விசாகன் அலற, ஒற்றைக் கையால் அவன் போனை வாங்கிக் கொண்டு மற்றொரு கையால் ரோகிணியை பிடித்திருந்த விசாகனின் கையை விலக்கி விட்டான் வாசு..
ரோகிணி வாசு வந்ததும் வெட்கப்பட்டுக் கொண்டு ஓடிவிட, அவளைப் பின் தொடர்ந்து சென்ற விசாகனின் கழுத்தைச் சுற்றி கையினைப் போட்டு இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.. அவன் வாசுவை முரைக்க அவன் தலையில் செல்லமாய் கொட்டு வைத்தான்.
மறுமுனையில் உதயன் " டேய்..விசாகா " என்று அலற, " நான் வாசு பேசறேன் தம்பி " என்றதும் அமைதியானான்..
" பாஹீ ரோகிணி கல்யாணத்த உடனே நடத்தனும்னு ஆசை பட்டாப்பா..அதான் ரோகிணி ஆசைப்பட்ட மாறியே புகளூர்லயே கல்யாணத்தை அடுத்த மாசத்துல வெச்சிக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம்.. அதுக்குள்ள தேவாதான் அந்த கொலைகள பண்ணதான்னு கண்டுபிடிக்கனும்பா..இதுல உனக்கு எதும் வருத்தம் இல்லையே. ஒரு அண்ணனா உன்னை கேட்காம முடிவு பண்ணிட்டேன்னு "
( பாஹீயின் கோபம் முன்னே விசாகன் வாசுவின் இராஜ தந்திரங்கள் வீணாக, ரோகிணி விசு திருமணம் நடத்தியே ஆக வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது )
திடீரென அவர் குரலை கேட்டதும் பதற்றம் வந்து தொற்றிக் கொண்டது..
" அதெல்லாம் ஒன்னுமில்லைங்கப்பா.. நீங்க கல்யாணத்துக்கு தேவையான ஏற்பாடுகள பண்ணுங்க.. நான் அதுக்குள்ள ரகுபதி என்ன ஆனான்னு கண்டிபிடிச்சறேன்ங்க்பா "
வார்த்தைகளின் ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த அந்த அப்பாவின் சுருக்கம் வாசுவின் கண்களில் கண்ணீரை வரவைத்தது..
" சாப்டியா தம்பீ "
அவருக்குள்ளும் தயக்கம் இருந்தது..
ஆனால் அவன் வாய் வழி வரும் அப்பா என்ற வார்த்தைக்காக உரையாடலைத் தொடர்ந்தான்.
" சாப்டேன்பா.. நீங்க "
" இனிமே தான்பா.. அங்க கம்பெனில இப்போ எந்த பிரச்சனையும் இல்லையே "
" இல்லப்பா... எல்லாம் சரியாகிடுச்சு.. நீங்களும் நல்லாருக்கிங்க தான"
" நல்லா இருக்கேன்பா... நீ இங்க இல்லாததுதான் குறை.. முடிஞ்சா நீயும் உத்ராவும் இந்த வாரம் வந்துட்டு போங்கப்பா "
அவர் குரலில் இருந்த ஏக்கம் அவனை அசைத்துப் பார்த்தது..
" சரிங்கப்பா.. "
" முடிஞ்சா ரஞ்சித் தம்பியையும் கூட்டி வாப்பா "
" சரிங்கப்பா "
" சரிப்பா நேரமாயிடுச்சு..படுத்து தூங்கு கண்ணா.. நான் காலைல பேசறேன் "
" குட்நைட் பா "
அணைப்பைத் துண்டித்துக் கொண்டான். விசாகனின் முகத்திலும் வருத்தத்தின் சாயல்.. அவனும் சுந்தரை நினைத்து வாடுவான் தானே..
தன்னை சமன்செய்தவன்
" விச்சுக் கண்ணா " என்க, அவரைக் கட்டிக் கொண்டான் விசாகன்..
அவன் முதுகை ஆதரவாய் தட்டிக் கொடுத்தவன் " விச்சு..என்னடா இது..சின்ன பையன் போல.. நான் இருக்க வரை எதுக்கும் வருத்தப் படக் கூடாது.. எனக்கு நீயும் உதயனும் வேற வேற இல்ல ..புரியுதா " என்க அவனும் சம்மதமாய் தலையாட்டினான்..
" போ..உங்கத்தை உன்மேல இன்னும் கோபமாத்தா இருக்கா..அவள போயி சமாதனப்படுத்து " என்று அவனை பாஹீயிடம் அனுப்பி வைத்தான் வாசு..
💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
அதிகாலை சேவல் சத்ததிற்கு மாறாக
" ஆ..ஊ.ஆ..ஊ..ஆ.ஊ " என்ற சத்தமே விசாகனை எழுப்பி விட, முகத்தை கழுவிக் கொண்டு வாசலுக்கு வந்தான்.
ரோகிணி சுடிதாரின் துப்பட்டாவை தாவணி போல கட்டிக் கொண்டு கையையும் காலையும் நீட்டி மடக்கி " ஆ.. ஊ.. ஆ..ஊ" என்று சத்தமிட்டுக் கொண்டிருந்தாள்..
அவள் முன்னே சண்முகப் பிரியன் கராத்தே மாஸ்டர் உடையில் மிர்ச்சி சிவா போல போஸ் கொடுத்துக் கொண்டிருந்தான்..
இ்ந்தக் காட்சியில் கூபிரென அவன் சிரித்து விட, சண்முகனும் ரோகிணியும் அவனை ஏளனப் பார்வை பார்த்துவிட்டு அவனை சண்டைக்கு அழைத்தனர்..
அடுத்து வருவது : வாசுவும் விசாகனும் மல்யுத்தத்தில் நேரடியாக பாரபட்சமின்றி மோதப் போகிறார்கள்.. பார்க்கலாம் யார் ஜெயிப்பார்கள் என்று..
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
உங்கள் விமர்சனங்கள் வரவேற்படுகின்றன.. அனுப்ப வேண்டிய முகவரி..
20..என்னை மறந்தாயோ கண்ணம்மா..
நிவேதாமகதி
வாட்பேட்
...
தபால் பெட்டி எண் : ஐயயோ என்னனு தெரில. நீங்களே எங்காச்சும் அனுப்பி விட்ருங்க.
Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz